என் மலர்
சினிமா செய்திகள்
உதவும் உள்ளங்கள் நடத்திய ஆனந்த தீபாவளி நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் இணைந்து நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி தீபாவளி கொண்டாடி இருக்கிறார்கள்.
உதவும் உள்ளங்கள் என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்று நிகழ்வை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் சுமார் 1222 குழந்தைகள் “ஆனந்த தீபாவளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த வருடம் நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினார்கள்.
நிகழ்வில் இந்துஜா பேசும்போது, “இந்த வருடம் தீபாவளி கொண்டாட்டமாக தளபதி விஜய் நடித்த பிகில் படம் திரைக்கு வருகிறது. இப்படம் நடிப்பதற்கு என்னை அணுகிய போது நான் எவ்வளவு சந்தோஷம் அடைந்தேனோ, அதே சந்தோஷம் உங்களை இன்று சந்தித்தபோது அடைந்தேன்.

நிகழ்வில் அதுல்யா ரவி பேசும்போது, “உலகில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிசெய்து வந்தால், ஆதரவற்றோர் என்று யாரும் இருக்கமாட்டார்கள். எனவே நம்மால் முடிந்த உதவியை இயலாதவர்களுக்கு செய்து அவர்களின் வாழ்க்கை முன்னேற்றதிற்கு பாதை வகுக்க வேண்டும்” என்றார்.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் படத்தில், நடிகை சௌகார் ஜானகி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஏ1 படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் தற்போது ‘டகால்டி’, ‘டிக்கிலோனா’ படங்கள் உருவாகி வருகிறது. மேலும் ஆர்.கண்ணன் இயக்கும் படத்திலும் சந்தானம் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை சௌகார் ஜானகி நடிக்கிறார். இந்த படம் அவருக்கு 400வது படமாகும்.
1952-ம் வருடம் 'வளையாபதி' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சௌகார் ஜானகி, அதனைத் தொடர்ந்து, தமிழ் திரைப்படத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், ஜெமினி கணேசன், நாகேஷ், ஸ்ரீகாந்த், ஏ.வி.எம்.ராஜன் போன்ற முன்னணி கதாநாயர்களுடன் நடித்துள்ளார்.
முன்னணி நாயகர்கள் மட்டுமல்லாமல், அவர் காலத்தில் முன்னணி நாயகிகளாக இருந்த ஜெயலலிதா, சரோஜா தேவி, கே.ஆர்.விஜயா, விஜயகுமாரி, ஜெயந்தி, வாணிஸ்ரீ, ஆகியோருடனும், மனோரமா, சச்சு, போன்ற நகைச்சுவை நடிகைகளுடனும் நடித்திருக்கிறார்.

சிவாஜி கணேசனுடன் நடித்த 'புதிய பறவை' படத்தில் இடம்பெற்ற 'பார்த்த ஞாபகம் இல்லையோ' என்ற பாடலில் அனைவரின் மனதையும் கவர்ந்தார். அந்த பாடல் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்தது.
கமலுடன் நடித்த 'ஹேராம்' படத்திற்குப் பிறகு 14 வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் 'வானவராயன் வல்லவராயன்' படத்தின் மூலம் மீண்டும் தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய 'சௌகார்' ஜானகி தற்போது சந்தானம் படத்தின் மூலம் 400-வது படத்தை தொட்டிருக்கிறார்.
அமலாபால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஆடை’ படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்க இருக்கிறார்.
‘மேயாத மான்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவதாக ‘ஆடை’ படத்தை இயக்கினார். ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தில், முதன்மைக் கதாபாத்திரத்தில் அமலா பால் நடித்தார். கடந்த ஜூலை 19-ம் தேதி இந்தப் படம் வெளியானது.
பல சர்ச்சைகளுடன் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடியது. இந்நிலையில், இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் ரத்னகுமார். அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் கங்கனா ரணாவத், இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சங்கத்தமிழன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சங்கத்தமிழன்’. வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.
விஜயா புரடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் தீபாவளி முன்பே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் தீபாவளி அன்று வெளியாகும் என்றும் கூறினார்கள். தற்போது நவம்பர் 15ம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராசி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்கள். மேலும் நாசர், சூரி, ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லிப்ரா புரடொக்க்ஷன்ஸ் இப்படத்தை வெளியிடுகிறது.
அருவி படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை அதிதி பாலன், தற்போது மலையாளத்தில் நித்யா மேனன் இடத்தை பிடித்துள்ளார்.
அருவி படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்தவர் நடிகை அதிதி பாலன். அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் வசூலையும் வாரிக்குவித்தது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அதிதி பாலனுக்கு பல பட வாய்ப்புகள் வந்தது.
ஆனால், எதையும் ஏற்காமல் இருந்தார். தற்போது மலையாளத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். சென்னையில் ஒரு நாள் படத்தை இயக்கிய ஷாகித் காதர் இயக்கும் படத்தில் கதாநாயகனாக அதிதி நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தில், முதலில் நித்யா மேனன் நடிக்க ஒப்பந்தமானார்.

கால்ஷீட் பிரச்சனை காரணமாக நித்யா மேனன் விலகியதை தொடர்ந்து, அதிதி பாலன் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க இருக்கிறது.
திமிரு புடிச்சவன் படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்த நிவேதா பெத்துராஜ், தற்போது மீண்டும் காக்கி சட்டை அணிந்து நடிக்க இருக்கிறார்.
ஒருநாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து ஜெயம் ரவியின் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படங்களில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் இவர் நடித்துள்ள சங்கத்தமிழன் படம் விரைவில் வெளியாக உள்ளது.
நிவேதா தெலுங்கு படங்களில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். டிக் டிக் டிக் படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்திருந்த நிவேதா பெத்துராஜ், திமிரு புடிச்சவன் படத்தில் காக்கிச்சட்டை அணிந்த பெண் போலீசாக நடித்திருந்தார். தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ள நிவேதா பெத்துராஜ், தமிழில் வித்யா நடித்திருந்த போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கை கிஷோர் திருமலா இயக்குகிறார். இந்த படத்தில் சமீபத்தில் 'ஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் மூலம் முன்னணி ஹீரோவாக மாறியுள்ள ராம் பொத்தினேனி நடிக்கிறார். தமிழில் ஹிட்டானது போலவே தெலுங்கிலும் இந்த படம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை பிரியா வாரியர் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தில் புருவத்தை வளைத்து சுருக்கி முக பாவனை காட்டியதன் மூலம் உலகம் முழுவதும் பேசப்படும் நடிகையாக மாறினார் பிரியா வாரியர். பள்ளி மாணவியாக இருந்த பிரியா வாரியர், அடார் லவ் படத்தில் பள்ளி மாணவியாகவே நடித்தார்.
அவர் காட்டிய முக பாவனைகள், உலகம் முழுவதும், ஒரே நாளில் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்று தந்தது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் போடப்பட்டு, அது தள்ளுபடியானது. அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டி இருக்கிறது. அவர், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்தி படங்களிலும், விளம்பர படங்களிலும் தொடர்ந்து நடித்து வரும் அவர், அவ்வப்போது, லேட்டஸ்டாக தான் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். அப்படி அவர் லேட்டஸ்ட்டாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட, அதற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருவதோடு, பிரியாவின் அழகை பாராட்டியும், வர்ணித்தும் கமெண்ட்டுகளும் பதிவிடுகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் நடிப்பில் உருவாகியுள்ள கைதி படத்தின் முன்னோட்டம்.
மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடி யாரும் கிடையாது. முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிலோமின் ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள கைதி படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25ம் தேதி திரைக்கு வர உள்ளது.
கார்த்தி நடித்துள்ள கைதி படம் உருவாக இரண்டு படங்கள் முன்னுதாரணமாக இருந்ததாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடி யாரும் கிடையாது. முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள கைதி படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறுகையில், ‘கைதி படத்தில் இடம்பெற்றுள்ள கார்த்தியின் கதாபாத்திரம் கமலின் விருமாண்டி மற்றும் ஹாலிவுட் படமான டை ஹார்ட் ஆகியவற்றை முன்னுதாரணமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரு படங்களுக்கும் டைட்டிலில் கெளரவம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் அடுத்த படத்திற்கு வலிமை என்ற தலைப்பு கிடைத்தது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் அஜித்குமார் வக்கீலாக நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படம் சமீபத்தில் திரைக்கு வந்து வசூல் குவித்தது. இதைத்தொடர்ந்து “அஜித் சிறந்த நடிகர், அவருடன் மீண்டும் பணியாற்ற தயாராக இருக்கிறேன்” என்று போனிகபூர் அறிவித்தார். தற்போது புதிய படத்தில் மீண்டும் அவர்கள் இணைந்துள்ளனர். இந்த படத்தை நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார்.
இப்படம் எளிமையான பூஜையுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. இப்படத்திற்கு ‘வலிமை’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு வலிமை என்ற தலைப்பு கிடைத்தது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வலிமை என்ற தலைப்பு கெனன்யா பிலிம்ஸ் உரிமையாளரான செல்வகுமாரிடம் இருந்ததாக கூறப்படுகிறது.

தல 60 படத்திற்கு வலிமை என தலைப்பு வைக்கலாம் என தீர்மானித்த படக்குழு, அந்த தலைப்பை பயன்படுத்த அனுமதிகோரி செல்வகுமாருக்கு கடிதம் எழுதியுள்ளனர். தீவிர அஜித் ரசிகரான செல்வகுமார், மறுப்பு தெரிவிக்காமல், தலைப்பை பயன்படுத்த அனுமதி கொடுத்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிமரமாக ஓடிக்கொண்டிருக்கும் அசுரன் படத்தை பார்த்த மகேஷ்பாபு படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் உருவாக்கிய படம் அசுரன். தனுஷ் நடித்த இப்படத்தை ’வி’ கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர், அபிராமி, பசுபதி, பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், கருணாஸ் மகன் கென், ‘ஆடுகளம்’ நரேன், டி.ஜே, பவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அசுரன் படம் கடந்த அக்டோபர் 4ந் தேதி வெளியானது. தீண்டாமை உள்ளிட்ட அடக்குமுறைக்கு எதிராக பேசிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அசுரன் படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அசுரன் படக்குழுவை பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, ‘அசுரன் உண்மை மாறாத தீவிரமான திரைப்படம். சிறந்த படைப்பு. தனுஷ், வெற்றிமாறன், ஜிவி பிரகாஷ் உள்பட படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிரபல குழந்தை நட்சத்திரம் கோகுல் சாய்கிருஷ்ணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதிகளவில் குழந்தைகளும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகின்றன.
இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா போல் நடித்து புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரமான கோகுல் சாய்கிருஷ்ணா டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்தார். கடந்த ஒரு வாரமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோகுல் சாய்கிருஷ்ணா கடந்த அக்டோபர் 18-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜூனியர் பாலகிருஷ்ணா என்றழைக்கப்படும் கோகுல் சாய்கிருஷ்ணாவின் மரணத்திற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் பாலகிருஷ்ணா தனது சமூக வலைத்தளத்தில் கோகுல் சாய்கிருஷ்ணாவின் எதிர்பாராத மரணம் குறித்த தகவல், தனது இதயத்தை நொறுக்கிவிட்டதாகவும், தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை அவருடைய குடும்பத்தினர்களுக்கு தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.






