என் மலர்
சினிமா

மகேஷ்பாபு, தனுஷ்
அசுரன் படக்குழுவினருக்கு மகேஷ்பாபு பாராட்டு
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிமரமாக ஓடிக்கொண்டிருக்கும் அசுரன் படத்தை பார்த்த மகேஷ்பாபு படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் உருவாக்கிய படம் அசுரன். தனுஷ் நடித்த இப்படத்தை ’வி’ கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர், அபிராமி, பசுபதி, பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், கருணாஸ் மகன் கென், ‘ஆடுகளம்’ நரேன், டி.ஜே, பவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அசுரன் படம் கடந்த அக்டோபர் 4ந் தேதி வெளியானது. தீண்டாமை உள்ளிட்ட அடக்குமுறைக்கு எதிராக பேசிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அசுரன் படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அசுரன் படக்குழுவை பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, ‘அசுரன் உண்மை மாறாத தீவிரமான திரைப்படம். சிறந்த படைப்பு. தனுஷ், வெற்றிமாறன், ஜிவி பிரகாஷ் உள்பட படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.
Next Story






