என் மலர்
சினிமா செய்திகள்
சிபிராஜ், ஷிரின் கான்ச்வாலா, கவுதம் மேனன், சமுத்திரகனி நடிப்பில் உருவாகி வரும் வால்டர் திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
சிபிராஜ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'வால்டர்'. அன்பரசன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கி வரும், இப்படத்தில் சிபிராஜ் ஜோடியாக ஷிரின் கான்ச்வாலா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

வித்தியாசமான திரில்லராக உருவாகி வரும் இப்படத்தில் கவுதம் மேனன், சமுத்திரக்கனி, ஷனம் ஷெட்டி, ரித்விகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த நமீதா, தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் விஜயகாந்துக்கு ஜோடியாக எங்கள் அண்ணா என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நமீதா. அதனை தொடர்ந்து விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் கவர்ச்சி புயலாக வலம் வந்த இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
அதனை தொடர்ந்து நமீதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். பின்னர் அவர் கடந்த ஆண்டு தனது காதலரான வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நமீதா திருமணத்திற்கு பிறகும் தற்போது நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் இதற்காக கடினமாக உடற்பயிற்சியும் செய்து உடல் எடையை குறைத்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் புதிய தோற்றத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி, தற்போது எனக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்று கூறியிருக்கிறர்.
நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. ஆந்திராவில் அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் ஸ்ரீரெட்டி பாலியல் புகார் பட்டியலில் சிக்கினர். தற்போது ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாகி வருகிறது.
சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளையும், கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் ஸ்ரீரெட்டி. இந்நிலையில், உதயநிதியை பற்றி ட்விட்டர் கணக்கில் பதிவு ஒன்றை செய்திருக்கிறார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஸ்ரீரெட்டி கூறும்போது, ‘உதயநிதியை நான் நேரில் கூட பார்த்தது கிடையாது. உதயநிதியை பற்றி தவறுதலாக போடப்பட்ட பதிவு எனது ட்விட்டர் கணக்கு இல்லை. போலியான கணக்கு, உதயநிதி பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்னையும் வாழ வைக்கும் என நம்புகிறேன். மிக விரைவில் அரசியலுக்கு வருகிறேன். தமிழகத்திற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன்’ என்றார்.
பிரபல மராத்தி பாடகி கீதா மாலி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னர் லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதிய விபத்தில் உயிரிழந்திருக்கிறார்.
பிரபல மராத்தி பாடகி கீதா மாலி. இவர் திரைப்படங்களில் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார். தனியாக இசை ஆல்பங்களையும் வெளியிட்டு இருக்கிறார். நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக சமீபத்தில் கீதா மாலி அமெரிக்கா சென்று இருந்தார். அங்கிருந்து மும்பை திரும்பிய அவர் நாசிக் நகருக்கு காரில் புறப்பட்டு சென்றார்.
அவருடைய கணவர் விஜய்யும் அதே காரில் இருந்தார். தானே மாவட்டத்தில் உள்ள சாஹப்பூர் என்ற இடத்தில் அதிகாலை 3 மணிக்கு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது ரோடு ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னர் லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் திடீரென்று மோதியது.

இந்த விபத்தில் கீதாவும், அவரது கணவரும் படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பாடகி கீதா மாலி இறந்துபோனார். அவரது கணவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கீதா மாலி மறைவுக்கு மராத்தி பட உலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தி இசையமைப்பாளரும் பாடகருமான ஷேகர் ராவ்ஜியானி, 3 முட்டைகளுக்கு ரூ.1672 பில் போட்டதை பார்த்து வியப்படைந்திருக்கிறார்.
பிரபல இந்தி நடிகர் ராகுல்போஸ் சில மாதங்களுக்கு முன்பு நட்சத்திர ஓட்டலில் சாப்பிட்ட 2 வாழைப் பழங்களுக்கு ரூ.422 பில் போட்டதை டுவிட்டரில் வெளியிட்டார். இது சர்ச்சையாகி வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டன. இதையடுத்து குறிப்பிட்ட அந்த ஓட்டலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோல் இன்னொரு சர்ச்சை தற்போது கிளம்பி உள்ளது. இந்தி இசையமைப்பாளரும் பாடகருமான ஷேகர் ராவ்ஜியானி ஆமதாபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு சென்று 3 அவித்த முட்டைகளை ஆர்டர் கொடுத்து வாங்கி சாப்பிட்டுள்ளார். அதற்காக ஜி.எஸ்.டி. மற்றும் சேவை வரிகளுடன் சேர்த்து ரூ.1672 ‘பில்’ வழங்கப்பட்டது.

அந்த பில்லை பார்த்த ஷேகர் ராவ்ஜியானி அதிர்ச்சியானார். 3 முட்டைகளுக்கு ரூ.1672 விலையா? என்று ஆச்சரியப்பட்டார். அந்த பில்லை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அது வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதைப்பார்த்த சிலர் நட்சத்திர ஓட்டலில் இவ்வளவு விலை போடுவதெல்லாம் சகஜம் இதை சர்ச்சையாக்க கூடாது என்று பதிவிட்டுள்ளனர்.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஆக்ஷன்’ படத்தின் விமர்சனம்.
தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருக்கும் பழ.கருப்பையாவிற்கு ராம்கி, விஷால் என்று இரண்டு மகன்கள். இதில் விஷால் ராணுவ அதிகாரியாக இருக்கிறார். இவருடன் பணி புரிந்து வரும் தமன்னா, விஷாலை ஒரு தலை பட்சமாக காதலித்து வருகிறார். ஆனால், விஷாலோ ராம்கியின் மனைவியான சாயாசிங்கின் தங்கை ஐஸ்வர்யா லட்சுமியை காதலிக்கிறார்.
ராம்கியை தன்னுடைய அரசியல் வாரிசாக நிறுத்துகிறார் பழ.கருப்பையா. தேர்தல் வரும் நிலையில், மத்தியில் இருக்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். இதற்காக அந்த கட்சி தலைவர் சென்னைக்கு வந்து ஒரு மேடையில் பேசும்போது, குண்டு வெடித்து இறக்கிறார்.

இவர் இறப்பதற்கு ராம்கி தான் காரணம் என்று பழி விழுகிறது. இந்த பழியை போக்க விஷால் களத்தில் இறங்குகிறார். இறுதியில் இதற்கு காரணமானவர்களை விஷால் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் விஷால், படத்தின் தலைப்புக்கு ஏற்றார்போல் ஆக்ஷனில் கலக்கி இருக்கிறார். படம் முழுவதும் ஓடுகிறார், தாவுகிறார், பறக்கின்றார். இவருடன் படம் முழுவதும் பயணிக்கிறார் நடிகை தமன்னா. இதில் இவருக்கு நடிக்க அதிகம் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் கவர்ச்சியிலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் தமன்னா. மற்றொரு நடிகையாக வரும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு பெரியதாக வாய்ப்பு இல்லை.

ஒரு சில இடங்களில் யோகிபாபுவின் காமெடி கைகொடுத்திருக்கிறது. பழ.கருப்பையா, ராம்கி, கபீர் சிங், சாயாசிங் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
சுந்தர்.சி-யின் வழக்கமான படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இப்படம் உருவாகி இருக்கிறது. ஆக்ஷனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இப்படம் பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை என்றே சொல்லலாம். சுந்தர்.சி படங்களுக்கு சென்றால் காமெடி நிச்சயம் என்று எதிர்ப்பார்த்து செல்பவர்களுக்கு இந்த படம் ஏமாற்றம். லாஜிக் மீறல்கள், படத்தின் நீளம் ஆகியவற்றை கவனித்திருக்கலாம். சில காட்சிகள் கவர்ந்தாலும், பல காட்சிகள் சோர்வை ஏற்படுத்தி இருக்கிறது. கடைசி 30 நிமிட காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கிறது.

ஹிப்ஹாப் ஆதியின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் ஓரளவிற்கு ஸ்கோர் செய்திருக்கிறார். படத்திற்கு பெரிய பலம் டுலேவின் ஒளிப்பதிவு. வெளிநாடுகளின் இடங்கள் பலவற்றை அழகாக காண்பித்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘ஆக்ஷன்’ சற்று குறைவு.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சங்கத்தமிழன்’ திரைப்படம், பணப்பிரச்சனையில் இருந்து மீண்டு தற்போது ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சங்கத்தமிழன்’. வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இப்படத்தை இயக்கி இருக்கிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராசி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்கள். மேலும் நாசர், சூரி, ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

’சங்கத்தமிழன்’ படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பண பிரச்சனை காரணமாக படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தற்போது இதில் சுமூக தீர்வு ஏற்பட்டுள்ளதால் இன்று இரவு முதல் ரிலீசாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஜித்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி - ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் தலைப்பை நடிகர் சூர்யா அறிவித்திருக்கிறார்.
பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நாயகனாக நடித்து வருகிறார். கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், அன்சன் பால், நிகிலா விமல், சவுகார் ஜானகி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
திரில்லர் கதையாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு ‘தம்பி’ என்று பெயர் வைத்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தம்பி என்று பெயர் வைத்து இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்கள்.
Here’s the first look of #Thambi#Donga#Jo & @Karthi_offl ‘s exciting next! #SurajSadanah ‘s debut production 👍🏼#JeethuJoseph#Sathyaraj@Viacom18Studios@ParallelMinds_@govind_vasantha@AndhareAjit@rdrajasekar@Nikhilavimal1#ThambiFirstLook#ThambiTeaserFromTomorrowpic.twitter.com/qNAeHrtzsH
— Suriya Sivakumar (@Suriya_offl) November 15, 2019
மேலும் இப்படத்தின் டீசர் நாளை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் வரும் டிசம்பர் 20ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ படத்திற்காக நடிகை ஆண்ட்ரியா பயிற்சி பெற்று வருகிறார்.
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். ‘தளபதி 64’ என்று அழைக்கப்பட்டு வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இதில் ஆண்ட்ரியாவிற்கு துணிச்சல் மிகுந்த பெண் வேடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. படத்தில், அவருக்கு சண்டை காட்சிகள் இருக்கிறதாம். சண்டை காட்சிகளில் நடிக்க அவர் தற்போது பயிற்சி பெற்று வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடக்கிறது. அங்கு படப்பிடிப்பு முடிந்ததும் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற இருக்கிறது.
கலைமாமணி விருதை இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மாபா.பாண்டியராஜனிடம் பெற்றுக் கொண்டார் நடிகர் விஜய்சேதுபதி.
தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, 2011 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 201 நபர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் விருது வழங்கப்பட்டது.
அப்போது 2017-ம் ஆண்டிற்கான விருது பட்டியலில் இடம்பிடித்திருந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு அப்போது விருது வழங்கப்படவில்லை. விஜய் சேதுபதி மட்டுமின்றி பாடலாசிரியர் யுகபாரதியும் விருது விழாவுக்கு வரவில்லை.

இந்த நிலையில், நடிகர் விஜய்சேதுபதிக்கு கலைமாமணி விருதை இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மாபா.பாண்டியராஜன் வழங்கியுள்ளார். அதேபோல், பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோருக்கும் தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
பாடகர் நிக் ஜோன்சை திருமணம் செய்துக் கொண்ட பிரியங்கா சோப்ரா, தற்போது அமெரிக்காவில் ரூ.144 கோடிக்கு புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்காவைச் சேர்ந்த பாடகர் நிக் ஜோன்சை காலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த டிசம்பரில் இவர்களது திருமணம் ஜோத்பூர் மற்றும் ராஜஸ்தானில் கிறிஸ்தவ மற்றும் இந்து முறைப்படி 2 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு பிரியங்கா சோப்ரா கணருடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.
இந்த தம்பதியினர் இன்னும் சில வாரத்தில் தங்களது முதலாமாண்டு திருமணநாளை கொண்டாட உள்ளனர். இந்நிலையில் இந்த தம்பதியினர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சான்பெர்னாண்டோ பள்ளத்தாக்கு பகுதியில் பிரமாண்ட வீடு ஒன்றை வாங்கி உள்ளனர்.
20 ஆயிரம் சதுர அடி பரப்பளவை கொண்ட இந்த வீட்டை 20 மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கி உள்ளனர். இந்திய மதிப்பில் இந்த வீட்டின் மதிப்பு ரூ.144 கோடி ஆகும்.

இந்த ஆடம்பர வீட்டில் 7 படுக்கை அறைகள், 11 குளியலறைகள், நீச்சல் குளம், பொழுது போக்கிற்கான பவுலிங் அரங்கம், சினிமா தியேட்டர், பார் மற்றும் ரெஸ்டாரண்ட், கூடைப்பந்து விளையாடுவதற்கான உள்ளரங்கம், உடற்பயிற்சி மையம் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.
நிக்ஜோன்ஸ் திருமணத்தின்போது 6.5 மில்லியன் டாலர் விலையில் ஒரு வீடு வாங்கி இருந்தார். அந்த வீட்டை தற்போது 6.9 மில்லியன் டாலருக்கு விற்றுவிட்டார். ஏற்கனவே நிக்ஜோன்ஸ் ரூ.3 கோடிக்கு ஆடம்பர சொகுசு காரை பிரியங்கா சோப்ராவுக்கு பரிசாக அளித்திருந்தார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படக்குழுவினர் டிசம்பர் 7ம் தேதி சென்னையை அலற வைக்க இருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.
தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் மோஷன் போஸ்டரை, அந்தந்த மொழி பட பிரபலங்களான கமல், மகேஷ்பாபு, சல்மான் கான், மோகன்லால் ஆகியோர் வெளியிட்டனர்.

இப்படத்தின் டப்பிங் பணிகள் நேற்று தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் டப்பிங் பேசும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. தற்போது தர்பார் படத்தின் இசை வெளியிடும் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 7ம் தேதி சென்னையில் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதில் பல முன்னணி நடிகர்கள், தென் இந்தியாவின் முன்னணி நடிகர்களும் கலந்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.






