search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரம்"

    • சந்தேகம் அடைந்த போலீசார் டாரஸ் லாரியை சோதனை செய்தனர்.
    • உறுதிப்படுத்த அருகில் உள்ள எடை மேடைக்கு கொண்டு சென்று அதிக பாரம் இருந்ததை உறுதி செய்தனர்.

    கன்னியாகுமரி:

    தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தக்கலை அருகே பரைக்கோடு பகுதியில் ஒரு டாரஸ் லாரி எம் சண்ட் ஏற்றி வந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் டாரஸ் லாரியை சோதனை செய்தனர். அதில் அதிக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.

    மேலும் இதனை உறுதிப்படுத்த அருகில் உள்ள எடை மேடைக்கு கொண்டு சென்று அதிக பாரம் இருந்ததை உறுதி செய்தனர். உடனே போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் காவல்கிணறு பகுதியில் இருந்து ஏற்றி கேரளா மாநிலம் செங்கவிளை பகுதிக்கு கொண்டு செல்ல இருந்தது தெரிய வந்தது.

    இது சம்பந்தமாக தக்கலை போலீசார் லாரி டிரைவர் கேரளா மாநிலம் ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த சுஜித் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேரளாவுக்கு கனிம வளங்கள் அனுமதியின்றி கொண்டு செல்லப்படுவதாக புகார்
    • எம்சாண்ட், ஜல்லி பாரம் ஏற்றிக்கொண்டு 3 டிப்பர் லாரிகள் வந்தன.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் அனுமதியின்றி கொண்டு செல்லப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் சில வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச் செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசாரும், வருவாய்த்துறையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அவ்வப்போது சில வாகனங்கள் சிக்கி உள்ளன. அவற்றுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் தக்கலை பழைய பஸ் நிலையம் அருகில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக எம்சாண்ட், ஜல்லி பாரம் ஏற்றிக்கொண்டு 3 டிப்பர் லாரிகள் வந்தன. அந்த லாரிகளை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த லாரிகளில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து 3 டிப்பர் லாரிகளுக்கும் ரூ.1¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது

    • பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறையிடம் கோரிக்கை
    • திருவட்டார் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சுமார் 200 அடி தூரத்துக்கு பல இடங்களில் சாலையில் வெடிப்பு ஏற்பட்டது.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் காங்கரை பகுதியில் காங்கரை தேரி மேடான பகுதியாகும். சாதாரணமாக வாகனங்கள் இந்த ரோட்டில் வரும் போது மிகவும் சிரமத்துடன் செல்லும்.

    லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் பெரும் சிர மத்துடன் தான் சென்று வரு கின்றன. இதன் காரணமாக சாலையும் சேதத்தை சந்தித்து வருகிறது. மேலும் கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் இந்த சாலையின் வழியாக அடிக்கடி சென்று வருவதும் சாலையில் சேதத்தை அதிகப்படுத்துகிறது.

    மார்த்தாண்டம் -பேச்சி ப்பாறை நெடுஞ்சாலை கடந்த ஆண்டு தொடக்க த்தில் புதிதாக அமைக்க ப்பட்ட நிலையில் கடந்த வாரம் திருவட்டார் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சுமார் 200 அடி தூரத்துக்கு பல இடங்களில் சாலையில் வெடிப்பு ஏற்பட்டது. மேலும் தார்க்கலவை முழுமையாக பெயர்ந்து சிதறியது.

    இரவோடு இரவாக ஒப்பந்தக்காரர் இதனை சீரமைத்தார். ஆனால் ஒரு வாரம் கூட முடியாத நிலை யில் தற்போது மீண்டும் சாலையின் குறுக்காக 2 இடங்களில் பெரிய அளவில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. ரோட்டின் ஓரம் முழுவதும் பெயர்ந் துள்ளது. சாலையில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு வருவதால் இந்தப் பகுதி வழியாக செல்லும் வாகன ஒட்டுநர்கள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகி உள்ளனர்.

    எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து தரமற்ற முறை யில் அமைக்கப்பட்ட சாலையை அகற்றி விட்டு தரமானதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அந்த பகுதியில் பெரும் விபத்துக்கள் நடைபெறும் முன் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் தரமான முறையில் சாலையை செப்பனிட நெடுஞ்சாலைத்துறை முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் பெரிய பாறைகள் உடைத்து கேரளாவுக்கு கடத்தப்படுகிறது.
    • குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் பெரிய பாறைகள் உடைத்து கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. இதனை தடுக்கக்கோரியும், குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டு மெனவும் அரசியல் கட்சி யினர் தொடர் போராட்டங் களை நடத்தி வருகின்றனர்.

    இதையடுத்து இன்று அதிகாலையில் மார்த் தாண்டம் வழியாக அதிக பாரத்துடன் கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்லப்பட்ட கனரக லாரியை போலீ சார் பறிமுதல் செய்து நடவ டிக்கை மேற்கொண் டுள்ளனர். மேலும் இந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது. இதன் உரிமையாளர் யார் என்ற விவரமும் சேக ரிக்கப்பட்டிருக்கிறது. அவரி டம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
    • கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரியும், குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் பெரிய பாறைகளை உடைத்து கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

    இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினசரி கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்ற லாரிகளால் காலை வேளைகளில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரியும், குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் மார்த்தாண்டம் வழியாக அதிக பாரத்துடன் கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்லப்பட்ட 7 கனரக லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே மேல பள்ளம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்ராஜ் (வயது 42). வைக்கோல் வியாபாரி.

    இவர் நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான டெம்போவில் வைக்கோல் பாரம் ஏற்றினார். பின்னர் அந்த டெம்போவை புலியூர் குறிச்சி அருகே சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றிருந்தார்.அதிகாலையில் அவரது டெம்போவில் இருந்த வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது.

    இதை பார்த்த பொது மக்கள் ஜெகன் ராஜுக்கு தகவல் தெரிவித்தனர்.தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வைக்கோல் போரில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் தீ விபத்தில் டெம்போ எரிந்து நாசமானது.

    இது குறித்து ஜெகன் ராஜ் தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வைக்கோல் பாரத்திற்கு யாராவது தீ வைத்தார்களா அல்லது மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா? என்பது குறித்து விசாரணை நடத் தப்பட்டு வருகிறது.

    ×