என் மலர்
சினிமா செய்திகள்
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் நிலையில் அவர்களது திருமணம் வெளிநாட்டில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய பட உலகில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக இருக்கும் நயன்தாரா தற்போது விஜய் ஜோடியாக பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார். ரஜினிகாந்துடன் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து திருமணத்துக்கு அவர் தயாராவதாக கூறப்படுகிறது. நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் காதல் மலர்ந்தது.
இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றுவதையும், பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். ஒரே வீட்டில் வசிப்பதாகவும் பேசுகின்றனர். நயன்தாரா ‘நெற்றிக்கண்’ என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு காதலர் விக்னேஷ் சிவனை தயாரிப்பாளராக்கி இருக்கிறார்.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை நண்பர்களை அழைத்து நயன்தாரா கொண்டாடினார். அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு “நீ அருகில் இருக்கும் எல்லா நாட்களும் இனிமையானவை” என்று விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருந்தார். டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இவர்கள் திருமணம் நடக்கலாம் என்று நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
திருமணத்தை வட இந்தியாவில் நடத்தலாமா? அல்லது வெளிநாட்டில் நடத்தலாமா? என்று இருவரும் ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகைகள் தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மா ஆகியோர் திருமணங்கள் வெளிநாட்டில் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது. திருமண சடங்கு நிகழ்ச்சிகள் 5 நாட்கள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
விஜய்யின் அறிவுரையை ஏற்று சமூக பிரச்சனைகளுக்கு அவரது ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி குரல் கொடுத்து வருகின்றனர்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பிகில் படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனால் பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன. குறிப்பாக “யார எங்க உட்கார வைக்கனுமோ, அங்க உட்கார வைக்கனும்”, சுபஸ்ரீ விவகாரம் போன்றவற்றை குறிப்பிட்டு விஜய் பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் விவாத பொருளாகவும் மாறியது.

மேலும் சமூக பிரச்சனைகளுக்கு டுவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி குரல் கொடுங்கள் என ரசிகர்களுக்கு விஜய் அறிவுறுத்தினார். இதனை பின்பற்றும் விஜய் ரசிகர்கள் ஏற்கனவே #JusticeForSubashri, #KeezhadiTamilCivilization போன்றவற்றை டிரெண்டாக்கி கவனம் ஈர்த்தனர். இந்நிலையில் தேனியில் நியூட்ரினோ ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக #SaveTheniFromNEUTRINO போன்ற ஹேஷ்டேக்கை டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.
ஆசிய விளையாட்டு வீரர்களுக்கான சர்வதேச நீச்சல் போட்டியில் தன் மகன் வேதாந்த் வெள்ளிப் பதக்கம் வென்றது தனக்கு பெருமிதமளிப்பதாக நடிகர் மாதவன் கூறியுள்ளார்.
நடிகர் மாதவன்-சரிதா தம்பதியின் 14 வயது மகன் வேதாந்த். இவர் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். ஏற்கெனவே தேசிய அளவில் 100 மீட்டர் நீச்சல் பந்தயத்தில் தங்கம் வென்ற வேதாந்த், கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் அதே பிரிவில் வெண்கலம் வென்றார்.
இந்த வெற்றிகளை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் மாதவன் தற்போது, இந்தியா சார்பில் சர்வதேச அரங்கில் பிரதிநிதியாகப் பங்கேற்று இந்தியத் தாய்க்கு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத்தந்திருப்பதாக தன் மகன் குறித்து பெருமையாகப் பதிவிட்டுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2-ம் குழு நீச்சல் போட்டியில் 4 x 100 மீட்டர் ரிலேவில் ப்ரீஸ்டைல் நீச்சல் பிரிவில் வேதாந்த், உத்கார்ஷ் பாட்டீஸ், சாஹில் லஸ்கர், ஷோவான் கங்குலி ஆகிய 4 பேர் இந்தியா சார்பில் பங்கேற்றனர். தாய்லாந்து குழு முதலிடம் பிடித்த நிலையில் 2-ம் இடம் பிடித்த வேதாந்தின் குழு வெள்ளி வென்றது. ஜப்பான் மூன்றாம் இடத்தைப் பிடித்தது. வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்த மாதவன் அதனை பணிவோடும், பெருமிதத்தோடும் பகிர்ந்துள்ளார்.
பேனரால் சில அசம்பாவிதங்கள் நடக்கும்போது அதை தவிர்த்து விடுவது நல்லது நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘நம்ம வீட்டு பிள்ளை’ படம் இன்று வெளியாகியுள்ளது. இதையொட்டி அவர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- “நம்ம வீட்டுபிள்ளை அண்ணன்-தங்கை உறவை பற்றிய கதை. சமுத்திரக்கனி எனது அப்பாவாகவும், பாரதிராஜா தாத்தாவாகவும், வேல ராமமூர்த்தி பெரியப்பாவாகவும் வருகிறார்கள். குடும்ப பிரச்சினைகள், பொருளாதாரத்தை பார்த்துக்கொண்டு உறவுகளை பாதுகாக்கும் பிள்ளைகளை பற்றி படம் பேசும்.
ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கையாக வருகிறார். பாரதிராஜாவுடன் நடித்தது இனிமையான அனுபவம். நிறைய இடங்கள் கிழக்கு சீமை, பாசமலர் படங்களை ஞாபகப்படுத்தும். எங்க வீட்டு பிள்ளை தலைப்பை நாங்கள் கேட்கவே இல்லை. 32 கதாபாத்திரங்கள் படத்தில் உள்ளன. பாரதிராஜா பெரிய இயக்குனர் என்ற ஈகோ இல்லாமல் அன்போடு பழகினார்.

அவர் படப்பிடிப்புக்குள் வரும்போதே எல்லோருக்கும் எனர்ஜி வரும். எனது கனா படத்தை மிகவும் பாராட்டினார். கனா படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேசுக்கு தேசிய விருது கொடுத்து இருக்கலாம். எனது படம் ரிலீசாவதையொட்டி பேனர் வைக்க கூடாது என்ற வேலையை ரசிகர்கள் தொடங்கி விட்டனர்.
பேனரால் சில அசம்பாவிதங்கள் நடக்கும்போது அதை தவிர்த்து விடுவது நல்லது என்பது எனது கருத்து. இந்த படத்தில் நடித்ததன் மூலம் கூட்டு குடும்பத்தின் மகத்துவம் புரிந்தது. அடுத்து ஹீரோ படம் டிசம்பரில் வெளியாகிறது. அதன்பிறகு ரவிகுமார் படத்தில் நடிக்கிறேன். விக்னேஷ் சிவன், நெல்சன் படங்களிலும் நடிக்க இருக்கிறேன்.
இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.
அட்ரியன் கிரன்பெர்க் இயக்கத்தில் சில்வெஸ்டர் ஸ்டாலொன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘ராம்போ: லாஸ்ட் பிளட்’ படத்தின் விமர்சனம்.
1982ல் ஆரம்பித்த ‘ராம்போ‘ சீரிஸ்களின் ஐந்தாம் பாகமாக இப்படம் வெளியாகி இருக்கிறது. 2008ல் பர்மா பிரச்னைகளைக் கடந்து பதினோரு வருடங்களுக்குப் பிறகு ஜான் ராம்போ அமைதியான வாழ்க்கை வாழ்கிறார். உடன் தோழி மரியா பெல்ட்ரென் மற்றும் அவரின் பேத்தி கேப்ரியல் சகிதமாக தனது தந்தையின் குதிரைப் பண்ணையை பார்த்துக்கொண்டு வாழ்கை சுமூகமாக போகிறது.
இதற்கிடையில் கேப்ரியலின் தந்தை யாரென கண்டுபிடித்துவிட்டதாகவும் அவர் மெக்ஸிகோவில் இருப்பதாகவும் அவரது தோழி கூற யாருக்கும் தெரியாமல் கேப்ரியல் மெக்ஸிகோவிற்கு செல்கிறார். அங்கு அவரது அப்பா நீங்கள் எனக்குத் தேவையில்லை என்று கூற மனமுடையும் கேப்ரியல் உள்ளூர் பார் ஒன்றில் குடிக்கிறார். அப்போது பெண்களைக் கடத்தி விற்கும் கும்பலால் கடத்தப்படுகிறார் கேப்ரியல்.

இறுதியில் காணாமல் போன பெண்ணை ஜான் ராம்போ காப்பாற்றினாரா? பெண்களைக் கடத்தி விற்கும் கும்பலை அளித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
‘ராம்போ‘ சீரிஸ்களின் ரசிகர்களுக்கு ஏற்ப படம் முழுக்க வில் அம்புகள், ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் காட்சிகள் என வைத்திருக்கிறார்கள். சில்வெஸ்டர் ஸ்டாலோன் வயசானாலும் இன்னும் ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.

அதற்கேற்ப வில்லனை கதவில் செருகி இதயத்தையே கிழித்து எடுத்துக் காண்பிப்பது, தலையை ரோட்டில் உருட்டி விட்டுச் செல்வது என அதிர்ச்சி வைத்தியம் தருகிறார். வீடு தேடி சென்று வில்லன்களை பந்தாடுவது, மொத்த கும்பலையும் வரவழைத்து பொறி அமைப்பது படத்திற்கு பிளஸ்.
பிராண்டன் கால்வினின் ஒளிப்பதிவும், பிரயன் டெயிலரின் பின்னணி இசையும் அருமை.
மொத்தத்தில் ‘ராம்போ லாஸ்ட் பிளட்‘ ராக்.
கார்த்தி நடிக்கும் சுல்தான் படம் வரலாற்று பின்னணியைக் கொண்ட படமில்லை என்று தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மலைக்கோட்டையில் நடைபெற்று வருகிறது. இதை அறிந்த இந்து அமைப்புகள் சில படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் சுல்தான் படம் வரலாற்று பின்னணியைக் கொண்டு உருவாகவில்லை என்று படக்குழு விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, திப்பு சுல்தான் வரலாற்று அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதாகவும், திண்டுக்கல் மலைக்கோட்டையில் எடுக்கக் கூடாது என்றும் கூறி இரு அமைப்பினர் 24.09.2019 அன்று படப்பிடிப்பு தளத்தின் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது அவர்கள் வெளியிட்ட கருத்துகளால் இருவேறு அமைப்புகளிடையே கருத்து மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியிருப்பது வருத்தத்துக்குரிய விஷயமாகும். இது வரலாற்றுப் பின்னணியோ அல்லது திப்பு சுல்தான் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படமோ அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
#Sulthan#Karthi#Karthi19pic.twitter.com/FXdX8Gd6sI
— DreamWarriorPictures (@DreamWarriorpic) September 26, 2019
சமீப காலங்களாக சுய விளம்பர நோக்கில் திரைப்படங்களை தனி நபர்களும், சில அமைப்புகளும் தாக்குவது அதிகரித்து வருகிறது. ஒரு திரைப்படம் எதை காண்பிக்க கூடாதென்பதை உறுதி செய்ய தணிக்கைக் குழு உள்ளது.
இதுதவிர்த்து என்ன காண்பிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை அந்த திரைப்படத்தின் படைப்பாளிகளுக்கே உள்ளது. இது நம் நாட்டின் சட்டம் நமக்கு அளிக்கும் சுதந்திரமும், பாதுகாப்பும் ஆகும்.
ஆகவே எந்தவொரு அமைப்போ, தனி நபரோ படைப்பாளிகளின் சுதந்திரத்தை பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் வரலாற்று தலைவர்களுக்கும், தேசிய தலைவர்களுக்கும் சாதி மத அடையாளங்கள் பூசி அவர்களின் வாழ்வையும் நமது வரலாற்றையும் கொச்சைப்படுத்தும் செயல்களுக்கும் எங்களின் கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறோம்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று வெளியேறிய மதுமிதா, தாலியை கழற்றி வைத்தது ஏன் என்பதற்கான விளக்கத்தை பேட்டியில் கூறியிருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஜூன் மாதம் 23-ந்தேதி தொடங்கியது. 100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
நிகழ்ச்சியில் டாஸ்க் ஒன்றில் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டதாக நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டார். ’டாஸ்க்குக்கு பின் நடந்த விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத்தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார்.
அவரின் இந்த செயல் பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்து எறிவதாகும். இந்த அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார்’ என்று நிகழ்ச்சி குழு தெரிவித்தது.

தமிழ்ப்பெண் என்று அடையாளப்படுத்திக் கொண்ட மதுமிதா நிகழ்ச்சிக்காக தாலியை கழற்றிவிட்டு வீட்டுக்குள் போனது குறித்து சர்ச்சைகள் கிளம்பின. இந்த விவகாரம் குறித்து முதல்முறையாக ஒரு பேட்டியில் மனம் விட்டு பேசியுள்ளார் மதுமிதா.
அதில் அவர், ’பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன் எனது பொருட்களை சோதனை செய்தார்கள். அப்போது தாலி போன்ற பெரிய நகைகளை அணிந்தால் அது மைக்கில் உரசும், தாலியை அணிய வேண்டாம் என்று கூறினார்கள். தொடர்ந்து தாலியை எப்படி கழற்ற முடியும் என கேட்க, டாஸ்க் பண்ணும்போது யாராவது உங்கள் தாலியை பிடித்து இழுத்து அறுந்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்கள். இதுகுறித்து என் கணவரிடம் கேட்க அவரும் சரி என்ற பிறகே தாலியை கழற்றினேன்’ என கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள அடா சர்மா, திருமணம் செய்துக் கொள்ள மாப்பிள்ளை தேடுவதாக தெரிவித்துள்ளார்.
தெலுங்கு படங்களில் கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் அடா சர்மா. இவர் தமிழிலிலும் சில படங்களில் நடித்துள்ளார். தான் திருமணம் செய்துகொள்ள மாப்பிள்ளை தேடுவதாக தெரிவித்துள்ளார். அதற்காக அவர் போட்டுள்ள நிபந்தனைகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளன.
’வெங்காயம் தின்ன கூடாது, வீட்டில் ஜீன்ஸ் அணியலாம் ஆனால் வெளியில் சென்றால் பாரம்பரிய உடை தான், தினமும் மூன்று வேளையும் சிரித்துக்கொண்டே சமைக்க வேண்டும், மதுபானம் மற்றும் இறைச்சி சாப்பிடக்கூடாது, எல்லா விதமான மொழி இந்திய படங்களையும் மதிக்க வேண்டும் என அடா சர்மா நிபந்தனை தெரிவித்துள்ளார்.

அதிலும் முக்கியமாக சாதி, மதம், நிறம், ஜாதகம், ஷூ சைஸ், விசா, நீச்சல் திறமை, இன்ஸ்டா பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை ஆகியவை குறித்து கவலை இல்லை என அடா சர்மா கூறியுள்ளார்.
மேயாதமான் படம் மூலம் அறிமுகமாகி, தற்போது விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்திருக்கும் இந்துஜா, ரஜினி பட வாய்ப்பை இழந்ததாக கூறியிருக்கிறார்.
நடிகர் விஜய், அட்லீ இயக்கத்தில் நடித்துள்ள படம் பிகில். தீபாவளி ரிலீசாக இந்த படம் ரிலீசாக இருக்கிறது. பெண்கள் கால்பந்தை கதைகளமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நாயகியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரத்தில் இந்துஜாவும் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்காக இந்துஜா தனது தலைமுடியைக் குறைத்துள்ளார். சமீபத்தில் வெளியான மகாமுனி படம் இந்துஜாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது. கதாபாத்திரமாகவே மாறி விடுகிறார் என்ற பாராட்டுகளை பெற்று தந்துள்ளது. எனவே, பிகில் படத்தில் அவரது கதாபாத்திரத்தை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், பிகில் படத்தில் நடித்து கொண்டிருந்ததால், ரஜினியின் தர்பார் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை மறுக்க வேண்டிய நிலை இந்துஜாவுக்கு ஏற்பட்டு விட்டதாம். தமிழில் நடிக்கும் அனைவருக்குமே ரஜினி படத்தில் ஒரு ஓரத்தில் நின்று போகும் காட்சியாவது கிடைக்காதா என்ற ஏக்கம் நிச்சயம் இருக்கும். ஆனால் தர்பார் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை இந்துஜா மறுத்து விட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலாபால், ஆடம்பர வாழ்க்கை வாழ பிடிக்கவில்லை, இயற்கையை சார்ந்து வாழ பிடிக்கிறது என்று கூறியிருக்கிறார்.
இயக்குனர் விஜய்யுடனான திருமண வாழ்க்கை விவகாரத்தில் முடிந்த பிறகு மீண்டும் சினிமாவில் பிசியான அமலாபாலுக்கு ஆடை படம் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் விளைவாக அவரிடம் கதை சொல்ல இயக்குனர்கள் ஆர்வமுடன் உள்ளனர். ஆனால் அவரோ அமைதியான வாழ்க்கையை விரும்பி பயணங்களில் தான் ஆர்வம் காட்டுகிறார்.
பாண்டிச்சேரியில் அரவிந்தர் ஆசிரமம் தனக்கு பெரும் அமைதியை தந்ததாகவும், வித்தியாசமான வாழ்க்கை தனக்காக இங்கு காத்திருந்ததை இப்போதுதான் தாம் உணர்ந்து உள்ளதாகவும் கூறி இருக்கிறார். இப்போது தனக்கு ஆடம்பர வாழ்க்கை வாழ பிடிக்கவில்லை, இயற்கையை சார்ந்து வாழும் வாழ்க்கை ரொம்பவும் பிடித்து இருப்பதாகவும் கூறுகிறார். தான் வாங்கிய காரை கூட விற்று விட்டார்.

இமயமலையின் கீழ் கங்கை வரைக்கும் ஆன்மீக பயணம் மேற்கொண்டு விட்டு வந்திருக்கும் அமலாபாலுக்கு, இயற்கையோடு ஒன்றி வாழ ரொம்பவும் பிடித்து இருக்கிறது. அதனால்தான், அடிக்கடி ஒரு சின்ன பையில் கொஞ்சம் துணிகளை எடுத்துக் கொண்டு இயற்கை சூழ்ந்த காடுகளில் குழுவாக சமைத்து சாப்பிடுவது என்பதில் விருப்பம் அதிகமாகி இருக்கிறதாம்.
நாச்சியார் படத்தை தொடர்ந்து பாலா இயக்க இருக்கும் புதிய படத்தில் மூன்று ஹீரோக்கள் இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.
சூர்யா நடிப்பில் தற்போது ‘காப்பான்’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து, தற்போது இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதில் சூர்யா மட்டுமே நாயகன் என செய்திகள் வந்தது. இந்நிலையில், ஆர்யா, அதர்வா ஆகிய இருவரும் இப்படத்தில் இணைந்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தின் திரைக்கதை பணிகள் முடிந்துள்ள நிலையில், தற்போது ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கியுள்ளன. விரைவில் இப்படம் குறித்த முழு தகவலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
கோலிவுட் போன்று டோலிவுட்டிலும் ஏராளமான ரசிகர்களை கொண்ட நடிகர் சூர்யா, அடுத்ததாக தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் காப்பான் படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து சுதா கொங்காரா இயக்கும் சூரரை போற்று படத்தில் சூர்யா நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவடைந்தது. தற்போது படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சூர்யா அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் ஐதராபாத் சென்ற சூர்யா, பிரபல தெலுங்கு பட இயக்குனர் பி.வி.எஸ்.ரவி மற்றும் கதாசிரியர் கோபி மோகனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தயாரிப்பாளர் மோகன் பாபு வீட்டில் நடந்துள்ளது.

மோகன் பாபு சூர்யாவின் சூரரை போற்று படத்தில் நடித்துள்ளார். இந்த சந்திப்பின் போது சூர்யாவின் நண்பரும் நடிகருமான விஷ்ணு மஞ்சுவும் உடன் இருந்தார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.






