என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    எதிரிகளிடம் லஞ்சம் வாங்கி என் மீது போலீசார் வழக்கு போடுகிறார்கள் என்று நடிகை மீரா மிதுன் குற்றம் சாட்டியுள்ளார்.
    சென்னை: 

    சென்னை நட்சத்திர விடுதியில் நடிகை மீரா மிதுன் நிரூபர்களிடம் பேசியதாவது:- 

    40 நாட்கள் நான் இங்கு இல்லை அதனால் இந்த செய்தியாளர் சந்திப்பு , என்னை குறித்த பல்வேறு தகவல்கள் வலைதளங்களில் உலா  வருகின்றன , காவல் துறை நடவடிக்கைகள் எடுத்திருந்தால் நான் வேறு மாநிலத்திற்கு சென்று இருக்க வேண்டிய நிலை  ஏற்பட்டிருக்காது, இங்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் இதை விட பெரிய இடத்திற்கு சென்றால் கிடைக்கும் என்றால் செல்வேன். 

    ஆனால் அப்படி சென்றால் தமிழகத்திற்கு அசிங்கம், எனக்கு இதனால் அசிங்கமட்டுமல்ல மிரட்டல்களும் வருகின்றன, என் மேல்  இரண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது இரண்டுமே பொய்யானவை, என்னிடம் எந்த விசாரணையும் செய்யால் பதிவு  செய்தார்கள், லஞ்சம் வாங்கி கொண்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறார்கள். 

    நானும் பணம் கொடுத்தால் அதையும் வாங்கிக்கொண்டு வழக்கு பதிவு செய்வார்கள் போல, இதற்கு காரணமானவர்கள். ஆய்வாளர்கள்  சிலர் மற்றும் விஜய் டிவி, நிகழ்ச்சி முடியும் வரை என்னை பயன்படுத்திக்கொண்டு இப்போது எனக்கு முறையாக பதில்  அளிக்கவில்லை, எனக்கு வரவேண்டியது முழுமையாக வரவில்லை. சேரன் விவகாரத்தில் நான்இந்த நிகழ்ச்சியை குறித்து மனித  உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கலாம் அப்படி அளித்து நிகழ்ச்சியை நிறுத்தினால் தான் எனக்கு கிடைக்கவேண்டியது கிடைக்கும்  என நினைக்கிறேன், நிகழ்ச்சியை முறையாக நடத்திய போதும் எனக்கு கொடுக்கப்பட்ட வேண்டியவை கொடுக்கப்படவில்லை. 

    விஜய் டிவி தலைமையில் இருப்பவர் என்னிடம் கெஞ்சினார் அதற்காக தான் குறைவான தொகையில் நிகழ்ச்சியில் கலந்து  கொண்டேன். என்னிடம் முறையாக குறிப்பிட்ட காலத்தில் தருகிறேன் என கூறலாம் எதையும் கூறவில்லை. எனக்கு இதுவரை ஒரு  ரூபாய் கூட தரவில்லை. 

    அட்வான்ஸ் கூட வாங்காமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் மொத்தம் 35 நாட்கள் இருந்தேன் இதுவரை  ஒரு ரூபாய் கூட தரவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் யாரிடமும் உறவாடவில்லை பழகவும் இல்லை என் எண்ணம் யாரிடமும் இல்லை, சரவணன் நல்ல நபர்  அவரிடம் மட்டும் பேசியுள்ளேன். எனக்கு ஒரு கால் செய்து கால அவகாசம் கூறியிருந்தால் கூட போதும், உயிருக்கு பயந்து நான்  மும்பையில் இருந்தேன் மும்பை, கேரளா , கர்நாடக போலீசார் சிறப்பாக பணியாற்றுகின்றனர் பாதுகாப்பாக உள்ளது. மும்பையில்  குடியேறிவிட்டேன். 

    எனக்கு தெரிந்து தமிழில் சரியாக காட்டினார்களா எனக்கு தெரிவில்லை நான் பார்க்கவில்லை, ஆனால் சிலர் என்னை புரிந்து  கொண்டார்கள். நான் அரசியலுக்கு வரவுள்ளேன், என்னை போல பிரபலங்களுக்கு இந்நிலை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நிலை  ஏற்படும்? 

    அ.தி.மு.க-வில் ஜெயலலிதா இருந்த வரை சிறப்பாக இருந்தது. இப்போது ஆண் ஆதிக்கம் அதிகமாக உள்ளது பெண்கள் அமைச்சர்  பதவிக்கு வரவேண்டும், கமலை சந்தித்து கோரிக்கை வைத்தீர்களா? என்ற கேள்விக்கு கமலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை  புரோடக்‌‌ஷன் குழுவில் தான் பேசினேன், கமல் குறித்து பேசியதால் தான் பணம் கொடுக்கவில்லை என்று கூறமுடியாது. 

    எதிராக செயல்பட்ட அதிகாரிகள் அதற்கான தண்டனையை அனுபவிப்பார்கள், இதன் பின்னரும் எனக்கு பணம் கொடுக்கவில்லை  என்றால் விஜய்டிவி சேனல் முழுவதும் பிரச்சனையை சந்திக்க நேரிடும். நான் வாங்கிய பட்டங்கள் பொய்யானவை என்றால் என்னால்  பயிற்சி பெற்று பட்டம் பெற்றவர்களிடமும் திரும்ப பெறுங்கள். 

     இவ்வாறு அவர் பேசினார்.
    பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் 54-வது பிறந்தநாளையொட்டி துபாயில் உள்ள உலகின் மிக உயரமான ‘புர்ஜ் கலிபா’ கட்டிடத்தில் லேசர் ஒளியால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
        துபாய்:

    சுற்றுலாவாசிகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் துபாய் நாட்டில் உலகின் மிக உயரமான ‘புர்ஜ் கலிபா’ கட்டிடம் அமைந்துள்ளது.

    124 மாடிகளை கொண்ட ‘புர்ஜ் கலிபா’ கட்டிடத்தில் நட்சத்திர ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் மற்றும் நீச்சல் குளங்கள் என அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இது 2,717 அடி (828 மீட்டர்) உயரம் கொண்டது.

    முழுவதும் கருப்பு நிற சலவை கற்கள், எவர்சில்வர் மற்றும் கண்ணாடிகளால் இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 124 மாடிகளுக்கும் செல்லும் வகையில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் லிப்ட் வசதிகள் இங்கு உள்ளன. இந்த கட்டிடத்தை ஒட்டியுள்ள நீர்நிலையில் லேசர் ஒளிவெள்ளத்தில் இசைக்கேற்ப நடனமாடும் அழகிய நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    ‘புர்ஜ் கலிபா’ மற்றும் துபாயில் உள்ள பல்வேறு பொழுதுப்போக்கு அம்சங்களுக்காக உலக நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாவாசிகள் ஆண்டுதோறும் இங்கு வருகின்றனர்.

    ஷாருக்கான் நடித்துள்ள விளம்பரப்படம்

    துபாய் மாநகராட்சின் சுற்றுலாத்துறை தூதராக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.’எனது விருந்தினராக வாருங்கள்’ என்று துபாய்க்கு மக்களை அழைக்கும் 3 நிமிட விளம்பரப்படத்தில் இவர் நடித்திருக்கிறார்.

    இந்நிலையில், ஷாருக்கானின் 54-வது பிறந்தநாளையொட்டி துபாயில் உள்ள உலகின் மிக உயரமான ‘புர்ஜ் கலிபா’ கட்டிடத்தில் நேற்றிரவு லேசர் ஒளியால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    ஷாருக்கானுக்கு வாழ்த்து

    ’பாலிவுட்டின் மன்னன் ஷாருக்கானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்று அந்த கட்டிடம் லேசர் ஒளியில்
    ஒளிரத் தொடங்கியதும் அங்கிருந்தவர்கள் கரவொலி எழுப்பினர். மேலும், ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஓம் சாந்தி ஓம்’ படப்பாடலின் பின்னணியில் நடனமாடிய நீருற்று அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

    இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஷாருக்கான் புர்ஜ் கலிபா கட்டிடத்தின் உரிமையாளரான எனது சகோதரர் முஹம்மது அலாபருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    என்னை இத்தனை பிரகாசமாக ஒளிர வைத்ததற்கும் நான் எப்போதும் இருந்திராக உயரத்தில் என்னை வைத்ததற்கும் எனது சகோதரர் முஹம்மது அலாபருக்கு நன்றி. உங்களது அன்பும், கனிவும் அளப்பரியது. துபாயை நான் நேசிக்கிறேன். இது என்னுடைய பிறந்தநாள், நான் உங்கள் விருந்தாளி’ என ஷாருக்கான் குறிப்பிட்டுள்ளார்.

    கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
    கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இதில், தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இந்த படம் பண நெருக்கடி, கோர்ட்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் திட்டமிட்டபடி வெளியாகாமால் தள்ளிப்போனது.

    எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் போஸ்டர்

    கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் கவுதம் மேனன் படத்தை நவம்பர் 15-ந் தேதி ரிலீஸ் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்நிலையில் தற்போது நவம்பர் 29-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் வெளியிடுகிறார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    வினோத் இயக்கும் தல 60 படத்திற்கு பின் அஜித்தை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
    நேர்கொண்ட பார்வை படத்துக்கு பின் வினோத் இயக்கத்திலேயே இரண்டாவது முறையாக அஜித் தொடர்ந்து நடிக்கிறார். அந்த படத்திற்கான பூஜை போடப்பட்டு அன்றே படத்திற்கு வலிமை என்று பெயரிடப்பட்டுள்ளதாக தயாரிப்பு குழு அறிவித்துவிட்டனர். இந்த படத்தை தொடர்ந்து அஜித் யாருடன் இணைவார் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது. 

    அஜித்

    இந்த நேரத்தில் அஜித்தை வைத்து படம் இயக்க ஏ.ஆர்.முருகதாஸ், கார்த்திக் நரேன், புஷ்கர்-காயத்ரி, சிறுத்தை சிவா என பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது. இதில் யாருடன் வலிமை படத்தை தொடர்ந்து அஜித் இணைய இருக்கிறார் என்பது வலிமை படம் முடியும் சமயத்தில் தான் தெரியும்.
    விஜய் சேதுபதி, சத்யராஜ் உள்பட தமிழ் நடிகர்கள் தெலுங்கு படங்களில் நடிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தெலுங்கு நடிகர் சங்கம் சார்பில் ஒரு குழுவினர் ஐதராபாத்தில் உள்ள இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:- “தெலுங்கு பட உலகில் தமிழ், கன்னடம் உள்ளிட்ட பிறமொழி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கின்றனர். இதனால் தெலுங்கு குணசித்திர நடிகர்கள் வருமானம் இன்றி வீட்டு வாடகை கூட கொடுக்க பணம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். 

    ரஜினிகாந்த், விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட தமிழ் நடிகர்களின் படங்கள் தமிழ்நாட்டில் வெளியாகும் அதே நாளிலேயே தெலுங்கிலும் ரிலீசாகிறது. தமிழ் நாட்டில்தோல்வி அடையும் சில படங்கள் கூட ஆந்திராவில் வசூல் குவிக்கின்றன. ஆனாலும் தெலுங்கு நடிகர்களை தமிழ் படங்களில் அவர்கள் நடிக்க வைப்பது இல்லை. ஆனால் தெலுங்கு நடிகர்கள் தமிழ், கன்னடம், மலையாளத்தில் தங்கள் படங்கள் வியாபாரம் ஆக அங்குள்ள நடிகர்களை இறக்குமதி செய்கிறார்கள். 

    விஜய் சேதுபதி, சத்யராஜ்,

    சத்யராஜ், விஜய் சேதுபதி, பிரபு, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட தமிழ் நடிகர்களையும் சுதீப், ரவிகிஷன் உள்ளிட்ட கன்னட நடிகர்களையும் தெலுங்கு படங்களில் நடிக்க வைக்கின்றனர். பிரபாஸ் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த சாஹோ படத்தில் அவரைத் தவிர யாருமே தெலுங்கு பேசுபவர்கள் இல்லை. சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் பிறமொழி நடிகர், நடிகைகளே அதிகம் இருந்தனர். 

    தந்தை, தாய், அண்ணி, தங்கை கதாபாத்திரங்களுக்கும் பிறமொழிகாரர்களையே அழைக்கின்றனர். அவர்களுக்கு கேரவன், நட்சத்திர ஓட்டலில் ரூம், அதிக சம்பளம் கொடுக்கின்றனர். இதனால்தான் அவர்கள் தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். தெலுங்கு படங்களில் தெலுங்கு நடிகர்களுக்கே வாய்ப்பு அளிக்க வேண்டும்.”

    இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
    ‘ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி’ கவுரவம் மிக்க சிறப்பு விருதை வழங்குவதற்காக மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் வருகிற 20-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை 9 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.

    சர்வதேச திரைப்பட விழாவுக்கு இந்த ஆண்டு பொன்விழா என்பதால் இந்திய சினிமாவுக்கு முக்கிய பங்களிப்பு செய்த திரைப்பட கலைஞர்களை கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு “தாதா சாகேப் பால்கே விருது” வழங்கப்படும் என்று கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கோவா சர்வதேச திரைப்பட விழாவை சிறப்பாக கொண்டாட மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை சார்பில் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் 50-வது ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவின் கவுரவ விருதை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்குவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. 

    இது தொடர்பாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- இந்திய சினிமாவுக்கு கடந்த பல ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த் செய்து வரும் தன்னிகரற்ற பங்களிப்பையும், சேவையையும் கவுரவித்து அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது. ‘ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி’ என்ற விருதை அவருக்கு அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அந்த டுவிட்டர் பதிவில் மத்திய மந்திரி ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், “சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருது வழங்கும் மத்திய அரசின் முடிவை நடிகர் ரஜினிகாந்திடம் தெரிவித்து விட்டோம். அவரும் அந்த விருதை வாங்க சம்மதித்துள்ளார்” என்று தெரிவித்தார்.

    ரஜினிகாந்தின் டுவிட்டர் பதிவு

    இந்த நிலையில் மத்திய அரசு வழங்கும் சிறப்பு விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட பொன்விழாவில் எனக்கு கவுரவம் மிக்க சிறப்பு விருதை வழங்குவதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு தொலைக்காட்சி தொடராக ஒளிபரப்பாக உள்ளது.
    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது வாழ்க்கை வரலாற்றை ‘நெஞ்சுக்கு நீதி’ எனும் தலைப்பில் ஏற்கனவே புத்தக வடிவில் வெளியிட்டுள்ளார். இதுவரை 6 பாகங்கள் வெளியாகியுள்ளது. குழந்தை பருவம் முதல் தனது அரசியல் வாழ்க்கை வரை தான் கடந்து வந்த பாதைகளை கருணாநிதி அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    கருணாநிதி

    இந்நிலையில், கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தொலைக்காட்சி தொடர் ஒளிபரப்பாக உள்ளது. ‘நெஞ்சுக்கு நீதி’ என பெயரிடப்பட்டுள்ள அந்த தொடர் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் இன்று முதல் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9.30 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது. 
    உடல் தோற்றத்தை குறிக்கும் வகையில் வசனம் பேசியதற்காக நடிகர் ரோபோ சங்கரின் மகளிடம் விஜய் மன்னிப்பு கேட்டுள்ளார்.
    அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து திரைக்கு வந்துள்ள படம் பிகில். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாகவும், இந்துஜா, அமிர்தா, ரெபோ மோனிகா, வர்ஷா, இந்திரஜா உள்பட பலர் கால்பந்தாட்ட வீராங்கனைகளாகவும் நடித்து இருந்தனர். இவர்களில் இந்திரஜா, காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் ஆவார். உடல் பருமனாக இருக்கும் அவரை இந்த படத்தில் ஒரு காட்சியில் குண்டம்மா என்று சொல்லி திட்டி உசுப்பேற்றுவார் விஜய். உடல் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்த விஜய்க்கு சமூகவலைதளங்களில் எதிர்ப்புகள் எழுந்தன. 

    மகள் இந்திரஜாவுடன் ரோபோ ஷங்கர்

    இந்த நிலையில், இந்திரஜா அளித்த ஒரு பேட்டியில், ''என்னை குண்டம்மா என்று சொல்வதற்கு விஜய் தயங்கினார். படத்தின் காட்சிக்கு அது தேவைப்பட்டதால் அப்படி நடித்தார். நானும் எந்தவித சங்கடமும் இல்லாமல் இயல்பாகவே நடித்தேன். ஆன போதும், அந்த காட்சியில் நடித்த பிறகு அவர் என்னிடம் வந்து குண்டம்மா என்று சொல்லி நடித்ததற்கு மன்னிப்பு கேட்டார்’ என தெரிவித்துள்ளார்.
    ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி படத்துக்கு தடை நீங்கியதால் விரைவில் திரைக்கு வர உள்ளது.
    குக்கூ, ஜோக்கர் படங்களை எடுத்து பிரபலமான ராஜூ முருகன் இயக்கிய ‘ஜிப்ஸி’ படத்தில் ஜீவா நடித்துள்ளார். நாடோடிகள் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பை சில மாதங்களுக்கு முன்பே முடித்து தணிக்கைக்கு அனுப்பினர். 

    படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இந்துக்கள் மத உணர்வை புண்படுத்தும் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக ஆட்சேபித்து சான்றிதழ் அளிக்க மறுத்து விட்டனர். உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை கேலி செய்வது போன்ற காட்சிகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. மறு தணிக்கையிலும் அனுமதி மறுத்தனர். தணிக்கை குழுவினர் சில காட்சிகளை நீக்கும்படி கூறியதை ராஜூ முருகன் ஏற்கவில்லை. 

    ஜிப்ஸி படக்குழு

    நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் “ஜிப்ஸி திரைப்படத்தில் என்ன பிரச்சினை. இரு முறை தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டு டிரிபியூனல் செல்ல அறிவுறுத்தப்பட்டதா? ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை கேவலப்படுத்தும் காட்சிகளும் முதல்வர் யோகி கெட்டப் போட்டு அவர் பெயரை பயன்படுத்தியதும், இந்து கலவர காட்சிகளும் காரணமா? தயாரிப்பாளர் தி.மு.க.வா? என்று பதிவிட்டார்.

    இதைத்தொடர்ந்து நடிகை கவுதமி தலைமையிலான தணிக்கை தீர்ப்பாயத்துக்கு படத்தை கொண்டு சென்றனர். அங்கு ஜிப்ஸி படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. சில சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. படம் விரைவில் திரைக்கு வருகிறது.
    நடிகர் ரஜினிகாந்துக்கு “ICON OF GOLDEN JUBILEE" என்ற சிறப்பு விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
    நடிகர் ரஜினிகாந்திற்கு சிறப்பு நட்சத்திரத்திற்கான “ICON OF GOLDEN JUBILEE" விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கோவாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு இவ்விருது வழங்கப்படும் என்றும், விருது வழங்குவது தொடர்பாக ரஜினிகாந்துக்கு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

    பிரகாஷ் ஜவடெகர் 

    50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இம்மாதம் (நவம்பர்) 20-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் வெளியான 26 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பழம்பெரும் படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு திரையிடப்பட உள்ளது. இதில் தமிழில் வெளியான ஒத்தசெருப்பு, ஹவுஸ்ஓனர் ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 
    அஜய் வாசுதேவ் இயக்கத்தில் மம்முட்டி, ராஜ்கிரண், மீனா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘குபேரன்’ படத்தின் முன்னோட்டம்.
    மம்முட்டி, ராஜ்கிரண், மீனா ஆகியோர் நடிப்பில் தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக உருவாகி வரும் திரைப்படம் 'குபேரன்'. நடிகர் ராஜ்கிரண் இந்த படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் முதன் முதலாக அடியெடுத்து வைத்துள்ளார். பிரபல மலையாள இயக்குனர் அஜய் வாசுதேவ் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.  மலையாளத்தில் இந்தப்படத்திற்கு ஷைலாக் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த படத்தின் கதையை புதியவர்களான பிபின் மோகன் மற்றும் அனீஸ் ஹமீது ஆகிய இருவரும் எழுதியுள்ளனர். ராஜ்கிரண் வசனம் எழுதியுள்ளார். ரணதீவ் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, மலையாள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் கோபிசுந்தர் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்திற்கு பாடல்களை ராஜ்கிரண், விவேகா எழுதியுள்ளனர். பல படங்களை ராஜ்கிரண் அவர்கள் இயக்கி இருந்தாலும் பாடல் எழுதுவது இதுவே முதன் முறை.
    லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் பூமி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
    கோமாளி படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக நடிக்கும் படம் ‘பூமி’. ரோமியோ ஜூலியட், போகன் போன்ற படங்களை இயக்கிய லக்‌ஷ்மண் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். சதீஷ் நண்பர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இமான் இசையமத்துள்ளார்.

    பூமி பட போஸ்டர்

    விவசாயத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இது ஜெயம் ரவிக்கு 25-வது படமாகும். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஜெயம் ரவியின் 25-வது படம் என்பதால் ‘பூமி’ படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
    ×