என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகர் நடிகைகள் சம்பளத்தை உயர்த்துவதை கட்டுப்படுத்த புதிய அமைப்பு உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
    திரைப்படங்களில் கதையின் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வழங்கி வந்த ‘கேஸ்டிங் டைரக்டர்கள்’ எனப்படும் நடிப்பு இயக்குனர்கள் தென்னிந்தியாவில் ஒருங்கிணைந்து தென்னிந்திய திரைப்பட நடிப்பு இயக்குனர்கள் மற்றும் நட்சத்திர மேலாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர்.

    நடிகர் நடிகைகள் சம்பளத்தை உயர்த்துவதை இந்த அமைப்பு கட்டுப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதன் கவுரவ ஆலோசகர்களாக இயக்குனர்கள் பாக்யராஜ், பிரபுசாலமன், நடிகை அர்ச்சனா, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், டைமண்ட் பாபு ஆகியோரும் தலைவராக மனோஜ் கிருஷ்ணா, செயலாளராக ஜெனிபர் சுதர்சன், பொருளாளராக வேல்முருகன் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இதன் தொடக்க நிகழ்ச்சியில் நடிகர் நாசர் கலந்து கொண்டு பேசும்போது, “நடிக்க வாய்ப்பு தேடுபவர்களுக்காகவும், நடித்துக் கொண்டிருப்பவர்களுக்காகவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது” என்றார். 

    பாக்யராஜ், நாசர்

    டைரக்டர் பாக்யராஜ் பேசும்போது, “இது சினிமாவுக்கு சேவை செய்யும் அமைப்பாக இருக்க வேண்டும். சினிமா, பல்வேறு கலைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. கலைஞர்கள் ஒரு அமைப்பாக இருக்க வேண்டும். அதுதான் சினிமாவுக்கு ஆரோக்கியமாக இருக்கும்” என்றார்.

    நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி, அஸ்வின், அசோக், நடிகைகள் கவுதமி, நமீதா, தேஜாஸ்ரீ, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    நடிகைகள் தங்களது சம்பளத்தை உயர்த்துவதற்கான காரணத்தை நடிகை டாப்சி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    தமிழ், தெலுங்கு பட உலகில் பிரபலமான நடிகை டாப்சிக்கு இந்தியில் நடித்து திரைக்கு வந்த படங்கள் நல்ல வசூல் குவித்ததால் அங்கு வாய்ப்புகள் குவிகின்றன. இதனால் சம்பளமும் உயர்ந்துள்ளது. டாப்சி அளித்த பேட்டி வருமாறு:- “சமீப காலமாக சினிமா துறையில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு கொடுக்கிற சம்பளமும் உயர்ந்து இருக்கிறது. 

    இது வரவேற்கத்தக்க மாற்றம். இந்தியில் முன்னணி கதாநாயகிகள் ரூ.20 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதை இந்த மாற்றத்துக்கு உதாரணமாக சொல்லலாம். முன்பெல்லாம் கதாநாயகிகள் ரூ.1 கோடி வாங்கினாலே வாயை பிளப்பார்கள். இப்போது கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தும் படங்களுக்கு ரசிகர்கள் அதிக ஆதரவு தருகிறார்கள். 

    அந்த படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலாவதும் நடிகைகள் சம்பளத்தை உயர்த்துவதற்கு ஒரு காரணம். சம்பளம் உயர்ந்தாலும் கதாநாயகர்களோடு ஒப்பிட்டால் அதிக வித்தியாசம் உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி படங்களிலுமே இந்த வித்தியாசம் இருக்கிறது. சினிமாவில் போட்டி என்று எதுவும் இல்லை.

    டாப்சி 

    நான் 2 ஆண்டுகளாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறேன். சக கதாநாயகிகளோடு என்னை ஒப்பிட்டால் நான் வாங்கும் சம்பளம் குறைவாகவே இருக்கிறது. ஆனாலும் எனக்கு பணம் முக்கியம் இல்லை. நல்ல நடிகை என்று நிரூபித்த பிறகே பணத்தை பற்றி யோசிப்பேன்.” இவ்வாறு டாப்சி கூறினார்.
    மாநாடு படம் குறித்து சமரச பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதில் சுமூக முடிவு எட்டப்பட்டால் அப்படத்தில் சிம்பு நடிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
    வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் சிம்பு நடிப்பதாகவும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிப்பதாகவும் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இது அரசியல் திகில் கதை என்றும் கூறப்பட்டது. ஆனாலும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை. இந்த நிலையில் மாநாடு படத்தை கைவிடுவதாக சுரேஷ் காமாட்சி அறிவித்தார். 

    இதுகுறித்து அவர் கூறும்போது, “எவ்வளவோ இழுத்து பிடித்தும் கால விரயம் ஏற்பட்டதே தவிர படத்தை தொடங்க இயலவில்லை. எனவே சிம்பு நடிக்க இருந்த மாநாடு படம் கைவிடப்படுகிறது” என்றார். சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மாநாடு பட பிரச்சினை குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தன. 

    சிம்பு

    இதில் சத்யஜோதி தியாகராஜன், கே.ராஜன், சிவசக்தி பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது சிம்பு தரப்பில் அவரது தாயார் உஷா ராஜேந்தர் கலந்து கொண்டு “குறிப்பிட்ட நேரத்தில் சிம்பு மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து கொடுப்பார்” என்று உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சுரேஷ் காமாட்சியிடம் கேட்டபோது, “மாநாடு படம் குறித்து சமரச பேச்சுவார்த்தை நடந்து வருவது உண்மைதான். மாநாடு படத்தில் சிம்பு நடிக்க சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். அது ஏற்கப்பட்டால் படப்பிடிப்பை தொடங்குவோம்” என்றார்.
    விஜய்யின் அடுத்த படமான தளபதி 64-ல் இருந்து விலகவில்லை என்றும் அது வெறும் வதந்தி எனவும் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
    ‘பிகில்’ படத்தை அடுத்து விஜய், லோகேஷ் கனகராஜ் டைரக்‌ஷனில், புதிய படத்தில் நடிக்கிறார். இது, அவர் நடிக்கும் 64-வது படம். விஜய் சேதுபதி, சாந்தனு, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், மாளவிகா மோகனன் ஆகியோர் அவருடன் நடிக்கிறார்கள். விஜய்யின் நெருங்கிய உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. 

    விஜய் சேதுபதி, விஜய்

    இந்த நிலையில் சேவியர் பிரிட்டோ, அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக ஒரு தகவல் பரவியது. வேறு ஒரு நிறுவனம் தயாரிப்பு பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் பேசப்பட்டது. இந்த தகவலில் உண்மை இல்லை. வெறும் வதந்தி என்றும், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
    சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் 2-ம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த இந்த படம், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

    இந்த நிலையில், சந்தோஷ் பி ஜெயக்குமார் மீண்டும் ஒரு அடல்ட் காமெடி ஹாரர் படத்தை இயக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. அது, இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் 2 ஆம் பாகம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதே நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடிக்க மாட்டார்கள் என்றும், மாறாக புதுமுக நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    இருட்டு அறையில் முரட்டு குத்து

    இப்படம் வரும் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளதாகவும், இதில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளி பின் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    மக்கள் ரசனை மாறிவிட்டது, ஆகையால் நானும் வேறுமாதிரி படம் எடுக்க வந்துவிட்டேன் என இயக்குனர் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநராக வலம் வருபவர் தங்கர்பச்சான். குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் மீண்டும் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்‘ என்ற படத்தின் மூலம் இயக்குநராகத் திரும்பியுள்ளார். இதில் தனது மகன் விஜித் பச்சானையும் நாயகனாக அறிமுகப்படுத்துகிறார். இந்தப் படத்தில் முனீஸ்காந்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகிகளாக மிலனா நாகராஜ், அஸ்வினி இருவரும் நடித்துள்ளனர். மன்சூர் அலிகான், ஸ்டண்ட் சில்வா, யோகி ராம் மூவரும் வில்லனாக நடித்துள்ளனர். 

    இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளது படக்குழு.தன் மகனை நாயகனாக அறிமுகப்படுத்துவது ஏன் என்று தங்கர்பச்சான் கூறியிருப்பதாவது: ‘’என் மகன் நாயகனாவார் என நினைக்கவில்லை. திடீரென்று நான் நடிக்கப் போகிறேன் என்றான். உடனே ‘நடிப்புக்கான பயிற்சிகளை எடுத்துட்டு வா’ என்று சொன்னேன். பைட், டான்ஸ், நடிப்பு என அனைத்தையும் கற்றுக்கொண்டான். அவனுக்காக எழுதிய கதை இது. முழுக்க காமெடியாக இருக்கிறதே என்று முதலில் தயங்கினான். ஹீரோவாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். காமெடி கேரக்டரில் நடிப்பதுதான் திறமை என்று நடிக்க வைத்தேன். வாழப் பணமில்லாமல் தவிக்கும் ஓர் ஏழைக்கும், பணமிருந்தும் வாழ முடியாமல் தவிக்கும் ஒரு பணக்காரனுக்கும் இடையில் நடப்பதுதான் கதை. 

    தங்கர் பச்சான்

    இருவருக்கும் பணம் எதை கற்றுத் தருகிறது என்பதுதான் திரைக்கதை. இதில் ஏழையாக என் மகனும், பணக்காரராக முனீஸ்காந்தும் நடித்துள்ளனர். இந்தப் படம் வழக்கமான என் படம் மாதிரியே இருக்காது. என் படங்களில் போலீஸ் வந்ததில்லை. இந்தப் படத்தில் போலீஸ், கொலை, போதைப் பொருட்கள், கடத்தல், துரத்தல் என அனைத்துமே இருக்கும். இப்போது எல்லாம் கதையே இல்லாமல் படங்கள் வருகின்றன. மக்கள் ரசனையும் மாறியுள்ளது. ஆகையால், நானும் வேறுமாதிரி படம் எடுக்க வந்துவிட்டேன். அதைக் காட்டவே ‘டக்கு முக்கு டிக்கு தாளம்‘ எனப் பெயரிட்டுள்ளேன்’’. இவ்வாறு தங்கர்பச்சான் கூறியுள்ளார்.
    சிவா இயக்கத்தில் ரஜினி அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    தர்பார் படத்தை அடுத்து ரஜினிகாந்தின் 168-வது படத்தை சிவா இயக்குகிறார். விஸ்வாசம் படத்தை அடுத்து நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்க இருந்த சிவா, தற்போது ரஜினியின் 168-வது படத்தை இயக்க உள்ளார்.இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் படத்தில் ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ்

    இதில் நடிகை ஜோதிகா ஏற்கெனவே சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்துடன் நடித்திருந்தார். அதேவேளை நடிகை கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிகாந்துடன் நடிக்கும் முதல் படம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினிகாந்த் சென்னை திரும்பியதும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. 
    சாய் இயக்கத்தில் சீனு மோகன், தாரா பழனிவேல், ஸ்ரீவத்சன் நடிப்பில் உருவாகியுள்ள இபிகோ 306 படத்தின் முன்னோட்டம்.
    சாய் என்ற இளைஞர் இயக்கியுள்ள படம் இபிகோ 306. இந்திய தண்டனை சட்ட பிரிவில் இது தற்கொலைக்கு தூண்டுதல் குற்றத்தை குறிக்கும். படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியதுடன் முக்கிய எதிர்மறை வேடத்திலும் நடித்துள்ளார் சாய். சீனு மோகன், தாரா பழனிவேல், ஸ்ரீவத்சன், கணேஷ், ரிஷி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை சாய் பிக்சர்ஸ் சார்பில் பி.சிவகுமார் தயாரித்துள்ளார். சூர்ய பிரசாத் இசையமைக்க ஜோ.சுரேஷ், செல்லப்பா இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். 

    இபிகோ 306

    படம் பற்றி இயக்குனர் கூறியதாவது:- ’சிறுவயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம். மருத்துவ சீட் கிடைத்ததால் படித்தேன். கடந்த பிப்ரவரியில் எம்பிபிஎஸ் முடித்தேன். பள்ளி, கல்லூரியில் இயக்கிய குறும்படங்கள் கொடுத்த அனுபவத்தால் இயக்கி உள்ளேன். கல்வியில் நிலவும் வியாபாரம் மற்றும் அரசியல் பற்றி பேசும் படம் இது. ஒரு கிராமத்து ஏழை மாணவியின் படிப்பு கனவுக்கு நீட் நுழைவுத்தேர்வு எப்படி தடையாக இருக்கிறது என்பதையும் நீட்டுக்கு பின்னணியில் இருக்கும் வியாபார தந்திரங்களையும் சொல்லும் கதை. நீட் தேர்வுக்கு பின்னணியில் இருக்கும் அரசியலை பேசும். 21 நாட்களில் படத்தை முடித்துவிட்டோம்’ என கூறினார்.

    வைசாக் இயக்கத்தில் மம்முட்டி, ஜெய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ,மதுரராஜா, படத்தின் விமர்சனம்.
    கேரளாவில் தனித்தீவு போல உள்ள ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து தனி ராஜாங்கம் நடத்துகிறார் ஜெகபதி பாபு. அவரது ஆட்கள் அங்குள்ள பள்ளி அருகில் மதுபானக்கடை நடத்தி குழந்தைகளுக்கு தொல்லை தருகிறார்கள். இதை விசாரிக்க பள்ளி நிர்வாகம், மம்முட்டியின் தந்தையான நெடுமுடி வேணுவை அனுப்பி வைக்கிறது. ஆனால் அவரை அந்த கும்பல் மிரட்டி பொய்யான அறிக்கை கொடுக்க வற்புறுத்துகிறார்கள்.

     இந்த நேரத்தில் மம்முட்டியின் வளர்ப்பு தம்பியான ஜெய் அந்த ஊருக்கு வந்து அவர்களை தட்டிக்கேட்கிறார். அவர்மீது பொய்வழக்கு போட்டு ஜெயிலில் அடைக்கிறார்கள். இந்த சூழலில் மதுர ராஜாவான மம்முட்டி, தனது ஆட்களுடன் அந்தத் தீவுக்கு வந்து கோதாவில் இறங்குகிறார். இதையடுத்து மம்முட்டி ஜெய்யை மீட்டாரா? ஜெகபதி பாபுவின் பிடியிலிருந்த தீவை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

    மதுரராஜா விமர்சனம்

    பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிபெற்ற சூப்பர் ஹிட் படமான 'போக்கிரி ராஜா'வின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ளது இந்த 'மதுர ராஜா'. இரண்டு படங்களுக்கும் பத்து ஆண்டு இடைவேளை இருந்தாலும் மம்முட்டி தோற்றத்தில் எந்தவித மாறுதலும் இல்லாமல் அப்படியே இருப்பது மிகப்பெரிய ஆச்சரியம் தரும். தனி ஒரு ஆளாக சண்டைக்காட்சிகளில் அதிரவைக்கிறார் மம்முட்டி. வழக்கம் போல தப்பும் தவறுமாக அவர் பேசும் ஆங்கிலம் மொத்தப்படத்திற்கும் நகைச்சுவையுடன் நகர்த்துகிறது. 

    மதுரராஜா விமர்சனம்

    படத்தின் மற்றொரு கதாநாயகன் ஜெய். சண்டைக்காட்சி, சன்னி லியோனுடன் ஐட்டம் டான்ஸ் என அறிமுக படத்திலேயே அவருக்கான எந்த முக்கியத்துவமும் குறையாமல் சகலமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறப்பாக செய்திருக்கிறார். வில்லனாக வலம் வரும் ஜெகபதி பாபு இந்த படத்திலும் வழக்கம் போல தனது பங்களிப்பை கொடுத்திருக்கிறார். மஹிமா நம்பியார், பூர்ணா, அனுஸ்ரீ ரேஷ்மா ராஜன் என ஒன்றுக்கு நான்கு கதாநாயகிகள் அழகு பதுமையாக வந்து கவர்கிறார்கள். 

    ஆர்.கே.சுரேஷ் வில்லத்தனத்தில் வழக்கம் போல ஸ்கோர் செய்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் பரிதாபம் அள்ளிக் கொள்கிறார் நரேன். இசையமைப்பாளர் கோபிசுந்தர் தன் இசையால் மாஸ் காட்ட முயற்சித்திருக்கிறார். ஒரே ஒரு தனித்தீவில் மொத்த படத்தையும் அழகியலோடு படமாக்கி முடித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார். 

    மதுரராஜா விமர்சனம்

    இடைவேளை வரை படம் போவதே தெரியாமல் கதையை நகர்த்தியிருக்கும் இயக்குனர் வைசாக் இடைவேளைக்கு பிறகு தேர்தல், போட்டி என படத்தின் சுவாரஸ்யத்தை வெகுவாக குறைத்திருக்கிறார். முதல் பாகமான போக்கிரி ராஜா படத்துடன் ஒப்பிடும்போதும், மதுர ராஜா சற்று தொய்வையே ஏற்படுத்தியிருக்கிறார்.

    மொத்தத்தில் ’மதுர ராஜா’ வேகம் குறைவு.
    ராஜாவுக்கு செக் படத்தில் சேரன் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளதாக படத்தின் இயக்குனர் சாய் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
    சேரன், சிருஷ்டி டாங்கே, சரயூ மோகன், நந்தனா வர்மா, இர்பான் நடித்துள்ள படம் ராஜாவுக்கு செக். மழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: இதில் சேரன் சி.பி.சி.ஐ.டி அதிகாரி. அவர் மகளுக்கு ஒரு பிரச்சினை. அந்த பிரச்னையிலிருந்து அவர் மகளை எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை. 

    இதன் இன்னொரு பகுதி அந்த பிரச்னை பற்றி ஒவ்வொரு பெண் குழந்தையை பெற்ற பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டியது. ஒரு பெண் குழந்தை பாதுகாப்பில் தகப்பனின் பங்கு என்ன என்பது மற்றொரு பகுதி. இவை தவிர மூன்றாவது பகுதி ஒன்று உள்ளது. அது சேரனின் கேரக்டர். சேரன் ‘க்ளைன் லிவின் சிண்ட்ரோ’ என்ற நோயால் பாதிக்கப்பட்டவர். எந்த நேரத்திலும் அவர் தீடீரென தூங்கிவிடுவார். 

    சேரன்

    இந்த தூக்கம் பல மணி நேரம், பல நாள், பல வாரங்கள் கூட நீடிக்கும். இந்த பிரச்னை உலகில் ஆயிரத்திற்கும் குறைவானவர்களுக்குத் தான் இருக்கிறது. ஒரு பெண் 8 மாதங்கள் தொடர்ந்து தூங்கியது உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குறைபாடுள்ள கேரக்டர் உலகில் எந்த சினிமாவிலும் வந்ததில்லை. முதன் முதலாக தமிழ் படத்தில் கொண்டு வந்திருக்கிறோம். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் டாக்டர் பட்டம் பெற உள்ள நிலையில் அவருக்கு ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகை சோபனா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இன்று நடைபெறும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்த பட்டம் வழங்கப்படுகிறது.

    இவர்களுடன் இணைந்து டாக்டர் பட்டம் பெறுவதில் மிகுந்த கௌரவம் என்று இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரகுமான்

    ஆஸ்கார் விருது வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஐந்து பல்கலைக்கழகங்கள் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டங்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று உருவாகியுள்ளது, இதனை மருத்துவர் ஒருவர் இயக்கியுள்ளார்.
    சாய் என்ற இளைஞர் இயக்கியுள்ள படம் இபிகோ 306. இந்திய தண்டனை சட்ட பிரிவில் இது தற்கொலைக்கு தூண்டுதல் குற்றத்தை குறிக்கும். படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியதுடன் முக்கிய எதிர்மறை வேடத்திலும் நடித்துள்ள சாய் படம் பற்றி கூறியதாவது:- சிறுவயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம். 

    மருத்துவ சீட் கிடைத்ததால் படித்தேன். கடந்த பிப்ரவரியில் எம்பிபிஎஸ் முடித்தேன். பள்ளி, கல்லூரியில் இயக்கிய குறும்படங்கள் கொடுத்த அனுபவத்தால் இயக்கி உள்ளேன். கல்வியில் நிலவும் வியாபாரம் மற்றும் அரசியல் பற்றி பேசும் படம் இது. ஒரு கிராமத்து ஏழை மாணவியின் படிப்பு கனவுக்கு நீட் நுழைவுத்தேர்வு எப்படி தடையாக இருக்கிறது என்பதையும் நீட்டுக்கு பின்னணியில் இருக்கும் வியாபார தந்திரங்களையும் சொல்லும் கதை. 

    சாய்

    நீட் தேர்வுக்கு பின்னணியில் இருக்கும் அரசியலை பேசும்.  சீனு மோகன், தாரா பழனிவேல், ஸ்ரீவத்சன், கணேஷ், ரிஷி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை சாய் பிக்சர்ஸ் சார்பில் பி.சிவகுமார் தயாரித்துள்ளார். சூர்ய பிரசாத் இசையமைக்க ஜோ.சுரேஷ், செல்லப்பா இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். 21 நாட்களில் படத்தை முடித்துவிட்டோம். 
    ×