என் மலர்
சினிமா செய்திகள்

பொங்கலுக்கு வெளியாகும் அஜித்தின் விடாமுயற்சி ? - அனிருத் கொடுத்த அப்டேட்
- ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியானது வேட்டையன் திரைப்படம்.
- இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.
அண்மையில் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான வேட்டையன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். படத்தில் இடம் பெற்ற மனசிலாயோ மற்றும் ஹண்டர் வண்டார் பாடல்கள் மிகப் பெரிய ஹிட்டானது. சமீபத்தில் நடந்த நேர்காணலில் அனிருத் சில சுவாரசிய தகவல்களை கூறினார்.
அதில் அவர் அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கும் திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ஆனால் படத்தின் பெயரை கூறவில்லை. இதற்கு முன் அவர் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொங்கலுக்கு மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறினார் . இதனால் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர். ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் கூலி திரைப்படம் அடுத்தாண்டு வெளியாகும் என கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






