என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    66வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல் அறிவிக்கப்பட்டதில் சிறந்த தமிழ்ப்படமாக ‘பாரம்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 66-வது தேசிய திரைப்பட விருதுக்கான பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

    அதில் ‘பாரம்’ என்ற தமிழ்ப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘மகாநடி’ படத்திற்கு கிடைத்துள்ளது. கேஜிஎப் படத்திற்கு சிறந்த ஆக்‌ஷன் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்டிற்கும் கிடைத்துள்ளது. இந்தியில் அந்ததுன், மலையாளத்தில் சுடானி பிரம் நைஜீரியா, கன்னடத்தில் நதிசராமி படங்களுக்கு கிடைத்துள்ளது.

    கீர்த்தி சுரேஷ்

    சிறந்த நடிகைக்காக மகாநடி படத்திற்காக கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த இசையமைப்பாளர் விருது பத்மாவத் படத்திற்காக சஞ்சய் லீலா பன்சாலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் இயக்கத்தில் ஜித்தன் ரமேஷ் நடிப்பில் உருவாக்கி வரும் 'ஒங்கள போடணும் சார்' படத்தின் முன்னோட்டம்.
    ஜித்தன் ரமேஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ஒங்கள போடணும் சார்’. இதில் இவருடன் சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு நாயர், பரிட்சித்தா, வைஷாலி ஆகிய 5 அறிமுக கதாநாயகிகள் நடிக்கிறார்கள். கமர்சியல் என்டர்டெயினராக இப்படம் உருவாகி வருகிறது.

    ஸிக்மா பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் மனோஜ் தயாரிப்பில் உருவாகி இப்படத்தை இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் இயக்கி வருகிறார்கள். பாடலாசிரியர் முருகன் மந்திரம், இப்படத்தில் பாடல்கள் மற்றும் வசனத்தை எழுதி இருப்பதோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார்.

    நயன்தாரா, ஜித்தன் ரமேஷ், ஒங்கள போடணும் சார் படக்குழு


    இந்த படத்திற்கு தலைப்பு யோசிக்கும்போது, சட்டென்று ரீச் ஆகிற மாதிரி இளைய தலைமுறைக்குப் பிடித்த தலைப்பாக இருக்கவேண்டும் என்று யோசித்தோம். அப்படி யோசிக்கும்போது "நானும் ரௌடி தான்" படத்தில் நயன்தாரா பேசிய "ஒங்கள போடணும் சார்" வசனம், நினைவுக்கு வந்தது. அதையே தலைப்பாக வைத்துவிட்டோம், நயன்தாராவுக்கு நன்றி… என்று கூறுகிறார்கள் இரட்டை இயக்குநர்கள்.
    நேர்கொண்ட பார்வை படத்திற்கு அஜித் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் கண்கலங்கினார்.
    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ‘பிங்க்‘ படத்தின் ரீமேக்காகும். போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம் நேற்று வெளியாகியுள்ளது. ‘விஸ்வாசம்‘ படத்துக்கு பிறகு வெளியாகியுள்ள அஜித் படம் என்பதால், ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

    திரையுலக பிரபலங்கள் பலருமே இந்தப் படத்தைத் தேர்வு செய்து நடித்ததிற்காக அஜித்தை பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில், நேற்று காலை 4 மணிக்கு காட்சியில் ரசிகர்களுடன் ‘நேர்கொண்ட பார்வை’ படக்குழுவினரும் இணைந்து படத்தை கண்டுகளித்தார்கள். இசையமைப்பாளர் யுவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல் காட்சி முடிந்தவுடன் வெளியே வந்த போது மிகவும் கண்கலங்கினார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

    ரசிகர்களுடன் செல்பி எடுத்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்


    நிருபர்கள் மத்தியில் பேசும் போது, “ரசிகர்களுடன் படம் பார்த்ததை மறக்க முடியாது. ரொம்ப எமோஷனலாக இருக்கிறது. தமிழ் ரசிகர்கள் மிகவும் வலுவானவர்கள். படத்தின் மிக முக்கியமான வசனங்களைக் கவனிக்கிறார்கள். மாஸ் காட்சிகளுக்கு சந்தோஷப்படுகிறார்கள். முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது ஒரு அனுபவம். ஆனால், அதே படத்தில் நாமும் இடம்பெற்றிருப்பது ஒரு வித்தியாசமான அனுபவம் “ என்று தெரிவித்தார்.
    இந்திய வரைபடத்தில் காஷ்மீருக்கு காவி தலைப்பாகை அணிவித்திருந்தபடி புகைப்படம் பதிவிட்ட அமலாபாலுக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசிய லமைப்பு சட்டத்தின் 370 மற்றும் 35ஏ ஆகிய பிரிவு களை மத்திய அரசு நீக்கியது. இதற்கு பொது மக்களும், திரையுலக பிரபலங்களும் தங்களின் ஆதரவு மற்றும் எதிர்ப்பை சமூக வலை தளங்களில் தெரிவித்தனர். அமலாபாலும் தனது கருத்தை தெரிவித்து இருந்தார்.

    அமலாபால்

    370-வது சட்டப்பிரிவு நீக்கப் பட்டது வரவேற்கத் தக்கது என்று தெரிவித்த அமலா பால் இந்திய வரை படத்தில் காஷ்மீர் தலையில் காவி தலைப் பாகை கட்டியபடி உள்ள புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே இது போன்ற முடிவுகளை அமலுக்கு கொண்டு வர முடியும் என்று பாராட்டியிருந்தார். அமலா பாலின் பதிவை பார்த்த சமூகவலைதள ரசிகர்கள் கோபம் அடைந்தனர்.


    அது என்ன காஷ்மீர் தலையில் காவி தலைப் பாகை, நம் தேசியக் கொடியின் மற்ற இரண்டு வண்ணங்கள் எங்கே?. இப்படி யோசிக்காமல் எதையாவது செய்து நானும் கருத்து தெரிவிக்கிறேன் என்று பந்தா காட்ட வேண்டாம்’ என்று ரசிகர்கள் அவரை விளாசியுள்ளனர்.
    மணிரத்னம் கதை எழுதி தயாரிக்கும் வானம் கொட்டட்டும் படத்தில் பிரபல இயக்குனர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன் இணைந்து நடிக்கும் ’வானம் கொட்டட்டும்’ படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மணிரத்னம் கதை எழுதி தயாரிக்கும் இந்தப் படத்தை அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தனசேகரன் இயக்குகிறார். 

    ஏற்கெனவே இவரது இயக்கத்தில் படைவீரன் திரைப்படம் வெளியாகியுள்ளது. வானம் கொட்டட்டும் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு சகோதரியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின் சரத்குமாரும், ராதிகாவும் இணைந்து நடிக்கின்றனர்.

    வானம் கொட்டட்டு படத்தில் பாலாஜி சக்திவேல்

    இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர் பாலாஜி சக்திவேல் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்தை ‘கடைக்குட்டி சிங்கம்‘ திரைப்படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்குகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, சமுத்திரக்கனி, நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 

    எஸ்.கே.16 பட போஸ்டர்

    இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற ஆகஸ்ட் 12-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை சூர்யா-ஜோதிகா முதல் நாளே பார்த்துள்ளனர்.
    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’ நேற்று வெளியான இப்படத்தை பார்த்த அனைவரும் நல்ல விமர்சனங்களையே கொடுத்து வருகின்றனர். உலகம் முழுக்க இருக்கும் அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். அஜித்தின் ரசிகர்கள் மட்டுமல்லாது, திரை பிரபலங்களும் படத்தை பாராட்டி வருகின்றனர். 

    அஜித்துடன் சூர்யா

    அந்த வகையில், நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் படத்தை முதல் நாளே பார்த்துள்ளனர். இப்படம் அவர்கள் இருவரையும் வெகுவாக கவர்ந்ததாம். படம் பார்த்து சந்தோஷமடைந்த சூர்யா, இயக்குனர் வினோத் மற்றும் நடிகர் அஜித் வீட்டிற்கு வாழ்த்து கூறி பூங்கொத்தை அனுப்பியதாக கூறப்படுகிறது.
    ‘பாகுபலி’ படத்தில் நடித்துள்ள மதுபிரகாஷ் என்பவரின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
    ராஜமவுலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய ‘பாகுபலி’ படத்தில் நடித்துள்ளவர் மதுபிரகாஷ். டி.வி. தொடர்களிலும் நடிக்கிறார். இவருக்கும் பாரதி என்ற பெண்ணுக்கும் 2015-ல் திருமணம் நடந்தது. இவர்கள் ஐதராபாத்தில் வசித்து வந்தனர். மதுபிரகாஷ் ஒழுங்காக வீட்டுக்கு வருவது இல்லை என்று கூறப்படுகிறது.

    அவருக்கும் சக நடிகை ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக பாரதி சந்தேகித்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது. கணவர் மீது பாரதி போலீசில் புகார் செய்தார். இருவருக்கும் குடும்பத்தினரும், போலீசாரும் சமரசம் செய்து வைத்தனர். 

    மதுபிரகாஷ்

    இந்த நிலையில் மது பிரகாஷ், மனைவி பாரதியிடம் ஜிம்முக்கு சென்றுவிட்டு அங்கிருந்து நேராக டெலிவிஷன் நிகழ்ச்சி படப்பிடிப்புக்கு போய்விடுவேன் என்று கூறி விட்டு சென்றார். அவர் வீட்டில் இருந்து வெளியே சென்ற பிறகு பாரதி போனில் தொடர்புகொண்டு உடனடியாக வீட்டுக்கு வரவேண்டும் என்று அழைத்தார். நீங்கள் வராவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் மிரட்டினார். 

    அதனை மதுபிரகாஷ் பொருட்படுத்தவில்லை. இரவு 7.30 மணிக்கு அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது பாரதி மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மாநாடு திரைப்படத்தில் இருந்து நடிகர் சிம்பு நீக்கம் செய்யப்பட்டது குறித்து அப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு கருத்து தெரிவித்துள்ளார்.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருந்த மாநாடு திரைப்படத்தில் இருந்து நடிகர் சிம்பு விடுவிக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். மாநாடு படத்திற்கான கால்ஷீட் தருவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், படம் எடுப்பதில் கால விரயம் ஏற்படுவதாக தெரிவித்த சுரேஷ் காமாட்சி, மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்படுவதாக தெரிவித்தார். 

    சிம்பு, வெங்கட் பிரபு

    இந்நிலையில் இது குறித்து படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது:- ”நடிகர் சிம்புவுடன் பணியாற்ற முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. அதே நேரத்தில் காலம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தயாரிப்பாளர் எடுத்துள்ள இந்த முடிவினை ஏற்றுக் கொள்கிறேன்”. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
    கிரிக்கெட் வீரர் முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் இருந்து விலகுவது குறித்து விஜய் சேதுபதி ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோரின் வாழ்க்கை திரைப்படங்களாக வந்தன. கபில்தேவ் உலக கோப்பையை வென்றதை வைத்து ‘83’ என்ற பெயரில் படம் தயாராகிறது. இதுபோல் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை கிரிக்கெட் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வாழ்க்கையையும் படமாக எடுக்கின்றனர்.

    முரளிதரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளனர். படத்துக்கு ‘800’ என்ற தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி டைரக்டு செய்கிறார். விஜய் சேதுபதி கூறும்போது, “உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டில் முத்திரை பதித்த முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது” என்றார்.

    விஜய் சேதுபதி

    ஆனால் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட அறிக்கையில் “முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும் சிங்களராகவே வாழ்ந்து வருகிறார். விடுதலைப்புலிகள் போராடியபோது சிங்களர்கள் பக்கம் நின்று துரோகம் செய்தார். அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை ஈழத்தமிழர்கள் ஏற்கமாட்டார்கள்” என்று கண்டித்தது.

    இதுபோல் சமூக வலைத்தளத்திலும் விஜய் சேதுபதி நடிப்பதை கடுமையாக எதிர்த்தனர். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் முரளிதரன் வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று வலைத்தளத்தில் கருத்துகள் பதிவிட்டனர். இதனால் அந்த படத்தில் இருந்து விலகுவது குறித்து விஜய் சேதுபதி ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    ரூ.50 கோடி மதிப்பிலான வீட்டை விற்றுவிட்டு, அதைவிட பிரம்மாண்டமான புதிய வீட்டை பிரியங்கா சோப்ரா விலைக்கு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்கா பாப் பாடகர் நிக் ஜோனசை கடந்த வருடம் திருமணம் செய்து லாஸ் ஏஞ்சல்சில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஆடம்பர வீட்டில் குடியேறினார். இது நிக் ஜோனசுக்கு சொந்தமான வீடு. இதன் மதிப்பு ரூ.50 கோடி ஆகும். இந்த வீடு ஐந்து படுக்கை அறைகள், ஐந்து குளியல் அறைகள், ஒரு நீச்சல் குளம், இரவு விருந்து நிகழ்ச்சிக்கு தனி பகுதி என்று விசாலமாக இருந்தது. 

    இப்போது அந்த வீட்டை விற்றுவிட்டனர். இதுவே பெரிய வீடுதான். ஆனாலும் இதை விட பெரிய வீட்டுக்கு மாறுவதற்காக விற்று இருக்கிறார்கள். அதே பெவர்லி ஹில்ஸ் பகுதியில் இன்னொரு புதிய வீட்டை விலைக்கு வாங்க முடிவு செய்து இருப்பதாக ஹாலிவுட் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன. புதிய வீட்டின் மதிப்பு ரூ.140 கோடி என்று கூறப்படுகிறது. 

    பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ்

    தனது சகோதரர்களுடன் சேர்ந்து நிக் ஜோனஸ் ஹேப்பினஸ் பிகின் டூர் நிகழ்ச்சிக்கு திட்டமிட்டு உள்ளார். இந்த இசை சுற்றுலாவுக்காக நிக் ஜோனஸ் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டி உள்ளது. இதனால் புதிய வீட்டை வாங்கினாலும் அவர்கள் விருப்பத்துக் கேற்ப உள் அலங்கார வேலைப்பாடுகள் செய்ய தாமதம் ஆகும். எனவே அடுத்த வருடம் நிக் ஜோனஸ்-பிரியங்கா ஜோடி இந்த வீட்டுக்கு கிரகப்பிரவேசம் செய்ய திட்டமிட்டு உள்ளனர். 
    சுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜா, சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கென்னடி கிளப்’ திரைப்படத்தின் முன்னோட்டம்.
    நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுசீந்திரன். இவர் இயக்கத்தில் தற்போது ‘கென்னடி கிளப்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் சசிகுமார், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம் மகளிர் கபடியை கருவாக கொண்டு உருவாகி உள்ளது.

    சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பாக தாய் சரவணன் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
    ×