search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரியதர்ஷினி"

    பிரியதர்ஷினி இயக்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை படம் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #JayalalithaBioPic
    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பாரதிராஜா, லிங்குசாமி, பிரியதர்ஷினி ஆகியோர் படமாக எடுக்கப்போவதாக அறிவித்தனர். கவுதம் மேனன் இணைய தொடராக எடுத்து வருகிறார்.

    பிரியதர்ஷினி இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்துக்கு ‘த அயர்ன் லேடி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ஜெயலலிதா நினைவு நாளான கடந்த டிசம்பர் 5-ந்தேதி வெளியிடப்பட்டது. ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கிறார். இந்த படத்துக்கு தீவிர ஆராய்ச்சிகள் செய்து பிரியதர்ஷினி திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்.

    இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவித்தார். படத்துக்கான திரைக்கதை புத்தகத்தையும் பதிவிட்டுள்ளார்.

    கவுதம் மேனன் இயக்கும் இணைய தொடரில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். சசிகலாவாக விஜி சந்திரசேகர் நடிக்கிறார். விஜய் இயக்கும் படத்துக்கு ‘தலைவி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். பாகுபலி படத்தின் கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் இணை கதாசிரியராக இணைந்திருக்கிறார்.
    பிரியதர்ஷினி இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கைப்படமாக உருவாகும் `தி அயர்ன் லேடி' படத்தில் சசிகலா வேடத்தில் நடிக்க இரு நாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. #TheIronLady #Jayalalithaa
    இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. இந்த படத்துக்கு ‘‘தி அயர்ன் லேடி’’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் போஸ்டர் வெளியானது.

    ‘‘தி அயர்ன் லேடி’’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நடிகை நித்யாமேனன் தேர்வாகி உள்ளார்.

    நித்யாமேனன் ஓ காதல் கண்மணி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். அவர் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



    ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரது தோழி சசிகலா கதாபாத்திரமும் இடம்பெறுகிறது. அந்த கதாபாத்திரம் சர்ச்சையானது என்பதால் அதில் நடிப்பது யார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுபற்றி அவர் கூறுகையில், “இந்த படத்தில் ஜெயலலிதாவின் பள்ளி வயது முதல் இறப்பு வரையிலான சம்பவங்கள், அவருடன் பயணித்த கதாபாத்திரங்கள் நிச்சயம் இடம்பெறும். சசிகலா கதாபாத்திரம் நிச்சயம் படத்தில் உண்டு” என்றார்.

    இந்த வேடத்துக்கு வரலட்சுமியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வரலட்சுமி சமீபகாலமாக தனக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சர்கார், சண்டக்கோழி 2 படங்களில் வில்லியாகவும் நடித்து இருக்கிறார்.



    சசிகலா வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேசுடனும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இவர் காக்கா முட்டை, ரம்மி படங்களில் நடித்தவர். இன்னும் ஒருசில நாட்களில் சசிகலா வேடத்தில் நடிக்க இருப்பது யார்? என்பது அதிகாரப்பூர்வமாக தெரிய வரும். #TheIronLady #Jayalalithaa

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் அவரது வேடத்தில் யார் நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. #THEIRONLADY
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் படமாக எடுக்க முயற்சிகள் நடந்து வந்தன.

    இயக்குனர்கள் பாரதிராஜாவும் விஜய்யும் தனித்தனியாக இதற்கான அறிவிப்பை வெளியிட்டனர். இவர்களோடு இயக்குனர் மிஷ்கினின் உதவி இயக்குனரான பிரியதர்ஷினியும் களத்தில் இறங்கினார். ஆனால் பிரியதர்ஷினிக்கு அந்த வாய்ப்பு கிடைத்து உள்ளது.

    வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘சக்தி’ என்ற படத்தை இயக்கியவர் பிரியதர்ஷினி. படம் இன்னும் வெளியாகவில்லை. இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றிய இவர், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கி, தயாரிக்கப் போவதாக அறிவித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

    இந்த படத்தில் ஜெயலலிதாவின் இளவயது நடிகை வாழ்க்கை முதல் மருத்துவமனை இறுதி நாட்கள் வரை அனைத்தும் படமாக்கப்பட உள்ளன. அவரது சினிமா வாழ்க்கையை காட்டுவதற்காக அவர் நடித்த காலத்தில் கோடம்பாகத்தில் இருந்த சினிமா ஸ்டூடியோக்களை செட் போட்டு உருவாக்க இருக்கிறோம்.

    சினிமா முதல் அரசியல் வரை அவருடன் பயணித்தவர்கள் வேடங்களில் நடிக்க முக்கிய நடிகர்கள், நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. ஒரு மனிதருக்கு, குறிப்பாக ஒரு பெண்ணுக்கு, அதிலும் தனித்து வாழும் பெண்ணுக்கு இந்த வாழ்க்கை எத்தகைய இடையூறுகளை ஏற்படுத்தும்.

    அந்தக்களத்தை மன உறுதியோடு போராடி, தன் ஒப்பற்ற ஆளுமையால் தடைகளைத் தகர்த்துக்காட்டி, என்றும் வழிகாட்டியாய் வாழ்ந்து, தமிழ்நாடு மட்டுமின்றி, இந்திய மக்களாலும் அதிகம் நேசிக்கப்பட்ட இரும்புப் பெண்மணியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுப்பது பெருமையாக இருக்கிறது.



    ஒரு பெண்ணாக, வரலாறு கண்ட மாபெரும் தலைவியின் வரலாற்றை இயக்குவதற்கான இந்த வாய்ப்பை கடமையாகவே உணர்கிறேன். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் உருவாகும் இந்தப் படத்தை ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதி தொடங்க திட்ட மிடப்பட்டு இருக்கிறது.

    இந்த படத்தில் நடிக்க சில முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். எல்லோருமே பயந்தனர். ஆனால் நித்யா மேனன் மட்டும்தான் துணிச்சலுடன் ஒப்புக்கொண்டார். வரலட்சுமி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரியதர்ஷினி இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பு நேற்று வெளியிடப்பட்டது. ‘தி அயர்ன் லேடி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். விரைவில் படத்தின் தொடக்க விழா மிகப்பெரிய அளவில் நடக்கும் என்று படத்தின் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா வேடத்தில் வரலட்சுமி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Jayalalithaa #JayalalithaaBiopic
    வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘சக்தி’ என்ற படத்தை இயக்கியவர் பிரியதர்ஷினி. இப்படம் இன்னும் வெளியாகவில்லை. இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றிய இவர், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கி, தயாரிக்கப் போவதாக அறிவித்தார்.

    இந்நிலையில், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பு இன்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டிருக்கிறார். இப்படத்திற்கு ‘தி அயர்ன் லேடி’ (The Iron Lady) என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தில் யார் யார் நடிக்கப் போகின்றனர் என்ற விவரம் தெரியவில்லை. விரைவில் படத்தின் தொடக்க விழா மிகப்பெரிய அளவில் நடக்கும் என்று படத்தின் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தை, இயக்குனர்கள் பாரதிராஜா, மற்றும் விஜய் ஆகியோரும் தனித்தனியாக இயக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×