என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தேசிய விருதை வென்ற பேட்மேன் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டால் அதில் தனுஷ் நடிக்க வேண்டும் அருணாச்சலம் முருகானந்தம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    பெண்களுக்காக குறைந்த விலையில் ‘நாப்கின்’ தயாரித்து பத்மஸ்ரீ விருது பெற்றவர் அருணாசலம் முருகானந்தம். கோவை மாவட்டத்தை சேர்ந்த இவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து ‘பேட்மேன்’ என்ற பெயரில் உருவானது. 

    இதில் அருணாசலம் முருகானந்தம் வேடத்தில் அக்‌ஷய் குமார் நடித்திருந்தார். பால்கி இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சிறந்த சமூக படத்திற்கான தேசிய விருதை இப்படம் வென்றது. 

    அருணாச்சலம் முருகானந்தம், அக்‌ஷய் குமார்

    இந்நிலையில், பேட்மேன் திரைப்படம் தேசிய விருது வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அருணாச்சலம் முருகானந்தம் தெரிவித்தார். இது குறித்து பேட்டி அளித்த அவர், பேட்மேன் படம் தமிழ் மொழியில் எடுக்கப்படும்போது அதில் நடிகர் தனுஷ் நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 

    அறிமுக இயக்குநர் கோபி இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘நானும் சிங்கிள் தான்’ படத்தின் முன்னோட்டம்.
    அட்டகத்தி தினேஷ் நடிக்கும் புதிய படம் காமெடி கலந்த காதல் கதையாக உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் கோபி இயக்கும் இந்தப் படத்திற்கு ‘நானும் சிங்கிள் தான்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தீப்தி திவேஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லண்டனில் உள்ள தமிழ் டான் கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார். 

    தீப்தி திவேஸ், தினேஷ்

    டேவிட் ஆனந்தராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையமைத்துள்ளார். இவர் ஏ.ஆர்.ரகுமானிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். ஜெயக்குமார் தயாரித்துள்ளார். சென்னை, லண்டன் மற்றும் ஐரோப்பாவில் பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. தற்போது இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் இப்படத்தை அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
    தேசிய விருது தேர்வுக்குழுவை தனது ரசிகர்கள் திட்டியதை அறிந்த மம்முட்டி, தேர்வுக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
    66-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. மஹாநடி, கே.ஜி.எஃப், பாரம் என பல்வேறு படங்கள் விருதுகளுக்கு தேர்வாகின. சிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டார். கடந்த வருடம் மம்முட்டி நடிப்பில் வெளியான `பேரன்பு’ நல்ல விமர்சனங்களை பெற்று நன்றாக ஓடியது. இதில் மம்முட்டி சிறப்பான நடிப்பை வெளி ப்படுத்தி இருந்தார். இதனால் இந்தப் படத்துக்கு விருது கிடைக்கும் என அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். 

    ஆனால் விருது பட்டியலில் மம்முட்டி பெயர் இல்லை என்று தெரிந்ததுமே ராகுல் ராவிலின் பேஸ்புக் பக்கத்தை அவரது ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக  ஆக்கிரமிக்க தொடங்கினர். கடும் சொற்களை பயன்படுத்தி ராகுல் ராவிலை வசைபாடினர். இதனால் ராகுல், மம்முட்டிக்கு ஒரு கோரிக்கை ஒன்றை வைத்தார். 

    டுவிட்டர் பதிவு

    அதில், ``மிஸ்டர் மம்முட்டி உங்கள் ரசிகர்கள் என்னை நோக்கி வெறுப்பான சொற்களை பயன்படுத்தி பதிவிட்டு வருகின்றனர். `பேரன்பு’ படத்துக்கு தேசிய விருது கொடுக்கவில்லை என என்னைக் கேள்வி கேட்டு வருகின்றனர். அதற்கு விளக்கம் அளிக்கிறேன். முதலில் ஒன்றை சொல்கிறேன். நடுவரின் தீர்ப்பை யாரும் கேள்வி கேட்க முடியாது.

    அதேநேரம் உங்களின் `பேரன்பு’ திரைப்படம் பிராந்திய குழுவினராலே நிராகரிக்கப்பட்டதால் மத்திய குழுவின் பரிசீலனைக்கு வரவில்லை. இதுபுரியாமல் இழந்த ஒன்றுக்காக உங்களின் ரசிகர்கள் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள்” எனப் பதிவிட்டார். இந்தப் பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே மம்முட்டி ஒரு பதிவை இட்டார். அதில், “மன்னித்துக் கொள்ளுங்கள் சார். இது பற்றி எனக்குத் தெரியாது. இருந்தாலும் நடந்த சம்பவங்களுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியிருந்தார்.
    முரளிதரன் பயோபிக் படத்திலிருந்து தான் விலகுவதாக பரவி வந்த வதந்திக்கு விஜய் சேதுபதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
    இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி படம் ஒன்றை உருவாக்கவுள்ளனர். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. 

    ஆனால் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது.  சமூக வலைத்தளத்திலும் விஜய் சேதுபதி நடிப்பதை கடுமையாக எதிர்த்தனர். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் முரளிதரன் வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று கருத்துகள் பதிவிட்டனர். இதனால் அந்த படத்தில் இருந்து விலகுவது குறித்து விஜய் சேதுபதி ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியது.

    முத்தையா முரளிதரன், விஜய் சேதுபதி

    இந்நிலையில், முரளிதரன் பயோபிக் படத்திலிருந்து தான் விலகுவதாக பரவி வந்த வதந்திக்கு விஜய் சேதுபதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமீபத்தில் மெல்போர்னில் நடைபெற்ற விருது விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, முரளிதரன் பயோபிக் படத்தில் தான் நடிக்க உள்ளதை உறுதி செய்துள்ளார். இப்படம் யாரையும் புண்படுத்தாத வகையில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
    மாதவன் முதன்முறையாக இயக்கி நடிக்கும் 'ராக்கெட்ரி: நம்பி விளைவு' படத்தில் நடிகர் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
    மாதவன் முதன்முறையாக இயக்கி நடிக்கும் ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் பணியாற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் மாதவன் நம்பி நாராயணனாக நடிக்கிறார். 

    பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்கு பிறகு மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரில் நடித்த ரான் டொனச்சியும், டௌண்டன் அப்பே தொடரில் நடித்து பிரபலமான பிள்ளிஸ் லோகனும் இணைந்து நடித்துள்ளனர். சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ஜெகன் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

    மாதவன்

    மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் மாதவனும், சூர்யாவும் இணைந்து நடித்திருந்தனர். அதைத் தொடர்ந்து இந்தப் படத்தில் இருவரும் சேர்ந்துள்ளனர். படத்தில் நம்பி நாராயணன் கதாபாத்திரம் தனது கதையை சூர்யாவிடம் கூறுவது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து பிளாஷ்பேக் காட்சிகள் விரிவதாக உருவாகிறது.
    நாடு முழுவதும் வன்கொடுமைக்குத் தள்ளப்படும் விலங்குகளுக்கு நீதி வேண்டும் என நடிகை அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.
    சில தினங்களுக்கு முன் மும்பையில் லக்கி என்ற நாய் ஒன்றை சில விஷமிகள் அடித்துக் கொன்றனர். இந்தச் சம்பவம் ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தால் நடிகை அனுஷ்கா சர்மா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். நடிகை மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரான அனுஷ்கா சர்மாவை சமூக வலைதளங்களில் 60 மில்லியன் மக்கள் பின்தொடர்கிறார்கள். 

    இதைப் பயன்படுத்தி அவர் விலங்குகளுக்கு நடக்கும் கொடுமைகளைத் தடுக்கும் விதமாக கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று சமூக வலைதளத்தில் கோரிக்கை வைத்துள்ளார். இதற்காக ஒரு பிரச்சாரத்தையும் அவர் தொடங்கியுள்ளார். இப்பிரச்சாரத்திற்கு ஜஸ்டிஸ் பார் அனிமல் என்று பெயரிடப்பட்டுள்ளது. 

    அனுஷ்கா சர்மா

    இதுகுறித்து அனுஷ்கா சர்மா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது:- “மனிதாபிமானமற்ற கொடுமையை எதிர்கொண்டது லக்கி மட்டுமல்ல. நாடு முழுவதும் ஏராளமான நாய்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்றன. அவை இரக்கமின்றி தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் தொடர்ந்து நடக்கின்றன. 

    வன்கொடுமைக்குத் தள்ளப்படும் விலங்குகளுக்கு நீதி வேண்டும். விலங்குகள் மீதான துன்புறுத்தலைத் தடுக்கும் 1960-ம் ஆண்டின் சட்டம் திருத்தப்பட வேண்டும். இது குறித்து உடனடி கவனம் மற்றும் நடவடிக்கை தேவை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், விரைவில் சொந்த குரலில் டப்பிங் செய்வேன் என தெரிவித்துள்ளார்.
    ‘பழனி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். தற்போது தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராகத் திகழ்பவர். இந்தியிலும் ஒருசில படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் ’இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள ’கோமாளி’ படம் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

    காஜல் அகர்வால்

    அவர் அளித்த பேட்டியில் தொடர்ந்து டப்பிங் குரல் பயன்படுத்துவது பற்றி கேட்டபோது, “டப்பிங் ஒரு சாதகம் என்பதை மறுப்பதற்கில்லை. விரைவில் நானே என் குரலில் டப்பிங் செய்வேன். மொழி தெரியாமல் இருப்பது பின்னடைவு தான். பேசவராது. நம்பிக்கை குறைவு என்று எடுத்துக் கொள்ளலாம். பொதுவாகவே என்னால் மொழிகளை எளிதில் கற்க முடியாது. இந்தியும் சுமாராகவே பேசுவேன். தெலுங்கில் முயற்சி செய்துள்ளேன். ஆனால், அது ஒத்துவரவில்லை என மாற்றிவிட்டார்கள்” என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
    பிரஷாந்த் நீல்-யஷ் கூட்டணியில் உருவாகி வரும் கே.ஜி.எப். படத்தின் இரண்டாம் பாகத்தில் வடசென்னை பட பிரபலம் ஒருவர் நடித்துள்ளார்.
    பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் கே.ஜி.எப். இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. முதல் பாகத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    தனுஷூடன் சரண்

    இந்நிலையில், இப்படத்தில் தமிழ் நடிகர் சரண் சக்தி நடித்துள்ளார். இவர் வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு தம்பியாக நடித்திருந்தார். இதுமட்டுமின்றி சகா படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இந்த படத்தின் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாய்ப்பளித்த இயக்குனர் பிரஷாந்த் நீல்லிற்கு நன்றி என நடிகர் சரண் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    புவன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜோம்பி படத்தில் யாஷிகா ஆனந்த் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்துள்ளார்.
    இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பாக பேசப்பட்டவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். துருவங்கள் பதினாறு, நோட்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஜோம்பி என்ற படத்தில் நடித்து வருகிறார். புவன் இயக்குகிறார்.

    இந்த படத்தில் யோகிபாபு, மனோபாலா, கோபி, சுதாகர் ஆகியோரும் நடிக்கின்றனர். நகைச்சுவை படமாக தயாராகிறது. ஹாலிவுட் பட உலகில் அதிகமாக ஜோம்பி கதைகள் வந்துள்ளன. தமிழுக்கு இந்த படம் புதுமையாக இருக்கும் என்று படக்குழுவினர் சொல்கிறார்கள். கதாநாயகன், கதாநாயகி இல்லாத படமாக தயாராகி உள்ளது.

    யாஷிகா

    இதில் யாஷிகா ஆனந்த் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். யாஷிகா நிஜமாகவே கராத்தேயில் பிளாக் பெல்ட் பெற்றவர். எனவே கராத்தே சண்டையை படத்தில் பயன்படுத்தி உள்ளனர். வில்லன்களை யாஷிகா கராத்தேவால் தாக்கி சண்டை போடுவது போன்ற காட்சிகளை படமாக்கி உள்ளனர். தாவி குதித்து சண்டை போடும் காட்சிகளில் டூப் போடாமல் யாஷிகாவே நடித்து இருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.
    ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ராணுவ வீரர் எம்.ஏ.பாலா, அடுத்த படத்தை இயக்க தயாராகி இருக்கிறார்.
    இந்திய ராணுவத்தில் 6 வருடங்கள் ஸ்பெஷல் சர்வீஸில் பணியாற்றியவர் எம்.ஏ.பாலா. இவர் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். டுவிங்கிள் லேப்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தில் நாயகர்களாக தீபக், எஸ்.பிளாக் பாண்டி, எஸ்.எஸ்.ஜெய்சிந்த், கதாநாயகிகளாக ஹரிதா, மலர் ஆகியோர் நடித்திருந்தார்கள். 

    சினிமா மீது உள்ள ஆர்வத்தால் டிப்ளோமா பிலிம் மேக்கிங் படித்து விட்டு, பல குறும்படங்களையும், டெலி பிலிம்களையும் இயக்கியுள்ளார் எம்.ஏ.பாலா. தற்போது அடுத்த படத்தை இயக்க தயாராகி இருக்கிறார்.

    எம்.ஏ.பாலா

    வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக இருக்கும் இப்படத்தை டுவிங்கிள் லேப்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. விரைவில் இப்படத்தில் நடிக்க இருக்கும், நடிகர்கள், நடிகைகள் முழு விவரங்களை வெளியிட இருக்கிறார்கள்.
    மன்சூரலிகான் இயக்கம் மற்றும் தயாரிப்பில் அவரது மகன் அலிகான் துக்ளக் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கடமான் பாறை’ படத்தின் முன்னோட்டம்.
    மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரித்திருக்கும் படம் கடமான்பாறை. இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். 

    இந்த படத்தில் மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 

    ஒளிப்பதிவு - T.மகேஷ், இசை - ரவிவர்மா, பாடல்கள் - விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், மன்சூரலிகான், கதை, திரைக்கதை, தயாரிப்பு இயக்கம் - மன்சூரலிகான்.

    நகைச்சுவை கலைந்த திரில்லர் படமாக கடமான் பாறை உருவாகி இருக்கிறது. மாடர்ன் டெக்னாலஜி இன்று மாணவர்களை எப்படி தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறது, அதனால் இளைஞர்கள் எவ்வாறு வாழ்கையில் தடம் மாறுகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. இப்படம் இம்மாதம் 23ம் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது.
    சிம்புக்கு ஏற்ற பெண்ணை அத்திவரதர் தான் காட்ட வேண்டும் என்று டி.ராஜேந்தர் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
    காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் சென்று வருகிறார்கள். தற்போது நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதரை காண்பதற்காக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களும் சென்று வருகிறார்கள்.

    இந்நிலையில், நடிகர், இயக்குனர், அரசியல் பிரமுகருமான டி.ராஜேந்தர் அத்திவரதரை தரிசனம் செய்ய சென்றிருக்கிறார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது, ‘அத்திவரதர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அதிர்ஷ்டம் கொடுக்க வேண்டும். மக்கள் அத்திவரதரை காண கஷ்டப்பட்டு போகவில்லை இஷ்டப்பட்டு போகிறார்கள். வெளிநாட்டில் இருக்கும் என் மகன் சிலம்பரசன் எனக்கு போன் செய்து அத்திவரதர் பெருமாளை தரிசனம் செய்து விட்டீர்களா? என கேட்டார்.

    சிம்பு

    என்னுடைய வேண்டுதல் எல்லாம் சிலம்பரசனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும். நான் எந்த பெண்ணை வேண்டுமென்றாலும் முடிவு செய்யலாம். ஆனால் அப்பெண் சிலம்பரசனுக்கு பிடித்த பெண்ணாகவும் அவர் மனதிற்கு ஏற்ற பெண்ணாகவும் அமைய வேண்டும். எனக்கு அதுதான் முக்கியம். அப்படிப்பட்ட ஒரு பெண்ணை சிலம்பரசனுக்கு கிடைக்க அத்திவரதர் தான் வழிகாட்டவேண்டும்’ என்றார்.
    ×