என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பாகுபலி படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘சாஹோ’ படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
    பாகுபலி வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘சாஹோ’. சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷ்ரத்தா கபூர் நடித்திருக்கிறார். நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. மதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு துபாயில் நடந்தது.



    இப்படம் ஆகஸ்ட் 30-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து உள்ளது. இதில் வரும் ஆக்‌ஷன் காட்சிகள், கார் சேசிங் காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டிரைலர் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
    முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி படத்திற்காக நடிகை கங்கனா ரனாவத் தீவிரமாக பரத நாட்டியம் பயிற்சி பெற்று வருகிறார்.
    ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி படத்தில் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆராக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடம் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வாட்ச்மேன், தேவி 2 ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. விஜய்யின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    விஜய் முன்னரே அறிவித்தபடி தலைவி என்ற பெயரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பயோபிக்கை இயக்க உள்ளார். இப்படத்திற்கு பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் ஜெயலலிதா பாத்திரத்தை ஏற்கவுள்ளார். கங்கனா தனது தலைவி படத்திற்காக தனது பயிற்சிகளை தொடங்கியுள்ளார். தமிழ் மொழி உச்சரிப்புக்காக பயற்சி பெற்று வரும் அவர், பரத நாட்டியம் பயிற்சியிலும் ஈடுபடவுள்ளார்.

    கங்கனா

    இப்படத்தில் பரத நாட்டியம் முக்கியமான பங்குவகிக்க உள்ளது. இந்நிலையில், ஜெயலலிதாவின் வாழ்வில் முக்கிய பங்குவகித்த மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்.ஜி.ராமச்சந்திரன் பாத்திரத்தில் யார் நடிக்கவுள்ளார் என கேள்விகள் அவ்வப்போது எழுந்து வருகின்றன. தற்போது எம்.ஜி.ஆராக நடிக்க அரவிந்த் சாமி ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் படத்துக்காக எழும்பூர் ரெயில் நிலையம் போன்று பிரம்மாண்ட செட் போடப்பட்டு படமாக்கி இருக்கிறார்கள்.
    தமிழ்த் திரையுலகில் முன்னணி கலை இயக்குநராக வலம் வரும் முத்துராஜ் பிரம்மாண்ட அரங்குகளை தத்ரூபமாக உருவாக்கி வருகிறார். கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திற்கான அரங்குகளை உருவாக்கிவரும் இவர் பிகில் படத்திற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் போன்று பிரம்மாண்ட அரங்கை உருவாக்கியுள்ளார்.

    முக்கியமான காட்சிகள் ரயில் நிலையத்தில் நடப்பதுபோன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. விஜய் போன்ற முன்னணி நடிகர் படப்பிடிப்பில் கலந்துகொண்டால் சாதாரண இடங்களிலேயே மக்கள் கூட்டம் அதிகமாகிறது. மேலும் படத்தின் காட்சிகள், கதாபாத்திரங்கள் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி விடுகின்றன. இந்நிலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் படப்பிடிப்பு நடத்துவது சாத்தியமில்லை.

    பிகில் படத்தில் விஜய்

    இதனால் படக்குழு பிரம்மாண்டமாக அரங்கு அமைத்துள்ளது. தற்போது விஜய் நடிக்கும் காட்சிகளில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளன. சில காட்சிகளில் விடுபட்ட ஷாட்டுகளை படமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து விஜய் டப்பிங் பணிகளில் கவனம் செலுத்துகிறார். அடுத்த வாரத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமான் பின்னணி இசையமைக்கும் பணியில் ஈடுபட உள்ளார். அட்லீ இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மகாநடி படத்தில் சிறந்த நடிகையாக தேர்வு செய்ததற்கு நடிகை கீர்த்தி சுரேஷ், தேசிய விருதை எதிர்பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
    டெல்லியில் 66-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ‘மகாநடி’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார் கீர்த்தி சுரேஷ். அப்படத்தில் மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வேடத்தில் நடத்து இருந்தார்.

    கீர்த்திசுரேசுக்கு தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் மற்றும் அவருடைய நண்பர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவருடைய சந்தோ‌ஷத்துக்கு இடையே, தேசிய விருது வென்றது குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியதாவது:-

    “ரொம்ப சந்தோ‌ஷமாக இருக்கிறது. என்ன வார்த்தைகளைப் போட்டு சந்தோ‌ஷத்தை விவரிப்பது என தெரியவில்லை. தற்போது அப்பா அம்மாவுடன் இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு. இருவருக்குமே பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளேன். பலரும் வாழ்த்துகள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். மகாநடி’ படத்தில் சின்ன வயதாகவும், பெரிய ஆளாகவும் காட்ட வேண்டும். ஆகையால் அதற்காக உடம்பெல்லாம் குறைக்கவில்லை. எப்படியிருந்தேனோ அதைவிடக் குண்டாக காட்டுவதற்கு மேக்கப் மூலமாக ரொம்ப கஷ்டப்பட்டோம்.

    மகாநடி படத்தில் கீர்த்தி சுரேஷ்

    நல்லது நடக்கும் என்பது மட்டுமே எண்ணத்தில் இருந்தது. இந்த விருதை அம்மாவுக்கு அர்ப்பணிக்கிறேன். ஏனென்றால், அவருக்கு ஒரு தேசிய விருது கிடைக்க வேண்டியதிருந்தது கிடைக்காமல் போய் விட்டது. அவருக்கு அந்த விருதை வாங்கிக் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அதைச் சாதித்து விட்டேன் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த தேசிய விருது எதிர்பார்க்காத ஒன்று. இதன் மூலம் பொறுப்பு அதிகரித்துள்ளது என நினைக்கிறேன். இந்த விருதால் என்ன மாற்றங்கள் நிகழும் என்பது சில காலங்கள் போனதால் தான் தெரியும்”. இவ்வாறு அவர் கூறினார்.
    வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    திருட்டு வி.சி.டி.யை தொடர்ந்து இணையதளத்தில் புதிய படங்கள் உடனுக்குடன் வெளியாவது தயாரிப்பாளர்களுக்கு பெரிய தலை வலியாக உள்ளது. இதை தடுக்க தயாரிப்பாளர் சங்கம் கடும் நடவடிக்கை எடுத்தது. தியேட்டர்களில் கேமரா கொண்டு செல்ல தடை விதித்தனர். கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டன.

    ஆனாலும் பலன் இல்லை. ரஜினிகாந்தின் கபாலி, காலா, பேட்ட ஆகிய படங்கள் திரைக்கு வந்த உடனேயே இணையதளத்திலும் வெளியானது. இதுபோல் விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களும் திரைக்கு வந்த உடனேயே இணையதளத்திலும் வெளிவந்தன. இதை கட்டுப்படுத்த முடியாமல் தயாரிப்பாளர்கள் தவிக்கின்றனர்.

    நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்

    இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வெளியான அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை படமும் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தை இணையதளத்தில் வெளியிடக்கூடாது என்று கோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதையும் மீறி இணையதளத்தில் வந்துள்ளது. இதை பலரும் பதிவிறக்கம் செய்து பார்க்கின்றனர். இதனால் வசூல் பாதிக்கும் என்ற கவலையில் படக்குழுவினர் உள்ளனர்.
    பிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்த நடிகை விஜயலட்சுமியின் கஷ்டத்தை நடிகர் ரஜினிகாந்த் கேட்டறிந்து உதவி செய்திருக்கிறார்.
    விஜய், சூர்யாவுடன் பிரண்ட்ஸ் படத்தில் நடித்தவர் விஜயலட்சுமி. கடைசியாக பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவின் அண்ணியாக வந்தார். கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் அவருக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டு பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பண கஷ்டத்தில் இருப்பதாகவும் ஒவ்வொரு நிமிஷமும் நரகத்தில் இருக்கிறேன் என்றும் பேசி விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டார். ரஜினிகாந்த் எனக்கு உதவ வேண்டும் என்றும் வீடியோவில் கூறியிருந்தார். இப்போது இன்னொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் விஜயலட்சுமி பேசி இருப்பதாவது:-

    “வீடியோவில் எனது கஷ்டங்களை பகிர்ந்து ரஜினியிடம் ஒரு முறை பேச வேண்டும் என்று கூறினேன். இதை பார்த்து ரஜினிகாந்த் என்னை போனில் தொடர்பு கொண்டார். எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அன்போடு எனது பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுத்ததுடன், நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசினார்.

    நடிகை விஜயலட்சுமி

    அவர் சிறந்த மனிதர். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அவருடையை எண்ணத்தை மதிக்கிறேன். அவர் மீது நான் கொண்ட மரியாதை நூறு மடங்கு அதிகரித்துவிட்டது. இப்படி ஒரு நல்ல மனிதர்தான் நமக்கு தலைவராக இருக்க வேண்டும். என்னுடைய கஷ்டங்களை கேட்டு உதவி செய்தார்.

    ரஜினிகாந்த் எந்த செயல் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும். ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய எளிமை அவரிடம் அதிகமாகவே இருக்கிறது. இப்போது நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்.”

    இவ்வாறு விஜயலட்சுமி கூறியுள்ளார்.
    சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பூமிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் ’கொலையுதிர் காலம்’ படத்தின் விமர்சனம்.
    நாயகி நயன்தாரா சிறு வயதில் ஆசிரமத்தில் வளர்கிறார். இவரால் பேசவும், கேட்கவும் முடியாது. ஆனால், இவர் திறமையாக ஓவியம் வரையக்கூடியவர். ஆசிரமத்தின் உரிமையாளர் லண்டனில் இருந்து தமிழ்நாட்டிற்கு வர, அவரை இதுவரை பார்த்திராத நயன்தாரா அப்படியே ஓவியமாக வரைந்து வைத்திருக்கிறார்.

    இதைப் பார்க்கும் ஆசிரமத்தின் உரிமையாளர் நயன்தாராவை வளர்ப்பு மகளாக தத்தெடுத்து கொள்கிறார். ஆசிரமத்தின் உரிமையாளர் உயிரிழக்கும் நிலையில், லண்டனில் இருக்கும் சொத்துக்களை வளர்ப்பு மகள் நயன்தாராவிற்கு எழுதி வைத்துவிடுகிறார்.

    லண்டனுக்கு செல்லும் நயன்தாராவிடம், ஆசிரம உரிமையாளரின் உறவினர்களான பூமிகா மற்றும் அவரது கணவர், இது எங்களுக்கு சொந்தமான சொத்து என்று முறையிட்டு சொத்தை அபகரிக்க நினைக்கிறார்கள். இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் நயன்தாராவை கொலை செய்ய முயற்சி செய்கிறார்.

    கொலையுதிர் காலம் படத்தில் நயன்தாரா

    இறுதியில் அந்த மர்ம நபர் யார்? எதற்காக நயன்தாராவை கொலை செய்ய முயற்சி செய்கிறார்? பூமிகா மற்றும் அவரது கணவரின் எண்ணம் நிறைவேறியதா? இதிலிருந்து நயன்தாரா எப்படி மீண்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நயன்தாரா தனக்கே உரிய பாணியில் அசத்தி நடித்திருக்கிறார். வாய் பேச முடியாமல், காது கேட்காமல் இவர் செய்யும் செய்கைகள் பல இடங்களில் ரசிக்கவும், சில இடங்களில் பரிதவிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இவரை மையமாக வைத்தே இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கதாபாத்திரத்தை உணர்ந்து நயன்தாரா திறமையாக நடித்திருக்கிறார்.

    நீண்ட இடைவெளிக்குப் பின் திரையில் தோன்றிருக்கும் பூமிகாவின் நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது. சொத்துக்காக நயன்தாராவை பழி வாங்குவது என வில்லத்தனத்தில் கவனம் பெற்றிருக்கிறார்.

    கொலையுதிர் காலம் படத்தில் நயன்தாரா

    மர்மம் கலந்த திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சக்ரி டோலட்டி. நயன்தாராவிடம் பாசம், அன்பு, கோபம், பயம் என திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். ஆனால், திரைக்கதையில் கவனத்தை தவறவிட்டிருக்கிறார். பல லாஜிக் மீறல்கள் படத்திற்கு பலவீனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு வீட்டிற்குள் மர்ம நபர், நயன்தாரா இருவரும் ஓடி பிடித்து விளையாடுவது போல் திரைக்கதை இருக்கிறது. இது ஒரு கட்டத்திற்கு மேல் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

    அச்சு ராஜாமணியின் பின்னணி இசையை மட்டுமே வைத்து படத்தை நகர்த்தி இருக்கிறார்கள். கோரி கெர்யக் ஒளிப்பதிவு சிறப்பு.

    மொத்தத்தில் ‘கொலையுதிர் காலம்’ இறந்த காலம்.
    66வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் தமிழ் படங்கள் இடம் பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 66-வது தேசிய திரைப்பட விருதுக்கான பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

    அதில் ‘பாரம்’ என்ற தமிழ்ப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘மகாநடி’ படத்திற்கு கிடைத்துள்ளது. கேஜிஎப் படத்திற்கு சிறந்த ஆக்‌ஷன் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்டிற்கும் கிடைத்துள்ளது. சிறந்த நடிகைக்காக மகாநடி படத்திற்காக கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

    பரியேறும் பெருமாள், வடசென்னை

    தமிழில் பாரம் படத்திற்கு மட்டுமே விருது கிடைத்துள்ளது. மற்ற பிரிவுகளில் தமிழ் படங்கள் இடம் பெறாதது சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வருடம், பரியேறும் பெருமாள், சர்வம் தாளமயம், இரும்புத்திரை, ராட்சசன், 96, 2.0, சீதக்காதி, கனா, சூப்பர் டீலக்ஸ், வட சென்னை ஆகிய படங்கள் தமிழ் ரசிகர்களை அதிக கவர்ந்த படங்கள். மேலும் பல திரைப்பட விழாக்களில் இப்படங்கள் கலந்துக் கொண்டு விருதுகள் பெற்றுள்ளது. 

    ஆனால், இந்தப்படங்கள் தேசிய விருது பட்டியலில் இடம் பெறாதது ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப்படத் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக இருக்கும் யோகிபாபு, அடுத்தகட்டமாக ஆக்‌ஷன் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக இருப்பவர் யோகிபாபு. இவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலை தான் நீடித்து வருகிறது. அந்த வகையில் யோகிபாபுவை மையமாக வைத்து தற்போது “காதல் மோதல் 50/50” எனும் ஆக்‌ஷன் கலந்த பேய் படம் உருவாகி வருகிறது.

    தரண்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரதாப் ஒளிப்பதிவு செய்துள்ளார். அலெக்சாண்டர் கதை எழுத பிரபல கன்னட திரைப்படம்  "த்ரயா" என்ற படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சாய் திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் பிரத்யேக பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பில்லா ஜெகன் யோகிபாபுவிற்காக அமைக்க உள்ளார். 

    யோகிபாபு

    லிபிசினி கிராப்ட்ஸ் நிறுவனம் மூலம் வி.என்.ஆர் இப்படத்தினை தயாரித்து வருகிறார். இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருக்கிறது.
    66வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பில் கேஜிஎஃப் திரைப்படம் 2 பிரிவுகளில் தேர்வானதற்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
    விஜய் கிரகண்டுர் தயாரிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட 
    'கேஜிஎஃப்' திரைப்படம் தேசிய அளவில் இரண்டு விருதுகளை வென்றிருக்கிறது.

    1970ல் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு, ஒரு தாழ்த்தப்பட்ட சமூக இளைஞன் சமூக சீர்கேடுகளையும், ஏற்ற தாழ்வுகளையும் தகர்த்தெறிந்து முன்னேறும் காலப் பெட்டகத்தின் புரட்சிக்கரமான கதைகளத்தை கொண்ட இப்படம், மும்மொழி திரைப்படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியானது.

    கேஜிஎஃப்

    இப்படத்திற்கு அதிரடி காட்சி அமைப்புகள் மற்றும் சிறப்பு காட்சி அமைப்புகள் ஆகிய இரு பிரிவுகளில் விருதுகளைப் பெற்றிருக்கிறது. 

    இம்மகிழ்ச்சியான தருணத்தில், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம், தேசிய திரைப்பட விருதுகள் இயக்குனரகம், ஊடக நண்பர்கள், விநியோகஸ்தர்கள், திரைத்துறை நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் தனது ஆத்மார்த்தமான நன்றியை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    ‘ஈட்டி’ படத்தை அடுத்து ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஐங்கரன்’ படத்தின் இசை வெளியிடும் தேதி அறிக்கப்பட்டுள்ளது.
    காமன்மேன் பிரசன்ஸ் பி.கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஐங்கரன்’. ‘ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    ஜி.வி.பிரகாஷின் வழக்கமான படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் வெளியிட்டார். ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இந்த டீசரை பார்த்து வெகுவாக இயக்குனரை பாராட்டினார்கள்.

    ஐங்கரன்

    இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 14ம் தேதி நடைபெற இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 
    தமிழில் பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் அறிமுகமான ஷில்பா ஷெட்டி, தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
    தமிழில் பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் அறிமுகமான ஷில்பா, விஜய் நடித்த குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வந்த அவர் 2007ஆம் ஆண்டு அப்னே படத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

    தற்போது 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பாலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். நிக்கம்மா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை கபீர் கான் இயக்குகிறார். தற்போது தனது கதாபாத்திரத்திற்காக ஷில்பா தயாராகி வருகிறார். படம் குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ஷில்பா ஷெட்டி

    ’விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளேன். தற்போது தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். இந்த செயல்முறையை மிகவும் ரசித்து செய்து வருகிறேன். இந்த திரைக்கதை எனக்கு மிகவும் பிடித்துப்போனது. இதுதான் சரியான நேரமாக இருக்கும் என நினைக்கிறேன். ஒரு முறை நடிகராகிவிட்டால் அவர் எப்போதும் நடிகரே. அந்த சுவையை அறிந்தபின் அதிலிருந்து விலகியிருக்க முடியாது’ என்று ஷில்பா தெரிவித்துள்ளார்.
    ×