என் மலர்
சினிமா செய்திகள்
- இயக்குனர் சுரேஷ் திருவல்லா மற்றும் அவரது நண்பர் விஜித் விஜயகுமார் ஆகிய இருவரின் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிந்துள்ளனர்.
- பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் இயக்குனர் சுரேஷ் திருவல்லா மாவேலிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் ஹேமா கமிட்டி அறிக்கையால் அம்பலமானது. இதையடுத்து அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர், பாதிக்கப்பட்ட நடிகைகளிடம் விசாரணை நடத்தினர்.
அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிலர் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிந்தனர். பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் மேலும் ஒரு இயக்குனர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். அந்த பெண் மலையாள திரைப்பட இயக்குனர் சுரேஷ் திருவல்லா மற்றும் அவரது நண்பர் விஜித் விஜயகுமார் ஆகியோரின் மீது மரடு போலீஸ் நிலையத்தில் புகார் கூறியிருக்கிறார்.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி தன்னை விஜித் 2 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தன்னை அட்ஜஸ்ட் செய்யுமாறு இயக்குனர் சுரேஷ் திருவல்லா வற்புறுத்தியதாகவும் அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் இயக்குனர் சுரேஷ் திருவல்லா மற்றும் அவரது நண்பர் விஜித் விஜயகுமார் ஆகிய இருவரின் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிந்துள்ளனர். மலையாள திரையுலகில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர், ஏற்கனவே பல வழக்குகளை விசாரித்து வருகின்றனர். அவர்களே இந்த வழக்கையும் விசாரிக்க உள்ளனர்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் இயக்குனர் சுரேஷ் திருவல்லா மாவேலிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஆவார். அவர் மலையாளத்தில் சில படங்களை இயக்கியிருப்பது மட்டுமின்றி, சில படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஹரி பாஸ்கர் நடித்துள்ள படத்திற்கு மிஸ்டர் ஹவுஸ் கீபிங் என தலைப்பிட்டுள்ளனர்.
- இப்படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
ஜம்ப் கட்ஸ் யூடியூப் சேனலின் மூலம் தனது ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் ஹரி பாஸ்கர். அடுத்ததாக படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
இவர் நடித்துள்ள படத்திற்கு மிஸ்டர் ஹவுஸ் கீபிங் என தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தில் ஹரி பாஸ்கருக்கு கதாநாயகியாக லாஸ்லியா நடித்துள்ளார். இப்படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹரி பாஸ்கர் , வீட்டில் ஐடி-யில் வேலை செய்கிரேன் என வீட்டிற்கு தெரியாமல் சென்னையில் வந்து லாஸ்லியா வீட்டில் வீட்டு பணி செய்யும் நபராகவுள்ளார். லாச்லியாவிடம் காதல் கொள்கிறார் ஆனால் லாஸ்லியா பல நபர்களை டேட் செய்து வருகிறார் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
படத்தின் ஒளிப்பதிவை குலோதுங்கவர்மன் , இசையை ஓஷோ வெங்கட் மேற்கொண்டுள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியானது வேட்டையன் திரைப்படம்.
- இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.
அண்மையில் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான வேட்டையன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். படத்தில் இடம் பெற்ற மனசிலாயோ மற்றும் ஹண்டர் வண்டார் பாடல்கள் மிகப் பெரிய ஹிட்டானது. சமீபத்தில் நடந்த நேர்காணலில் அனிருத் சில சுவாரசிய தகவல்களை கூறினார்.
அதில் அவர் அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கும் திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ஆனால் படத்தின் பெயரை கூறவில்லை. இதற்கு முன் அவர் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொங்கலுக்கு மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறினார் . இதனால் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர். ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் கூலி திரைப்படம் அடுத்தாண்டு வெளியாகும் என கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
- படத்திற்கு டிராகன் என தலைப்பு வைத்துள்ளனர்.
கடந்த 2020 - ஆண்டு பிப் -14 ந்தேதி காதலர் தினத்தில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'ஓ மை கடவுளே' காதல் நகைச்சுவை படம் வெளியாகி வெற்றி பெற்றது.
இந்நிலையில் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இது ஏ.ஜி.எஸ் பட நிறுவனம் தயாரிக்கும் 26 - வது படமாகும்.
இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தி, கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி கணேஷ் மற்றும் கல்பாத்தி சுரேஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.
படத்திற்கு டிராகன் என தலைப்பு வைத்தனர். மேலும் இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின், வி.ஜே. சித்து , ஹர்ஷத் ஆகியோர் நடிக்கின்றனர் படத்தின் நடிக்கப் போகும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 11, மதியம் 3 மட்டும் மாலை 6 மணி என மூன்று போஸ்டர்களை வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ல்வ் இன்ஷூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தில் பிரதீப் ரங்கனாதன் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
- அனல் அரசு இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் 'ஃபீனிக்ஸ் வீழான்'.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய் சேதுபதி தற்போது தமிழ் மட்டுமல்லாது மலையாளம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். சண்டை இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் 'ஃபீனிக்ஸ் வீழான்'. பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் மூலம் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.
இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் சூர்யா பாக்சராக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் ரிலீஸ் தேதி தற்பொழுது படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது என அறிவித்துள்ளனர். இதே சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இரா.சரவணன் இயக்கத்தில் நந்தன் என்ற படத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ளார்.
- The film released on September 20 and received mixed reviews.|இப்படம் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
'கத்துக்குட்டி', 'உடன் பிறப்பே' போன்ற படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் நந்தன் என்ற படத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ளார்.
உண்மை கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் இதுவரை நாம் பார்த்திராத கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்
இப்படம் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தில் பாலாஜி சக்திவேல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் தற்பொழுது வெளியாகியுள்ளது.
திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. திரையரங்கில் இப்படத்தை காண தவறவிட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள படம் "எமக்குத் தொழில் ரொமான்ஸ்".
- T Creations சார்பில் தயாரிப்பாளர் திருமலை தயாரித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் "எமக்குத் தொழில் ரொமான்ஸ்".
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் பல பிரபலங்களால் சில மாதங்களுக்கு முன் வெளியானது. T Creations சார்பில் தயாரிப்பாளர் திருமலை தயாரித்துள்ளார்.
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, தொடர்ச்சியாக வெற்றி படைப்புகளை தந்து வரும் நடிகர் அசோக் செல்வன், நடிகை அவந்திகா மிஸ்ரா உடன் இணைந்திருக்கும், ரொமான்ஸ் தெறிக்கும் படத்தில் நடித்துள்ளார்.
ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில், இப்படத்தினை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பாலாஜி கேசவன். ஒரு பிளே பாய் கதாப்பாத்திரத்தில் அசோக் செல்வன் நடித்துள்ளார்.
அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் .
படத்தின் ரிலீஸ் தேதியை தற்பொழுது படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் அசோக் செல்வனுக்கு மேலும் ஒரு வெற்றி திரைப்படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகை சாய் தன்ஷிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஐந்தாம் வேதம் என்ற வெப் தொடர்
- நாகா 90-களில் மிகவும் பிரபலமாக ஒளிப்பரப்பப் பட்ட மர்ம தேசம் தொடரை இயக்கியவராவார்.
நடிகை சாய் தன்ஷிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஐந்தாம் வேதம் என்ற வெப் தொடர் வெளியாகவுள்ளது. இந்த வெப் தொடரை நாகா இயக்கியுள்ளார்.
நாகா 90-களில் மிகவும் பிரபலமாக ஒளிப்பரப்பப் பட்ட மர்ம தேசம் தொடரை இயக்கியவராவார். இந்த தொலைக்காட்சி தொடருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு ஐந்தாம் வேதம் வெப் தொடரை இயக்கியுள்ளார். இதில் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய்.ஜி மகேந்திரன், கிரிஷா குருப் , பொன்வன்னன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்தொடரை அபிராமி மீடியா நொர்க்ஸ் தயாரித்துள்ளது.
தற்பொழுது இத்தொடரின் டீசர் வெளியாகியுள்ளது. தொடர் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதுவும் ஒரு திரில்லர் மர்மம் நிறைந்த தொடராக டீசர் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனால் இத்தொடர் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.
- படத்தில் நடிகர் பிரசன்னா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த 'மார்க் ஆண்டணி' மிகப்பெரிய ஹிட் அடித்தது. அப்படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இதை தொடர்ந்து அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜித் மூன்று கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சுனில் , நஸ்லேன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
படப்பிடிப்பு பணிகள் ஐதரபாத்தில் சில நாட்கள் நடைப்பெற்றது. அடுத்ததாக பணிகள் ஸ்பெயினில் நடைப்பெறவுள்ளது. படத்தில் நடிகர் பிரசன்னா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் புதிய தோற்றமுடைய புகைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் நேற்று பதிவிட்டுள்ளார். தற்பொழுது படத்தில் திரிஷா தோற்றத்தை வெளியாகியுள்ளது. இதுவரை காணாத ஒரு தோற்றத்தை வெளியிட்டுள்ளனர் இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனால் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் படத்தின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துகொண்டே செல்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- காலங்களில் அவள் வசந்தம் எனும் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார்.
- பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த "சைஸ் ஸீரோ" தேசிய விருதுபெற்ற "பாரம் " ஆகிய படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் ராகவ் மிர்தாத்.
அதைத்தொடர்ந்து காலங்களில் அவள் வசந்தம் எனும் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார்.
அடுத்ததாக இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பாபு ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியானது.இதை ரெயின் ஆஃப் ஆரோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
தற்பொழுது ஆயுத புஜை விழாவை முன்னிட்டு படக்குழு வாழ்த்து கூறி கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கமல்ஹாசன் நடிக்கும் 237-வது படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கும் என்று தெரிவித்து உள்ளனர்.
- இப்படத்தில் நடிக்க கமல்ஹாசன் கடும் உடற்பயிற்சிகள் செய்து முழுமையாக தன்னை தயார்படுத்தி வருகிறார்.
கமல்ஹாசன் 'இந்தியன் 2' படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் 'தக்லைப்' படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்தியன் 3-ம் பாகத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.
இந்த நிலையில் அடுத்து பிரபல சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவு சகோதரர்கள் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார்.
இந்த படம் குறித்து ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையிலும் பட வேலைகள் தொடங்காமல் இருந்தது.
இந்த நிலையில் கமல்ஹாசன் நடிக்கும் 237-வது படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கும் என்று தெரிவித்து உள்ளனர்.
இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர் நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. சண்டை பயிற்சி இயக்குனர்கள் இயக்குவதால் இது முழுநீள அதிரடி சண்டை படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிக்க கமல்ஹாசன் கடும் உடற்பயிற்சிகள் செய்து முழுமையாக தன்னை தயார்படுத்தி வருகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் வேட்டையன்.
- படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் வேட்டையன். இயக்குநர் ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் ரஜினிகாந்தின் நடிப்பு, மாஸ் மொமண்ட் என பக்கவாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். பகத் பாசில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் கலக்கியுள்ளார்.
படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் மட்டும் திரைப்படம் 12 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. வட அமெரிக்காவில் மட்டும் 20 லட்ச டாலர்கள் வசூலித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்படத்தின் வசூல் வரும் பண்டிகை நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






