கொஞ்சம் லோக்கலா.. ஃபையரா... ஹாட்டா - டிராகன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை முதல்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார்.படத்திற்கு டிராகன் என தலைப்பு வைத்துள்ளனர்.
கொஞ்சம் லோக்கலா.. ஃபையரா... ஹாட்டா - டிராகன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை முதல்
Published on

கடந்த 2020 - ஆண்டு பிப் -14 ந்தேதி காதலர் தினத்தில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'ஓ மை கடவுளே' காதல் நகைச்சுவை படம் வெளியாகி வெற்றி பெற்றது.

இந்நிலையில் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இது ஏ.ஜி.எஸ் பட நிறுவனம் தயாரிக்கும் 26 - வது படமாகும்.

இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தி, கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி கணேஷ் மற்றும் கல்பாத்தி சுரேஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.

படத்திற்கு டிராகன் என தலைப்பு வைத்தனர். மேலும் இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின், வி.ஜே. சித்து , ஹர்ஷத் ஆகியோர் நடிக்கின்றனர் படத்தின் நடிக்கப் போகும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 11, மதியம் 3 மட்டும் மாலை 6 மணி என மூன்று போஸ்டர்களை வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ல்வ் இன்ஷூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தில் பிரதீப் ரங்கனாதன் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com