இந்தி நடிகர் அதுல் பர்சுரே 57 வயதில் காலமானார்

இந்தி திரையுலகில் சிறந்த நடிகர்களுள் ஒருவர் அதுல் பர்சுரே.சில ஆண்டுகளுக்கு முன் அவருக்கு கல்லீரல் புற்று நோய் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இந்தி நடிகர் அதுல் பர்சுரே 57 வயதில் காலமானார்
Published on

இந்தி திரையுலகில் சிறந்த நடிகர்களுள் ஒருவர் அதுல் பர்சுரே. இவர் தி கபில் ஷர்மா ஷோ மூலம் மக்கள் மனதை வென்றார். அந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு தோற்றத்தில் வந்து பல கதாப்பாத்திரங்களைப் போல் நடித்து மக்களை மகிழ்வித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் அவருக்கு கல்லீரல் புற்று நோய் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. சில வருடங்களாகவே அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தார் ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி நடிகர் அதுல் பர்சுரே காலமானார். இவருக்கு 57 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுல் பர்சுரே பல இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக பல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்துள்ளார். இவரது மரணம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com