search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கென்னடி கிளப்"

    சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா நடிப்பில் உருவாகி இருக்கும் `கென்னடி கிளப்' படக்குழுவின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. #KennadiClub #Sasikumar
    `ஏஞ்சலினா', `சாம்பியன்' படங்களைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `கென்னடி கிளப்'. சசிகுமார், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம் மகளிர் கபடியை கருவாக கொண்டு உருவாகி வருகிறது.

    சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.


    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் டப்பிங் நேற்று துவங்கியதாக சசிகுமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் இந்த படத்தை தயாரித்துள்ளார். #KennedyClub #Sasikumar #Bharathiraja #Suseenthiran

    சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் கென்னடி கிளப் படக்குழுவுக்கு இயக்குநர் பாரதிராஜா விருந்து அளித்தார். #KennedyClub #Sasikumar
    நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் `கென்னடி கிளப்'.

    இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுக்க பல மாநிலங்களில் நடைபெற்றது. அதேபோல் தமிழகத்திலும் பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டு வந்தது. இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளுக்காக விழுப்புரத்தில் பிரம்மாண்டமான தளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது.



    இதில் நிஜ வீராங்கனைகளும் நடித்தனர். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். நேற்று முன்தினத்தோடு பாரதிராஜாவின் பகுதி முடிவடைந்த நிலையில், நேற்று அவரது இல்லத்தில் படத்தில் நடித்த நிஜ வீராங்கனைகள், இயக்குநர், உதவி இயக்குநர்கள் மற்றும் படக்குழுவில் பணியாற்றியவர்களுக்கு மதிய விருந்தளித்து உபசரித்தார்.

    இந்த படத்தில் பாரதிராஜாவுடன் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #KennedyClub #Sasikumar #Bharathiraja #Suseenthiran

    சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் ‘கென்னடி கிளப்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி 2 கோடி செலவில் உருவாகி வருகிறது. #Sasikumar #KennedyClub
    சசிகுமார், இயக்குனர் பாரதிராஜா, இணைந்து நடிக்க பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் கென்னடி கிளப். சசிகுமார் இதுவரை நடித்ததிலேயே இந்த படம் தான் அதிக பட்ஜெட் கொண்ட படம். 15 கோடி செலவில் உருவாகி வரும் இப்படம் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கிறது.

    தற்போது விழுப்புரத்தில் உள் விளையாட்டு அரங்கில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக இந்தியாவில் இருந்து 16 குழுக்கள் வந்துள்ளது. ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, பூனே, கேரளா, ஆந்திரா, மங்களூர், போன்ற இடங்களிலிருந்து கபடி குழுக்கள் வந்துள்ளது. நிஜ வீரர்களை கொண்டே படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். ஏறத்தாழ 300 வீரர்கள் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்கள்.



    படப்பிடிப்பு விழுப்புரத்தில் நடந்தாலும் வடஇந்தியாவில் நடப்பது போல் பிரத்யேகமாக படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மட்டும் ரூ.2 கோடி பட்ஜெட் ஒதுக்கியுள்ளது. இறுதிக்கட்ட காட்சி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக நிஜ போட்டியாகவே நடத்தி படப்பிடிப்பை பதிவு செய்து வருகிறார்கள் பட குழுவினர். இறுதிப்போட்டியை காண ஏராளமானோரை வரவழைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இறுதிக்கட்ட காட்சிகளுக்கு மட்டும் 10 நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்துகிறார்கள். இந்த படப்பிடிப்பு முடிந்ததும் பாடல்கள் மட்டும் படமாக்கப்படுகிறது என்று இதன் தயாரிப்பாளர் தாய் சரவணன் தெரிவித்துள்ளார்.

    சுசீந்தரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா முக்கிய வேடங்களில் நடிக்கும் `கென்னடி கிளப்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீசாக இருக்கிறது. #KennedyClub #Sasikumar
    ஏஞ்சலினா, சாம்பியன் படங்களைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `கென்னடி கிளப்'. சசிகுமார், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம் மகளிர் கபடியை கருவாக கொண்டு உருவாகி வருகிறது. 

    சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

    படம் பற்றி சுசீந்திரன் பேசும் போது, 

    ‘‘பெண்கள் கபடியை மையமாக கொண்ட கதை, இது. இந்தியா முழுவதும் எங்கெல்லாம் கபடி போட்டி நடைபெற்றதோ அங்கெல்லாம் சென்று நிஜ போட்டிகளை படமாக்கி இருக்கிறோம். சேலம், ஈரோடு, கோவை, மதுரை, கன்னியாகுமரி, மும்பை, அகமதாபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தினோம்.



    பெரும்பாலான காட்சிகளை 4 கேமராக்கள் மூலம் படமாக்கி இருக்கிறோம். இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக மகாராஷ்டிரா சென்றோம். அங்கிருந்து சுமார் 180 கிலோ மீட்டர் தொலைவில் இசாத்பூர் என்ற இடத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். ஹரியானாவில் நடைபெற இருக்கும் நிஜ போட்டியையும் படமாக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

    சீன மொழிக்கான டப்பிங் உரிமை (ரூ.2 கோடிக்கு) படம் வெளியாவதற்கு முன்பே விற்பனை ஆகியிருக்கிறது. இறுதிக்கட்டத்தில் உள்ள இந்த படம் தமிழ் புத்தாண்டுக்கு திரைக்கு வரும்.’’ என்றார். #KennedyClub #Sasikumar #Bharathiraja #Suseenthiran

    சுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜா, சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் ‘கென்னடி கிளப்’, சீன மொழி பேச இருக்கிறது. #KennadyClub #Suseenthiran #Sasikumar
    'டங்கல்' மற்றும் 'பாகுபலி' போன்ற இந்திய படங்களுக்கு சீன சந்தையில் மிகுந்த வரவேற்பு இருந்தது. அதேபோன்று தமிழ் திரைப்படத்துறைக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. சுசீந்திரன் இயக்கித்தில் வெளியாகவுள்ள படம் சீன மொழியில் டப்பிங் செய்யப்படுகிறது. இப்படத்தின் டப்பிங் உரிமம் 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.

    விளையாட்டு, தடைகளை முறியடிப்பது, சாதனைகள் புரிவது, போன்ற படங்கள் அனைவரையும் ஈர்க்கும். அப்படி ஈர்க்கப்பட்டு தான் சீனாவில் இவ்வளவு பெரியத் தொகைக்கு விற்பனையாகியுள்ளது. இப்படம் நிஜ வாழ்க்கையில் பெண்களுக்கான கபடி போட்டியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மூத்த இயக்குநர் பாரதிராஜா மற்றும் சசிகுமார் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    பாரதிராஜா- சசிகுமார்- சுசீந்திரன் கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது சர்வதேச சந்தையிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தைக் கொண்டு உருவாகியுள்ளது 'கென்னடி கிளப்'. சமுத்திரக்கனி, சூரி, முனீஷ்காந்த், 'புதுவரவு' மீனாக்ஷி, காயத்ரி, நீது, சௌம்யா, ஸ்ம்ரிதி, சௌந்தர்யா மற்றும் பலர் நடிக்கின்றனர். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை டி.இமான் இசையமைக்கிறார். நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இப்படம் 2019-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று உலகம் முழுவதும் வெளியாகும்.
    சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் `கென்னடி கிளப்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. #KennedyClub #SasiKumar #Bharathiraja
    சுசீந்திரன் இயக்கத்தில் ஜீனியஸ் படம் வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி திரைக்கு வருகிறது. மேலும் ஏஞ்சலினா, சாம்பியன் உள்ளிட்ட படங்களையும் இயக்கி முடித்துள்ளார். இந்த இரு படங்களின் பின்னணி வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.

    அதன்படி சுசீந்திரன் இயக்கும் அடுத்த படத்தில் சசிகுமார் மற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். `கென்னடி கிளப்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சூரி, முனீஸ்காந்த், மீனாட்சி, காயத்ரி, நீது, சௌமியா, ஸிம்ரிதி, சௌந்தர்யா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் நடிக்க பாலிவுட்டில் இருந்து வில்லனை தேடிவருகிறார் சுசீந்திரன்.

    பாண்டியநாடு, பாயும் புலி மற்றும் மாவீரன் கிட்டு உள்ளிட்ட படங்களுக்கு பிறகு சுசீந்திரன் இயக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். குருதேவ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் இந்த படத்தை தயாரிக்கிறார்.



    பழனியை கதைக்களமாக கொண்டு உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது. அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

    இயக்குனர் சுசீந்திரனின் தந்தை புகழ்பெற்ற கபடிக்குழுவின் நிறுவனர். அவர் 40 வருடமாக அந்த கபடி குழுவை நடத்தி பயிற்சியளித்து வருகிறார். அவரிடம் பயிற்சி பெற்ற பலர் தேசிய மற்றும் உலகளாவிய போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்கள் வென்றுள்ளனர். இந்த படத்தில் நிஜ பெண் கபடி வீராங்கனைகளும் நடிக்கிறார்கள்.

    வெண்ணிலா கபடிக்குழு படத்திற்கு பிறகு கபடியை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கும் படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #KennedyClub #SasiKumar #Bharathiraja

    ×