என் மலர்
சினிமா

ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் படைத்த சாதனை வெளியாகியுள்ளது. #Maari2 #RowdyBaby #Dhanush
மாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலாஜி மோகன், தனுஷ் கூட்டணியில் வெளியான படம் ‘மாரி 2’. இதில், தனுஷுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். மேலும் வரலட்சுமி, கிருஷ்ணா, டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
யுவன் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் மிகுந்த கவனம் பெற்றன. குறிப்பாக ரவுடி பேபி பாடல் ஏகோபித்த வரவேற்பு பெற்றது.
இந்த பாடல் படைத்த சாதனையை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பகிர்ந்துள்ளார். அதில், ரவுடி பேபி பாடலின் லிரிக்கல் வெர்ஷன் வெளியாகி 35 நாளில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற முதல் பாடல் என்ற பெருமையை பெற்றது.
Thank you all for the love :) 🌹 pic.twitter.com/3QUGyKUYf1
— Yuvanshankar raja (@thisisysr) January 3, 2019
சமீபத்தில் வெளியான வீடியோ சாங் ஒரே நாளில் 7 மில்லியன் பார்வையாளர்களையும், 2 லட்சத்து 88 ஆயிரம் லைக்குகளும் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை யுவன், தனுஷ் மற்றும் படக்குழுவினர் பகிர்ந்து வருகின்றனர். #Maari2 #RowdyBaby
Next Story






