என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நித்யா மேனன், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறியிருக்கிறார்.
தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நித்யா மேனன். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது, முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான தி அயன்லேடி படத்தில் நடித்து வருகிறார். இதற்காக ஜெயலலிதா போன்று இருப்பதற்கான பல விசேஷ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் எதிர்பாராமல் சினிமாவில் அறிமுகமானதாகவும், ஒன்றிரண்டு படங்களில் நடித்து விட்டு போய் விடலாம் என்று நினைத்ததாகவும் ஆனால் அதன் மீது விருப்பம் அதிகமாகி திரை பயணத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், "சினிமா துறையில் மட்டும் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது என்பது சரியல்ல. எல்லா துறைகளிலுமே பாதுகாப்பின்மை இருக்கிறது. என் வாழ்க்கையில் பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு ஏற்பட்டதில்லை. சிலர் என்னிடம் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயற்சி செய்தனர்.
நான் விட்டு கொடுக்காமல், பெண்களிடம் கவுரவமாக நடக்க கற்றுக்கொள் என்று கடுமையாக கூறினேன். என்ன தவறு நடந்தாலும் அதை எதிர்ப்பதில் நமது பங்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தலையிடுவார்கள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும். நமது முடிவை கொஞ்சமும் தயங்காமல் தைரியமாக முகத்தில் அறைந்த மாதிரி சொல்ல வேண்டும். தைரியமாக இருந்தாலே பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.' என நித்யா மேனன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் காதலன் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்துள்ளார்.
தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் இணைந்து இருப்பது போன்ற படங்களை தங்களது டுவிட்டர் பக்கத்தில் அடிக்கடி வெளிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நடிகை நயன்தாரா, தனது காதலன் விக்னேஷ்சிவனுடன் நேற்று மாலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தார். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் கால பைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, பகவதி அம்மன் சன்னதி, தர்ம சாஸ்தா சன்னதி, சூரிய பகவான் சன்னதி ஆகியவற்றில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.

இதற்கிடையே நயன்தாரா வந்திருப்பதை அறிந்ததும் ஏராளமான ரசிகர்கள் கோவில் முன்பு திரண்டனர். அவர்கள் நயன்தாராவை பார்க்க முண்டியடித்து கொண்டு ஆர்வம் காட்டினர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது.
இதைதொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர், போலீசார் நயன்தாராவையும், விக்னேஷ் சிவனையும் பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து காரில் அனுப்பி வைத்தனர்.
சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் தலைவர் 168 படத்தில் 24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் பிரபல நடிகை இணைந்து நடிக்கிறார்.
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தை அடுத்து சிவா இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சூரி காமெடி வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் பிரகாஷ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர்.
The enduring beauty #Meena joins the cast of #Thalaivar168@rajinikanth@directorsivapic.twitter.com/vq7RBpkZo9
— Sun Pictures (@sunpictures) December 10, 2019
இந்நிலையில், தற்போது நடிகை மீனா இப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இதற்கு முன் மீனா ரஜினியுடன் எஜமான், வீரா, முத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது 24 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைந்திருக்கிறார்.
தர்பார் படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 168 படத்தில் முதல்முறையாக பிரபல நடிகை இணைந்து நடிக்கிறார்.
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தை அடுத்து சிவா இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். பின்னர் காமெடி நடிகர் சூரி இணைந்திருப்பதாக கூறினார்கள்.
We are delighted to announce that for the first time, @KeerthyOfficial will be acting with Superstar @rajinikanth in #Thalaivar168
— Sun Pictures (@sunpictures) December 9, 2019
@directorsiva#KeerthyInThalaivar168pic.twitter.com/sy4uba5DNd
தற்போது பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் முதல்முறையாக இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள படத்திற்கு பூவையார் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
சமீபத்தில் வெளியான யோகிபாபு மற்றும் சேது நடித்த 50 /50 திரைப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக ஒளித்து கொண்டு இருக்கிறது, படத்தில் மொத்தம் 6 பாடல்கள், அதிலும் குறிப்பாக யோகிபாபு பாடும் கோலமாவ் கோகிலா என்ற பாடலை பூவையார் பாடியுள்ளார்.
இந்த வருடத்தின் சிறந்த பாடல் வரிசையில் இணைந்துள்ளது, படமும் அதே போன்று சிறப்பாக வந்துள்ளதாக படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சாய் தெரிவித்துள்ளார். அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருப்பதாகவும், ஒரு திகில் கலந்த முழுநீள நகைச்சுவையாக யோகிபாபு கலக்கி இருப்பதாகவும், அவர் இந்த படத்தில் ஒரு ரொமான்டிக் ரௌடியாக வருகிறார் என்றும் இந்த படம் நிச்சயம் மக்கள் கொண்டாடும் ஒரு வெற்றி படமாக அமையும் என்று படத்தின் தயாரிப்பாளர் வி.என்.ஆர் தெரிவித்துள்ளார்.

நான்கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், பாலசரவணன், தீனா, நந்தா சரவணன், மயில்சாமி, சாமிநாதன், மதன் பாப் என்று ஒரு காமெடி பட்டாளமே நடித்துள்ளார்கள், படத்திற்கு அலெக்சாண்டர் கதை எழுத, பிரதாப் ஒளிப்பதிவு, தரண் இசை அமைத்துள்ளார். டிசம்பர் மாதம் படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் லிபி சினி கிராப்ட்ஸ் அறிவித்துள்ளது.
இயக்குநரும் தயாரிப்பாளருமான வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வெளியிடும் தேசிய விருது பெற்ற பிரியா கிருஷ்ணசாமியின் 'பாரம்' திரைப்படத்தின் முன்னோட்டம்.
'ஆடுகளம்', 'காக்கா முட்டை', 'விசாரணை', 'வடசென்னை' என்று தொடர் வெற்றிகளைக் கொடுத்ததுடன், தற்போது தனுஷ் நடிப்பில் வெளிவந்து அசுர வெற்றியுடன் ஓடிக்கொண்டிருக்கும் 'அசுரன்' படத்தைக் கொடுத்த இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி, இந்த ஆண்டுக்கான தேசிய விருதை வென்ற ஒரே தமிழ்ப்படம் என்ற பெருமையைப் பெற்ற பிரியா கிருஷ்ணசாமியின் 'பாரம்' படத்தை வெளியிடுகிறது.
இரண்டு முறை தேசிய விருதை வென்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இது குறித்து கூறியதாவது, ‘கிராப்புறங்களில் உள்ள தலைக்கூத்தல் என்ற உறுதியான நம்பிக்கையை பற்றி பேசும் படம்தான் 'பாரம்'. உண்மையில் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கிய இந்தக் கதை பரவலாகப் பலரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான் ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதை படமாக்க ஆரம்பித்தோம்.
இந்த ஆண்டு சிறந்த படத்துக்கான விருது 'பாரம்' படத்துக்கு கிடைத்திருப்பதால், மக்களிடம் இதை கொண்டு செல்ல வேண்டும் என்ற எங்கள் கனவு எளிதில் நிறைவேறும். இதற்காக நான் தேர்வுக் குழுவினருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.
தலைக்கூத்தல் என்ற பெயரில் சொந்தப் பிள்ளைகளாலேயே கொல்லப்படும் பலவீனமான முதியவர்களைப்பற்றி பேசும் 'பாரம்' படத்தில் நடித்திருக்கும் 85க்கும் மேற்பட்டவர்களில் பலரும் இப்போதுதான் முதல்முறையாக கேமரா முன் நிற்பவர்கள். படமும் காட்சியமைப்புகளும் இயல்புக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பு நடந்த கிராமத்திலிருந்தே தேர்வு செய்யப்பட்டவர்கள்தான் இவர்கள். ஆர்.ராஜூ, சுகுமார் சண்முகம், சு.ப.முத்துகுமார், ஜெயலட்சுமி, மற்றும் ஸ்டெல்லா கோபி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
பூனா திரைப்படக் கல்லூரியில் பயின்ற பிரியா கிருஷ்ணசாமி கதை எழுதி இயக்கி படத்தொகுப்பு செய்திருப்பதுடன் ரெக்லெஸ் ரோஸஸ் என்ற தன் சொந்த நிறுவனத்தின் மூலம் ஆன்ட்ரா சொரூப் என்பவருடன் இணைந்து 'பாரம்' படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இசை மற்றும் ஒலி வடிவமைப்பை வேத் நாயர் மேற்கொள்ள, ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். தருண் சர்மா ஒலி வடிவம் மற்றும் மிக்ஸிங் பொறுப்புகளை கவனித்திருக்கிறார். அடிஷனல் ஸ்க்ரீன் பிளே மற்றும் வசனங்களை எழுதியிருப்பவர் ராகவ் மிர்டாத். 'பாரம்' திரைப்படத்தை எஸ்பி சினிமாஸ் விநியோகிக்கிறது.
உடல் நலம் பாதிக்கப்பட்டு 28 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர் தற்போது வீடு திரும்பியுள்ளார்.
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். 90 வயதான இவர், கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் உடல்நலம் தேறியதை அடுத்து, நேற்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 28 நாட்களாக பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தேன். எனக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது டாக்டர்களின் பரிசோதனையில் தெரியவந்தது. டாக்டர்கள் முழுமையாக குணமடைந்தவுடன் வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். தற்போது கடவுளின் ஆசீர்வாதங்களுடன் வீடு திரும்பி உள்ளேன்.

நான் குணம் அடைய வேண்டிய எல்லா நலம் விரும்பிகளுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் பிரார்த்தனைகளும், வாழ்த்துகளும் பலன் அளித்துள்ளன. உங்கள் ஒவ்வொருவரையும் தாழ்மையுடன் தலை வணங்குகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், அதிரடி கதைகளில் நடிக்க விருப்பமில்லாமல், ரூட்டை மாற்றி இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிக்க வந்த புதிதில் காமெடி கதைகளையே தேர்வு செய்தார். முதல் படமான மெரினாவில் நகைச்சுவை கதாநாயகனாக நடித்தார்.
தனுசின் 3 படத்திலும் காமெடி நடிகராக வந்தார். தொடர்ந்து கதாநாயகனாக நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் நகைச்சுவை நடிப்பு பேசப்பட்டது. வசூலையும் அள்ளியது.
ரஜினிமுருகன் படத்திலும் காமெடியில் கலக்கினார். அதன்பிறகு வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல் என்று அதிரடி படங்களுக்கு மாறி வில்லன்களுடன் சண்டை போட்டார். இந்த படங்கள் காமெடி கதைகளுக்கு இணையாக வசூல் பார்க்கவில்லை. மிஸ்டர் லோக்கல் நஷ்டத்தை சந்தித்தது.

சிவகார்த்திகேயன் காமெடி படங்களில் நடிப்பதையே ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்பதால் மீண்டும் காதல் கலந்த காமெடி படங்களில் நடிக்க தயாராகி உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கும் படமொன்றில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இது முழுநீள காமெடி படம் என்று கூறப்படுகிறது.
இதுபோல் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை எடுத்து பிரபலமான நெல்சன் அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டைரக்டு செய்யும் டாக்டர் படமும் காமெடி கதை என்று கூறப்படுகிறது. புதிய இயக்குனர்களிடமும் காமெடி கதைகள் கேட்டு வருகிறார்.
பிரபல பாலிவுட் நடிகரும், 2.0 படத்தில் வில்லனாக நடித்தவருமான அக்ஷய்குமார், என் தேசபக்தியை சந்தேகிப்பதாக கூறி வருத்தமடைந்துள்ளார்.
ரஜினியின் 2.0 படத்தில் வில்லனாக நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை. கனடா குடியுரிமை வைத்துள்ளதால் அவர் ஓட்டுபோடவில்லை என்று சமூக வலைத்தளத்தில் விமர்சனங்கள் கிளம்பின. இதுகுறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் அக்ஷய்குமார் விளக்கம் அளித்து கூறியதாவது:-
“என்னிடம் கனடா பாஸ்போர்ட் இருப்பதை மறைக்கவில்லை. ஆனாலும் 7 வருடங்களாக அந்த நாட்டுக்கு சென்றது இல்லை. நான் நடித்த 14 படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்தன. இனிமேல் படங்களில் வாய்ப்புகள் கிடைக்காது என்று நினைத்தேன். அப்போது கனடாவில் இருக்கும் நண்பர் ஒருவர் சேர்ந்து வேலை செய்யலாம் என்று அந்த நாட்டுக்கு அழைத்தார். அதனால்தான் கனடா பாஸ்போர்ட் வாங்கும் முயற்சியில் இறங்கினேன். ஆனால் எனது 15-வது படம் வெற்றி பெற்றதும் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தேன். எனது பாஸ்போர்ட்டை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை. என் தேசபக்தியை சந்தேகிக்கின்றனர். நான் இந்தியன் என்பதை நிரூபிக்க இந்திய பாஸ்போர்ட்டை காட்ட வேண்டும் என்று சொல்வது வருத்தமாக உள்ளது.

இப்போது இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து இருக்கிறேன். அது விரைவில் கிடைத்து விடும். நான் இந்தியன். எனது மனைவி, மகன் இந்தியர்கள். அவர்களுக்கு கனடா குடியுரிமை வாங்கவில்லை. நான் இந்தியாவில் வாழ்கிறேன். இங்குதான் வரி கட்டுகிறேன்”
இவ்வாறு அக்ஷய்குமார் கூறினார்.
தமிழ், இந்தி மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் ராதிகா ஆப்தே, ஆபாச படங்களில் நடிக்க விரும்ப வில்லை என்று கூறியிருக்கிறார்.
தமிழில் வெற்றிச்செல்வன், ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக வந்தார். டோனி படத்திலும் நடித்துள்ளார்.
இந்த படங்களில் குடும்ப பாங்கான தோற்றங்களில் நடித்து இருக்கிறார். ஆனால் சில இந்தி, ஆங்கில படங்களில் நிர்வாணமாக நடித்தும் படுக்கை அறை காட்சிகளில் நெருக்கமாக நடித்தும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனால் அவருக்கு விலை மாதுவாகவும் கற்பழிக்கப்பட்ட பெண் வேடங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன. இதுகுறித்து ராதிகா ஆப்தே கூறியதாவது:-

“ஏற்கனவே கதைக்கு தேவை என்பதால் அரைகுறை ஆடையில் நடித்தேன். பட்லாபூர் என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்து இருந்தேன். ஆபத்தில் சிக்கும் கணவரை காப்பாற்ற துடிக்கும் கதாபாத்திரம் என்பதால் அதுபோல் நடிக்க வேண்டி இருந்தது. அந்த வேடத்தில் துணிச்சலாக நடித்ததால் ஆபாச கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன.
ஆனால் அவர்கள் சொன்ன கதை மற்றும் கதாபாத்திரத்துக்கு கவர்ச்சி தேவை இல்லை. எனவே அந்த படங்களில் நடிக்க நான் மறுத்து விட்டேன். முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் எல்லை மீறி மோசமான ஆபாச படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். அதில் நடிக்க நான் விரும்பவில்லை.” இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.
மாணிக்ஜெய் கதை திரைக்கதை எழுதி தயாரித்து கதையின் நாயகனாக நடித்து இயக்கி இருக்கும் ‘பரமு’ படத்தின் முன்னோட்டம்.
சக்சஸ் புல் சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் உருவாகி உள்ள படம் "பரமு". இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி தயாரித்து கதையின் நாயகனாக நடித்து இயக்கி உள்ளார் புதுமுகமான மாணிக்ஜெய். பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார் கோவிந்தராஜ், சேலம், ஆட்டையாம்பட்டி, ஊட்டி, திருப்பத்தூர், மற்றும் பெங்களூர் முழுவதும் படமாக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் மோகன்.

மாணிக் ஜெய், சித்ரா, ஷாலினி, சந்தியா, ரஞ்சித், மதி, சின்னமணி பெஞ்சமின் ஆகியோருடன் ஊர் மக்களும் நடித்துள்ளனர். கூலி வேலை செய்து பிள்ளைகளை கல்லூரியில் படிக்க வைக்கும் பெற்றோர்களின் மகன்கள் கல்லூரியில் தறுதலையாக வலம் வந்து மற்றவர்களால் குறிப்பாக முகநூலில் " புள்ளீங்கோ" என அழைக்கப்படும் மாணவர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கூத்தடிக்கும் வாழ்க்கையில் தீடீர் புயல் போல் நடைபெறும் திகிலான சம்பவங்கள் அவர்களது வாழ்க்கையையே புரட்டி போடுகிறது. அதன் பிறகு சஸ்பென்சோடு அவர்களது வாழ்க்கை பயணிக்கின்றது ' இதன் உச்சகட்டம் என்ன ? என்பது தான் பரமு.
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவி, இளவயது வேடங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்து வருகிறாராம்.
அரசியலில் இருந்து விலகி சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த சிரஞ்சீவி, கைதி எண் 150 படத்தை அடுத்து, சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்தார். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அடுத்தபடியாக கொரட்டல்ல சிவா இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
இந்த நிலையில், அடுத்தடுத்து சிரஞ்சீவியை வைத்து படம் இயக்க அவரிடம் கதை சொன்ன சில இயக்குனர்கள், அவரை மீண்டும் இளவட்ட சிரஞ்சீவியாக வெளிப்படுத்தும் வகையிலான கதைகளை சொல்லியிருக்கிறார்கள்.

சிரஞ்சீவியோ, அந்த மாதிரி கதைகளில் நடிக்க மறுத்து விட்டாராம். தொடர்ந்து நடுத்தர வயது கொண்ட கேரக்டர்களில் தோன்றி, சமூகத்துக்கு ஏதாவது செய்தி சொல்ல நினைக்கிறாராம். இதனால் இவருக்கு ஏற்றபடி கதையை மாற்றி வருகிறார்கள்.






