என் மலர்
சினிமா

நிவேதா பெத்துராஜ்
மீண்டும் காக்கி சட்டை அணியும் நிவேதா பெத்துராஜ்
திமிரு புடிச்சவன் படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்த நிவேதா பெத்துராஜ், தற்போது மீண்டும் காக்கி சட்டை அணிந்து நடிக்க இருக்கிறார்.
ஒருநாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து ஜெயம் ரவியின் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படங்களில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் இவர் நடித்துள்ள சங்கத்தமிழன் படம் விரைவில் வெளியாக உள்ளது.
நிவேதா தெலுங்கு படங்களில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். டிக் டிக் டிக் படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்திருந்த நிவேதா பெத்துராஜ், திமிரு புடிச்சவன் படத்தில் காக்கிச்சட்டை அணிந்த பெண் போலீசாக நடித்திருந்தார். தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ள நிவேதா பெத்துராஜ், தமிழில் வித்யா நடித்திருந்த போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கை கிஷோர் திருமலா இயக்குகிறார். இந்த படத்தில் சமீபத்தில் 'ஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் மூலம் முன்னணி ஹீரோவாக மாறியுள்ள ராம் பொத்தினேனி நடிக்கிறார். தமிழில் ஹிட்டானது போலவே தெலுங்கிலும் இந்த படம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story






