ராகவ் மிர்தாத் அடுத்த படத்தின் டைட்டில் லுக் வெளியானது

இயக்குனர் பிரியாவிடம் உதவி இயக்குனராகப் பணிப்புரிந்தவர் ராகவ் மிர்தாத். காலங்களில் அவள் வசந்தம் எனும் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார்.
ராகவ் மிர்தாத் அடுத்த படத்தின் டைட்டில் லுக் வெளியானது
Published on

இயக்குனர் பிரியாவிடம் உதவி இயக்குனராகப் பணிப்புரிந்தவர் ராகவ் மிர்தாத். அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த "சைஸ் ஸீரோ" தேசிய விருதுபெற்ற "பாரம் " ஆகிய படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் ராகவ் மிர்தாத். பிரசாத் ஸ்டுடியோவின் கிராஃபிக்ஸ் பிரிவில் ஐம்பதுக்கும் அதிகமான படங்களுக்கு விசுவல் எஃபெக்ட்ஸ் சூப்பர்வைசராக பணிபுரிந்தவர்.

அதைத்தொடர்ந்து காலங்களில் அவள் வசந்தம் எனும் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார். இப்படத்தில் மாத்யூ வர்கீஸ், சவுந்தர்யா, சுவாமினாதன் மற்றும் அஞ்சலி நாயர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

தற்பொழுது அவர் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராகவ் அடுத்ததாக இயக்கும் படத்திற்கு `பன் பட்டர் ஜாம்' என பெயரிடப்பட்டுள்ளது. இதை ரெயின் ஆஃப் ஆரோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்தில் நடிக்கும் நடிகர்களின் அறிவிப்பு விரைவில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கௌஷிக் ராம், அஞ்சலி நாயர் நடித்திருக்கும் படம் இது. திரைப்படங்களில் வருவதுபோன்ற காதல் வாழ்க்கையை விரும்பும் இளைஞன், உண்மையான காதலை எப்படிப் புரிந்துகொள்கிறான் என்பதுதான் கதை. குறைந்த செலவில் புதுமுக நடிகர்களை வைத்து ஓரளவுக்கு சிறப்பாகவே எடுத்திருப்பதாக விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் படம் திரையரங்கில் வெளியாகியிருக்கிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com