search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிக பாரத்துடன் வாகனங்கள் செல்வதால் அடிக்கடி வெடிப்பு ஏற்படும் சாலைகளை உடனே தரமாக சீரமைக்க வேண்டும்
    X

    சாலையில் வெடிப்பு ஏற்பட்ட பகுதியை படத்தில் காணலாம் 

    அதிக பாரத்துடன் வாகனங்கள் செல்வதால் அடிக்கடி வெடிப்பு ஏற்படும் சாலைகளை உடனே தரமாக சீரமைக்க வேண்டும்

    • பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறையிடம் கோரிக்கை
    • திருவட்டார் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சுமார் 200 அடி தூரத்துக்கு பல இடங்களில் சாலையில் வெடிப்பு ஏற்பட்டது.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் காங்கரை பகுதியில் காங்கரை தேரி மேடான பகுதியாகும். சாதாரணமாக வாகனங்கள் இந்த ரோட்டில் வரும் போது மிகவும் சிரமத்துடன் செல்லும்.

    லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் பெரும் சிர மத்துடன் தான் சென்று வரு கின்றன. இதன் காரணமாக சாலையும் சேதத்தை சந்தித்து வருகிறது. மேலும் கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் இந்த சாலையின் வழியாக அடிக்கடி சென்று வருவதும் சாலையில் சேதத்தை அதிகப்படுத்துகிறது.

    மார்த்தாண்டம் -பேச்சி ப்பாறை நெடுஞ்சாலை கடந்த ஆண்டு தொடக்க த்தில் புதிதாக அமைக்க ப்பட்ட நிலையில் கடந்த வாரம் திருவட்டார் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சுமார் 200 அடி தூரத்துக்கு பல இடங்களில் சாலையில் வெடிப்பு ஏற்பட்டது. மேலும் தார்க்கலவை முழுமையாக பெயர்ந்து சிதறியது.

    இரவோடு இரவாக ஒப்பந்தக்காரர் இதனை சீரமைத்தார். ஆனால் ஒரு வாரம் கூட முடியாத நிலை யில் தற்போது மீண்டும் சாலையின் குறுக்காக 2 இடங்களில் பெரிய அளவில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. ரோட்டின் ஓரம் முழுவதும் பெயர்ந் துள்ளது. சாலையில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு வருவதால் இந்தப் பகுதி வழியாக செல்லும் வாகன ஒட்டுநர்கள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகி உள்ளனர்.

    எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து தரமற்ற முறை யில் அமைக்கப்பட்ட சாலையை அகற்றி விட்டு தரமானதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அந்த பகுதியில் பெரும் விபத்துக்கள் நடைபெறும் முன் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் தரமான முறையில் சாலையை செப்பனிட நெடுஞ்சாலைத்துறை முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×