search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தனுஷ் பாடலுக்கு ஆதரவு - குத்து ரம்யாவுக்கு ரசிகர்கள் கண்டனம்
    X

    தனுஷ் பாடலுக்கு ஆதரவு - குத்து ரம்யாவுக்கு ரசிகர்கள் கண்டனம்

    தனுஷ் பாடலுக்கு அதரவு தெரிவித்து ட்விட் செய்த நடிகையும், அரசியல்வாதியுமான ரம்யாவை, ரசிகர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். #Dhanush #RowdyBaby #Ramya
    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான படம் ‘மாரி 2’. யுவன் இசையமைப்பில் வெளியான இந்த படத்தில் ‘ரவுடி பேபி’ என்ற பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    படம் வெளியான சில நாட்களிலேயே, ‘ரவுடி பேபி’ பாடலின் வீடியோவை யூடியூப் பக்கத்தில் அதிகாரப் பூர்வமாக வெளியிட்டார்கள். இந்த பாடல் பெரும் வைரலாக பரவியது. மேலும், சர்வதேச அளவிலான பில்போர்ட் இசைப் பட்டியலிலும் இடம் பெற்று சாதனை புரிந்தது. பில்போர்ட் இசைப்பட்டியல் என்பது, அந்தந்த வாரத்தில் மக்களால் அதிகம் கேட்கப்பட்ட, விரும்பப்பட்ட பாடல்களின் பட்டியல். தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் பேர் பார்த்த பாடல் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தி உள்ளது. 

    விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் சாதனையை ‘ரவுடி பேபி’ பாடல் முறியடித்துள்ளது. தற்போது வரை தமிழ் சினிமாவில் முதன்முதலாக 10 கோடி பார்வைகளைத் தொட்ட வீடியோ பாடல் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளது.



    இந்த சாதனையை பாராட்டி நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான குத்து ரம்யா ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். அற்புதமான பாடலை 100 மில்லியன் பேர் பார்த்துள்ளனர் என்றும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை நினைத்து மகிழ்ச்சியும், பெருமையும் அடைவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு கன்னட ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். நடிகை குத்து ரம்யாவை கண்டித்து கன்னட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    பிரபல கன்னட நடிகர் யஷ் நடித்து வெளியான கே.ஜி.எப். படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பல மொழிகளில் அந்த படத்திற்கு ஆதரவு கிடைத்துள்ளது. பாகிஸ்தான் நாட்டிலும், தற்போது அந்த படம் வெளியாகி உள்ளது. அந்த படத்தை பற்றி அவர் பேசி இருக்கலாம். ஆனால் அப்படி பேசவில்லை. சொகுசு விடுதியில் தங்கி இருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தாக்கிக் கொண்டதை பற்றியும் அவர் பேசி இருக்கலாம். அதுவும் பேசவில்லை. ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை பற்றி மட்டும் பேச அவருக்கு நேரம் இருக்கிறது. இதற்காக அவருக்கு எங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
    Next Story
    ×