என் மலர்
சினிமா செய்திகள்
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து, அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு ‘வலிமை’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
’நேர்கொண்ட பார்வை' படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மீண்டும் அஜித் - எச்.வினோத் கூட்டணி இணைந்து படம் பண்ணுவதை தயாரிப்பாளர் போனி கபூர் உறுதி படுத்தினார்.
அதனை தொடர்ந்து நடிகர்கள் தேர்வு மும்முரமாகத் தொடங்கப்பட்டது. முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இப்படத்தின் படப்பூஜை இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றுள்ளது.

மேலும் இந்த புதிய படத்திற்கு ‘வலிமை’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.
காற்றின்மொழி, லட்சுமி உள்ளிட்ட படங்களில் பாடல்களை பாடிய ஸ்வாகதா, தற்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.
காற்றின்மொழி படத்தில் 'டர்ட்டி பொண்டாட்டி', லட்சுமி படத்தில் 'ஆலா ஆலா' உள்ளிட்ட நிறைய பாடல்களை பாடி இருப்பவர் பாடகி ஸ்வாகதா.
இவர் தற்போது ஒரு பாடலுக்கு இசை அமைத்து, பாடி அந்தப்பாடலை வீடியோவாகவும் வெளியிட்டிருக்கிறார். வீடியோவில் அவரே தலைமை நாயகியாக நடிக்கவும் செய்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் அவரே, இசை, குரல், நடிப்பு என முழுப்பொறுப்பையும் ஏற்று அடியாத்தே என்ற இசை ஆல்பத்தை யூடியூபில் வெளியிட்டிருக்கிறார்.

ஸ்வாகதா இசையமைத்து, நடித்த அடியாத்தே பாடலை கெளதம் மேனன், யுவன் ஷங்கர் ராஜா, ரா.பார்த்திபன், விக்னேஷ் சிவன், இயக்குனர் திரு, நடிகர் அசோக் செல்வன், பாடகி சின்மயி, ஹரீஷ் கல்யாண் உள்ளிட்ட பல பிரபலங்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மான்ஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ராதா மோகன் இயக்கும் புதிய படத்திற்கு பொம்மை என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ‘மான்ஸ்டர்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை அடுத்து இயக்குநர் ராதாமோகன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் சாந்தினி நடிக்கிறார்கள்.
முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு ‘பொம்மை’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படம் 2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
மலையாளத்தில் மிகவும் பிரபலமாகி, தமிழில் அசுரன் படம் மூலம் அறிமுகமான மஞ்சுவாரியர், 96 பட வாய்ப்பை நழுவவிட்டதாக கூறியிருக்கிறார்.
மலையாள நடிகையான மஞ்சு வாரியர், தமிழில் அசுரன் படம் மூலம் அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறும்போது, 'இந்த வேடத்தை நான் ஏற்க தனுஷ்தான் காரணம். அவர்தான் என்னை இந்த படத்தில் நடிக்க சிபாரிசு செய்தார்.
அதே சமயம் இந்த படத்துக்கு முன்பாகவே தமிழில் 96 படத்தில் நான் நடிக்க வேண்டியது. அதில் திரிஷா வேடத்தில் முதலில் என்னிடம்தான் நடிக்க கேட்டிருக்கிறார்கள். ஆனால் இயக்குனர் பிரேம்குமாரால் என்னை தொடர்புகொள்ள முடியவில்லை என்றார். இந்த தகவல் எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

என்னிடம் நேரடியாக கேட்டிருந்தால் 96 படத்தில் நடித்திருப்பேன். ஆனாலும் திரிஷா இந்த வேடத்தில் நன்றாக நடித்திருந்தார். அவரை தவிர வேறு யாராலும் இந்த வேடத்தில் நியாயம் செய்திருக்க முடியுமா என தெரியவில்லை' என்றார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி தன்னுடைய காதலர் இஷானுக்கு பிரியாணி செய்து விருந்து கொடுத்திருக்கிறார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி தன் அம்மாவின் ஆசைப்படி சினிமாவுக்கு வந்துவிட்டார். தடக் படத்தில் நடிகையாக அறிமுகமான இவர் அடிக்கடி பொது இடங்களுக்கு வந்து ரசிகர்களின் கண்ணில் பட்டுவிடுகிறார்.
அவர் பிரபல நடிகர் ஷாகித் கபூரின் தம்பி நடிகர் இஷான் கட்டாரை காதலித்து வருவதாக வதந்தி பரவியது. இந்நிலையில் ஜான்வி ஷாகித் கபூர், அவரின் மனைவி மீரா ராஜ்புட் மற்றும் இஷானை அழைத்து அவர்களுக்கு சிவப்பு அரிசியில் பிரியாணி செய்து கொடுத்து விருந்து வைத்திருக்கிறாராம்.

இந்த பிரியாணியை புகைப்படமாக வெளியிட்ட மீரா வாழ்த்து தெரிவித்துள்ளார். இஷான் ஜான்வியுடன் தடக் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மஞ்சு மனோஜ், குழந்தை இல்லாத விரக்தியில் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான மோகன்பாபுவின் மகன் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். பிரணதி ரெட்டி என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த அவர் பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
மிகவும் சந்தோசமாக நடைபெற்ற இவர்களது திருமணம் தற்போது பிரிவில் முடிய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மஞ்சு மனோஜ் சமீப காலமாகவே மனைவி பிரணதியை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர்களது பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மனைவி பிரணதியை விவாகரத்து செய்யப்போவதாக மஞ்சு மனோஜ் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்த தகவலை அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் தன்னுடைய திருமண பந்தத்தில் ஏற்பட்ட முடிவை பற்றியும் அதனால் அவருக்கு ஏற்பட்ட மனக் கஷ்டத்தை பற்றியும் உருக்கமாக கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தன்னை இதுநாள் வரை ஆதரித்து வந்த ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். திருமணமாகி 4 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இது தான் விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
மீடூவில் புகார் கூறிய பெண்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது இல்லை என நடிகை தமன்னா வருத்தம் தெரிவித்துள்ளார்.
பெண்கள் தங்கள் துறைகளில் பாலியல் அத்துமீறலுக்கு ஆளானதை மீடூ என்ற இயக்கம் மூலம் சமூக வலைதளங்களில் கூற தொடங்கினார்கள். ஹாலிவுட்டில் பிரபலமான இந்த மீடூ இயக்கம் இந்தியாவிலும் தொடர்ந்தது. இதில் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டது. கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய புகார் பெரும் சர்ச்சையானது. அதனை தொடர்ந்து இயக்குனர் சுசி கணேசன், நடிகர் அர்ஜுன் ஆகியோர் மீது மீடூ புகார்கள் வந்தன.
நடிகை தமன்னா, ‘மீடூ’ புகார்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- என் இயல்பின் காரணமாக வேலை செய்யும் இடத்தில் பாலியல் துன்புறுத்தலை நான் இதுவரை எதிர்கொண்டதில்லை. நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியும். அப்படி ஒரு அனுபவம் இல்லாமல் போனது எனது அதிர்ஷ்டமாகவும் இருக்கலாம். ஆனால் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்ட பெண்கள் துணிச்சலாகப் பேசியது நல்லது.

ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போவது வருத்தமானது. ஒரு விஷயம் உங்களைப் பாதிக்கிறது என்று நீங்கள் நினைத்தால், எதிர்த்துப் போராட வேண்டும். நான் உட்கார்ந்து வருத்தப்படுபவள் அல்ல. நான் இவ்வளவு நாட்கள் தாக்குப்பிடிக்கக் காரணம், என்னால் நான் நினைத்தபடி விஷயங்களைச் செய்ய முடிந்ததுதான். பல வலிமையான, சுயமாகத் துணிந்து நிற்கும் பெண்கள் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ் இயக்கத்தில் சனம் ஷெட்டி, லட்சுமி பிரியா நடிப்பில் உருவாகி வரும் ’எதிர் வினையாற்று’ படத்தின் முன்னோட்டம்.
சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் ‘எதிர் வினையாற்று’. இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். படத்தின் நாயகனாக அலெக்ஸ் அறிமுகமாகிறார்.
அவரே தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக சனம் ஷெட்டி நடித்துள்ளார். இரண்டாம் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடிக்கிறார். மேலும் ஆர்.கே.சுரேஷ், சம்பத்ராம், அனுபமா குமார், மதன், ஸ்டில்ஸ் விஜய், யோகிராம், பிளாக் மணி ஆகியோரும் நடித்துள்ளனர். ஷெரீப் இசையமைக்க மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் போட்டோகிராபர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான். அந்த பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்களும் அவனை பின் தொடர்கின்றன. சாதாரண இளைஞனான அவன் மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான்? என்பதே எதிர் வினையாற்று படத்தின் கதை.
ஐந்து நாள் இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு, நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்ப உள்ளார்.
‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக் கத்தில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. மும்பையில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய ரஜினி, சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு கடந்த 13-ந்தேதி இமயமலைக்கு புறப்பட்டார். பெரும் பாலும் குடும்பத்தினரை தவிர்த்து தனியாகவே செல்ல விரும்பும் ரஜினிகாந்த் இந்த முறை மூத்த மகள் ஐஸ்வர்யா தனுசையும் உடன் அழைத்துச் சென்றார்.
சென்னையில் இருந்து விமானத்தில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்ற அவர், அங்கிருந்து காரில் ரிஷிகேஷ் சென்றார். அங்கு சுவாமி தரிசனம் செய்து, கங்கா ஆரத்தியிலும் கலந்துகொண்டார். சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் தங்கி, சுவாமி களின் சமாதியில் தியானம் செய்தார். தொடர்ந்து ஹெலிகாப்டரில் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் சென்று, தரிசனம் செய்தார்.
ஒவ்வொரு முறை படப்பிடிப்புக்குப் பிறகும் வெளிநாடு அல்லது இமயமலை பயணம் மேற்கொள்வது ரஜினியின் வழக்கம். இந்த முறை ‘தர்பார்’ படப்பிடிப்பு முடிந்த பிறகு, லண்டன் செல்லவே முதலில் திட்டமிட்டிருந்தார். அதற்கான விமான டிக்கெட்டும் பெறப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் லண்டன் பயணத்தை ரத்து செய்துவிட்டு, இமயமலை செல்ல முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆன்மிக சம்பந்தமான சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளும்போது, அரசியல், சினிமா விஷயங்களை கலக்காமல் பார்த்துக் கொள்வார் ரஜினி. இந்த முறையும் அப்படியே அமைந்துள்ளது. உடன் வந்தவர்களிடம்கூட ஆன்மிகம், தியானம் தவிர வேறு எதைப் பற்றியும் ரஜினி பேசவில்லை என்று நண்பர்கள் கூறுகின்றனர்.
நேற்று பாபாஜி ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு தியானம், வழிபாடு மேற்கொண்ட பிறகு, சிறிது நேரம் ஓய்வெடுத்தார். உத்தரகாண்டிலேயே நேற்று இரவு தங்கிய ரஜினி, தனது 5 நாள் இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று சென்னை திரும்புகிறார். விரைவில், ‘தர்பார்’ படத்தின் டப்பிங் வேலைகள் மற்றும் சிவா இயக்க உள்ள புதிய படத்தில் அவர் கவனம் செலுத்த உள்ளார்.
இமயமலையில், ரசிகர்களுடன் அவர் எடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இமயமலையிலுள்ள பாபா ஆசிரமத்தில் உள்ள கடையில், புத்தகம் வாங்கும் வீடியோ வெளியாகி உள்ளது. அவரது ரசிகர்கள் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
அறிமுக இயக்குநர் பிரதீப் கிளிக்கர் இயக்கத்தில் மாஸ்டர் அஹான், சிவா, தேஜஸ்வி நடிப்பில் வெளியாகி இருக்கும் ’பெளவ் பெளவ்’ படத்தின் விமர்சனம்.
சிறுவன் மாஸ்டர் அஹான், இவர் தனது பெற்றோரை விபத்தில் இழந்து விடுகிறான். பின்னர் இவன் தனது தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறான். இவனுக்கு எதிர்வீட்டில் இருக்கும் சிவா, தேஜஸ்வி என்கிற புதுமணத்தம்பதி வசித்து வருகிறார்கள். சிறுவன் அஹான் பெரும்பாலும் இவர்களது வீட்டில் தான் இருப்பான். சிறுவனுக்கு நண்பர்கள் யாரும் கிடையாது. அவன் பள்ளிக்கு செல்லும் வழியில் தெரு நாய் ஒன்று இவரை தினமும் விரட்டுகிறது.
இதனால் கோபமடைந்த சிறுவன், அந்த நாயை பழிவாங்க குட்டி நாய் ஒன்றை வாங்கி வளர்க்கிறான். சிறுவன் நாயை மிகவும் பாசத்துடன் வளர்த்து வருகிறான். ஒருகட்டத்தில் சிறுவர்கள் இருவர் ஆற்றில் அடித்து செல்வதை பார்த்த அந்த நாய், தன் உயிரை பணயம் வைத்து அவர்களை காப்பாற்றிவிடுகிறது. இருப்பினும் எதிர்பாராத விதமாக அந்த நாய் ஆற்றில் அடித்து செல்லப்படுகிறது. இறுதியில் நாய் உயிர் பிழைத்ததா? சிறுவன் நாயை கண்டுபிடித்தானா? என்பதே மீதிக்கதை.

சிறுவன் மாஸ்டர் அஹான், பெரும்பாலான காட்சிகளில் கேமராவை இவர் தனியாகவே சந்தித்திருக்கிறார். இருந்தபோதிலும் பார்ப்பவர்களுக்கு சோர்வை ஏற்படுத்தாதவாறு இவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது. குறிப்பாக, இவர் நாயுடன் பழகும் காட்சிகளை சொல்லலாம்.
சிறுவன் அஹானை தொடர்ந்து அதிக காட்சிகளில் வருவது நாய்கள் தான். அதையும் இயக்குனர் சிறப்பாக கையாண்டுள்ளார். மேலும் புதுமணத் தம்பதிகளாக நடித்துள்ள சிவா, தேஜஸ்வி குறைவான காட்சிகளில் வந்தாலும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் சத்யன், ஷர்மிளா, ஆரோக்யராஜ், நாஞ்சில் வி ராம்பாபு, ஜேன், புலிக்குட்டி ஆகியோரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

இயக்குனர் பிரதீப் கிளிக்கர், நடிகர், நடிகைகளை முன்னிலைப்படுத்தி படங்களை எடுத்து வரும் இயக்குனர்களின் மத்தியில் சிறுவனுக்கும் நாய்க்கும் இடையேயான பாசப் போராட்டத்தை வைத்து திரைக்கதை அமைத்துள்ள விதம் சிறப்பு. காமெடி போன்ற கமர்ஷியல் காட்சிகள் இல்லாதது படத்திற்கு பின்னடைவு. மார்க் டி மியூஸ் மற்றும் டென்னிஸ் வல்லபனின் இசை ஓகே ரகம் தான். அருண் பிரசாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம்.
மொத்தத்தில் ‘பெளவ் பெளவ்’ புதுமையான படைப்பு.
பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் பிரபு இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்க உள்ளது.
கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனைத்து மொழிகளில் இருந்தும் 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகி உள்ளனர். வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர்.
பார்த்திபன், ரகுமான், மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். தற்போது பொன்னியின் செல்வனில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பிரபு, நிழல்கள் ரவி ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். பழுவேட்டரையர் வேடத்துக்கு தேர்வான சத்யராஜ் படத்தில் இருந்து விலகி விட்டார். அந்த கதாபாத்திரத்தில் பிரபு நடிப்பார் என்று தெரிகிறது.

இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் 2 வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. நயன்தாரா, திரிஷா ஆகியோரிடமும் பேசி வருகின்றனர். ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர். தாய்லாந்தில் உள்ள காடுகளை படப்பிடிப்பு தளமாக மணிரத்னம் தேர்வு செய்துள்ளார். அங்கு டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. தேர்வான நடிகர், நடிகைகள் அனைவரும் கதாபாத்திரத்துக்கு தங்களை மாற்ற கடும் பயிற்சிகள் எடுத்து வருகிறார்கள்.
’டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்தில் தனது மகனை ஹீரோவாக நடிக்க வைத்தது ஏன் என்பது குறித்து இயக்குனர் தங்கர்பச்சான் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குனர் தங்கர் பச்சான் தனது மகன் விஜித் பச்சானை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். மகனை கதாநாயகனாக்கியது குறித்து தங்கர் பச்சான் அளித்த பேட்டி வருமாறு:- “எனது மகன் கதாநாயகனாக நடிப்பது தானாகவே அமைந்தது. எனது முதல் படம் மாதிரி இதை இயக்கி இருக்கிறேன். எனது முந்தைய படங்களில் உள்ள பாணி இந்த படத்தில் இருக்காது.
எனது படம் மாதிரியே இருக்காது. எனது படங்களில் போலீஸ் வந்தது இல்லை. ஆனால் இந்த படத்தில் போலீஸ், கொலை, போதைபொருள், கடத்தல், துரத்தல், டப்பாங்குத்து எல்லாம் இருக்கும். இந்த காலகட்டத்தில் கதை இல்லாத படங்களே அதிகம் வருகின்றன. குடும்ப உறவுகள் இல்லை. மக்கள் ரசனையும் மாறுகிறது. எனவே நானும் வேறுமாதிரி படம் எடுக்க வந்து விட்டேன். அதற்காகவே டக்கு முக்கு டிக்கு தாளம் என்று பெயர் வைத்துள்ளேன்.

இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள எனது மகனுடன் மிள்ளனா நாகராஜ், அஷ்வினி சந்திரசேகர், முனிஷ் காந்த் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்டன்ட் செல்வா, மன்சூர் அலிகான், யோகிராமநாதன் ஆகியோர் வில்லன்களாக வருகிறார்கள். முழுக்க சென்னையில் நடக்கும் கதை. விஜித் கீழ் நிலையில் இருக்கிற குப்பத்து ஏழை இளைஞனாக வருகிறார். அவருக்கும் கோடி கோடியாய் சொத்து வைத்து வாழ பிடிக்காத முனிஷ்காந்துக்கும் பணம் எதை கற்றுத்தருகிறது என்பது கதை. ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை படம் விறுவிறுப்பாக இருக்கும்.”
இவ்வாறு தங்கர் பச்சான் கூறினார்.






