என் மலர்
சினிமா செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான மீரா மிதுன் திருமண கோலத்தில் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் மீராமிதுன். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னரும் சர்ச்சைக்குரிய வகையில் தனது டுவிட்டரில் சில கருத்துக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் தற்போது மீராமிதுன் திருமண கோலத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த மணக்கோலம் ரியல் என்றும், இதையும் காப்பி செய்ய வேண்டாம் என்றும் அவர் நெட்டிசன்களுக்கு கூறியுள்ளார்.
மேலும் விரைவில் அவர் திருமணத்திற்கு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மீராமிதுன் மணமகள் கோலத்தில் இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
இந்த நிலையில் தற்போது மீராமிதுன் திருமண கோலத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த மணக்கோலம் ரியல் என்றும், இதையும் காப்பி செய்ய வேண்டாம் என்றும் அவர் நெட்டிசன்களுக்கு கூறியுள்ளார்.
மேலும் விரைவில் அவர் திருமணத்திற்கு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மீராமிதுன் மணமகள் கோலத்தில் இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
Soon ♥️
— Meera Mitun (@meera_mitun) May 29, 2020
( This is REAL. Don't copy this too ) pic.twitter.com/uOU6BsyY9S
கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடித்து பிரபல மலையாள நடிகர் தனது திருமணத்தை எளிமையாக நடத்தி உள்ளார்.
கொரோனா ஊரடங்கில் அரசின் சமூக விலகல் விதிமுறைகளை கடைபிடித்து குறைந்த எண்ணிக்கையில் உறவினர்களை வைத்து நடிகர்கள் திருமணங்கள் நடந்துள்ளன. ரஜினியின் பேட்ட படத்தில் நடித்துள்ள மணிகண்டன். கோலி சோடா 2 படத்தில் வில்லனாக வந்த மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ், தெலுங்கு நடிகர் நிதின், கன்னட நடிகர் நிகில் ஆகியோருக்கு ஊரடங்கில் திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர் கோகுலன் திருமணமும் ஊரடங்கில் நடந்தது. இவர் 2011ல் ஜெயராம் கதாநாயகனாக நடித்து திரைக்கு வந்த குடும்பஸ்ரீ டிராவல்ஸ் படம் மூலம் அறிமுகமானார். மம்முட்டியுடன் உண்டா படத்தில் போலீஸ்காரராக நடித்து பிரபலமானார். ஆமென், சப்தம்ஸ்ரீ தஸ்கரகா, பாதேமாறி, வாரிக்குழியிலே கோலபதக்கம் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

கோகுலன் தனது நீண்ட நாள் காதலியான தன்யாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் திருமணம் எர்ணாகுளத்தில் உள்ள இரவிசித்ரா சிவன் கோவிலில் நடந்தது. கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடித்து திருமணத்தை நடத்தினர். நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.
ஜேம்ஸ்வசந்தன் இயக்கத்தில் ராதிகா, சுஹாசினி, குஷ்பு, ஊர்வசி நடித்துள்ள 'ஓ அந்த நாட்கள்' படத்தின் முன்னோட்டம்.
மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ‘ஓ அந்த நாட்கள்’ எனும் ‘ரொமாண்டிக் காமெடி’ திரைப்படத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் 1980’களின் நட்சத்திர நாயகிகள் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தில், நான்கு நடிகைகளுடன் ஜித்தின் ராஜ் - லதா ஹெக்டே ஜோடியும், ஒய் ஜி மகேந்திரன், சுலக்ஷனா, மனோபாலா, பானுசந்தர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இயக்குனர் சுந்தர்.சி சிறப்பு வேடத்தில் வந்து மெருகேற்றுகிறார். இப்படத்தின் 80 சதவீத காட்சிகள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன்.

‘ஓ அந்த நாட்கள்’ பற்றி ஜேம்ஸ்வசந்தன் கூறியதாவது: “இது, காதலும் நகைச் சுவையும் கலந்த படம். 1980-களில் கதாநாயகிகளாக இருந்த ராதிகா சரத்குமார், சுஹாசினி, குஷ்பு, ஊர்வசி ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இவர்கள் நடித்த 4 வெவ்வேறு கதாபாத்திரங்களை பின்புலமாகவும், அவர்களின் தற்போதைய வாழ்க்கையை அடித்தளமாகவும் வைத்து முற்றிலும் வித்தியாசமாக, குடும்பப் பாங்காக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படம் திரைக்கு வர தயாராக இருக்கிறது.’’என அவர் கூறினார்.
கொரோனாவால் திரையுலகில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நடிகை கங்கனா ரணாவத் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நடிகை கங்கனா ரணாவத் கொரோனாவால் திரையுலகில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி பேசி உள்ளார். அவர் கூறியதாவது: ‘’ஊரடங்குக்கு பிறகு ஒரு நடிகையாக எந்த மாதிரி நிலைமைகள் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். ஊரடங்கு முடிந்ததும் நாம் நடிக்கும் படங்கள் நிலைமை, வியாபாரம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது.
இன்னும் எந்த மாதிரி விளைவுகளை சந்திக்க போகிறோம் என்பதையும் இப்போது கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. சில படங்களை தியேட்டர்களில் பார்த்தால்தான் நன்றாக இருக்கும். ஆனால் இப்போது நிலைமை வேறாக இருக்கிறது. கொரோனாவால் எதிர்காலத்தில் டிஜிட்டல் தளத்துக்கு சினிமா மாறும் என்றுதான் தோன்றுகிறது. நடிகையாக நான் ஜெயித்து விட்டேன். தொடர்ந்து நடிக்கிறேன்.

தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கிறேன். எதிர்காலத்தில் டிஜிட்டல் தளத்துக்கு செல்ல தயாராகவும் இருக்கிறேன். ஆனாலும் சினிமாவில் நான் சாதிக்க வேண்டியதும் கற்றுக்கொள்ள வேண்டியதும் இன்னும் நிறைய இருக்கிறது. தலைவி படத்தில் விரும்பி நடித்துள்ளேன். இந்த படத்துக்காக நிறைய உழைத்தும் இருக்கிறேன்.
நான் நடிக்கும் படங்களை தியேட்டர்களில் பார்க்கத்தான் ஆசைப்படுகிறேன். இப்போதுள்ள நிலையில் தியேட்டர்களில் எப்படி படம் பார்க்க போகிறோம் என்பதை யூகிக்கவே முடியவில்லை.” இவ்வாறு கங்கனா ரணாவத் கூறினார்.
இளம் நடிகர் ஒருவரின் படங்களை ஒன்றுவிடாமல் பார்த்துவிடுவோம் என சூர்யாவும், ஜோதிகாவும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
விக்கி டோனர் படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகராக அறிமுகமானவர் ஆயுஷ்மான் குரானா. வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தேசிய விருதுகள், பிலிம் பேர் விருதுகள் என பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார். இவர் நடித்த படங்கள் தமிழிலும் ரீமேக் செய்யப்படுகின்றன.
அந்தவகையில் இவரின் விக்கி டோனர் படத்தை தமிழில் தாராள பிரபு என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டனர். அதேபோல் இவருக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த அந்தாதூன் படமும் தமிழில் ரீமேக் ஆகிறது. இப்படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார். பிரசாந்த் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்நிலையில், பொன்மகள் வந்தாள் படத்தின் புரமோஷனுக்காக சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து பேட்டி அளித்தனர். அப்போது, அவர்கள் இருவரும் ஆயுஷ்மான் குரானாவின் படங்கள் ஒன்றுவிடாமல் பார்த்துவிடுவோம் என தெரிவித்தனர். அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என அவர்கள் கூறினர். இதற்கு ஆயுஷ்மான் குரானா, 'சூர்யா, ஜோதிகா உங்களின் அன்புக்கு மிக்க நன்றி என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். ரோஜா, தளபதி, இருவர், உயிரே, துப்பாக்கி, செக்கச் சிவந்த வானம், தர்பார் உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தியில் டெரரிஸ்ட் உள்ளிட்ட சில படங்களையும் இயக்கி உள்ளார். 12 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.
ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தில் இவர் பணியாற்றிக்கொண்டு இருக்கும்போதே கிடைத்த இடைவெளியில் தான் இயக்கி வந்த ஜாக் அண்ட் ஜில் என்கிற மலையாள படத்தின் படப்பிடிப்பு பணிகளையும் கவனித்து வந்தார். மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகனாக காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ளார்.

இப்படம் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகி உள்ளது. தமிழில் இப்படம் சென்டிமீட்டர் என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் யோகிபாபு முக்கியமான நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதே கதாபாத்திரத்தை மலையாளத்தில் பிரபல காமெடியனான சௌபின் சாஹிர் நடித்துள்ளார். இப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
பொன்மகள் வந்தாள் படம் ஓடிடி-யில் ரிலீசாகும் முன்பே தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்ததால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். மேலும் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். அதன்படி மே 29 (இன்று) 12:00 AM மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் படத்தை அதற்கு முன்பாகவே வெளியிட்டனர். காரணம், படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக லீக் செய்ததால், வேறு வழியின்றி படத்தை திட்டமிட்டதற்கு முன்னதாகவே ஓடிடி-யில் ரிலீஸ் செய்தனர். அதுவும் ஓடிடி தளத்தில் என்ன தரத்தில் வெளியானதோ, அதேபோன்று தமிழ் ராக்கர்ஸிலும் வெளியானதால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தியேட்டரில் வெளியாகும் படங்களை திருட்டுத்தனமாக வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளது. தற்போது ஓடிடி-யில் ரிலீசாகும் படங்களையும் திருட்டுத்தனமாக வெளியிட்டு வருவதால் திரைத்துறையினரை கலக்கமடைய வைத்துள்ளது.. இதற்காக சினிமா துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் திருட்டுத்தனமாக படங்கள் வெளியாவதை தடுக்க முடியவில்லை.
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் பூஜா ஹெக்டே, தனது இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நடிகைகள் பலர் டுவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் இருக்கிறார்கள். அவற்றில் தாங்கள் நடிக்கும் படங்கள் பற்றிய விவரங்கள், அரசியல், சமூக விஷயங்கள் தொடர்பான கருத்துக்கள் போன்றவற்றை பகிர்ந்து வருகிறார்கள் இந்த வலைத்தள கணக்குகளில் மர்ம நபர்கள் ஊடுருவி முடக்குவது தொடர்கிறது. சமீபத்தில் நடிகைகள் அபர்ணா முரளி, ஷோபனா, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரின் சமூக வலைத்தள கணக்குகள் முடக்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது நடிகை பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் கணக்கையும் முடக்கி உள்ளனர். இதையடுத்து தொழில்நுட்ப குழுவினர் உதவியுடன் சில மணிநேரத்தில் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு மீண்டும் சரிசெய்யப்பட்டது. இதற்காக உதவிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இவர் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவா ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தமிழ், தெலுங்கில் தயாராகும் பெயரிடப்படாத படமொன்றில் பிரபாஸ் ஜோடியாக நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கினால் இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
கொரோனா ஊரடங்குக்கு பின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை தொடங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், மணிரத்னம் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மணிரத்னம், பொன்னியின் செல்வன் பட வேலைகளை கடந்த வருடம் தொடங்கினார். இந்த படத்தில் நடிக்க விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டனர். தாய்லாந்து காடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.
சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இருந்த நேரத்தில் கொரோனாவால் நிறுத்தப்பட்டது. சரித்திர கதை என்பதால் படத்துக்காக தலைமுடியை நீளமாக வளர்த்துள்ள நடிகர்கள் ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் அப்படியே இருக்கிறார்கள்.
ஆனால் ஊரடங்குக்கு பிறகும் படப்பிடிப்பை தொடங்குவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் ஆயிரக்கணக்கான துணை நடிகர்களை வைத்து போர்க்கள காட்சிகளை படமாக்க வேண்டி உள்ளது என்றும் நடிகர்களின் நெருக்கமான காட்சிகளும் உள்ளது என்றும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இதற்கு அதிக எண்ணிக்கையில் பெப்சி தொழிலாளர்களும் தேவைப்படுவார்கள்.

ஊரடங்குக்கு பிறகு படப்பிடிப்புகளில் சமூக விலகலை கடைபிடிக்கவும் அதிகமானோரை படப்பிடிப்பில் பயன்படுத்துவதை தவிர்க்கவும் அரசு விதிமுறைகள் வகுக்கும் என்று தெரிகிறது. குறைந்த எண்ணிக்கையில் நடிகர்களையும் பெப்சி தொழிலாளர்களையும் வைத்துக்கொண்டு பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை நடத்த முடியாது என்று கூறப்படுகிறது.
கொரோனா முழுமையாக ஒழிந்தபிறகே பட வேலைகள் தொடங்கும் கட்டாயம் உள்ளது. எனவே இடைபட்ட காலத்தில் அரவிந்தசாமியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க மணிரத்னம் திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்கான கதையை ஊரடங்கில் அவர் தயார் செய்து விட்டதாகவும் தகவல் பரவி வருகிறது.
அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தின் விமர்சனம்.
2004ஆம் ஆண்டு ஊட்டியில் சிறு வயது பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கு காரணம் ஜோதி என்ற பெண் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவரை போலீஸ், என்கவுண்டர் செய்து கேசை முடிக்கிறார்கள். 15 வருடங்கள் கழித்து இந்த கேசை தூசிதட்டி எடுக்கிறார் ஜோதிகா.
சைக்கோ கொலைகாரி என்று பட்டம் சூட்டப்பட்டு கொலைசெய்யப்பட்ட ஜோதிக்கு ஆதரவாக களம் இறங்குகிறார். இதனால் ஜோதிகாவுக்கு பல இன்னல்களும் பிரச்சனைகளும் வருகிறது. இந்தப் பிரச்சினைகளை எப்படி சமாளித்தார்? அந்த கேசில் எப்படி வெற்றி பெற்றார்? அந்தக் கேசின் உண்மை நிலவரம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் ஜோதிகா வெண்பா என்ற கதாபாத்திரத்தில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குழந்தைகளுடன் விளையாடும் போது குழந்தையாகவும், தந்தை பாக்யராஜுடன் பேசும்போது கேசில் வெற்றிபெற வேண்டும் என்ற துடிப்பும், கோர்ட்டில் வாதாடும்போது கம்பீரமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். பெண்களின் வலியை நடிப்பால் உணர்த்தியிருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து அதோடு வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் பாக்யராஜ். ஜோதிகா சோர்ந்து போகும் போது உற்சாகம் கொடுப்பவராக நடிப்பில் பளிச்சிடுகிறார். சிறிதளவே வந்தாலும் மனதில் நிற்கிறார் தியாகராஜன். பிரதாப் போத்தன், பாண்டியராஜன் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள்.

தனக்கே உரிய நக்கல் நையாண்டி நடிப்பை கொடுத்திருக்கிறார் பார்த்திபன். ஜோதிகாவிற்கு பிறகு அதிக அளவு கவனத்தை ஈர்த்திருக்கிறார். சுப்பு பஞ்சு நடந்ததை சொல்லும்போது அந்த இடத்தில் பார்த்திபன் தன்னைக் கற்பனை பண்ணி பார்க்கும் காட்சி சிறப்பு. எதிர்பார்க்காத இடைவேளையும், யூகிக்க முடியாத இறுதி காட்சியும் ரசிக்க வைக்கிறது.
பெண்களுக்கு நடக்கும் அநீதிகளையும் பாலியல் வன்கொடுமைகளையும் மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக்.

மற்றவர்களுக்கு நடந்ததை செய்தியாக பார்க்காமல், தனக்கு நடந்ததாக உணர்ந்தால் அவர்களின் வலியும் வேதனையும் புரியும் என்ற கருத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறார். பெண் குழந்தைகளுக்கு, ஆண்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதை சொல்வதைப்போல, பெண்களை எப்படி பார்க்க வேண்டும், எப்படி பழக வேண்டும் என்பதை ஆண்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார்.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் கதையோடு ஒன்றி பயணிக்கிறது. ராம்ஜியின் ஒளிப்பதிவு கச்சிதம்.
மொத்தத்தில் 'பொன்மகள் வந்தாள்' ஏஞ்சல்
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்து அவர்களை காப்பாற்றுவோம் என்று நடிகை ராய் லட்சுமி கூறியுள்ளார்.
நாடு முழுக்க புலம்பெயர் தொழிலாளர்களைப் பற்றிய செய்தி மனத்தை உலுக்குகிறது. இந்நிலையில் நடிகை ராய் லட்சுமி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்து அவர்களைக் காப்பாற்றுவோம் என்று கூறியுள்ளார்.
அவர்களைப் பற்றி வீடியோவை பதிவிட்ட ராய் லட்சுமி "இயற்கையின் கோபம். கடவுள்தான் உலகைக் காப்பாற்ற வேண்டும். இனி இதையெல்லாம் பார்க்க முடியாது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்து அவர்களைக் காப்பாற்றுவோம். இந்தக் கடுமையான காலமும் நம்மைவிட்டுக் கடந்து போகும். விரைவில் நல்ல காலம் பிறக்கும் என்று நம்புவோம்" என்று வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.
பிரபல நடிகையின் குழந்தை பருவ புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
ஹீரோயின்கள் தங்களது சிறுவயது புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு லைக்ஸ் அள்ளுவது வழக்கம். அப்படி, தற்போது தான் குழந்தையாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கிறார் நடிகை நஸ்ரியா.

அவரின் குழந்தைத்தனத்தையும் குறும்புத்தனத்தையும் ரசிக்காதவர்களே இல்லை. இந்தப் புகைப்படத்தோடு, 'Always' என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.
நடிகை நஸ்ரியா தமிழில் நேரம், ராஜா ராணி படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாள படங்களில் நடித்து வருகிறார்.






