என் மலர்
சினிமா

பிகில் படத்தில் விஜய்
பிகில் படத்துக்காக ரெயில் நிலைய செட்
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் படத்துக்காக எழும்பூர் ரெயில் நிலையம் போன்று பிரம்மாண்ட செட் போடப்பட்டு படமாக்கி இருக்கிறார்கள்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி கலை இயக்குநராக வலம் வரும் முத்துராஜ் பிரம்மாண்ட அரங்குகளை தத்ரூபமாக உருவாக்கி வருகிறார். கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திற்கான அரங்குகளை உருவாக்கிவரும் இவர் பிகில் படத்திற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் போன்று பிரம்மாண்ட அரங்கை உருவாக்கியுள்ளார்.
முக்கியமான காட்சிகள் ரயில் நிலையத்தில் நடப்பதுபோன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. விஜய் போன்ற முன்னணி நடிகர் படப்பிடிப்பில் கலந்துகொண்டால் சாதாரண இடங்களிலேயே மக்கள் கூட்டம் அதிகமாகிறது. மேலும் படத்தின் காட்சிகள், கதாபாத்திரங்கள் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி விடுகின்றன. இந்நிலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் படப்பிடிப்பு நடத்துவது சாத்தியமில்லை.

இதனால் படக்குழு பிரம்மாண்டமாக அரங்கு அமைத்துள்ளது. தற்போது விஜய் நடிக்கும் காட்சிகளில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளன. சில காட்சிகளில் விடுபட்ட ஷாட்டுகளை படமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து விஜய் டப்பிங் பணிகளில் கவனம் செலுத்துகிறார். அடுத்த வாரத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமான் பின்னணி இசையமைக்கும் பணியில் ஈடுபட உள்ளார். அட்லீ இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






