என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது டோலிவுட்டில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
    'கனா' படத்தின் தெலுங்கு ரீ-மேக்கான 'கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி' மூலம் டோலிவுட்டில் கால்பதித்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. இருப்பினும் அதையடுத்து விஜய் தேவரகொண்டாவின் 'வேல்டு பேமஸ் லவ்வர்' படத்தில் நான்கு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார். 

    ஐஸ்வர்யா ராஜேஷ்

    தற்போது நானி நடிக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார். 'நின்னுகோரி' படத்தை இயக்கிய சிவா நிர்வானா இயக்கும் இந்த படத்தில் ரித்துவர்மாவும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். தெலுங்கில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மிஸ் மேச் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    தர்பார் இசை வெளியீட்டு விழாவில் தான் பேசியது சர்ச்சையான நிலையில், அதுகுறித்து நடிகர் லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
    தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கமல் போஸ்டரில் சாணி அடித்தது பற்றி நடிகர் லாரன்ஸ் பேசியது சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கமல் பட போஸ்டரின் மீது சாணி அடித்தது பற்றி பேசியதை சிலர் மிகைப்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். அதி தீவிர ரஜினி ரசிகனாக இருந்த போது சிறுவயதில் தன்னை அறியாமல் கமலுக்கு எதிராக அந்த காரியத்தை செய்ததாகவும் லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

    ராகவா லாரன்ஸ் 

    கமல் மீது அதிக மரியாதை உள்ளது என்றும், தான் பேசியது தவறு என நினைத்தால் யாரிடம் வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தர்பார் இசை வெளியீட்டு விழாவில், பேசியதை முழுமையாக கேட்டால் உண்மை புரியும் எனவும்  அதில் கமலை பற்றி தவறாக ஏதும் பேசவில்லை என்றும் நடிகர் லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படத்தின் தலைப்பு குறித்த வதந்திக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
    டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’விக்ரம்-58’  படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படம் வெளிவர இருக்கிறது. ஆக்‌ஷன் திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. 

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விக்ரம் இப்படத்தில் ஏராளமான கெட்-அப்புகளில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘அமர்’ என பெயரிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. 

    விக்ரம்

    இந்நிலையில், அது குறித்து விளக்கமளித்துள்ள படக்குழு, இன்னும் இந்த படத்திற்கு தலைப்பு முடிவு செய்யப்படவில்லை என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

    இந்த படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கவுள்ள ’பொன்னியின் செல்வன்’ படத்தில் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது
    17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தோ சினி அப்ரிசியே‌ஷன் பவுண்டே‌ஷன்’ சார்பில், 17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, வரும், 12-ந் தேதி, கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது. 19-ந்தேதி வரை நடக்கும் விழாவில், 55 நாடுகளை சேர்ந்த, 130 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த விழாவிற்கு, தமிழக அரசு சார்பில், 75 லட்சம் ரூபாய் நிதியுதவி தரப்பட்டுள்ளது. 

    விழாகுறித்து, நிர்வாகிகள் கூறியதாவது:- சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க விழா, கலைவாணர் அரங்கிலும், நிறைவு விழா தேவி தியேட்டரிலும் நடக்கிறது. தமிழ் படங்களின் பிரிவில் திரையிட சமர்பிக்கப்பட்ட, 19 படங்களில், 12 படங்கள் தேர்வாகியுள்ளன. தமிழில், ஒத்த செருப்பு, அடுத்தசாட்டை, அசுரன், பக்ரீத், ஹவுஸ்ஓனர், ஜிவி, கனா, சீதக்காதி, மெய், பிழை, சில்லுகருப்பட்டி, தோழர் வெங்கடேசன் ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன. 

    விழாவில், முதல் படமாக, பால்மே தி ஆர், தி பாராசைட் படங்கள் திரையிடப்படுகின்றன. இதில், ஜெர்மனி, ஹங்கேரி, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, ஈரான், தைவான் நாடுகளின் படங்களும் திரையிடப்படும். சர்வதேச அளவில் கவனம் பெற்ற பல படங்கள் இதில் இடம் பெறும். இந்த விழாவில் முதல் முறையாக, அசர்பைசான் நாட்டின், தி பிரா படமும், நியூசிலாந்தின், தி ஸ்ட்ரே உள்ளிட்ட படங்களும் திரையிடப்படுகின்றன. 

    போஸ்டர்

    அதே போல, அசாமி, குஜராத்தி மொழிப் படங்களும், இருளர்களின் மொழியில் உருவான, நேதாஜி படமும் திரையிடப்படுகின்றன. படங்கள் தேவி, தேவி பாலா, அண்ணா, காசினோ, ரஷ்யன் கலாச்சார மையம், தாகூர் பிலிம்சென்டர் ஆகிய இடங்களில் திரையிடப்பட உள்ளன. விழாவில், 90 வயதிலும் நடித்துக் கொண்டிருக்கும், சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்க உள்ளோம்.

    இவ்வாறு, அவர்கள் கூறினர்.
    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய யோகிபாபு, திருமணம் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.
    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படம் அடுத்த மாதம் வெளியாகிறது. லைக்கா புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்து இருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், சுனில் ஷெட்டி, விவேக், ராகவா லாரன்ஸ், அருண் விஜய், யோகி பாபு, டைரக்டர்கள் ‌ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், இசை அமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டனர். தர்பார் படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். படத்தின் கதாநாயகியான நயன்தாரா வழக்கம்போல் இந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. 

    விவேக், யோகிபாபு

    இந்த விழாவில் பேசிய நகைச்சுவை நடிகர் யோகிபாபு, “'பாட்ஷா' படத்திற்காக 4 ரூபாய் டிக்கெட்டில் அடித்துக் கொண்டுபோய் படம் பார்த்தவனுக்கு அவருடன் சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சி தராதா?. ரஜினி சார் எனக்கு நிறைய சொல்லி கொடுத்தார். அவர் படத்துக்கு காமெடி நடிகரே தேவை இல்லை. அவரே சூப்பரா காமெடி பண்ணுவார். யோகிபாபுவிடம் திருமணம் குறித்த கேள்வி கேட்கப்பட்டபோது, நாட்டுல எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும், எனக்கு கல்யாணம் நடக்காதது தான் பிரச்சனையா? கூடிய விரைவில் எனக்கு திருமணம் நடந்து விடும். உனக்கு தை மாதம் கல்யாணம் நடக்கும் நான் வருகிறேன் என ரஜினி சார் என்னிடம் சொன்னார். இவ்வாறு யோகிபாபு கூறினார்.
    தனுஷின் மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ பாடல் என்ற சாதனையை படைத்துள்ளது.
    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி, வரலட்சுமி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் மாரி-2. இந்த படத்தில் டோவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர், காளி வெங்கட், வித்யா பிரதீப், கல்லூரி வினோத் மற்றும் பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

    இந்த படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த பாடல் யூ-டியூப் தளத்தில் 71.5 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது . தற்போது சர்வதேச யூ-டியூப் பட்டியலில் உலக அளவில் 2019-ம் ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட பாடல் காட்சிகள் பட்டியலில் ரவுடி பேபி 7-வது இடத்தை பிடித்துள்ளது. 

    தனுஷ், சாய் பல்லவி

    மேலும் யூ-டியூப் நிறுவனம் இந்திய அளவில் 2019-ம் ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட பாடல் காட்சிகள் பட்டியலில் ரவுடி பேபி பாடல் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை வெளியான தென்னிந்திய மொழி பாடல்களில் அதிக பார்வையாளர்களை கடந்து ரவுடி பேபி பாடல் தொடர்ந்து சாதனை படைத்தது வருகிறது.
    ஐதராபாத்தில் பெண் டாக்டரை எரித்து கொன்றவர்களை என்கவுண்ட்டர் செய்த போலீஸ் அதிகாரிகளை பாராட்டி நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    ஐதராபாத்தில் நடந்த என்கவுண்ட்டர் சம்பவத்தை நடிகை நயன்தாரா பாராட்டி இருக்கிறார். ‘சரியான நேரத்தில் வழங்கப்பட்ட நீதி’, என்று அவர் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று இன்று உண்மையாகி இருக்கிறது. உண்மையான நாயகர்களால் தெலுங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டி இருக்கிறார்கள். 

    காட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான சட்டத்துக்கு புறம்பாக, பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராக தீர்க்கமான பதில் அளித்துள்ளார்கள். பெண்களின் முன்னேற்றத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை. இந்த நடவடிக்கை என்பது மிக சரியாக வழங்கப்பட்ட நீதி. இதுவே நியாயமான நடவடிக்கை என்று அழுத்தி சொல்வேன். நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த நாளை, தேதியை பெண்களுக்கு சரியான நியாயம் கிடைத்த நாளாக குறித்துவைத்து கொள்ளலாம். 

    நயன்தாரா

    பெண்களுக்கு இது சற்றே ஆறுதல். அவர்களுக்கு எதிராக வன்புணர்ச்சி செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு இந்த நடவடிக்கை சற்றேனும் பயம் தரும். மனிதம் என்பது அனைவரிடத்திலும் சரிசமமாக மரியாதை தருவதும், அன்பு செலுத்துவதும், இரக்கம் கொள்வதுமே ஆகும். நீதி கிடைத்திருக்கும் இத்தருணம் மகிழ்ச்சியே என்றாலும், நாம் நம் குழந்தைகளுக்கு பெண் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். 

    குறிப்பாக நம் ஆண் குழந்தைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பதை கற்றுத்தர வேண்டும். பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே நாயகன் என்பதை அழுத்தமாக அவன் மனதில் பதிய வைக்கவேண்டும். எதிர்கால உலகை பெண் மீதான வன்முறைக்கு எதிரான, அன்பான உலகமாக மாற்ற வேண்டியது நம் கடமை. அப்போது தான் நாம் நிம்மதியான பெருமூச்சுடன் அன்பை அனைவரிடத்திலும் பகிர்ந்துகொள்ள முடியும். 

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தர்பார் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், மக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது என்று கூறினார்.
    தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று மாலை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘தர்பார்’.  இப்படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

    இதில் நடிகர் ரஜினி பேசும் போது, ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய ரமணா படம் எனக்கு பிடித்தது, கஜினி படம் பார்த்து இவர் படத்தில் நடிகனும் ஆசை பட்டேன், ஆனால், காலம் அப்போது அமையவில்லை. தற்பொழுது தர்பார் படம் மூலம் அமைந்திருக்கு.

    என்னுடைய பிறந்தநாள் இந்த வருடம் முக்கியமான பிறந்த நாள், ரசிகர்கள் ஆடம்பரமாக என் பிறந்த நாள் விழாவை கொண்டாட வேண்டாம்,  அதற்கு பதிலாக ஏழைகளுக்கு உதவுங்கள்.  

    இயக்குநர் பாலசந்தர் தான் எனக்கு ரஜினி காந்த் பெயர் வைத்தார், ஒரு நல்ல நடிகனுக்கு தான் இந்த பெயர் வைக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அவருடைய நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன். ரஜினியை வைத்து படம் எடுத்தால் நஷ்டம் அடையாது என்று என் மேல் நம்பிக்கை வைத்தவர்கள். அது போல் மக்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது.

    ஒரு வெற்றி வேண்டும் என்றால் நேரம், காலம், சந்தர்ப்ப சூழ்நிலை அந்த நேரத்தில் இருக்கும் மனிதர்கள் இருந்தால் தான் அந்த வெற்றிக் கிடைக்கும்.   அதிகம்பேர் எதிர்மறையாக பேசுகிறார்கள். ஆனால் அவர்களிடமும் நாம் அன்பாக இருப்போம், அன்பு செலுத்துவோம் என்றார்.
    தர்பார் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ், என் தலைவனை பற்றி தப்பா பேசுனா நான் பேசுவேன் என தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தர்பார் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் பேசியதாவது:

    பப்ளிசிட்டியின் பெயர் சூப்பர் ஸ்டார் ரஜினி. என் தலைவனை பற்றி தப்பா பேசுனா நான் பேசுவேன்.

    அரசியலை நாகரிகமாக பேசுங்க. எனக்கு அரசியல் தெரியாது. ரஜினி மேல் உள்ள ஆசையில் பேசினேன் ஒருத்தர் மட்டும் என் தலைவரை தப்பா பேசிட்டு இருக்காரு... அப்படி பேசக்கூடாது.. அவரெல்லாம் நாட்டுக்கு கேடு.

    கமல் போஸ்டருக்கு நான் சாணி பூசி இருக்கேன். அது அப்போ விவரம் தெரியாதபோது செய்தது. ஆனால், கமல், ரஜினி இவ்வளவு ஒண்ணா இருப்பாங்க என்று எனக்கு தெரியாது.

    ரஜினி அதிசயம் நடக்கும் என சொன்னதை அனைவரும் பெரிய விஷயமாக பார்க்கின்றனர். ஆனால் ரஜினியே நமக்கு கிடைத்த பெரிய் அதிசயம், அற்புதம்தான் என குறிப்பிட்டார்.
    தர்பார் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் முருகதாஸ், ரஜினியை இயக்கியது நிலவில் இறங்கியது போல் உள்ளது என தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘தர்பார்’.  இப்படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். 

    தர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய இந்த பாடல் யூடியூபில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

    தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று மாலை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் இயக்குனர் முருகதாஸ் பேசியதாவது:

    நான் ரஜினியின் சீனியர் ஃபேன்.

    எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினி என்பார்கள். ஆனால் அவருக்கும் ரஜினிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எம்ஜிஆர், ரஜினி வித்தியாசமானவர்கள்.

    தமிழ், இந்தி என அனைத்து நடிகர்களிடமும் ரஜினியின் சாயல் இருக்கும். தலைவர் ரசிகர்கள், என் ரசிகர்கள் கிடையாது. ஏனென்றால் நானே ரஜினி ரசிகன்.

    நிலவை காட்டி சாப்பு ஊட்டுவார்கள். ஆனால், ரஜினியை இயக்கியது நிலவில் இறங்கியது போல் உள்ளது என தெரிவித்தார்.
    சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஆதித்ய வர்மன், ரேணு சௌந்தர் முன்னணி பாத்திரங்களில் நடிக்கும் மஞ்ச சட்ட, பச்ச சட்ட படத்தின் முன்னோட்டம்.
    “கல்கி” விருது பெற்றதன் மூலம் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தவர் எழுத்தாளர் தம்பா குட்டி பாம்ராஷ்கி. தற்போது இவர் முதல் முறையாக “மஞ்ச சட்ட, பச்ச சட்ட” எனும் நையாண்டி கலந்த முழு நீள காமெடி திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

    இயக்குநர் தம்பா குட்டி பாம்ராஷ்கி படம் குறித்து பேசுகையில், “மஞ்ச சட்ட பச்ச சட்ட” படம் நக்கல், நையாண்டி கலந்த முழு நீள காமெடி படமாக உருவாகவுள்ளது. படத்தின் முக்கிய அம்சமாக நகைச்சுவையை மையப்படுத்தி இப்படம் உருவாகவிருக்கிறது. புத்திசாலித்தனமான பேச்சுக்கள் நகைச்சுவையாய் மாறும் அடிப்படையை மையமாக கொண்டதாக இப்படத்தின் கதை அமைந்துள்ளது. 

    இந்த வகை படங்கள் மற்றும் சீரிஸ்கள் உலகம் முழுதும் பெரிதும் பிரபலம். நக்கல் நையாண்டி கலந்து இருக்கும் இந்த வகை படம் தமிழில் ஒரு புதிய அனுபவத்தை தருவதுடன் புன்னகையை நெஞ்சில் ஏற்றுவதாகவும் இருக்கும் என்றார்.

    சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஆதித்ய வர்மன், ரேணு சௌந்தர் முன்னணி பாத்திரங்களில் நடிக்க, குரு சோமசுந்தரம் மிக முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் லான்சல் டெல் வாஸ்தோ, சின்னசாமி மௌனகுரு, ராஜ்குமார், பெக்கி ஷிவ் ஷங்கர், அதியா கதிர் பாலகுரு, ஏகே சரவணன், யுவராம கிருஷ்ணன், அமீர், ஏகேடி முருகன், ஏகே.ஜெயவேல் மாரி ஆகியோர் நடிக்கிறார்கள்.

    இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திரா இப்படத்திற்கு இசையமைக்க, எம்ஆர்எம் ஜெய் சுரேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். தியாகு எடிட்டிங் செய்ய, சிவ யோகா கலை இயக்கத்தை கையாள்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில்  நடக்கவுள்ளது.
    தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாறை படமாக்க இயக்குனர்கள் மணிரத்னம், முருகதாஸ் இருவரும் போட்டிபோடுகிறார்கள்.
    விஜய் நடிப்பில் வெளியான ‘கத்தி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் சுபாஸ்கரன் அல்லிராஜா. லைகா புரொடக்‌ஷன்ஸ் மூலம் பல்வேறு படங்களை இவர் தயாரித்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளியான ‘2.0’ படத்தை தயாரித்துள்ள இந்நிறுவனம், தற்போது அவர் நடிக்கும் ‘தர்பார்’ படத்தையும் தயாரித்து வருகிறது. 

    மேலும், கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ‘இந்தியன் 2’ படத்தையும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தையும் தயாரித்து வருகிறது. இந்நிலையில், மலேசியாவில் உள்ள ஏம்ய்ஸ் பல்கலைக்கழகம், சுபாஸ்கரனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. 

    இதற்கான பாராட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முருகதாஸ் பேசியதாவது:- கத்தி படத்தின்போது சுபாஸ்கரனை ஒரு தயாரிப்பாளராக மட்டுமே தெரியும். ஆனால் லண்டனுக்கு சென்றபின்னர் அவரது பின்புலம் தெரியவந்தது. அவருடன் சமீபத்தில் 4 நாட்கள் உடன் இருந்தபோது அவரது வாழ்க்கையை முழுவதுமாக சொன்னார். 

    பத்திரிகையாளர் சந்திப்பு

    தாய்நாட்டில் இருந்து வெளியேறிய ஒருவன் ஒன்றுமே இல்லாமல் தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் இந்த நிலைக்கு வந்துள்ளார். அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க ஆர்வமாக இருக்கிறேன்’ என்றார். 

    முன்னதாக பேசிய இயக்குனர் மணிரத்னமும் சுபாஸ்கரனின் வாழ்க்கையை படமாக்க திட்டமிட்டு இருப்பதாக கூறினார். இதுபற்றி முருகதாசிடம் கேட்டதற்கு இருவருமே எடுக்கலாம்’ என்றார்.
    ×