பிரபஞ்சத்தை தாண்டி மாஸ் காட்டும் சிரஞ்சீவி - விஷ்வம்பரா டீசர் வெளியீடு

சிரஞ்சீவின் 156-வது படத்தை இயக்குனர் மல்லிடி வசிஷ்டா இயக்கியுள்ளார்.பேன்டஸி ஜானரில் உருவாகும் இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
பிரபஞ்சத்தை தாண்டி மாஸ் காட்டும் சிரஞ்சீவி - விஷ்வம்பரா டீசர் வெளியீடு
Published on

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் வெளியான 'வால்டர் வீரய்யா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் வசூலையும் குவித்தது.

இதைத்தொடர்ந்து சிரஞ்சீவின் 156-வது படத்தை இயக்குனர் மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார். இந்த படத்திற்கு 'விஸ்வம்பரா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இவருடன் திரிஷா, மிருணால் தாகுர் மற்றும் அஷிகா ரங்கனாத் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பேன்டஸி ஜானரில் உருவாகும் இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரமாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்க சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் 2025-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் இப்படத்தை வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது..

இந்நிலையில் படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. டீசர் காட்சிகள் இணையத்தில் அதிகமாக பரவபட்டு வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com