237-வது படத்துக்கு தயாராகும் கமல்

கமல்ஹாசன் நடிக்கும் 237-வது படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கும் என்று தெரிவித்து உள்ளனர்.இப்படத்தில் நடிக்க கமல்ஹாசன் கடும் உடற்பயிற்சிகள் செய்து முழுமையாக தன்னை தயார்படுத்தி வருகிறார்.
237-வது படத்துக்கு தயாராகும் கமல்
Published on

கமல்ஹாசன் 'இந்தியன் 2' படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் 'தக்லைப்' படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்தியன் 3-ம் பாகத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.

இந்த நிலையில் அடுத்து பிரபல சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவு சகோதரர்கள் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார்.

இந்த படம் குறித்து ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையிலும் பட வேலைகள் தொடங்காமல் இருந்தது.

இந்த நிலையில் கமல்ஹாசன் நடிக்கும் 237-வது படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கும் என்று தெரிவித்து உள்ளனர்.

இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர் நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. சண்டை பயிற்சி இயக்குனர்கள் இயக்குவதால் இது முழுநீள அதிரடி சண்டை படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்க கமல்ஹாசன் கடும் உடற்பயிற்சிகள் செய்து முழுமையாக தன்னை தயார்படுத்தி வருகிறார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com