என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சூரரைப்போற்று, சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்துடன் மோதாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
    ‘காப்பான்’ படத்துக்கு பிறகு சூர்யா நடித்து வரும் சூரரை போற்று பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இந்த படத்தை ‘இறுதி சுற்று’ இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

    சூரரை போற்று படம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அடுத்த மாதம் (டிசம்பர்) 20-ந்தேதி வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென்று தள்ளி வைத்துள்ளனர். பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் செய்ய ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படம் கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகிறது.

    சூரரைப்போற்று

    சூரரைப் போற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்துக்கு பிறகு ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. 
    அரவிந்த சாமி, ஸ்ரேயா நடிப்பில் உருவாகி இருக்கும் நரகாசுரன் திரைப்படம் எப்போது வெளியாகும் என்று கவுதம் மேனனிடம் இயக்குனர் கார்த்திக் நரேன் கேள்வி எழுப்பியுள்ளார்.
    கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் பணப் பிரச்சனை காரணமாக கோர்ட்டு வழக்கு உள்ளிட்ட பிரச்சினைகளால் தாமதமாகி நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த மாதம் திரைக்கு வருகிறது.

    அதுபோல், கவுதம் மேனன் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசுரன் படமும் சில பிரச்சினைகளால் திரைக்கு வராமல் முடங்கி உள்ளது. இதில் அரவிந்த சாமி, ஸ்ரேயா ஆகியோர் நடித்துள்ளனர். நரகாசுரன் படம் முடங்கியதற்காக கவுதம் மேனனை கார்த்திக் நரேன் ஏற்கனவே விமர்சித்து எங்களை குப்பையை போல் பயன்படுத்தினீர்கள் என்று சாடி இருந்தார். 

    கார்த்திக் நரேன் ட்விட்

    இந்த நிலையில் தனுசின் எனை நோக்கி பாயும் தோட்டா படம் திரைக்கு வருவது குறித்து டுவிட்டரில் மகிழ்ச்சி வெளியிட்ட கவுதம் மேனன், “என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமான படம் துருவ நட்சத்திரம். அதில் விக்ரமுடன் பணிபுரிந்தது சிறந்த அனுபவம். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் 60 நாட்களில் முடிந்து விடும். படம் விரைவில் திரைக்கு வரும்” என்று கூறியிருந்தார்.

    இதற்கு பதிலடியாக கவுதம் மேனனிடம் கேள்வி எழுப்பி கார்த்திக் நரேன் வெளியிட்ட பதிவில், “நரகாசுரன் படம் எப்போது வெளியாகும் என்று விளக்கினால் உதவியாக இருக்கும் சார். இந்த படம் எனது இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது” என்று கூறியுள்ளார். இந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அணி கிரியேஷன்ஸ் சார்பில் நியூட்டன் பிரபு தயாரித்து இயக்கும் சைக்கோ திரில்லர் கதையில் தொகுப்பாளர் தணிகை கதாநாயகனாக நடிக்கிறார்.
    அணி கிரியேஷன்ஸ் சார்பில் நியூட்டன் பிரபு என்ற புதுமுக இயக்குனர் தயாரித்து இயக்கும் புதிய படம் ‘புரடொக்‌ஷன் நம்பர் ஒன்’. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஜாக்குவார் தங்கம், ரோபோ ஷங்கர், எழுமின் விஜி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

    இப்படத்தைப் பற்றி இயக்குனர் நியூட்டன் பிரபு கூறுகையில், ‘இப்படம் சைக்கோ திரில்லர் வகை சார்ந்தது. இதில் நாயகனாக டிவி தொகுப்பாளர் தணிகையும், நாயகியாக அறிமுக நடிகை குயின்ஸ்லி நடிக்கிறார். வில்லனாக பாண்டி கமல் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்திலும் சிறப்பு தோற்றத்திலும் பிரபல நடிகர்கள் நடிக்க உள்ளார்கள்.

    படக்குழுவினர்

    நான் இதற்கு முன்பாக பல படங்களுக்கு துணை மற்றும் இணை பணியாற்றியுள்ளேன். மேலும் சில குறும்படங்களை இயக்கி உள்ளேன். அதுமட்டுமல்லாது பிரபல பத்திரிகை நிறுவனத்தில் பல வருடங்களாக சவுண்ட் இன்ஜினியர் பணியாற்றியுள்ளேன். இப்படிப்பட்ட அனுபவத்தை கொண்டும் இதனால் ஏற்பட்ட நட்பு வைத்தும் நண்பர்களை ஒன்றிணைத்து இப்படத்தை தயாரிக்கிறேன். இப்படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் சைக்கோ திரில்லர் வகையை சேர்ந்தது.

    இப்படத்திற்கு சம்சத் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். சித்தார்த்தா பிரதீப் இசை அமைக்க உள்ளார். இவர் மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு வருகிறார்’ என்றார்.
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால், பாலிதீவில் நடைபெற்ற ஹாலோவீன் திருவிழாவில் கலந்துக் கொண்டுள்ளார்.
    ஆடை திரைப்படத்தில் தனது துணிச்சலான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் பல்வேறு தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை அமலா பால். ஆடை படத்திற்கு பிறகு அமலாபால் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். 

    இந்நிலையில் நடிகை அமலா பால் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக வெளிநாட்டில் பயணம் மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் பாலி தீவில் நடைபெற்ற ஹாலோவீன் திருவிழாவிலும் நடிகை அமலாபால் கலந்து கொண்டார். 

    அமலாபால்

    இந்த ஹாலோவீன் திருவிழாவில் அமலாபால் தனது கண்கள் மற்றும் உதட்டின் ஓரமாக லிப்ஸ்டிக்கை கொண்டு கோடு வரைந்து நாக்கை நீட்டி பேய்போல மேக்கப் செய்துகொண்டு ஹலோவீன் திருவிழாவில் கலந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அமலாபாலை விமர்சித்து வருகின்றனர்.
    தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சமீரா ரெட்டி, மீம் கிரியேட்டர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
    வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சமீரா இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் வங்க மொழி படங்களில் நடித்துள்ளார். சமீராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட சமீரா தனது இரண்டாவது மகனுடன் மலையேற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக புகைப்படம் வெளியிட்டார். கர்நாடகாவின் உயர்ந்த சிகரமான ‘முல்லையாநாகிரிக்கு’ டிரெக்கிங் சென்ற புகைப்படம் தான் அது. குழந்தை பிறந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் சமீரா இந்த சாகசப் பயணத்தை மேற்கொண்டார். விமர்சனங்களும் பாராட்டுகளும் ஒருசேர குவிந்தது. 

    சமீரா ரெட்டியின் பதிவு

    இந்நிலையில் சமீரா தனது பழைய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ``என்னுடைய கடந்த காலத்தில் இருந்து ஒரு குண்டை தூக்கிப்போடுகிறேன். மீம் மேக்கர்ஸ் உங்களுக்காகத் தான். நகைச்சுவை ஒரு புறம் இருக்கட்டும். கடந்த காலங்களில் நான் மிகவும் சிரமப்பட்டேன். அப்போது எனக்கு நிறைய அழுத்தங்கள் இருந்தன. இரண்டு குழந்தைகள் கொண்ட என்னை நேசிக்கும் எனது கணவர் இருந்தும், இப்போதும் கூட என் உடலைப் பற்றி நான் எப்படி உணர்கிறேன் என்ற கவலை மற்றும் போராட்டத்தின் பல தருணங்கள் எனக்கு உள்ளன” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். உடல் பருமன் குறித்து விமர்சனங்களை முன்வைத்தவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக சமீரா, பதிவிட்டிருந்த அந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.
    தமிழில் நேரம், ராஜாராணி, நையாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்த நஸ்ரியா, தற்போது சிகரெட் பிடிக்கும் புகைப்படத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.
    தமிழ் சினிமாவில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நஸ்ரியா. மலையாள படங்களில் சிறுவயது முதல் நடித்து பிரபலமானவர். அதனை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார் நஸ்ரியா. மேலும் நையாண்டி, திருமணம் எனும் நிக்கா போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    சில படங்களில் மட்டும் நஸ்ரியா நடித்து இருந்தாலும் இவருக்கு தமிழில் ரசிகர்கள் அதிகம். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதனை தொடர்ந்து அவர் சினிமாவை விட்டு முற்றிலும் விலகினார். இந்நிலையில் தற்போது நடிகை நஸ்ரியா தனது கணவருடன் இணைந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

    நஸ்ரியா புகை பிடிக்கும் போஸ்டர்

    தற்போது அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. டிரன்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் நடிகை நஸ்ரியா சிகரெட் அடித்து கொண்டு ரவுடி போல போஸ் கொடுத்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாதவன், அனுஷ்கா, அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் ‘நிசப்தம்’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    அனுஷ்கா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘நிசப்தம்’. இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். 4 இந்தியர்களுக்கும் அமெரிக்க போலீசுக்கும் இடையே நடக்கும் கிரைம் திகில் படமாக தயாராகி உள்ளது. 

    அமெரிக்காவில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் திரைக்கு வருகிறது. சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், தற்போது இதன் டீசரை நவம்பர் 6ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    நிசப்தம் படக்குழுவினரின் அறிவிப்பு

    இப்படத்தில் அனுஷ்கா ஓவிய கலைஞராக நடித்துள்ளார். வசனமே இல்லாமல் இப்படம் உருவாகியுள்ளது.
    ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய், பாலக் லால்வாணி நடிப்பில் உருவாகி வரும் ‘சினம்’ படத்தின் முன்னோட்டம்.
    அருண் விஜய் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்திற்கு “சினம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் GNR குமரவேலன் இப்படத்தினை இயக்குகிறார். குற்றம் 23 எனும் மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கிறார். இப்படம் குற்றம் 23ல் இருந்து முற்றிலும் மாறுபட்ட வேறொரு வடிவத்தில் போலீஸ் கதையை சொல்வதாக இருக்கும் என்கிறது படக்குழு.

    Movie Slide Pvt Ltd நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கிறது. பாலக் லால்வாணி இப்படத்தின் நாயகியாக நடிக்க, நடிகர் காளிவெங்கட் மிக முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, சகா படப்புகழ் சபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

    கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது எடிட்டிங் செய்கிறார். மைக்கேல் கலைஇயக்கம் செய்ய, ஸ்டண்ட் சில்வா சண்டைப்பயிற்சிகளை செய்கிறார். மதன் கார்கி, பிரியா ஏக்நாத் பாடல்களை எழுதுகிறார்கள். படத்தின் விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மிகவிரைவில் துவங்கவுள்ளது.
    தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கும் புதிய படத்தில் அருண் விஜய் சினம் கொண்ட போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
    அருண் விஜய் நடிப்புல் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘சினம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் இப்படத்தினை இயக்குகிறார். குற்றம் 23 படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கிறார். 

    இப்படம் குறித்து அருண் விஜய் கூறும்போது, ‘எப்போதும் எந்தவொரு விஷயத்திலும், எந்தவொரு தொழிலும் கோபம் எனும் பண்பு எதிர்மறையானதாகவே அடையாளப்படுத்தப்படும். கோபத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பலவற்றை கடந்தே பலரும் வந்திருப்போம். ஆனால் இந்தச்சினம் அப்பாடியானதொன்று அல்ல. பலநேரத்தில் கோபமானது பல விசயங்களில் சரியானதாக இருக்கும். தர்மத்தை நிலைநாட்டும் அவசியமான கருவியாக கோபம் இருக்கும். தேவையானவர்களுக்கு நியாயத்தை பெற்றுத்தர சினம் என்பது அவசியமாகவே இருக்கும். 

    சினம்

    இப்படத்தின் கதைநாயகன் அப்படியான சினம் கொண்டவன். இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் மிக அற்புதமாக இந்தப் பாத்திரத்தை வடிவமைத்துள்ளார். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நவம்பர் 8 முதல் துவங்கவுள்ளது’ என்றார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் கைதி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று நடிகர் கார்த்தி கூறியிருக்கிறார்.
    மாநகரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘கைதி’. இதில் கார்த்தி, நரேன், ஹரிஷ் உத்தமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் பலரும் கேட்டனர். அதற்கு அவர் ‘டில்லி மீண்டும் வருவான்’ என்று கூறியிருந்தார். மேலும் நடிகர் கார்த்தியிடம் 30 நாட்கள் கால்ஷீட் இருந்தால் போதும் கைதி 2ம் பாகத்தை உருவாக்கி விடலாம் என்று கூறினார்.

    கார்த்தி ட்விட்

    தற்போது நடிகர் கார்த்தி அதை உறுதி செய்திருக்கிறார். உங்களுக்காக டில்லி மீண்டும் வருவான் என்று கூறியிருக்கிறார். கைதி படத்தில் கார்த்தியின் கதாபாத்திரம் டில்லி. மேலும் இப்படத்தின் இறுதியில் அடுத்த பாகத்திற்கான லீட் கொடுத்திருப்பார்கள். 
    ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தி அயர்ன் லேடி படக்குழுவினர் மூன்று முக்கிய நடிகர்கள் தேதிகளுக்காக காத்திருப்பதாக கூறியிருக்கின்றனர்.
    ஜெயலலிதா வாழ்க்கையை ‘தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் படமாக்குவதாக இயக்குனர் பிரியதர்ஷினி அறிவித்தார். ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நித்யா மேனனையும் தேர்வு செய்தனர். ஆனாலும் படப்பிடிப்பை இன்னும் தொடங்கவில்லை. தாமதத்துக்கான காரணத்தை விளக்கி பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    “தி அயர்ன் லேடி படம் ஜெயலலிதாவின் முழு வாழ்க்கை கதையையும் உள்ளடக்கியது. ஜெயலலிதாவைப் போலவே முக அமைப்பு முதல் நிகரில்லா ஆளுமை திறன் வரை இயற்கையாகவே அவரது பண்புகளை நித்யாமேனன் கொண்டு இருப்பதால் ஜெயலலிதா வேடத்துக்கு சரியாக இருக்கிறார் என்று தேர்வு செய்தேன்.

    நித்யா மேனன் - ஜெயலலிதா

    வாழ்க்கை வரலாற்றை படமாக்குவது சவாலான விஷயம். அதிக சிக்கல்கள், சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் இருந்தாலும் அதன் நிஜ தன்மையில் இருந்து மாறாமல் படமாக்க முயன்று கொண்டு இருக்கிறேன். 

    சர் ரிச்சர்ட் அட்டன்பரோ காந்தி வாழ்க்கை வரலாற்றை வடிவமைக்க 18 ஆண்டுகள் செலவிட்டார். ஒரு வாழ்க்கை வரலாற்று படம் சிறந்த படைப்பாக அமைய சரியான கால அவகாசம் தேவைப்படுகிறது. படத்தில் உள்ள மூன்று முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க இருக்கும் நடிகர்கள் தேதிகளுக்காக காத்திருக்கிறோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    சிறப்பு விருது பெற உள்ள நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    நடிகர் ரஜினி காந்த், சினிமாதுறையில் சிறப்பாக சேவையாற்றியதற்காக மத்திய அரசு அவருக்கு ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ என்கிற பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்குவதாக அறிவித்துள்ளது.

    கோவாவில் வருகிற 20-ந்தேதி முதல் 28-ந் தேதி வரையில் நடைபெறும் சர்வதேச திரைப் பட விழாவில் ரஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 10 ஆயிரம் பார்வையாளர்கள் முன்னிலையில் ரஜினிக்கு வழங்கப்படும் இந்த சிறப்பு விருது மிகப் பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது. தனக்கு வழங்கப்பட உள்ள இந்த விருது பற்றி ரஜினிகாந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
    ரஜினிகாந்த்
    இந்நிலையில் சிறப்பு விருது பெற உள்ள நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    ×