`தி கோட்' படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய விஜய்

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" (தி கோட்). திரைப்படம் உலகளவில் 455 கோடி ரூபாயை வசூலித்தது
`தி கோட்' படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய விஜய்
Published on

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" (தி கோட்). இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், சினேகா,யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்தனர்.

தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படம் கடந்த மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. தி கோட் படம் குடும்பங்களால் கொண்டாடப்பட்டது. வசூல் ரீதியாகவும் படம் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றது.

கடந்த 3 ஆம் தேதி விஜய்யின் "தி கோட்" (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. திரைப்படம் உலகளவில் 455 கோடி ரூபாயை வசூலித்தது அதில் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலளித்தது குறிப்பிடத்தக்கது.

படத்தின் வெற்றியை தற்பொழுது படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதில் அர்ச்சனா மற்றும் விஜய் இணைந்து கேக் வெட்டுகின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com