என் மலர்
சினிமா செய்திகள்
சமூக வலைத்தளத்தில் நடிகைகள் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டேவின் ரசிகர்கள் மோதிக் கொண்டுள்ளனர்.
சமூக வலைத்தளத்தில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் அடிக்கடி சண்டை போட்டு வருவார்கள். அந்த வரிசையில் தற்போது சமந்தா ரசிகர்களும், பூஜா ஹெக்டே ரசிகர்களும் மோதி கொண்டனர்.
நேற்று பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் சமந்தா புகைப்படத்தை பதிவிட்டு அவர் அழகாக இல்லை என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை பார்த்து சமந்தாவின் ரசிகர்கள் கோபம் அடைந்தனர்.
அது பற்றி விளக்கம் அளித்த பூஜா, தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் ஆகிவிட்டது என்று கூறி இருந்தார். அதன் பிறகு சற்று நேரம் கழித்து டெக்னிக்கள் டீம் உதவியுடன் அதை மீட்டதாக தெரிவித்தார். போடப்பட்ட பதிவுகளையும் கணக்கில் இருந்து நீக்கிவிட்டார் பூஜா. ஆனாலும் பூஜா ஹெக்டே மன்னிப்பு கேட்கவேண்டும் என சமந்தா ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டனர்.
இந்நிலையில் சமந்தா நடித்த ஓ பேபி படத்தின் இயக்குனர் நந்தினி ரெட்டி இன்ஸ்டாகிராமில் சமந்தாவை பாராட்டி ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில் கமெண்டில் சமந்தா, சின்மயி மற்றும் நந்தினி ரெட்டி மூவரும் பூஜா ஹெக்டேவை விமர்சிக்கும் வகையில் பேசிக்கொண்டனர். அந்த கமெண்டுகளை பின்னர் நீக்கிவிட்டனர்.
அதன் ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வைரலானது. பூஜா ஹெக்டே தவறு செய்தாரா என உறுதியாக தெரியாத நிலையில் இப்படி சமந்தா-சின்மயி மற்றும் நந்தினி ரெட்டி மோசமாக பேசியிருப்பது ரசிகர்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
இதனால் இருவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மிகவும் மோசமாக சண்டை போட்டுக் கொண்டனர்.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி 48 கோடி ரூபாயில் அலுவலகம் அமைத்து இருக்கிறார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், மணிகர்ணிகா பிலிம்ஸ் என்ற பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்துக்காக மும்பையின் பெரும்புள்ளிகள் இருக்கும் பாந்த்ராவின் பாலி ஹில் பகுதியில் ஒரு மாளிகையை வாங்கி வடிவமைத்துள்ளார். இ
இதற்காக அவர் செலவழித்திருக்கும் தொகை 48 கோடி ரூபாய். மூன்று மாடி கொண்ட இந்த மாளிகையைப் பற்றி சமீபத்தில் பேசியுள்ள கங்கனா ரனாவத், "நான் சொந்தமாக ஒரு ஸ்டுடியோவைக் கட்ட நினைத்தேன். ஆனால் நடுவில் 'ரங்கூன்', 'சிம்ரன்' உள்ளிட்ட சில படங்கள் ஓடவில்லை. அதனால் சற்று தள்ளிப் போட்டேன். 'மணிகர்ணிகா'வுக்குப் பிறகும் நிலை மீண்டும் மாறியது. எனக்குப் பிடித்த விதத்தில் நான் மொத்தமாக என் மாளிகையைக் கட்டமைத்துக் கொண்டேன்.
எனது ஆடிட்டர், ஏன் இந்த சொத்தில் பணத்தைப் போடுகிறீர்கள். வழக்கமாக நீங்கள் எந்த தயாரிப்பு நிறுவனத்துக்காக பணியாற்றுகிறீர்களோ அவர்களே உங்களுக்கான இடத்தை வாடகைக்கு எடுத்துத் தருவார்களே. இந்த பணத்தை வைத்து பத்திரங்களில் முதலீடு செய்யுங்கள் அல்லது உணவகத்தை வாங்குங்கள். குறைந்தது 40-50 லட்சம் வருடத்துக்கு வாடகையே கிடைக்கும் என்றார்.
என் பெற்றோர் உட்பட அனைவருமே நான் பணத்தை வீணடிக்கிறேன் என்று நினைத்தனர். ஆனால் இப்போதும் இது எனக்கு ஒரு சவால் தான். இது நல்ல முதலீடா இல்லையா என்பதை நானே போகப் போகப் தெரிந்துகொள்வேன்" என்று கூறியுள்ளார்
வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை என்று விவேக் கூறியுள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு மற்றொரு தலைவலியாக மாறியுள்ளது.
இந்நிலையில் வெட்டுக்கிளிகளை வைத்து பலரும் மீம்ஸ் உருவாக்கி வருகின்றனர். அதில் நடிகர் விவேக் ரன் படத்தில் நடித்த காட்சியை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ் அவருக்கு கண்ணுக்கு தென்பட, அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ஒரு படத்தை வச்சிக்கிட்டு என்னவெல்லாம் சொல்றீங்க. யாரை எல்லாம் ஓட்டுரீங்க. மீம்ஸ் பசங்க ஐடியா உள்ள பசங்க” என்று பாராட்டியுள்ளார்.

மற்றொரு ட்வீட்டில் மீம்ஸ் கிரியேட்டர்களின் தலைவர் என்று வடிவேலுவைப் புகழ்ந்து ட்வீட் செய்திருப்பதைக் குறிப்பிட்டிருக்கும் விவேக், “உண்மை. வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை. வாழ்க அவர் நகைச்சுவைப் பணி” என்று கூறியுள்ளார்.
உண்மை. வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை! வாழ்க அவர் நகைச்சுவைப் பணி!! https://t.co/BaKsmsOzuH
— Vivekh actor (@Actor_Vivek) May 29, 2020
விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் நஷ்டம் அடைந்ததாக வந்த செய்திக்கு தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேலும் நயன்தாரா, டேனியல் பாலாஜி, கதிர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்நிலையில் பிகில் ரூ.20 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் அவ்வாறு நான் சொல்லவில்லை என்றும், இந்தத் தகவல் தவறானது என்றும் அர்ச்சனா கல்பாத்தி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியானது. விமர்சன ரீதியாக படம் சறுக்கினாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது.

இந்நிலையில் பிகில் ரூ.20 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் அவ்வாறு நான் சொல்லவில்லை என்றும், இந்தத் தகவல் தவறானது என்றும் அர்ச்சனா கல்பாத்தி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மாஸ்டர் படத்தின் டிரைலர் பார்த்தால் மெய்சிலிர்க்கும் என்று நாயகி மாளவிகா மோகனன் கூறியிருக்கிறார்.
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் மாளவிகா மோகனன். அவர் இதற்கு முன் ரஜினியின் பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது மாஸ்டர் படத்தின் டிரைலர் குறித்து அவர் கூறும்போது, சென்னையில் ஆடியோ வெளியீட்டு விழாவின் போதுதான் நான் முதன் முதலில் மாஸ்டர் டிரைலர் பார்த்தேன். இது நிச்சயம் ஒரு பித்துநிலைதான்... உங்களுக்கும் மெய்சிலிர்க்கும் படியாகத்தான் இருக்கும் என்றார்.
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் லட்சுமி பாம் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமை கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.
தமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். இவர் காஞ்சனா படத்தின் முதல் பாகத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்க ஆரம்பித்தார். இப்படத்தில் அக்ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமை 125 கோடி ரூபாய்க்கு விற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன் என்ற கேள்விக்கு அவரது மனைவி ஷாஃப்ரூன் நிஷா பதில் அளித்து இருக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன்ஷங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறி 2015ஆம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்ற இஸ்லாம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் யுவனின் மனைவி ஷாஃப்ரூன் நிஷா தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். ரசிகர்களின் பெரும்பாலான கேள்விகள் யுவனை ஏன் இஸ்லாம் மதத்திற்கு மாற்றினீர்கள் என்றும், கடவுள் பக்தி மிகுந்த இளையராஜாவின் மகனை மதமாற்றிவிட்டீர்கள் என்றும், நீங்கள் ஏன் இந்துவாக மாறியிருக்க கூடாது என்ற ரீதியில் இருந்தன.
இந்த கேள்விகளுக்கு ஷாஃப்ரூன் நிஷா பொறுமையாக பதிலளித்தார். யுவன் திருமணத்திற்கு முன்னரே இஸ்லாம் மதத்தை தேர்வு செய்துவிட்டார் என்றும் இஸ்லாமை அவர் பின்பற்ற தொடங்கிய பின்னர் தான் எனக்கு அவரைத் தெரியும் என்றும், அவருடைய மிகப்பெரிய கேள்விகளுக்கான விடைகள் அவருக்கு குரானில் கிடைத்திருக்கலாம், அதனால் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருக்கலாம் என்றும் பதிலளித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான மீரா மிதுன் திருமண கோலத்தில் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் மீராமிதுன். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னரும் சர்ச்சைக்குரிய வகையில் தனது டுவிட்டரில் சில கருத்துக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் தற்போது மீராமிதுன் திருமண கோலத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த மணக்கோலம் ரியல் என்றும், இதையும் காப்பி செய்ய வேண்டாம் என்றும் அவர் நெட்டிசன்களுக்கு கூறியுள்ளார்.
மேலும் விரைவில் அவர் திருமணத்திற்கு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மீராமிதுன் மணமகள் கோலத்தில் இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Soon ♥️
— Meera Mitun (@meera_mitun) May 29, 2020
( This is REAL. Don't copy this too ) pic.twitter.com/uOU6BsyY9S
கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடித்து பிரபல மலையாள நடிகர் தனது திருமணத்தை எளிமையாக நடத்தி உள்ளார்.
கொரோனா ஊரடங்கில் அரசின் சமூக விலகல் விதிமுறைகளை கடைபிடித்து குறைந்த எண்ணிக்கையில் உறவினர்களை வைத்து நடிகர்கள் திருமணங்கள் நடந்துள்ளன. ரஜினியின் பேட்ட படத்தில் நடித்துள்ள மணிகண்டன். கோலி சோடா 2 படத்தில் வில்லனாக வந்த மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ், தெலுங்கு நடிகர் நிதின், கன்னட நடிகர் நிகில் ஆகியோருக்கு ஊரடங்கில் திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர் கோகுலன் திருமணமும் ஊரடங்கில் நடந்தது. இவர் 2011ல் ஜெயராம் கதாநாயகனாக நடித்து திரைக்கு வந்த குடும்பஸ்ரீ டிராவல்ஸ் படம் மூலம் அறிமுகமானார். மம்முட்டியுடன் உண்டா படத்தில் போலீஸ்காரராக நடித்து பிரபலமானார். ஆமென், சப்தம்ஸ்ரீ தஸ்கரகா, பாதேமாறி, வாரிக்குழியிலே கோலபதக்கம் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

கோகுலன் தனது நீண்ட நாள் காதலியான தன்யாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் திருமணம் எர்ணாகுளத்தில் உள்ள இரவிசித்ரா சிவன் கோவிலில் நடந்தது. கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடித்து திருமணத்தை நடத்தினர். நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.
ஜேம்ஸ்வசந்தன் இயக்கத்தில் ராதிகா, சுஹாசினி, குஷ்பு, ஊர்வசி நடித்துள்ள 'ஓ அந்த நாட்கள்' படத்தின் முன்னோட்டம்.
மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ‘ஓ அந்த நாட்கள்’ எனும் ‘ரொமாண்டிக் காமெடி’ திரைப்படத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் 1980’களின் நட்சத்திர நாயகிகள் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தில், நான்கு நடிகைகளுடன் ஜித்தின் ராஜ் - லதா ஹெக்டே ஜோடியும், ஒய் ஜி மகேந்திரன், சுலக்ஷனா, மனோபாலா, பானுசந்தர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இயக்குனர் சுந்தர்.சி சிறப்பு வேடத்தில் வந்து மெருகேற்றுகிறார். இப்படத்தின் 80 சதவீத காட்சிகள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன்.

‘ஓ அந்த நாட்கள்’ பற்றி ஜேம்ஸ்வசந்தன் கூறியதாவது: “இது, காதலும் நகைச் சுவையும் கலந்த படம். 1980-களில் கதாநாயகிகளாக இருந்த ராதிகா சரத்குமார், சுஹாசினி, குஷ்பு, ஊர்வசி ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இவர்கள் நடித்த 4 வெவ்வேறு கதாபாத்திரங்களை பின்புலமாகவும், அவர்களின் தற்போதைய வாழ்க்கையை அடித்தளமாகவும் வைத்து முற்றிலும் வித்தியாசமாக, குடும்பப் பாங்காக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படம் திரைக்கு வர தயாராக இருக்கிறது.’’என அவர் கூறினார்.
கொரோனாவால் திரையுலகில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நடிகை கங்கனா ரணாவத் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நடிகை கங்கனா ரணாவத் கொரோனாவால் திரையுலகில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி பேசி உள்ளார். அவர் கூறியதாவது: ‘’ஊரடங்குக்கு பிறகு ஒரு நடிகையாக எந்த மாதிரி நிலைமைகள் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். ஊரடங்கு முடிந்ததும் நாம் நடிக்கும் படங்கள் நிலைமை, வியாபாரம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது.
இன்னும் எந்த மாதிரி விளைவுகளை சந்திக்க போகிறோம் என்பதையும் இப்போது கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. சில படங்களை தியேட்டர்களில் பார்த்தால்தான் நன்றாக இருக்கும். ஆனால் இப்போது நிலைமை வேறாக இருக்கிறது. கொரோனாவால் எதிர்காலத்தில் டிஜிட்டல் தளத்துக்கு சினிமா மாறும் என்றுதான் தோன்றுகிறது. நடிகையாக நான் ஜெயித்து விட்டேன். தொடர்ந்து நடிக்கிறேன்.

தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கிறேன். எதிர்காலத்தில் டிஜிட்டல் தளத்துக்கு செல்ல தயாராகவும் இருக்கிறேன். ஆனாலும் சினிமாவில் நான் சாதிக்க வேண்டியதும் கற்றுக்கொள்ள வேண்டியதும் இன்னும் நிறைய இருக்கிறது. தலைவி படத்தில் விரும்பி நடித்துள்ளேன். இந்த படத்துக்காக நிறைய உழைத்தும் இருக்கிறேன்.
நான் நடிக்கும் படங்களை தியேட்டர்களில் பார்க்கத்தான் ஆசைப்படுகிறேன். இப்போதுள்ள நிலையில் தியேட்டர்களில் எப்படி படம் பார்க்க போகிறோம் என்பதை யூகிக்கவே முடியவில்லை.” இவ்வாறு கங்கனா ரணாவத் கூறினார்.
இளம் நடிகர் ஒருவரின் படங்களை ஒன்றுவிடாமல் பார்த்துவிடுவோம் என சூர்யாவும், ஜோதிகாவும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
விக்கி டோனர் படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகராக அறிமுகமானவர் ஆயுஷ்மான் குரானா. வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தேசிய விருதுகள், பிலிம் பேர் விருதுகள் என பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார். இவர் நடித்த படங்கள் தமிழிலும் ரீமேக் செய்யப்படுகின்றன.
அந்தவகையில் இவரின் விக்கி டோனர் படத்தை தமிழில் தாராள பிரபு என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டனர். அதேபோல் இவருக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த அந்தாதூன் படமும் தமிழில் ரீமேக் ஆகிறது. இப்படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார். பிரசாந்த் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்நிலையில், பொன்மகள் வந்தாள் படத்தின் புரமோஷனுக்காக சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து பேட்டி அளித்தனர். அப்போது, அவர்கள் இருவரும் ஆயுஷ்மான் குரானாவின் படங்கள் ஒன்றுவிடாமல் பார்த்துவிடுவோம் என தெரிவித்தனர். அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என அவர்கள் கூறினர். இதற்கு ஆயுஷ்மான் குரானா, 'சூர்யா, ஜோதிகா உங்களின் அன்புக்கு மிக்க நன்றி என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.