என் மலர்
நீங்கள் தேடியது "Chandrabau Naidu"
- ஆந்திர சட்டசபைத் தேர்தலில் வெற்றிப்பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கும், தெலுங்கு தேசக் கட்சிக்கும் வாழ்த்துகள்.
- உங்கள் தொலைநோக்கு தலைமையின் கீழ் ஆந்திர மக்கள் சிறந்த முன்னேற்றத்தை அடைய வாழ்த்துகள் என தெரிவித்து இருந்தார்.
ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் அறுதிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது தெலுங்கு தேசம் கட்சி. ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக வருகிற 9-ந்தேதி பதவியேற்கிறார். இதையொட்டி தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக விஜய் எக்ஸ் தள பக்கத்தில், "ஆந்திர சட்டசபைத் தேர்தலில் வெற்றிப்பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கும், தெலுங்கு தேசக் கட்சிக்கும் வாழ்த்துகள். உங்கள் தொலைநோக்கு தலைமையின் கீழ் ஆந்திர மக்கள் சிறந்த முன்னேற்றத்தை அடைய வாழ்த்துகள்" என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த விஜய்க்கு சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்துள்ளார்.
மனமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி @tvkvijayhq Garu என எக்ஸ் தள பக்கத்தில் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
- சிரஞ்சீவி ஆந்திர முதலமைச்சரான சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்தார்.
- ராம் சரண் சார்பில் 1 கோடி ரூபயையும் நிவாரணத்திற்கு வழங்கினார்.
கடந்த மாதம் ஆந்திரா மாநிலத்தில் கடும் வெள்ள பெருக்கு ஏற்ப்பட்டது அதற்கு தானமாக பல மாநில திரைப்பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் ஆந்திரா முதலமைச்சர் வெள்ள நிவாரணம் நிதிக்கு பணம் கொடுத்து உதவினர்.
ஆந்திர அரசு வெள்ள நிவாரண பணிகளை துரிதமாகவும் தீவிரமாகவும் மேற்கொண்டனர். ஆனாலும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வந்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி ஆந்திர முதலமைச்சரான சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து முதலமைச்சர் நிவாரண நிதிக்காக ரூபாய் 1 கோடி கொடுத்தார்.
ராம் சரண் சார்பில் 1 கோடி ரூபயையும் நிவாரணத்திற்கு வழங்கினார். இதற்கு நன்றி தெரிவித்து சந்திரபாபு நாயுடு அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அதில் " சிரஞ்சீவி காரு எப்பவும் மனித நேயம் மிக்க செயல்களில் அதிகம் ஈடுபடுபவர். நீங்கள் கொடுத்த நிதியுதவிக்கு மிக்க நன்றி. இந்த உதவி வெள்ளத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்" என கூறியுள்ளார்.
அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்று சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் விஷ்வம்பரா படத்தின் டீசர் வெளியானது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






