search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்தையா முரளிதரன்"

    • இது ஒரு நீண்ட பயணம். இந்த 500வது விக்கெட்டை எனது தந்தைக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய மூன்றாவது ஆப் பின் பந்துவீச்சாளர் என்கின்ற சிறப்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

    டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறித்து ரவிசந்திரன் அஷ்வின் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது ஒரு நீண்ட பயணம். இந்த 500வது விக்கெட்டை எனது தந்தைக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இன்று ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய 500 ஆவது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். அதிவேகமாக 500 டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்தியர் என்றும், உலக அளவில் இரண்டாவது அதிவேகமாக 500 விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்கின்ற சாதனையும் படைத்திருக்கிறார்.

    மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய மூன்றாவது ஆப் பின் பந்துவீச்சாளர் என்கின்ற சிறப்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது. தற்பொழுது அவருக்கு உலகம் முழுக்க இருந்து வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் தன்னுடைய சாதனை குறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் " இது ஒரு மிக நீண்ட பயணம். இந்த சாதனையை நான் என் தந்தைக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். நான் விளையாடுவதை பார்க்கும் போதெல்லாம் அவருக்கு மாரடைப்பு வந்திருக்கலாம். அவரது உடல்நிலை பாதிக்கப் பட்டிருக்கலாம். அவர் எனக்கு எல்லா நேரத்திலும் எல்லா சூழ்நிலையிலும் எல்லாமும் ஆக இருந்திருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

    • ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியற்கு, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • உங்களின் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் இதோடு நிறுத்த கூடாது, 620, 625, 700 விக்கெட்டுகள் என்று தான் உங்களது கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்யவேண்டும்.

    ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியற்கு, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே வாழ்த்து தெரிவித்துள்ளார்.ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியற்கு, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்டுகள் எடுத்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை அஷ்வின் படைத்துள்ளார். சர்வதேச அளவில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 9-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். 499 விக்கெட்டுகளோடு இருந்த அஷ்வின், இங்கிலாந்து அணியின் ஓப்பனரான சக் க்ராலியை தனது 500வது விக்கெட்டாக வீழ்த்தியிருக்கிறார்.

    ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் போட்டிக்கு பிறகு அஷ்வினிடம் பேசிய, கும்ப்ளே, "ஆஷ்! வாழ்த்துகள். உங்களின் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் இதோடு நிறுத்த கூடாது, 620, 625, 700 விக்கெட்டுகள் என்று தான் உங்களது கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்யவேண்டும். அதற்குக் குறைவாக விக்கெட்டுகளோடு உங்கள் கிரிக்கெட் பயணத்தை முடிக்க வேண்டும் என்று கூட நீங்கள் நினைக்க கூடாது" என்று பெருமிதமாக அவர் தெரிவித்தார்.

    அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் டெஸ்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரராக உள்ளார். கும்ளேவுக்கு அடுத்தபடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் 2-வது இடத்தில உள்ளார்.

    உலக அளவில் முத்தையா முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்த போது 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இவ்வேளையில் தற்போது அஸ்வின் தனது 98-வது டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    அதேபோன்று குறைந்த பந்துகளை வீசி 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் அஷ்வின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் கிளென் மெக்ராத் 25528 பந்துகளை வீசி 500 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தியிருந்த வேளையில் அஸ்வின் 25,714 பந்துகளை வீசி 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    • இயக்குனர் எம்.எஸ்.ஸ்ரீபதி ‘800’ படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

    கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான 'கனிமொழி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எம்.எஸ்.ஸ்ரீபதி. இவர் தற்போது கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமான '800' படத்தை இயக்கியுள்ளார். மூவி டிரையின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.


    இந்த படத்தில் 'ஸ்லம்டாக் மில்லியனர்' படப்புகழ் நடிகர் மதுர் மிட்டல், முத்தையா முரளிதரனாக நடித்துள்ளார். மேலும், மகிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள் தாஸ், ஹரி கிருஷ்ணன், யோக் ஜேபி, சரத் லோஹிதாஷ்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில், கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பேசியதாவது, "இயக்குனர் வெங்கட்பிரபு, இயக்குனர் ஸ்ரீபதி என நாங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு மன்றம் அமைத்தோம். என் கஷ்டத்தின் போது உதவி செய்த என் நாட்டு மக்களுக்கு திரும்ப நல்லது செய்ய வேண்டும் என இதை ஆரம்பித்தோம். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு, ஆயிரம் மாணவர்களைப் படிக்க வைப்பது என பல விஷயங்களை செய்து வருகிறோம். வெங்கட்பிரபுவும் என் மனைவியும் சிறு வயது நண்பர்கள். அவர்கள் சந்தித்து பேசினார்கள். வெங்கட்பிரபு பேசிக் கொண்டிருக்கும் போது, என்னைப் பற்றி பயோபிக் எடுக்கலாம் என்று சொன்னார். இந்தப் படம் மூலம் வரும் பணம் டிரஸ்ட்டுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று என் மேனேஜர் ஆலோசனை சொன்னார்.


    என்னைப் பற்றி நன்றாக ஆராய்ந்து தான் இயக்குனர் ஸ்ரீபதி கதை எழுதியுள்ளார். வெங்கட்பிரபுதான் முதலில் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவருக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சினை என்பதால் விலகிவிட்டார். ஸ்ரீபதியை நான் இயக்க சொன்னேன். பின்பு விஜய்சேதுபதி வந்தார். ஆனால், அதிலும் பிரச்சினை வந்தது. இந்த பிரச்சினைகள், கொரோனா இதை எல்லாம் தாண்டி படத்தை முடித்த இயக்குனர் ஸ்ரீபதிக்கும், படத்திற்கு ஒத்துழைத்த மொத்த குழுவுக்கும் நன்றி. நாங்கள் மலையகத் தமிழர்கள் வம்சாவளியில் வந்தோம். எங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு பல தடைகள் வந்தது. படத்திற்கும் அப்படியான தடைகள் இருந்தது. ஆனால், இலங்கையில் எடுத்த 80 நாட்களும் படத்தைப் பற்றிப் புரிந்து கொண்டு அரசு ஒத்துழைப்புக் கொடுத்தது.


    எல்லாம் உண்மை சம்பவங்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஸ்கிரிப்டில் அப்படியே ஸ்ரீபதி கொண்டு வந்துள்ளார். இன்னும் நான் படம் பார்க்கவில்லை. 'நீங்கள் காப்பி பண்ண வேண்டாம், எந்தவிதமான அழுத்தமும் இல்லாமல் நடியுங்கள்' என்று ஹீரோ மதுரிடம் சொன்னேன். கிரிக்கெட் படமாக இல்லாமல் '800' நான் சாதனை படைத்ததற்கு பின்னால் இருந்தது என்ன, என்ன பிரச்சினைகளோடு விளையாடினேன், என்னால் நாடு எந்த நிலைக்கு வந்தது என்பது குறித்து இந்தப் படத்தில் பேசியுள்ளோம். படம் உங்களுக்கும் பிடிக்கும்" என்றார்.

    • இயக்குனர் எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘800’.
    • இப்படம் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாக உருவாகிறது.

    கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான 'கனிமொழி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எம்.எஸ்.ஸ்ரீபதி. இவர் தற்போது கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமான '800' படத்தை இயக்கி வருகிறார். மூவி டிரையின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.


    இந்த படத்தில் 'ஸ்லம்டாக் மில்லியனர்' படப்புகழ் நடிகர் மதுர் மிட்டல், முத்தையா முரளிதரனாக நடிக்கிறார். மேலும், மகிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள் தாஸ், ஹரி கிருஷ்ணன், யோக் ஜேபி, சரத் லோஹிதாஷ்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    800முதல் தோற்ற போஸ்டர்

    இப்படத்தின் படப்பிடிப்பு இலங்கை, சென்னை, கொச்சி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து '800' படத்தின் முதல் தோற்ற போஸ்டர் முத்தையா முரளிதரனின் பிறந்த நாளான இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் தற்போது வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

    '800' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×