என் மலர்
சினிமா செய்திகள்
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று உருவாகியுள்ளது, இதனை மருத்துவர் ஒருவர் இயக்கியுள்ளார்.
சாய் என்ற இளைஞர் இயக்கியுள்ள படம் இபிகோ 306. இந்திய தண்டனை சட்ட பிரிவில் இது தற்கொலைக்கு தூண்டுதல் குற்றத்தை குறிக்கும். படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியதுடன் முக்கிய எதிர்மறை வேடத்திலும் நடித்துள்ள சாய் படம் பற்றி கூறியதாவது:- சிறுவயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம்.
மருத்துவ சீட் கிடைத்ததால் படித்தேன். கடந்த பிப்ரவரியில் எம்பிபிஎஸ் முடித்தேன். பள்ளி, கல்லூரியில் இயக்கிய குறும்படங்கள் கொடுத்த அனுபவத்தால் இயக்கி உள்ளேன். கல்வியில் நிலவும் வியாபாரம் மற்றும் அரசியல் பற்றி பேசும் படம் இது. ஒரு கிராமத்து ஏழை மாணவியின் படிப்பு கனவுக்கு நீட் நுழைவுத்தேர்வு எப்படி தடையாக இருக்கிறது என்பதையும் நீட்டுக்கு பின்னணியில் இருக்கும் வியாபார தந்திரங்களையும் சொல்லும் கதை.

நீட் தேர்வுக்கு பின்னணியில் இருக்கும் அரசியலை பேசும். சீனு மோகன், தாரா பழனிவேல், ஸ்ரீவத்சன், கணேஷ், ரிஷி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை சாய் பிக்சர்ஸ் சார்பில் பி.சிவகுமார் தயாரித்துள்ளார். சூர்ய பிரசாத் இசையமைக்க ஜோ.சுரேஷ், செல்லப்பா இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். 21 நாட்களில் படத்தை முடித்துவிட்டோம்.
எம்.பத்மாநாபன் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் மாமாங்கம் படத்தின் முன்னோட்டம்.
போர் வீரனின் கதையை பிரமாண்டமாக சொல்லும் மம்முட்டியின் “மாமாங்கம்” படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. மலையாளத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழ் பதிப்பில் தனது கேரக்டருக்கு குரல் கொடுத்துள்ளார் நடிகர் மம்முட்டி.
மலையாள மம்மூட்டியுடன் இப்படத்தில் மலையாள உச்ச நட்சத்திரங்களான உன்னிமுகுந்தன், சித்திக், மணிக்குட்டன், மணிகண்டன் ஆச்சாரி, தருண் அரோரா, பிரச்சி தெஹ்லான், கனிகா, அனு சித்தாரா, இனியா ஆகியோருடன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
எம்.பத்மாநாபன் இயக்கியிருக்கும் இப்படத்தினை காவ்யா பிலிம் கம்பெணி சார்பில் வேணு குணப்பிள்ளி தயாரித்துள்ளார். மலையாள வசனம், மற்றும் தழுவல் திரைக்கதை - ஷங்கர் ராமகிருஷ்ணன். தமிழ் வசனம் - இயக்குநர் ராம், ஒளிப்பதிவு - மனோஜ் பிள்ளை, சண்டைப்பயிற்சி - ஷாம் கௌஷல், விஷுவல் எபெஃக்ட்ஸ் - ஆர்.சி.கமலக்கண்ணண், எடிட்டர் - ராஜா முகம்மது, இசை - எம்.ஜெயச்சந்திரன், பின்னணி இசை - சஞ்சித் பலாரா, அங்கித் பலாரா, ஒலியமைப்பு - பி.எம்.சதீஷ், மனோஜ், எம்.கோஸ்வாமி.
தமிழில் அச்சம் என்பது மடமையடா படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை மஞ்சிமா மோகன், விபத்தில் சிக்கி தற்போது ஓய்வு பெற்று வருகிறார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இவர் சில நாட்களாக தன்னுடைய சமூக வலைத்தளங்களில் எந்த பதிவிடாமல் இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு விபத்து ஏற்பட்டு சிகிச்சை நடைபெற்று ஒய்வில் இருப்பதாக மஞ்சிமா மோகன், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன் ஓர் விபத்து நடந்ததாகவும், காலில் ஏற்பட்ட காயத்தால் சிகிச்சை பெற்று, ஒரு மாதத்திற்கு ஓய்வில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று மஞ்சிமா மோகன் கூறியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
தென்னிந்திய திரையுலகத்தில் நீண்டகாலமாக கதாநாயகியாக நடித்து வரும் திரிஷா, ஒரே சமயத்தில் 3 மொழி படங்களில் நடிக்க இருக்கிறார்.
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 17 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். கடந்த வருடம் வெளிவந்த ‘96’ படத்திற்கு பிறகு திரிஷா மீண்டும் முன்னணிக்கு வந்தார். அவர் தமிழில் நாயகியாக நடித்துள்ள நான்கு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
இந்நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி அடுத்து நடிக்கும் படத்திலும், மலையாளத்தில் மோகன்லால் அடுத்து நடிக்க உள்ள படத்திலும் திரிஷா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

மேலும், மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் திரிஷா நடிக்க உள்ளார் என்கிறார்கள். ஒரே சமயத்தில் மூனறு மொழிகளில் பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு திரிஷாவுக்குக் கிடைத்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால், தற்போது உருவாகி இருக்கும் பேய் படத்தில் வில்லியாக நடித்திருக்கிறார்.
ராய் லட்சுமி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'சிண்ட்ரெல்லா'. திகில் ஹாரர் பேய்ப் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இவர் எஸ்.ஜே.சூர்யாவிடம் பணிபுரிந்து சினிமா கற்றவர்.
படம் பற்றி இயக்குநர் வினோ வெங்கடேஷ் கூறும்போது, "இது ஒரு பேய்ப் படம் தான். ஆனால் பேய்ப் படங்களுக்கு இங்கே போடப்பட்டுள்ள ஹைதர் காலத்து பார்முலாவில் இருந்து விலகி அனைத்து அம்சங்களும் கலந்து ஒரு விறுவிறுப்பான படமாக உருவாகி இருக்கிறது. ராய் லட்சுமி இப்படத்தில் ஏற்றுள்ள வேடம் அவருக்கு உள்ள இமேஜை உடைக்கும் படி இருக்கும்.
அவருக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். அவரை ஒரு கவர்ச்சிப் பதுமையாகப் பார்த்த ரசிகர்களுக்கு இப்படப் பாத்திரம் எதிர்பாராத தோற்ற மாற்றம் தரும். நடிப்பிலும் அவருக்கு உரிய இடத்தை பெற்றுத் தரும் படமாக 'சிண்ட்ரெல்லா' இருக்கும்.

சாக்ஷி அகர்வால் ஒரு எதிர்பாராத எதிர் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் ஏற்றுள்ள வில்லி பாத்திரம் திரையில் தீப்பிடிக்க வைக்கும்படியான பரபரப்புடன் இருக்கும்’ என்றார்.
இதன் டீசரை இந்திய அளவில் புகழ்பெற்ற வரும் பரபரப்புக்குப் பெயர் பெற்றவருமான இயக்குநர் ராம்கோபால் வர்மாவும் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவும் வெளியிட்டார்கள்.
இறுதிச்சுற்று படத்தில் பாக்சிங் வீராங்கனையாக நடித்த ரித்திகா சிங், தற்போது பாகிசிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் அதே வேடம் என்பதால் கனகச்சிதமாக பொருந்தினார்.
இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். தமிழில் அவர் ஓ மை கடவுளே எனும் படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து நடித்து வருகிறார்.

அருண் விஜய்யின் பாக்சர் படத்திலும், வணங்காமுடி எனும் படத்தில் அவர் நடிக்கிறார். இந்நிலையில ரித்திகா மீண்டும் கிக் பாக்சிங்கில் அதிக கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். இதை பார்த்த அவரது ரசிகர்கள், ரித்திகா சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு மீண்டும் பாக்சிங் செய்ய போறீங்களா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
‘கைதி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நரேன், இந்த படம் கமர்ஷியல் தான். ஆனா வித்தியாசமா புதுசா இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
கார்த்தி நடிப்பில் தீபாவாளிக்கு வெளியாகும் படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தில் நரேன், கார்த்தியுடன் இணைந்து ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
கைதி படம் குறித்து நரேன் கூறும்போது, ‘இந்த படத்தில் நான் போலீஸ். ஸ்பெஷல் ஸ்டாஸ்க் போர்ஸ். கார்த்தியும் நானும் நெருக்கமான நண்பர்கள். இயக்குநர் இந்தக் கேரக்டருக்கு என் பேர சொன்னவுடனே, கார்த்தி நான் போன் பண்றேன்னு சொல்லி கூப்பிட்டிருக்கார். அஞ்சாதே படத்துக்கப்புறம் நிறைய போலீஸ் கேரக்டர் அது மாதிரியே இருக்கும்னு நான் பண்ணல. இதுல எப்படினு கேட்டேன். நல்ல கேரக்டர்னு சொன்னார். நீங்க பண்றீங்களானு கேட்டேன் ஆமானு சொன்னார். உடனே நான் ஒத்துக்கிட்டேன்.

டைரக்டர் லோகேஷோட மாநகரம் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சது. லோகேஷ் கைதி கதை சொன்ன பத்து நிமிஷத்துல தெரிந்தது கண்டிப்பா படம் சூப்பரா இருக்கும் என்று. லோகேஷ், கார்த்தி எல்லாரும் டிஸ்கஸ் பண்ணி ஒவ்வொரு ஷாட்டையும் புதுசா முயற்சி பண்ணி எடுத்திருக்காங்க. இப்படிபட்ட டீம்ல இருந்தது சந்தோஷம்.
இந்த தீபாவளி கொண்டாட்டமா இருக்கும். கைதி கமர்ஷியல் படம் தான். ஆனா வித்தியாசமா இருக்கும் புதுசா இருக்கும். பிகில், கைதி ரெண்டும் பாருங்க கண்டிப்பாக பிடிக்கும்’ என்றார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், அடுத்த படத்தில் விளையாட்டு வீராங்கனையாக களமிறங்க இருக்கிறார்.
விளையாட்டை மையமாக வைத்து அதிக படங்கள் தயாராகின்றன. பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை வைத்து வெளியான கனா பெரிய வெற்றி பெற்றது. தற்போது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிகில்’ திரைப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு கதை.
இந்த வரிசையில் கீர்த்தி சுரேசும் புதிய படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடிக்கிறார். இதில் நாயகனாக ஆதி நடிக்கிறார். நாகேஷ் கூகுனூர் இயக்குகிறார். இந்த படத்தின் கதாபாத்திரத்துக்காக கீர்த்தி சுரேஷ் கடும் உடற்பயிற்சிகள் செய்து ஒல்லியாக மாறி இருக்கிறார்.

தற்போது படத்தில் வரும் கீர்த்தி சுரேசின் தோற்றத்தை வெளியிட்டு உள்ளனர். இந்த படம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் மேக்கப் இல்லாமல் இருக்கிறார். படம் முழுவதும் மேக்கப் இல்லாமலேயே நடிப்பதாக கூறப்படுகிறது.
ஷாம், ஆத்மியா, ஸ்ரீதேவி குமார் ஆகியோர் நடிப்பில் பார்த்த சாரதி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘காவியன்’ படத்தின் விமர்சனம்.
தமிழ்நாட்டில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் நாயகன் ஷாமை, அமெரிக்காவில் பயிற்சி பெற அனுப்பப்படுகிறார். இவருடன் ஸ்ரீநாத்தும் பயணிக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள், ஷாம் மற்றும் ஸ்ரீநாத்துக்கும் பயிற்சி அளிக்கிறார். நம்ம ஊர் போலீஸ் அவசர உதவி எண் 100 போல், அங்கு 911 என்ற நம்பர் செயல்பட்டு வருகிறது.
இந்த கால் சென்டரில் வேலை பார்த்து வருகிறார் நாயகி ஸ்ரீதேவி குமார். இந்நிலையில், மர்ம நபரால் பாதிக்கப்படுவதாக ஒரு பெண் 911க்கு போன் செய்கிறார். இதை கேட்கும் ஸ்ரீதேவி, அவருக்கு உதவ நினைக்கிறார். ஆனால், முடியாமல் அந்த பெண் மர்ம நபரால் கடத்தப்பட்டு இறந்து போகிறார். இதனால் வருத்தப்பட்டு வேலையை விட்டு செல்கிறார் ஸ்ரீதேவி குமார்.

இதையறியும் ஷாம், ஸ்ரீதேவியை சமாதானம் செய்து மீண்டும் வேலையில் சேர வைக்கிறார். சில தினங்களில் மற்றொரு நாயகியாக இருக்கும் ஆத்மியா, அதே மர்ம நபரால் பாதிக்கப்படுகிறார். அதே போல் ஸ்ரீதேவிக்கு போன் வர, ஷாம் அதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.
இறுதியில் ஆத்மியாவை ஷாம் காப்பாற்றினாரா? பெண்களை கடத்தும் அந்த மர்ம நபர் யார்? எதற்காக அவர் அப்படி செய்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஷாம், புறம்போக்கு, தில்லாலங்கடி ஆகிய படங்களை தொடந்து போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். வழக்கமான ஷாமை மட்டுமே பார்க்க முடிகிறது. ரொம்ப கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக வலம் வருகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
இலங்கை பெண்ணாக நடித்திருக்கும் ஆத்மியாவை காரிலேயே அதிக நேரம் கட்டி வைத்திருக்கிறார்கள். வில்லனிடம் மாட்டிக் கொண்டு கஷ்டப்படும் காட்சிகளில் பரிதாபம் பட வைக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் ஸ்ரீதேவி குமார், திரையில் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஷாமுடன் பயணிக்கும் ஸ்ரீநாத்தின் காமெடி பெரியதாக எடுபடவில்லை. அதற்கான வாய்ப்பும் சரியாக அவருக்கு கொடுக்க பட வில்லை.

நல்ல கிரைம் கதையை, முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் பார்த்தசாரதி. ஆனால், நீண்ட நேரம் கதை செல்வதுபோல் அமைத்திருக்கிறார். அதுபோல் சுவாரஸ்யம் இல்லாமல் திரைக்கதை செல்கிறது. இதில் கவனம் செலுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஷ்யாம் மோகனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பு.
மொத்தத்தில் ‘காவியன்’ சாதாரணமானவன்.
நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் 60 ஆண்டுகள் கடந்த நிலையில், மறைந்த சிவாஜிகணேசன் அன்னை இல்லத்தில் அவருக்கு சிறப்பு விருந்து கொடுக்கப்பட்டது.
1960ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் தனது 60 ஆண்டு கால பயணத்தை நிறைவு செய்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள சிவாஜிகணேசன் இல்லத்திற்கு கமல்ஹாசன் சென்றுள்ளார். அங்கு நடிகர் பிரபு சார்பில் கமல்ஹாசனுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதன்பின்னர் குடும்பத்தாருடன் கமல் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்து. வழக்கம் போல் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது. தம்பி பிரபு வாசித்து அளித்த பாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது. மனது புன்னகைத்தது. pic.twitter.com/cKo8B6HXah
— Kamal Haasan (@ikamalhaasan) October 18, 2019
இந்த புகைப்படங்களை கமல் வெளியிட்டு, அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்தும், வழக்கம் போல் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது. பிரபு வாசித்து அளித்த மடலின் வாசகங்கள் கண்கலங்க வைத்தது. மனது புன்னகைத்தது. என்று ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சௌந்தரராஜா, மழையை வரவேற்போம், மழை நீரை சேமிப்போம் என்று கூறியிருக்கிறார்.
கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என தன் திறமையால் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்து வருபவர் சௌந்தரராஜா. இவர் தற்போது விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பிகில்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமூக சேவையிலும் அதிக ஆர்வமுள்ள இவர் அடிக்கடி மரம் நடுதல், கண்மாயை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை செய்து வருகிறார். தற்போது லண்டனில் இருக்கும் அவர், தமிழ் நாட்டில் பெய்து வரும் மழை நீரை சேமிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘சந்தோசமா மழையை வரவேற்போம், மழை நீரை சேமிப்போம். மழை நீர் தேங்குறனாலதான் டெங்கு கொசு உருவாகுது. வீடுகள், தெருக்கல மழை நீர் தேங்காமல் சுத்தமாக வைப்போம். டெங்கு வராமல் உயிர் காப்போம். வரும் முன் காப்பதே சிறந்தது’ என்று கூறியுள்ளார்.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ’ஹீரோ’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ஹீரோ’. இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேனுடன் இணைந்து அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கல்யாணி பிரியதர்ஷன், இவானா நாயகிகளாக நடிக்க, ரோபோ சங்கர், பிரேம் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார். கே.ஜி.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் இந்த படத்தை தயாரிக்கின்றார்.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.






