என் மலர்

  சினிமா

  கென்னடி கிளப் - மீண்டும் கபடி களத்தில் சுசீந்திரன்
  X

  கென்னடி கிளப் - மீண்டும் கபடி களத்தில் சுசீந்திரன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் - பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் `கென்னடி கிளப்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. #KennedyClub #SasiKumar #Bharathiraja
  சுசீந்திரன் இயக்கத்தில் ஜீனியஸ் படம் வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி திரைக்கு வருகிறது. மேலும் ஏஞ்சலினா, சாம்பியன் உள்ளிட்ட படங்களையும் இயக்கி முடித்துள்ளார். இந்த இரு படங்களின் பின்னணி வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.

  அதன்படி சுசீந்திரன் இயக்கும் அடுத்த படத்தில் சசிகுமார் மற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். `கென்னடி கிளப்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சூரி, முனீஸ்காந்த், மீனாட்சி, காயத்ரி, நீது, சௌமியா, ஸிம்ரிதி, சௌந்தர்யா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் நடிக்க பாலிவுட்டில் இருந்து வில்லனை தேடிவருகிறார் சுசீந்திரன்.

  பாண்டியநாடு, பாயும் புலி மற்றும் மாவீரன் கிட்டு உள்ளிட்ட படங்களுக்கு பிறகு சுசீந்திரன் இயக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். குருதேவ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் இந்த படத்தை தயாரிக்கிறார்.  பழனியை கதைக்களமாக கொண்டு உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது. அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

  இயக்குனர் சுசீந்திரனின் தந்தை புகழ்பெற்ற கபடிக்குழுவின் நிறுவனர். அவர் 40 வருடமாக அந்த கபடி குழுவை நடத்தி பயிற்சியளித்து வருகிறார். அவரிடம் பயிற்சி பெற்ற பலர் தேசிய மற்றும் உலகளாவிய போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்கள் வென்றுள்ளனர். இந்த படத்தில் நிஜ பெண் கபடி வீராங்கனைகளும் நடிக்கிறார்கள்.

  வெண்ணிலா கபடிக்குழு படத்திற்கு பிறகு கபடியை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கும் படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #KennedyClub #SasiKumar #Bharathiraja

  Next Story
  ×