என் மலர்
சினிமா செய்திகள்
சரண் இயக்கத்தில் ஆரவ், காவ்யா தப்பார் நடிப்பில் உருவாகி இருக்கும் ’மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தின் முன்னோட்டம்.
சுரபி ஃபிலிம்ஸ் சார்பில் S.மோகன் தயாரித்துள்ள திரைப்படம் “மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்”. இயக்குநர் சரண் இயக்கியிருக்கும் இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஆரவ் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக காவ்யா தப்பார் நடித்துள்ளார். நாசர், ராதிகா சரத்குமார், ரோகிணி முதலான பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். கோபி கிருஷ்ணா எடிட்டிங் செய்ய, கே வி குகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சைமன் கே கிங் இசையமைத்துள்ளார்.
சரணின் வித்தியாசமான திரைக்கதை அமைப்பில் அவரது வழக்கமான பாணியில் காமெடி திரில்லர் என அனைத்தும் அடங்கிய ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது “மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்”.
படம் குறித்து இயக்குநர் சரண் கூறியதாவது: வசூல்ராஜா எனக்கு தலை என்றால் மார்க்கெட் ராஜா எனக்கு பாதம். இனிமேல் நான் நடைபோடுவேன். இப்படத்தில் அமர்ககளம் படத்திற்கு நேரெதிரான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ராதிகா மேடம். என் படங்களில் வைரமுத்து பரத்வாஜ் இல்லாத குறையை போக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் சைமன் கே கிங்.

இந்தப்படத்தில் வேற லெவல் எனச் சொல்லக்கூடிய உழைப்பைத் தந்திருக்கிறார் என் தம்பி கே.வி. குகன். என் அம்மா இருந்து எங்களைப் பார்த்திருக்க வேண்டும். ஆரவ் இந்தப்படத்தில் இரு வேறு சாயலில் நடிக்க வேண்டும் ஒரு தேர்ந்த நடிகர் போல நடித்திருக்கிறார். அவர் தமிழ் சினிமா தாதாவாக மாறுவார். இந்தப்படம் அனைவரும் ரசிக்கும்படியான கமர்ஷியல் படமாக இருக்கும் என்றார்.
சாய் பல்லவியை திருமணம் செய்யவும், பூஜா ஹெக்டேவுடன் டேட்டிங் செல்லவும் விரும்புவதாக பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் சாய்பல்லவி. அந்த படத்துக்கு பின்னர் வாய்ப்புகள் குவிந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் டாக்டருக்கு படிக்க போன சாய்பல்லவி மீண்டும் வந்து முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் நடித்து வருகிறார். இப்போது அவர் கையில் 2 தெலுங்கு படங்கள் உள்ளன. அவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ் சாய் பல்லவியை திருமணம் செய்ய ஆசை என கூறியுள்ளார். இவர் சாய் பல்லவியுடன் ஃபிடா என்ற படத்தில் நடித்திருந்தார். தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் சாய் பல்லவி, பூஜா ஹெக்டே, ராஷி கன்னா ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டு, இவர்களில் யாரை திருமணமும், யாருடன் டேட்டிங்கும், யாரை கொலை செய்யவும் விரும்புகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த வருண் தேஜ், சாய் பல்லவியை திருமணமும், பூஜா ஹெக்டேவுடன் டேட்டிங்கும், ராஷி கன்னாவை கொலை செய்யவும் விரும்புவதாக கூறினார்.

வருண் தேஜ் நடித்த 'கட்டலகொண்டா கணேஷ்' படம் கடந்த வாரம் வெளியாகி தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ஜிகர்தண்டா படத்தின் ரீமேக் ஆகும். முதலில் இந்த படத்திற்கு வால்மிகி என்று பெயர் வைக்கப்பட்ட நிலையில், சர்ச்சை எழுந்ததால் கட்டலகொண்டா கணேஷ் என பெயர் மாற்றப்பட்டது.
‘சாந்த் கி ஆங்க்’ என்ற படத்தில் வயதான தோற்றத்தில் நடித்துள்ள டாப்சி தனது நடிப்பை கேலி செய்தவர்களுக்கு டுவிட்டரில் ஆவேசமாக பதிலளித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வயதான துப்பாக்கி சுடும் வீராங்கனைகள் சந்திரோ டோமா, பிரகாஷி தோமர் ஆகிய இருவரும் 65 வயதுக்கு பிறகு துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்று 30-க்கும் மேற்பட்ட சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளனர். ‘சாந்த் கி ஆங்க்’ என்ற படம் இவர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ளது.
இதில் டாப்சி, பூமி பெட்நேகர் ஆகியோர் நடித்துள்ளனர். துஷார் ஹிரானந்தானி இயக்கி உள்ளார். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் நடித்திருந்த டாப்சியின் மேக்கப் பற்றியும், அவரது வயதான தோற்றத்தையும் சமூக வலைத்தளத்தில் பலரும் கேலி செய்தனர். டாப்சிக்கு பதில் வயதான ஒருவரை நடிக்க வைத்து இருக்கலாம் என்றும் கூறினர்.

இதற்கு பதில் அளித்து டாப்சி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- “புதிய முயற்சிகளை எதிர்மறையாக அணுகுவது ஆச்சரியமாக உள்ளது. வழக்கமான பாணியில் இருந்து மாற்றத்தை கொண்டு வர நினைப்பவர்களை ஆதரிக்க முடியாத நிலையில் முதுகெலும்பு இல்லாமல் இருக்கிறோம்.
என்னை கேலி செய்பவர்கள் சரான்ஷ் படத்தில் நடித்த அனுபம் கேரிடமோ, சுனில்தத் தாயாக நடித்த நர்கிஸிடமோ, 3 இடியட்ஸ் படத்தில் கல்லூரி மாணவராக நடித்த அமிர்கானிடமோ கேள்வி கேட்டது உண்டா. குற்றச்சாட்டுகளும் கேள்விகளும் எனக்கு மட்டும்தானா. உங்கள் சந்தேகங்கள் தீபாவளியன்று தீர்ந்து விடும்”
இவ்வாறு டாப்சி கூறியுள்ளார்.
விருது விழாவில் அஜித்துடன் நடிக்க ஆசை எனக் கூறியவுடன் அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்ததை பார்த்து நடிகை ராஷ்மிகா வாயடைத்து போய்விட்டாராம்.
கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான கிரிக்பார்ட்டி மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார் ராஷ்மிகா.
இவர் தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ’சுல்தான்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். அஜித் மற்றும் விஜய்யுடன் நடிக்க விருப்பம் உள்ளதாக ராஷ்மிகா பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் இந்த வாய்ப்பு நழுவிப்போனது.

சமீபத்தில் விருது விழாவில் கலந்து கொண்ட ராஷ்மிகாவிடம், யாருடன் நடிக்க விருப்பம் என்று கேட்கப்பட்டதாம். இதற்கு அவர் அஜித் என பதிலளிக்க, ரசிகர்கள் சிறிது நேரம் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத ராஷ்மிகா வாயடைத்து போய்விட்டாராம்.
தன்னிடம் வாங்கிய 10 கோடி ரூபாய் பணத்தை நடிகர் கமல்ஹாசன் திரும்பித் தரவில்லை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவான உத்தமவில்லன் படம் வெளியாவதில் சில சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கமல்ஹாசன் தம்மை அணுகியதாகவும், தமது தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறி, முன்பணமாக 10 கோடி ரூபாயை கேட்டு பெற்றதாகவும் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை தமது படத்தில் நடிக்க அவர் முன்வரவில்லை எனவும், 10 கோடி ரூபாய் பணத்தை திருப்பித் தரவில்லை என்றும் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் மீது பிரபல சினிமா தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா கொடுத்திருக்கும் இந்த புகார், சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேனர் கலாசாரத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, தனக்கு பேனர் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியான சம்பவத்துக்கு பிறகு பேனர் கலாசாரத்தை ஒழிக்க குரல்கள் ஒலிக்கின்றன. அரசியல் கட்சிகள் பேனர்களை தவிர்க்கும்படி தொண்டர்களை வற்புறுத்தி உள்ளன. இதேபோல் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோர் ரசிகர்களுக்கு தடை விதித்தனர்.
விஜய் வேண்டுகோளை ஏற்று சென்னையில் சமீபத்தில் நடந்த பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் பேனர் வைக்கவில்லை. அஜித்குமார் ரசிகர்களும் பேனர்கள் வைக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்து போஸ்டர்கள் ஒட்டினர். இந்த நிலையில் தனுஷூம் தனக்கு பேனர் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

தனுஷ் வேண்டுகோளை ஏற்று அவரது ரசிகர் மன்றம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “தனுஷ் நடிப்பில் அக்டோபர் 4-ந்தேதி வெளியாக இருக்கும் அசுரன் படத்துக்கு கட் அவுட், பேனர் வைப்பதை தவிர்த்து அதற்கு பதிலாக உங்களால் முடிந்த அளவு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
அஜித் நடிப்பில் வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ‘பிங்க்‘ படத்தின் ரீமேக். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 8-ந்தேதி வெளியானது. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம் வெற்றிகரமாக 50 நாட்களை எட்டியதை கொண்டாடும் விதமாக டுவிட்டரில் நேர்கொண்ட பார்வை எனும் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதனை முன்னிட்டு படக்குழு சார்பில் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித்தின் அடுத்த படத்தையும் எச்.வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். இது ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் பூஜையுடன் தொடங்குகிறது. இந்த படத்தில் அஜித் பைக் ரேஸராக நடிக்கிறார். இதற்காக அஜித் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
5 இயக்குனர்கள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகை சுர்வின் சாவ்லா பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
தமிழில் வசந்த் இயக்கத்தில் வெளியான ‘மூன்று பேர் மூன்று காதல்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சுர்வின் சாவ்லா. இதில் அர்ஜுன், சேரன், விமல் ஆகியோரும் நடித்து இருந்தனர். அர்ஜுனுடன் ‘ஜெய்ஹிந்த்-2’ மற்றும் ‘புதிய திருப்பங்கள்’ படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கு இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். 5 இயக்குனர்கள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சுர்வின் சாவ்லா பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “என் சினிமா வாழ்க்கையில் 3 முறை தென்னிந்திய பட உலகிலும் 2 முறை இந்தி சினிமாவிலும் பாலியல் தொல்லைகளை சந்தித்தேன். தென்னிந்திய பட உலகில் ஒரு டைரக்டர் உன் உடம்பில் உள்ள ஒவ்வொரு பாகத்தையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார். அன்று முதல் அவரது போன் அழைப்புகளை எடுப்பது இல்லை.
இன்னொரு முறை தேசிய விருது வாங்கிய டைரக்டரின் படத்தில் நடிக்க கதாநாயகி தேர்வுக்காக சென்ற போது என்னை ஆபாசமான வசனங்களை பேச வைத்து ஏதோதோ செய்தார். எனக்கு உடம்புக்கு சரியில்லை என்று மும்பை திரும்பியபோது நானும் உன்னுடன் மும்பைக்கு வரவா? என்று கேட்டார்.

வேண்டாம் என்று சொல்லி விட்டேன். அவருக்கு தமிழ் தவிர ஆங்கிலமோ இந்தியோ தெரியாது. இதனால் வேறு ஒருவரை வைத்து என்னிடம் பேசினார். படப்பிடிப்பு தொடங்க கொஞ்ச நாள் ஆகும். அதுவரை நீங்கள் ஒத்துழைத்தால் போதும் அதன் பிறகு நிறுத்தி விடலாம் என்றார். நான் எதை நிறுத்திடனும் என்று கேட்டேன். படப்பிடிப்பு தொடங்குவது வரைதான்.
அதன்பிறகு நீ டைரக்டருக்கு ஒத்துழைக்க வேண்டியது இல்லை என்று மறுபடியும் சொன்னார். நீங்கள் தவறான கதவை தட்டுகிறீர்கள். உங்கள் டைரக்டர் எனக்கு திறமை இருப்பதாக நினைத்தால் நடிக்கிறேன். இல்லாவிட்டால் வேண்டாம் என்று கூறிவிட்டேன். அந்த படத்தை இன்றுவரை அவர் ஆரம்பிக்கவே இல்லை.”
இவ்வாறு சுர்வின் சாவ்லா கூறினார்.
நடிகை சமந்தா தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த போது, எனக்கும் கணவருக்கும் நடுவில் ஒன்று பிரச்சனையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
சமந்தா தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது தனது கணவர் குறித்து ரகசியங்களை குறிப்பிட்டுள்ளார். ’என்னால் என் கணவர் இல்லாமல் இருக்க முடியாது. சினிமாவா, அவரா என்று கேட்டால், நான் என் கணவருக்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன்.
குழந்தை குறித்து இப்போது நாங்கள் யோசிக்கவில்லை. என் கணவர் நாக சைதன்யாவிற்கு நான் முதல் மனைவி என்று கூட சொல்ல முடியாது. எப்போதும் அவர் தலையணையை அணைத்தபடிதான் படுத்து இருப்பார். தூங்கும் போதும் அதை கட்டிபிடித்துக் கொண்டுதான் இருப்பார்.

எப்போதும் எங்களுக்கு இடையில் ஒரு தலையணை இருக்கும். அவரை முத்தமிட வேண்டும் என்றால் கூட தலையணையை கேட்க வேண்டிதான் இருக்கும். இந்த தலையணை பிரச்சனை குறித்து நான் நிறைய சொல்ல முடியும். ஆனால் இதற்கு மேலும் சொல்ல மாட்டேன்’ என்று கூறி உள்ளார்.
இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் சசிகுமார், தற்போது இயக்குனர் பொன்.ராமுடன் இணைந்து எம்.ஜி.ஆர். மகன் படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
கிராமம் சார்ந்து கமர்ஷியல் படங்கள் கொடுத்து வெற்றிப் பெற்றவர் இயக்குநர் பொன்.ராம். அவரோடு இப்போது சசிகுமார் கைகோர்த்துள்ளார். இந்தக் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தேனியில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
’எம்.ஜி.ஆர் மகன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சசிகுமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர்.

கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் ஆகிய பணிகளைக் கவனிக்கிறார் இயக்குநர் பொன்.ராம். இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோனிதாசன் இசையமைக்கிறார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் பணிகளையும், துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரியவுள்ளனர்.
இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.
ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் முதல் முறையாக தயாரித்திருக்கும் ஒற்றைப் பனைமரம் படத்தின் டிரைலரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.
ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் முதல் முறையாக தயாரித்திருக்கும் படம் ஒற்றைப் பனைமரம். நல்ல திரைப்படங்களை வெளியிட வேண்டும் ; தயாரிக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தில் திரையுலகுக்கு வந்திருக்கும் இவர், இதற்குமுன் நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறார்.
ஈழத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் ஒற்றைப் பனைமரம் திரைப்படம் 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளையும் குவித்திருக்கிறது.

விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலரை இயக்குனர் பா.ரஞ்சித் இன்று வெளியிட்டார். அஷ்வமித்ரா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவு செய்திருக்கிறார். புதியவன் ராசையா இயக்கி இருக்கிறார்.
புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
ஜீன்ஸ் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய், தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படம் பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. கல்கியின் வரலாற்று புனைவான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்க திட்டமிட்டுள்ளார்.
அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், பார்த்திபன், அனுஷ்கா ஷெட்டி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பல நட்சத்திரங்களின் பெயர்கள் இந்த படத்தில் நடிக்க போவதாக செய்திகள் வந்தன.
ஐஸ்வர்யா ராய், விக்ரம் ஆகிய இருவர் மட்டுமே இதை உறுதிசெய்துள்ளனர். சமீபத்தில் நடிகர் பார்த்திபனும் டுவிட்டர் பக்கத்தில் அவர் நடிப்பதாக அறிவித்தார். அதன் பின்னர் ஜெயராம், அமலா பால் ஆகியோரும் படத்தில் நடிக்க இருப்பதை உறுதிப்படுத்தினர்.

இதில் ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் அவர் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மற்றொரு கதாபாத்திரத்தின் பெயர் மந்தாகினி தேவி என்கிறார்கள்.






