என் மலர்
சினிமா செய்திகள்
- இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை இயக்கி வருகிறார்.
- நயன்தாரா விஜயதசமி கொண்டாட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி விஜயதசமி கொண்டாடியுள்ளனர். இதையொட்டி, நயன்தாரா தனது எக்ஸ் தள பதிவில், அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுதவிர, கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவர் தனது பதிவில் இணைத்துள்ளார். இதனை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய பொன் விலங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரஞ்சித்.
- கவுண்டம்பாளையம் படத்தை இயக்கி நடித்துள்ளார் ரஞ்சித்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய பொன் விலங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரஞ்சித். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் 2003ஆம் ஆண்டு பீஷ்மர் என்ற படத்தை இயக்கினார்.
இவர் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் மறுமலர்ச்சி, சபாஷ், பாண்டவர் பூமி, பசுபதி ராசக்காபாளையம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெரிய கவனம் பெற்றார்.
சில ஆண்டுகளாக சினிமாவைவிட்டு விலகியிருந்தவர், தொலைக்காட்சித் தொடர் மூலம் சின்னத்திரை நடிகராக வலம் வந்தார். அதைத்தொடர்ந்து கவுண்டம்பாளையம் படத்தை இயக்கி நடித்துள்ளார். ஸ்ரீபாசத்தாய் மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தில் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளளனர்.
கவுண்டம்பாளையம் படத்தின் புரோமோசனுக்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பில், "நாடகக் காதலை எதிர்ப்பதால் நான் சாதிவெறியன் என்றால், ஆம் நான் சாதிவெறியன்தான்" எனக் கூறி சர்ச்சையை கிளப்பியிருந்தார். படத்தின் ஓடிடி அப்டேட் தற்பொழுது வெளியாகியுள்ளது.
ரஞ்சித்தின் கவுண்டம்பாளையம் படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.
ரஞ்சித் தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிரஞ்சீவி ஆந்திர முதலமைச்சரான சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்தார்.
- ராம் சரண் சார்பில் 1 கோடி ரூபயையும் நிவாரணத்திற்கு வழங்கினார்.
கடந்த மாதம் ஆந்திரா மாநிலத்தில் கடும் வெள்ள பெருக்கு ஏற்ப்பட்டது அதற்கு தானமாக பல மாநில திரைப்பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் ஆந்திரா முதலமைச்சர் வெள்ள நிவாரணம் நிதிக்கு பணம் கொடுத்து உதவினர்.
ஆந்திர அரசு வெள்ள நிவாரண பணிகளை துரிதமாகவும் தீவிரமாகவும் மேற்கொண்டனர். ஆனாலும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வந்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி ஆந்திர முதலமைச்சரான சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து முதலமைச்சர் நிவாரண நிதிக்காக ரூபாய் 1 கோடி கொடுத்தார்.
ராம் சரண் சார்பில் 1 கோடி ரூபயையும் நிவாரணத்திற்கு வழங்கினார். இதற்கு நன்றி தெரிவித்து சந்திரபாபு நாயுடு அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அதில் " சிரஞ்சீவி காரு எப்பவும் மனித நேயம் மிக்க செயல்களில் அதிகம் ஈடுபடுபவர். நீங்கள் கொடுத்த நிதியுதவிக்கு மிக்க நன்றி. இந்த உதவி வெள்ளத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்" என கூறியுள்ளார்.
அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்று சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் விஷ்வம்பரா படத்தின் டீசர் வெளியானது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நேசிப்பாயா படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- இப்படத்தின் மூலம் ஆகாஷ் முரளி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
நீண்ட இடைவேளிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் தமிழில் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு நேசிப்பாயா என தலைப்பு வைத்துள்ளனர்.
இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் அதர்வாவின் தம்பியாவார் ஆகாஷ் முரளி. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இப்படத்தின் மூலம் ஆகாஷ் முரளி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. டீசரில் அதிதி மற்றும் ஆகாஷ் முரளி இடையே உள்ள காதல் காட்சிகள் நிறைந்தவையாக இருக்கிறது.
படத்தின் முதல் பாடலான தொலஞ்ச மனசு என்ற பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை பா.விஜய் வரிகளில் யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார்.
இப்படத்தில் சரத்குமார், பிரபு, குஷ்பு, ராஜா, கல்கி மற்றும் ஷிவ் பண்டிட் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
திரைப்படம் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" (தி கோட்).
- திரைப்படம் உலகளவில் 455 கோடி ரூபாயை வசூலித்தது
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" (தி கோட்). இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், சினேகா,யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்தனர்.
தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படம் கடந்த மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. தி கோட் படம் குடும்பங்களால் கொண்டாடப்பட்டது. வசூல் ரீதியாகவும் படம் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றது.
கடந்த 3 ஆம் தேதி விஜய்யின் "தி கோட்" (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. திரைப்படம் உலகளவில் 455 கோடி ரூபாயை வசூலித்தது அதில் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலளித்தது குறிப்பிடத்தக்கது.
படத்தின் வெற்றியை தற்பொழுது படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதில் அர்ச்சனா மற்றும் விஜய் இணைந்து கேக் வெட்டுகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா அண்மையில் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைப்பெற்றது.
- சிறந்த நடிகைக்கான விருதை நித்யா மேனன் வென்றார்.
70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா அண்மையில் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைப்பெற்றது. விருது வாங்கும் பல்வேறு திரைப்பிரபலங்கள் இவ்விழாழில் கலந்துக் கொண்டனர்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 4 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. மணிரத்னம், லைகாவின் சுபாஸ்கரன், ஏ.ஆர் ரஹ்மான் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக் கொண்டனர்.
சிறந்த நடிகைக்கான விருதை திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்காக நடிகை நித்யா மேனன் விருதை பெற்றுக் கொண்டார்.
விருது வாங்கிய மகிழ்ச்சியை அவரது பெற்றோருடன் பகிர்ந்துக் கொண்டார். அப்பொழுது நித்யா மேனன் தன் பெற்றொருடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
- இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.
கடந்த 2020 - ஆண்டு பிப் -14 ந்தேதி இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'ஓ மை கடவுளே' காதல் நகைச்சுவை படம் வெளியாகி வெற்றி பெற்றது.
இந்நிலையில் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இது ஏ.ஜி.எஸ் பட நிறுவனம் தயாரிக்கும் 26 - வது படமாகும்.
இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். படத்திற்கு டிராகன் என தலைப்பு வைத்துள்ளனர்.
மேலும் இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின், வி.ஜே. சித்து , ஹர்ஷத் ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் நடிக்கப் போகும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்காக முதல் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
படத்தின் மூன்றாவது போஸ்டரை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளனர். இதில் பிரதீப் ரங்கநாதன் நடிகை அனுபமா பரமேஸ்வரனின் உதட்டை கில்லுவதுப் போல் மிகவும் ரொமாண்டிக்காக போஸ்டர் காட்சி அமைந்துள்ளது. பேக்கிரவுண்டில் கீர்த்தி மற்றும் டிராகன் என்ற பெயர்க்கு ஃப்லேம்ஸ் போடப்பட்டு இருக்கிறது .
இதன் மூலம் அனுபமா பரமேஸ்வரன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் ஒரு காலேஜ் லவ் ஸ்டோரி நிறைந்த காமெடிக் கதையாக அமைந்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிரஞ்சீவின் 156-வது படத்தை இயக்குனர் மல்லிடி வசிஷ்டா இயக்கியுள்ளார்.
- பேன்டஸி ஜானரில் உருவாகும் இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் வெளியான 'வால்டர் வீரய்யா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் வசூலையும் குவித்தது.
இதைத்தொடர்ந்து சிரஞ்சீவின் 156-வது படத்தை இயக்குனர் மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார். இந்த படத்திற்கு 'விஸ்வம்பரா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இவருடன் திரிஷா, மிருணால் தாகுர் மற்றும் அஷிகா ரங்கனாத் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பேன்டஸி ஜானரில் உருவாகும் இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரமாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்க சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் 2025-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் இப்படத்தை வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது..
இந்நிலையில் படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. டீசர் காட்சிகள் இணையத்தில் அதிகமாக பரவபட்டு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துள்ளார்ராம் சரண்.
- இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு கதையை எழுதியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண். இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு கதையை எழுதியுள்ளார்.
இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார்.
கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" மற்றும் 'ரா மச்சா மச்சா' பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.
திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'ராக்கெட் டிரைவர்' திரைப்படம் சாதாரண ஆட்டோ ஓட்டுநரைப் பற்றிய கதை கொண்டுள்ளது.
- நாக விஷாலுக்கு ஜோடியாக அறிமுக நாயகன் விஸ்வத் நடிக்கிறார்.
ஸ்டோரிஸ் பை தி ஷோர் சார்பில் அனிருத் வல்லப் தயாரிக்கும் ஃபேன்டஸி என்டர்டெயினர் திரைப்படமாக 'ராக்கெட் டிரைவர்' உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது.
தனித்துவ கதையம்சம் சார்ந்த பொழுதுபோக்கு படங்கள் மொழி எல்லைகளை கடந்த நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில், 'ராக்கெட் டிரைவர்' புதிய படமாக இணையும் என்று தெரிகிறது.
'ராக்கெட் டிரைவர்' திரைப்படம் சாதாரண ஆட்டோ ஓட்டுநரைப் பற்றிய கதை கொண்டுள்ளது. முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாமை தனது ரோல் மாடலாக கொண்டிருக்கும் ஆட்டோ ஓட்டுநர், தன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் காரணமாக இளம் வயது அப்துல் கலாமை சந்திக்கிறார்.
இளம் வயது அப்துல் கலாமை சந்திக்கும் போது ஆட்டோ ஓட்டுநர் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பம் மற்றும் அடுத்தடுத்த சம்பவங்கள் கலகலப்பாகவும், பொழுதுபோக்காகவும் சொல்லும் கதையை கொண்டுள்ளது.
இந்தப் படத்தில் தேசிய விருது பெற்ற நாக விஷாலுக்கு ஜோடியாக அறிமுக நாயகன் விஸ்வத் நடிக்கிறார். நடிகர்கள் காத்தாடி ராமமூர்த்தி, சுனைனா, ஜெகன் மற்றும் பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
'ராக்கெட் டிரைவர்' படத்திற்கு கௌசிக் கிரிஷ் இசையமைக்க, ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு பணிகளை இனியவன் பாண்டியனும், கலை இயக்க பணிகளை பிரேம் கருந்தமலையும் மேற்கொண்டனர்.
இந்தப் படத்தின் கதையை அக்ஷய் பூல்லா, பிரசாந்த் எஸ் மற்றும் ஸ்ரீராம் ஆனந்தசங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்தப் படத்தை ஸ்ரீராம் ஆனந்தசங்கர் இயக்குகிறார்.
தற்பொழுது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
- இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
கடந்த 2020 - ஆண்டு பிப் -14 ந்தேதி இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'ஓ மை கடவுளே' காதல் நகைச்சுவை படம் வெளியாகி வெற்றி பெற்றது.
இந்நிலையில் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இது ஏ.ஜி.எஸ் பட நிறுவனம் தயாரிக்கும் 26 - வது படமாகும்.
இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். படத்திற்கு டிராகன் என தலைப்பு வைத்தனர்.
மேலும் இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின், வி.ஜே. சித்து , ஹர்ஷத் ஆகியோர் நடிக்கின்றனர் படத்தின் நடிக்கப் போகும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்காக முதல் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
முதல் போஸ்டரில் வொர்ஸ்ட் ஸ்டூடண்ட் என்ற தலைப்பில் காலேஜ் பேருந்து லுங்கி கட்டிக் கொண்டு புகைப்பிடிப்பது போன்ற காட்சி அமைந்துள்ளது. இரண்டாவது போஸ்டரில் காலேஜ் லைப்பிரரி தீப்பற்றி எறிவது போன்றும் அதில் பிரதீப் ரங்கனாதன் சிகரெட் பிடித்துக் கொண்டு இருப்பது போன்று அமைந்துள்ளது.
படத்தின் மூன்றாவது போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்திற்கு கொம்புசீவி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
- சண்முக பாண்டியன் கடைசியாக மதுர வீரன் திரைப்படத்தில் நடித்து இருந்தார்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குனர் பொன்ராம். 2013 ஆம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்கி மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கினார்.
இந்நிலையில் அடுத்ததாக பொன்ராம் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் சரத் குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சண்முக பாண்டியன் கடைசியாக மதுர வீரன் திரைப்படத்தில் நடித்து இருந்தார். அடுத்ததாக படை தலைவன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
பொன்ராம் இயக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையக்கவுள்ளார். பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். பட தொகுப்பை தினேஷ் பொன்ராஜ் செய்கிறார். இப்படத்திற்கு கொம்புசீவி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சரத்குமார் நடுவில் அமர்ந்திருக்க, பக்கத்தில் துப்பாக்கியுடன் சண்முக பாண்டியன் நிற்கிறார்.
இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்று இயக்குனர் பொன்ராம் அவரது எக்ஸ் பதவியில் தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






