பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார்.இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
Published on

கடந்த 2020 - ஆண்டு பிப் -14 ந்தேதி இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'ஓ மை கடவுளே' காதல் நகைச்சுவை படம் வெளியாகி வெற்றி பெற்றது.

இந்நிலையில் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இது ஏ.ஜி.எஸ் பட நிறுவனம் தயாரிக்கும் 26 - வது படமாகும்.

இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். படத்திற்கு டிராகன் என தலைப்பு வைத்தனர்.

மேலும் இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின், வி.ஜே. சித்து , ஹர்ஷத் ஆகியோர் நடிக்கின்றனர் படத்தின் நடிக்கப் போகும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்காக முதல் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

முதல் போஸ்டரில் வொர்ஸ்ட் ஸ்டூடண்ட் என்ற தலைப்பில் காலேஜ் பேருந்து லுங்கி கட்டிக் கொண்டு புகைப்பிடிப்பது போன்ற காட்சி அமைந்துள்ளது. இரண்டாவது போஸ்டரில் காலேஜ் லைப்பிரரி தீப்பற்றி எறிவது போன்றும் அதில் பிரதீப் ரங்கனாதன் சிகரெட் பிடித்துக் கொண்டு இருப்பது போன்று அமைந்துள்ளது.

படத்தின் மூன்றாவது போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com