என் மலர்
சினிமா செய்திகள்
சமந்தா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘ஓ பேபி’ படத்தில் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் இருந்த சண்டை சமரசமாக முடிந்திருக்கிறது.
ஓ பேபி என்ற தெலுங்கு படத்தில் சமந்தா இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் சமந்தா வித்தியாசமான வேடம் ஏற்று நடித்துள்ளார். கொரியன் படம் ஒன்றின் ரீமேக்காக இந்த படம் உருவாகி உள்ளது. நந்தினி ரெட்டி என்பவர் இயக்கியுள்ளார்.
சமீபத்தில் படமான சில காட்சிகளை பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ், சமந்தா சமந்தப்பட்ட சில காட்சிகளை மீண்டும் எடுக்கும் படி கூறியதாகவும் இதனால் டைரக்டர் நந்தினிக்கும் தயாரிப்பாளருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில். ‘பட காட்சிகள் அனைத்தும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. இதில் ரீஷூட் என்ற பேச்சுக்கே இடமில்லை. சமந்தா சிறப்பாக நடித்திருக்கிறார்’ என்றார் நந்தினி.
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தற்போது நடித்து வரும் ஒரு படத்தில் தமன்னா கவர்ச்சி ஆட்டம் ஆட முடிவு செய்திருக்கிறார்.
சிரஞ்சீவியுடன் நயன்தாரா நடிக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. சரித்திர பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி உள்பட பலர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தமன்னா நடிப்பதாகவும் கூறப்பட்டது. இப்போது படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சிக்காக தமன்னா நடனம் ஆட இருக்கிறாராம்.
படத்தின் கவர்ச்சியான பாடலாக உருவாக இருக்கும் இதில் தமன்னா படுகிளாமராக நடனம் ஆட இருக்கிறாராம். ஐதராபாத்திலுள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இந்த பாடல் காட்சியை விரைவில் படமாக்க உள்ளனர்.

சைரா நரசிம்ம ரெட்டி படத்தை ரூ.200 கோடி செலவில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தயாரித்து வருகிறார். ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் இப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
நடிகர்கள் அஞ்சலி, சாம் ஜோன்ஸ், யோகி பாபு நடிப்பில் ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘லிசா’ படத்தின் விமர்சனம்.
சிறுவயதிலேயே அப்பாவை இழந்த நாயகி அஞ்சலி விதவை தாயுடன் வளர்கிறாள். இளம் பெண்ணான அஞ்சலி தனது தாய்க்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால் மறுப்பு தெரிவிக்கும் அம்மா, காதல் திருமணம் செய்து கொண்டதால், தனது அம்மா, அப்பாவின் தொடர்பு இல்லாமல் போய்விட்டதாகக் கூறுகிறார்.
இதையடுத்து தாத்தா, பாட்டியை தேடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அவர்களது வீட்டிற்கு செல்கிறார் அஞ்சலி. கூடவே தனது கல்லூரி ஜூனியர் சாம் ஜோன்சையும் அழைத்து செல்கிறார். அங்கு ஒரு வயதான தம்பதி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை தனது தாத்தா, பாட்டி என நினைத்துக் கொள்கிறார் அஞ்சலி.

அந்த வயதான தம்பதியின் நடவடிக்கைகள் அஞ்சலிக்கு சந்தேகத்தை வரவைக்கிறது. அந்த வீட்டில் ஒரு பேயும் இருக்கிறது. ஒரு நாள் அந்த பேய் அஞ்சலி முன் வந்து பயமுறுத்துகிறது. ஆனால் எதற்கும் அஞ்சாத அஞ்சலி, அந்த பேய் குறித்து அறிய நினைக்கிறார். மேலும் வயதான தம்பதியின் பின் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க பார்க்கிறார். இறுதியில் அந்த பேய் என்பதை அஞ்சலி கண்டுபிடித்தாரா? அஞ்சலியின் உண்மையான தாத்தா, பாட்டி என்ன ஆனார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை அஞ்சலி தான் படத்தை தோளில் தாங்கியிருக்கிறார். அஞ்சலி ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும். அஞ்சலி ஒல்லியான அழகு தேவதையாக ஜொலிக்கிறார். சாம் ஜோன்ஸ் அழகாகவும் இளமையாகவும் இருக்கிறார். பயப்படும் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்தால் ஒரு சுற்று வரலாம்.

வில்லனாக மார்கரந்த் தேஷ்பாண்டே பயமுறுத்தி இருக்கிறார். பாட்டியாக வருபவரை பார்த்தாலும் பயமாக இருக்கிறது. யோகி பாபுவும், பிரம்மானந்தமும் சிரிக்க வைக்க முயன்று இருக்கிறார்கள்.
அறிமுக இயக்குனர் ராஜூ விஸ்வநாத்தின் 3டி முயற்சிக்கு பெரிய பாராட்டு கொடுக்கலாம். முதல் பாதியில் எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் கதை இரண்டாம் பாதியில் ஏமாற்றத்தை தருகிறது. பிளாஷ்பேக் காட்சிகளில் அழுத்தம் இல்லாமல் இருக்கிறது. 3டி தொழில்நுட்பம் படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது.

எதிர்பாராத வேளையில் வரும் டிவிஸ்ட் கொஞ்சம் ஆர்வத்தை கூட்டுகிறது. ஆனால், முடியப்போகும் நேரத்தில் மேலும் பிளாஷ் பேக் வருவது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது. அழுத்தமான கதையும் சுவாரசியமான திரைக்கதையும் அமைத்து இருந்தால் குழந்தைகளையும் குடும்ப ரசிகர்களையும் இன்னும் ஈர்த்து இருக்கலாம்.
பிஜி.முத்தையா ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் தரம். சந்தோஷ் தயாநிதி இசை ஓரளவிற்கு மிரட்டியிருக்கிறது.
மொத்தத்தில் ‘லிசா’ மிரட்டல் குறைவு.
சில பிரச்சனைகளால் இந்தி காஞ்சனா படத்தில் இருந்து வெளியேறிய ராகவா லாரன்ஸ், தற்போது மீண்டும் இயக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா படம் சூப்பர் ஹிட்டானது. மேலும் அதன் தொடர்ச்சியாக காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 படங்கள் வெளியாகி 100 கோடிக்கும் மேல் வசூலித்து பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளது.
இந்நிலையில், அக்ஷய் குமாரை வைத்து பாலிவுட்டில் காஞ்சனா முதல் பாகத்தை இந்தியில் ரீமேக் செய்ய ராகவா லாரன்ஸை அழைத்தார்கள்.
அவரும், ‘லக்ஷ்மி பாம்’ எனும் பெயரில் அந்த படத்தை இயக்க முடிவுசெய்து, படவேலைகளை துவக்கினார். ஆனால், தயாரிப்பு தரப்பு சரியான மரியாதையை தனக்கு கொடுக்கவில்லை என்றும், தன்னை கேட்காமல் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர் என்றும் கூறி அப்படத்தில் இருந்து வெளியேறினார் லாரன்ஸ்.

இந்நிலையில், படக்குழுவினர் தன்னுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு வருவதாகவும், தனக்கு இனிமேல் உரிய மரியாதை கிடைக்கும் பட்சத்தில், என்னுடைய ரசிகர்கள் மற்றும் அக்ஷய் குமாரின் ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்கி மீண்டும் படத்தை இயக்கலாமா வேண்டாமா என முடிவு செய்வது, அவர்கள் பேசுவதை பொறுத்துத்தான் என்று ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறார்.
பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்து மீண்டும் ராகவா லாரன்ஸ் லக்ஷ்மி பாம் படத்தை இயக்குவார் என்றே பாலிவுட் ஊடகங்கள் கூறிவருகின்றனர்.
சென்னையில் தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சியில் நடிகை சாக்ஷி அகர்வால் கலந்துக் கொண்டுள்ளார்.
உலக பசி ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகை சாக்ஷி அகர்வால் கலந்துக் கொண்டார்.
அதன்பின் பேசிய சாக்ஷி அகர்வால், ‘உலகில் நிறைய பேர் பசியால் இறந்து போகிறார்கள். உலக பசி தினத்தை உலகம் முழுவதும் யாரும் கொண்டாட கூடாத நிலையை நாம் அனைவரும் உருவாக்க வேண்டும். ஒவ்வொருவரும் இரண்டு குழந்தைகளுக்கு உணவு வழங்கினால் பசி என்ற வார்த்தையை இல்லாமல் ஆக்கலாம்’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை சாக்ஷி அகர்வால் குழந்தைகளுக்கு உணவு பரிமாறி, ஊட்டி விட்டு அவர்களை சந்தோஷப்படுத்தி இருக்கிறார்.
நடிகர் விஜய் மே தினத்தனத்தை முன்னிட்டு ஆட்டோ ஓட்டும் தொழிலார்களுக்கு பரிசுப்பொருட்கள் மற்றும் மதிய உணவு வழங்கியுள்ளார்.
ஆண்டு தோறும் உழைப்பாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு, நடிகர் விஜய் தொழிலாளர் தோழர்களுக்கு தனது சொந்த செலவில் விருந்தளித்து பரிசு பொருட்கள் தருவது வழக்கம்.
இவ்வாண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டமையால், இவ்வாண்டுக்கான விழா, இன்று தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் மே தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விஜய் படப்பிடிப்பில் உள்ளதால், அவரது உத்தரவின் பேரில் விழாவினை மாநில பொறுப்பாளர் புஸ்ஸி என் ஆனந்த் தலைமையேற்று ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு பரிசுகள் மற்றும் மதிய உணவை வழங்கினார்.
பிரபல இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம், பாகல்பன்தி படப்பிடிப்பின் போது இடது கையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து வருகிறார்.
பிரபல இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் “பாகல்பன்தி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அனிஸ் பாஸ்மி இயக்குகிறார். நடிகர்கள் அனில் கபூர், அர்சத் வார்சி, நடிகை இலியானா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. அப்போது ஜான் ஆபிரகாமுக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தற்போது ஓய்வு எடுத்து வருகிறார்.

இதனால் படப்பிடிப்பு சில நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த தகவலை படக்குழுவினரும் உறுதிப்படுத்தி உள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, தன்னுடைய திருமணம் பற்றி வெளிவந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், சிம்பு. அவருக்கு திருமணம் செய்துவைக்க அவருடைய அப்பா டி.ராஜேந்தரும், அம்மா உஷா ராஜேந்தரும் மணப்பெண்ணை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் அவருடைய தம்பி குறளரசனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இதனைத்தொடர்ந்து சிம்புவின் திருமணம் தொடர்பான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
உறவுப்பெண் ஒருவருடன் சிம்புவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. அது காட்டுத்தீ போல் வேகமாக பரவியது.
இந்த தகவலை சிம்பு மறுத்தார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

திரையுலகில் பிரபலமாக உள்ள கலைஞர்கள் தினமும் பலரை சந்திப்பது தவிர்க்க முடியாதது. அதை வைத்து அவர்களின் சொந்த வாழ்க்கையை இணைத்து பேசக்கூடாது. கற்பனையான தகவல்களை செய்திகளாக வெளியிட கூடாது. என் திருமணத்தை பற்றி வெளியான தகவல்களில் உண்மையில்லை. அந்த வதந்தியை யாரும் நம்பவேண்டாம். என் திருமணத்தை முன்கூட்டியே நானே அறிவிப்பேன். ரசிகர்களும், பொதுமக்களும் கற்பனையாக வெளியாகும் செய்திகளை நம்பவேண்டாம். எந்த பெண்ணுடனும் இதுவரை எனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முத்துகுமரன் இயக்கத்தில் யோகிபாபு, திலீபன், ரமேஷ் திலக் நடிப்பில் உருவாகி இருக்கும் `தர்மபிரபு' படத்தின் தொலைக்காட்சி உரிமை மற்றும் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
`கன்னிராசி' படத்தை இயக்கிய முத்துகுமரன் அடுத்ததாக யோகி பாபுவை வைத்து `தர்மபிரபு' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். யோகிபாபு எமனாகவும், ராதாரவி அவருடைய தந்தையாகவும், ரமேஷ் திலக் சித்திரகுப்தனாகவும் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியிருப்பதாக அறிவித்துள்ள படக்குழு, படம் வருகிற ஜூன் 28-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் `வத்திக்குச்சி' திலீபன், ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு உள்ளிட்டோரும் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளனர்.
மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைக்கிறார். லோகேஷ் படத்தொகுப்பையும், பாலசந்தர் கலை பணியையும் கவனிக்கின்றனர். ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
எல்.கே.சுரேஷ் இயக்கத்தில் ஜெய் - கேத்தரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நீயா 2’ படத்தின் விமர்சனம்.
நடிகர் ஜெய், பால சரவணன் இருவரும் ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். ஜெய்யை பார்க்கும் கேத்தரின் தெரசாவுக்கு ஜெய் மீது காதல் வந்து, அவரை திருமணம் செய்துகொள்ள விருப்பப்படுகிறார். கேத்தரின் தனது காதலை ஜெய்யிடம் தெரிவிக்க, ஜெய் கேத்தரினை திருமணம் செய்ய மறுக்கிறார். கேத்தரின் விடாப்பிடியாக இருக்க, தனக்கு நாக தோஷம் இருப்பதால், நாக தோஷம் இருக்கும் பெண்ணை தான் தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று ஜெய் கூறுகிறார்.
பின்னர் தனக்கும் நாக தோஷம் இருப்பதாக கேத்தரின் கூற, இருவருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு கேத்தரினுக்கு நாக தோஷம் இல்லை என்பது தெரிய வர, பரிகாரம் செய்வதற்காக இருவரும் கொடைக்கானல் செல்கின்றனர்.

அங்கு கடந்த ஜென்மத்தில் கிடைத்த சாபத்தால், பிரிந்த தனது காதலனான ஜெய்யுடன் சேருவதற்காக காத்திருக்கிறார் பாம்பு பெண்ணாகிய ராய் லட்சுமி.
கடைசியில், ஜெய்யின் நாக தோஷம் நீங்கியதா? கேத்தரினுடன் இணைந்தாரா? ராய் லெட்சுமியுடன் இணைந்தாரா? ராய் லட்சுமியின் முன் வாழ்க்கைக் கதை என்ன? அவருக்கு சாபம் வழங்கியது யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர் ஜெய் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் வந்து கொடுத்த வேலையை சிறப்பாக செய்துவிட்டுச் சென்றிருக்கிறார். காதல், ஆக்ஷன் என தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஜெய்யை துரத்தி துரத்தி காதலிக்கும் கதாபாத்திரத்தில் கேத்தரின் தெரசா ரசிகர்களை கவர்கிறார். காதல், கவர்ச்சி என கிறங்கடிக்கிறார். பாம்பு பெண்ணாக ராய் லட்சுமி ராயலான பாம்பாக வலம் வருகிறார். குறைவான காட்சிகளில் வந்தாலும் வரலட்சுமி தனது கதாபாத்திரத்திற்கு மெருகேற்றிவிட்டு சென்றிருக்கிறார். பால சரவணன் காமெடியில் ஓரளவு சிரிக்க வைக்கிறார்.

நாக தோஷத்தை மையமாக வைத்து படத்தின் கதையை நகர்த்தியிருக்கிறார் எல்.கே.சுரேஷ். முதல்பாதியில் இருந்த வேகம் இரண்டாவது பாதியிலும் தொடர்ந்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும். பாம்பு வரும் கிராபிக்ஸ் காட்சிகள் விறுவிறுப்பை தூண்டுகின்றன. படத்தில் எந்த அளவுக்கு விறுவிறுப்பு இருக்கிறதோ அந்த அளவுக்கு கவர்ச்சியும் இருக்கிறது.
ஷபீரின் பின்னணி இசையும், ராஜவேல் மோகனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக இருந்துள்ளன.
மொத்தத்தில் ‘நீயா 2’ கவர்ச்சி.
தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த வில்லனாக நடித்த அனுராக் காஷ்யப், தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக வாழ்த்துக் கூறியுள்ளார்.
புது டெல்லி:
மீண்டும் பிரதமராக மோடி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கவுள்ளார். இதையடுத்து மோடிக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், உலக தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், திரைப்பட கலைஞர்களும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
இந்த வாழ்த்துச்செய்தி ரசிகர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனுராக்கிற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
மீண்டும் பிரதமராக மோடி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கவுள்ளார். இதையடுத்து மோடிக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், உலக தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், திரைப்பட கலைஞர்களும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமான இதில் வில்லனாக நடித்தபாலிவுட் நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப் பிரதமராக பதவி ஏற்க உள்ள மோடிக்கு வாழ்த்துக் கூறினார்.
சினிமாவில் வில்லனாக கலக்கிய அனுராக், மோடியை தனது டுவிட்டரில் டேக் செய்து வாழ்த்துச் செய்தியில் மோடியினை டுவிட்டரில் பின்தொடரும் ஒருவரை சுட்டிக்காட்டி, ‘அன்பான மோடி அவர்களே, நீங்கள் வெற்றி பெற்றதற்கு என் வாழ்த்துக்கள். இந்த வெற்றி அனைவரையும் உள்ளடக்கிய வெற்றி என நீங்கள் கூறியதற்காக உங்களுக்கு நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.Dear @narendramodi sir. Congratulations on your victory and thank you for the message of inclusiveness. Sir please also tell us how do we deal with these followers of yours who celebrate your victory by threatening my daughter with messages like this for me being your dissenter. pic.twitter.com/jC7jYVBCi8
— Anurag Kashyap (@anuragkashyap72) May 23, 2019
அதேசமயம் நான் உங்கள் எதிர்ப்பாளராக இருப்பதால், உங்களை பின்தொடர்பவர்கள் என் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதுபோல் குறுஞ்செய்திகள் அனுப்புகின்றனர். இதுபோன்றவர்களை நாங்கள் எப்படி கையாள்வது? என கூறுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.
இந்த வாழ்த்துச்செய்தி ரசிகர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனுராக்கிற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ரியோ ராஜ் - ஷிரின் கஞ்ச்வாலா நடிப்பில் உருவாகி இருக்கும் `நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் தணிக்கை சான்றிதழ் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது.
கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் அடுத்த படத்திற்கு `நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என தலைப்பு வைத்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு `யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர். படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
📣 Our film #NenjamunduNermaiyunduOduRaja has been certified 'U'. A complete gala in theatres from June 14 🥳🎉🎊#NNORFromJune14@Siva_Kartikeyan | @KalaiArasu_ | @karthikvenu10 | @rio_raj | @KanchwalaShirin | @RjVigneshkanth | @DoneChannel1 | @SonyMusicSouthpic.twitter.com/3sAlQ2ohAM
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) May 24, 2019
கார்த்திக் வேணுகோபால் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ரியோ ராஜ் நாயகனாக நடிக்க, ஷிரின் கஞ்ச்வாலா நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ராதாரவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் யூடியூப் பிரபலங்கள் பலரும் நடித்திருக்கிறார்கள். ஷபீர் இசையமைக்க, யூ.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.






