என் மலர்

  நீங்கள் தேடியது "Rowdy Baby"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. #RowdyBaby #Dhanush #Saipallavi
  பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டோவினோ தாமஸ், கிருஷ்ணா, வரலட்சுமி, ரோபோ சங்கர், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாரி 2’. 

  யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் ‘ரவுடி பேபி’ என்ற பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் வெளியான சில நாட்களிலேயே, ‘ரவுடி பேபி’ பாடல் வீடியோவை யூடியூப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்கள். தொடக்க முதலே பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.  தற்போது வரை ரவுடி பேபி பாடலை 200 மில்லியன் (20 கோடி) பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். இதன்மூலம் தமிழ் சினிமாவில் 20 கோடி பார்வையாளர்களை பெற்ற முதல் வீடியோ பாடல் என்ற சாதனையை ‘ரவுடி பேபி’ படைத்துள்ளது. மேலும் தென்னிந்திய திரையுலகில் அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட யூடியூப் வீடியோ பட்டியலில் ‘ரவுடி பேபி’ முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. RowdyBaby #Dhanush #Saipallavi #Maari2

  ரவுடி பேபி பாடல்:

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனை படைத்துள்ளது. #RowdyBaby #Dhanush #Saipallavi
  பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டோவினோ தாமஸ், கிருஷ்ணா, வரலட்சுமி ரோபோ சங்கர், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாரி 2’. யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான இந்த படத்தில் ‘ரவுடி பேபி’ என்ற பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் வெளியான சில நாட்களிலேயே, ‘ரவுடி பேபி’ பாடலின் வீடியோவை யூடியூப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்கள். பாடலும் பெரிய வைரலாக பரவியது.

  மேலும் சர்வதேச பில்போர்ட் இசைப் பட்டியலிலும் இடம்பெற்று சாதனை புரிந்தது. தமிழ் சினிமாவில் அதிக பார்வையாளர்கள் கொண்ட பாடலாக ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் இருந்து வந்தது. இதுவும் ‘3’ படத்துக்காக தனுஷ்-அனிருத் கூட்டணி இணைந்து உருவாக்கியது. இந்த பாடல் தற்போது வரை சுமார் 175 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்த சாதனையை ‘ரவுடி பேபி’ வீடியோ பாடல் உடைத்துள்ளது.  தற்போது 183 மில்லியன் பார்வைகளோடு, தென்னிந்திய திரையுலகில் அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட யூடியூப் வீடியோ என்ற இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் ‘பிடா’ படத்தின் ‘வச்சிந்தே’ வீடியோ பாடல் 182 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு முதல் இடத்தில் இருந்து வந்தது. இந்த சாதனையையும் இன்று காலை 183 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியதன் மூலம் தகர்த்தது. #RowdyBaby #Dhanush #Saipallavi #Maari2

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தனுஷ் பாடலுக்கு அதரவு தெரிவித்து ட்விட் செய்த நடிகையும், அரசியல்வாதியுமான ரம்யாவை, ரசிகர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். #Dhanush #RowdyBaby #Ramya
  பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான படம் ‘மாரி 2’. யுவன் இசையமைப்பில் வெளியான இந்த படத்தில் ‘ரவுடி பேபி’ என்ற பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

  படம் வெளியான சில நாட்களிலேயே, ‘ரவுடி பேபி’ பாடலின் வீடியோவை யூடியூப் பக்கத்தில் அதிகாரப் பூர்வமாக வெளியிட்டார்கள். இந்த பாடல் பெரும் வைரலாக பரவியது. மேலும், சர்வதேச அளவிலான பில்போர்ட் இசைப் பட்டியலிலும் இடம் பெற்று சாதனை புரிந்தது. பில்போர்ட் இசைப்பட்டியல் என்பது, அந்தந்த வாரத்தில் மக்களால் அதிகம் கேட்கப்பட்ட, விரும்பப்பட்ட பாடல்களின் பட்டியல். தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் பேர் பார்த்த பாடல் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தி உள்ளது. 

  விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் சாதனையை ‘ரவுடி பேபி’ பாடல் முறியடித்துள்ளது. தற்போது வரை தமிழ் சினிமாவில் முதன்முதலாக 10 கோடி பார்வைகளைத் தொட்ட வீடியோ பாடல் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளது.  இந்த சாதனையை பாராட்டி நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான குத்து ரம்யா ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். அற்புதமான பாடலை 100 மில்லியன் பேர் பார்த்துள்ளனர் என்றும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை நினைத்து மகிழ்ச்சியும், பெருமையும் அடைவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு கன்னட ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். நடிகை குத்து ரம்யாவை கண்டித்து கன்னட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

  பிரபல கன்னட நடிகர் யஷ் நடித்து வெளியான கே.ஜி.எப். படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பல மொழிகளில் அந்த படத்திற்கு ஆதரவு கிடைத்துள்ளது. பாகிஸ்தான் நாட்டிலும், தற்போது அந்த படம் வெளியாகி உள்ளது. அந்த படத்தை பற்றி அவர் பேசி இருக்கலாம். ஆனால் அப்படி பேசவில்லை. சொகுசு விடுதியில் தங்கி இருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தாக்கிக் கொண்டதை பற்றியும் அவர் பேசி இருக்கலாம். அதுவும் பேசவில்லை. ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை பற்றி மட்டும் பேச அவருக்கு நேரம் இருக்கிறது. இதற்காக அவருக்கு எங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் வெளியான 2 வாரங்களில் யூடியூப்பில் 10 கோடி பார்ரைவயாளர்களை பெற்றுள்ளது. #RowdyBaby #Dhanush #Saipallavi
  பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் படத்தில் இடம்பெற்றிருந்த ‘ரவுடி பேபி’  பாடல் தொடர்ந்து சாதனைகளை படைத்து வருகிறது.

  கடந்த ஜனவரி 2-ஆம் தேதி யூடிப்பில் வெளியான ‘ரவுடி பேபி’  பாடல், சுமார் 2 வாரங்களில் 10 கோடி பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. அத்துடன் இந்த பாடலுக்கு 10 லட்சம் லைக்சும் கிடைத்துள்ளது. இதுகுறித்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவரது ட்விட்டர் பக்கத்தில், `இந்த படத்தில் இடம்பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், அனைவருக்கும் நன்றி, உண்மையிலேயே இது மிகப்பெரிய விஷயம், எல்லா புகழும் இறைவனுக்கே' என்று குறிப்பிட்டுள்ளார்.


  பாடகி தீ உடன் தனுஷ் எழுதி பாடிய இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #RowdyBaby #Dhanush #Saipallavi #Maari2

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. #RowdyBaby #Dhanush #Saipallavi
  பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் படத்தில் இடம்பெற்றிருந்த ‘ரவுடி பேபி’  பாடல் தொடர்ந்து சாதனைகளை படைத்து வருகிறது.

  கடந்த ஜனவரி 2-ஆம் தேதி யூடிப்பில் வெளியான ‘ரவுடி பேபி’  பாடல், விஜய்யின் மெர்சல் படத்தில் இடம்பெற்றிருந்த ஆளப்போறான் தமிழன் வீடியோ பாடலை முந்தியுள்ளது. ஆளப்போறான் தமிழன் யூடியூப்பில், 9 கோடியே 10 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. ரவுடி பேபி பாடல் தற்போது வரை 9 கோடியே 65 லட்சத்தை தாண்டியுள்ளது. விரைவில் 10 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த வீடியோ பாடலுக்கு 10 லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது.  முன்னதாக, தி ஹாலிவுட் ரிபோர்ட்டர் குழுமத்தின் பில்போர்டில் டாப் ஐந்து பாடல்களில் ஒன்றாக ரவுடி பேபி இடம்பிடித்திருந்தது. பில்போர்டின் இந்த வரிசையில் இடம்பெறும் முதல் தமிழ் வீடியோ பாடல் ‘ரவுடி பேபி’ என்பது குறிப்பிடத்தக்கது. 

  பாடகி தீ உடன் தனுஷ் எழுதி பாடிய இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். #RowdyBaby #Dhanush #Saipallavi #Maari2

  ரவுடி பேபி வீடியோ பாடல்:

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடலுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. #RowdyBaby #Dhanush #Saipallavi
  பிரபல அமெரிக்க ஊடகமான தி ஹாலிவுட் ரிபோர்ட்டர் குழுமத்தின் `பில்போர்ட்’ உலக அளவில் இசை தொடர்பான செய்திகளுக்கு புகழ்பெற்றது. சர்வதேச அளவில் ரேடியோ, ஆன்லைன் ஆல்பங்கள், யூடியூப் என வெவ்வேறு ஊடகங்களில் டாப் இடம்பிடித்த பாடல்களின் தரவரிசைப் பட்டியலை வாரந்தோறும் வெளியிடுவது வழக்கம்.

  அந்த வகையில் யூடியூப்பில் வெளிவந்த வீடியோ பாடல்கள் தரவரிசையில் யுவன் சங்கர் ராஜா இசையில் கடந்த 21ந் தேதி வெளியான `மாரி 2’ படத்தில் இடம்பெற்ற `ரவுடிபேபி’ பாடல் பில்போர்டின் டாப் ஐந்து பாடல்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. கடைசியாக. தனுஷ் - அனிருத் காம்போவின் கொலவெறி பாடலின் மேக்கிங் வீடியோ பில் போர்டில் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.  பில்போர்டின் இந்த வரிசையில் இடம்பெறும் முதல் தமிழ் வீடியோ பாடல் ‘ரவுடி பேபி’ என்பது குறிப்பிடத்தக்கது. பாடகி தீ உடன் தனுஷ் எழுதிப் பாடிய இந்தப் பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். இந்த பாடலின் வீடியோ சென்ற வாரம் யூடியூபில் வெளியானது. வெளியான ஒரே நாளில் 7 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற இப்பாடல் 8 கோடி வியூவ்ஸ் தாண்டி யூடியூப்பைக் கலக்கி வருகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் படைத்த சாதனை வெளியாகியுள்ளது. #Maari2 #RowdyBaby #Dhanush
  மாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலாஜி மோகன், தனுஷ் கூட்டணியில் வெளியான படம் ‘மாரி 2’. இதில், தனுஷுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். மேலும் வரலட்சுமி, கிருஷ்ணா, டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். 
  யுவன் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் மிகுந்த கவனம் பெற்றன. குறிப்பாக ரவுடி பேபி பாடல் ஏகோபித்த வரவேற்பு பெற்றது.

  இந்த பாடல் படைத்த சாதனையை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பகிர்ந்துள்ளார். அதில், ரவுடி பேபி பாடலின் லிரிக்கல் வெர்ஷன் வெளியாகி 35 நாளில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற முதல் பாடல் என்ற பெருமையை பெற்றது.  சமீபத்தில் வெளியான வீடியோ சாங் ஒரே நாளில் 7 மில்லியன் பார்வையாளர்களையும், 2 லட்சத்து 88 ஆயிரம் லைக்குகளும் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை யுவன், தனுஷ் மற்றும் படக்குழுவினர் பகிர்ந்து வருகின்றனர். #Maari2 #RowdyBaby
  ×