என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபல நடிகையின் குழந்தை பருவ புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
    ஹீரோயின்கள் தங்களது சிறுவயது புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு லைக்ஸ் அள்ளுவது வழக்கம். அப்படி, தற்போது தான் குழந்தையாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கிறார் நடிகை நஸ்ரியா.

    நடிகை நஸ்ரியா

    அவரின் குழந்தைத்தனத்தையும் குறும்புத்தனத்தையும் ரசிக்காதவர்களே இல்லை. இந்தப் புகைப்படத்தோடு, 'Always' என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.

    நடிகை நஸ்ரியா தமிழில் நேரம், ராஜா ராணி படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
    பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் இயற்கையின் குரலாக மாறப்போகிறேன் என்று கூறியுள்ளார்.
    நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு இயற்கை ஆர்வலர். ஊரடங்கு காலத்தைக்கூட தனது பண்ணை வீட்டில் தான் குடும்பத்துடன் செலவிட்டு கொண்டு வருகிறார். அதிலும் இயற்கை விவசாயத்தின் மீதும் அவருக்கு அதிக ஈடுபாடு உள்ளது.

    சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும், இயற்கையின் மீது கொண்ட ஈடுபாட்டால் சின்னத்திரையில் கால்பதித்துள்ளார். டிஸ்கவரி தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் வைல்ட் கர்நாடகா எனும் நிகழ்ச்சிக்கு அவர் குரல் கொடுக்க முன்வந்துள்ளார்.

    இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர், ஒரு உபயோகமுள்ள பயணம். இயற்கையின் குரலாக மாறப்போகிறேன். இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு மிகுவும் சிரமப்பட்டு தயாராக்கப்பட்ட இந்திய வன வாழ்க்கையின் ஆவணப்படம். அதற்கு தமிழ் மற்றும் தெலுங்கில் வர்ணனை கொடுத்ததை மிகவும் சிறப்பாக உணர்கிறேன். இவ்வாறு பிரகாஷ்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.
    திரையரங்குகளில் கிடைக்கும் ஆரவாரத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் ஈடே கிடையாது என்று நடிகர் சூர்யா பேட்டி அளித்துள்ளார்.
    பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளியிடுவது குறித்து பேட்டியளித்திருக்கும் நடிகர் சூர்யா கூறியிருப்பதாவது, 'திரையரங்குகளில் கிடைக்கும் ஆரவாரத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் ஈடே கிடையாது. அதேசமயம் தொழில்நுட்ப வளர்ச்சியை நம்மால் தள்ளி வைக்க முடியாது.

    சூர்யா


     ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளை பிடிப்பதில் கடும் போட்டி இருக்கும் சூழலில் மாற்று வழியை கண்டறிவது அவசியமாக உள்ளது. மேலும் வணிக எல்லைக்கு அப்பாற்பட்டு எடுக்கப்படும் மாற்று சினிமாக்களுக்கு ஓடிடி நல்ல தளமாக உள்ளது. இதனால் நாங்கள் திரையரங்குகளை புறக்கணிக்கிறோம் என்று அர்த்தமல்ல.

    மீண்டும் படப்பிடிப்பு துவங்க இரண்டு மாதங்கள் வரை ஆகலாம். முதலில் உட்புற படப்பிடிப்பு பின்னர் வெளிப்புற படப்பிடிப்பை துவங்கலாம். ஆனால் அதிலும் கட்டுப்பாடு அவசியம். திரையரங்குகளின் சூழலை பொறுத்தவரை ஆலிவுட்டில் கிறிஸ்டபர் நோலனின் 'டெனெட்'படம் வெளியாகி அதற்கு கிடைக்கும் ஆதரவை கொண்டு முடிவெடுக்கலாம்' என்று கூறியுள்ளார். 
    இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் ஜிவி பிரகாஷ் மூன்று படங்களின் அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார்.
    ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், தற்போது அவரை வைத்து `ஜெயில்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

    இப்படத்திற்கு இசையமைக்கும் பணிகளில் ஜி.வி.பிரகாஷ் தீவிரமாக இறங்கியுள்ளார். தற்போது இப்படத்தில் காதோடு என்ற பாடலை தனுஷ், அதிதி ராவ் பாடி இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இப்பாடல் விரையில் வெளியாகும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

    அதுபோல், சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப்போற்று பற்றிக் கூறும்போது, மூன்று பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது என்றும், தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் ஆடியோ பெரிய அளவில் இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
    நடிகர் விஷால் தன்னுடைய தாயின் அறக்கட்டளை மூலமாக காவல்துறையினருக்கு பாதுகாப்பு கவசங்களை வழங்கியிருக்கிறார்.
    கொரோனா பிரச்சனையால் பல்வேறு தன்னார்வலர்கள், சங்கங்கள், அமைப்புகள் சில மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அதேபோல், நடிகர் விஷால் தன் அம்மாவின் தேவி அறக்கட்டளை மூலம் நலிவுற்ற நடிகர் சங்க உறுப்பினர்கள், நலிவுற்ற தயாரிப்பாளர்கள், நடிகர் நடிகைகளுக்கு பணி புரியும் உதவியாளர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கினார்.

    தற்போது அண்ணாநகர் துணை ஆணையர் எஸ்.பி.முத்துசாமி IPS அவர்களிடத்தில் முகக்கவசம், கையுறைகள், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களை வழங்கி இருக்கிறார்.

    துணை ஆணையர் எஸ்.பி.முத்துசாமி IPS அவர்களிடத்தில் முகக்கவசம் வழங்கிய காட்சி


    பாதுகாப்பு கவசங்களை நடிகர்கள் சௌந்தர ராஜா, ஜீவா மற்றும் விஷாலின் மக்கள் நல மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் வழங்கினார்கள்.
    தமிழ், தெலுங்கு சினிமா படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்த மாயாவின் மகனை 8 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி உள்ளனர்.
    தமிழ், தெலுங்கு சினிமா படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்தவர் நடிகை மாயா. இவரது மகன் விக்கி என்கிற விக்னேஷ்குமார்.

    இவர் சென்னை, சாலிகிராமம் தசரதபுரம் 8-வது தெருவில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். விக்னேஷ் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் விக்னேஷ் வீட்டிற்கு வந்த 8 பேர் கும்பல் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளால் விக்னேசை சரமாரியாக வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த விக்னேசை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு உடலில் 40 தையல்கள் போடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கடந்த வாரம் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கண்ணன் என்பவரை விக்னேஷ் தாக்கியுள்ளார்.

    அதற்கு பழி தீர்க்கும் வகையில் கண்ணன், தனது நண்பர்களுடன் சேர்ந்து விக்னேசை வீடு புகுந்து  வெட்டி கொலை செய்ய முயன்றது தெரிய வந்துள்ளது.

    தமிழ் தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் இலியானா மக்களை தவிர்ப்பதாக கூறியிருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை இலியானா. விஜய் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

    ஒல்லியான இடுப்புக்கு புகழ்பெற்ற இலியானா திடீர் என்று உடல் எடை அதிகமானார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார்.

    இலியானா நீருக்குள் இருக்கும் புகைப்படம்


    இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். தற்போது நீருக்குள் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மக்களை தவிர்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

    கொரோனா வைரஸ் அதிகம் பரவுவதால் இப்படி கூறியுள்ளார் இலியானா.
    தமிழ் சினிமா நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
    தமிழ் சினிமா நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன், அண்ணன் வெங்கட்பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில்,

    வீட்டில் எனக்கு திருமணமே வேண்டாம் என கூறி விட்டேன். என்னுடைய வாழ்க்கையில் நிம்மதியாக, ஜாலியாக இருக்க விரும்புகிறேன். நமக்கு எதுக்கு கல்யாணம், குழந்தை குட்டி எல்லாம். தனியாக வாழ்வதே மகிழ்ச்சி.

    பிரேம்ஜி


     மற்றவருக்காக வாழ விரும்பவில்லை. எனக்காக வாழ ஆசைப்படுகிறேன். கல்யாணம் பண்ண சொல்லி வீட்டில் எவ்வளவோ வற்புறுத்தினார்கள், ஆனால் முடியவே முடியாது என்று கூறிவிட்டேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இயக்குனர், நடிகர் என பன்முகத்திறமை கொண்ட சசிகுமார், கண்டிப்பாக விஜய்யை வைத்து சரித்திர படம் எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
    சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து ஈசன் படத்தை இயக்கினார். அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய சசிகுமார் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன், கிடாரி, நாடோடிகள் 2 உள்பட பல படங்களில் நடித்துள்ளார். விஜய்யை வைத்து சரித்திர கதையசம் கொண்ட படத்தை இயக்க சில ஆண்டுகளுக்கு முன் சசிகுமார் முயற்சித்தார். ஆனால் சில காரணங்களால் அந்தப்பட வேலைகள் தொடங்கவில்லை. 

    சசிகுமார்

    இந்த நிலையில் சமீபத்திய பேட்டியொன்றில் விஜய்யை வைத்து சரித்திர படத்தை எடுப்பேன் என்று சசிகுமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: “எனக்கு வரலாற்று காலத்து உடைகள் அணிந்து சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில்லை. ஆனால் வரலாற்று கதை ஒன்றை தயார் செய்து வைத்துள்ளேன். அந்த கதையை விஜய்யை வைத்து படமாக்கலாம் என்று அவரிடம் சொன்னேன். கதை விஜய்க்கு மிகவும் பிடித்திருந்தது. நடிக்க சம்மதித்தார். ஆனால் வேறு சில காரணங்களால் படப்பிடிப்பு நடக்கவில்லை. படத்துக்கான பட்ஜெட் அதிகமாக இருந்தது. வருங்காலத்தில் கண்டிப்பாக அந்த படத்தை விஜய்யும் நானும் சேர்ந்து எடுப்போம்“ என்று சசிகுமார் கூறினார்.
    ஆர்.டி.எம். இயக்கத்தில் சுரேஷ், ரவீனா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ’காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் முன்னோட்டம்.
    பி.ஆர்.டாக்கீஸ் தயாரிப்பில் ஆர்.டி.எம். இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’காவல்துறை உங்கள் நண்பன்’. இப்படத்தில் சுரேஷ் நாயகனாகவும் ரவீனா ரவி நாயகியாகவும் நடித்துள்ளார்கள். மைம் கோபி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆதித்யா, சூர்யா இசையமைக்கும் இப்படத்திற்கு விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். 

    ரவீனா ரவி, சுரேஷ்

    பெண்கள் இன்றைய சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாக கொண்டது தான் இப்படத்தின் கரு. ஒரு காவல் அதிகாரிக்கும், உணவு கொண்டு சேர்க்கும் டெலிவரி பாய்க்கும் இடையில் உருவாகும் நிகழ்வுகளை பின்னணி களமாக கொண்டு படத்தின் கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதே நேரம் மக்களை ஈர்க்க கூடிய வகையில் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்ததாகவும் படம் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. 
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வோர் எண்ணிக்கை ஒரு கோடியாக உயர்ந்துள்ளது.
    சென்னையைச் சேர்ந்த சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரை தெலுங்கு திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது. தொடர்ந்து அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். பின்னர் தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

    சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்நிலையில், நடிகை சமந்தாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வோர் எண்ணிக்கை ஒரு கோடியாக உயர்ந்துள்ளது. இந்த தகவல்களை தாம் துள்ளிக்குதிக்கும் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள நடிகை சமந்தா, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இதையொட்டி அவர் 10 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கியுள்ளார்.
    தமிழ் திரையுலகில் பிஸியான ஹீரோயினாக வலம்வரும் பிரியா பவானி சங்கர் அடுத்ததாக விஷாலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    ‘மேயாத மான்’ படத்தின் மூலம் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர், பிரியா பவானி சங்கர். தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவுடன் ‘மான்ஸ்டர்’, அருண் விஜய்யுடன் ‘மாபியா’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது இவர், ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் இவருக்கு கமல்ஹாசனின் சினேகிதி வேடம்.

    மேலும் அதர்வாவுக்கு ஜோடியாக குருதி ஆட்டம், எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக, ‘பொம்மை’, ராகவா லாரன்ஸ் ஜோடியாக ஒரு படத்திலும், ஹரீஸ் கல்யாண் ஜோடியாக மற்றொரு படத்திலும் நடிக்க உள்ளார். இவ்வாறு பிஸியான ஹீரோயினாக வலம் வரும் பிரியா பவானி சங்கர், விஷாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

    கார்த்திக் தங்கவேலு, விஷால், பிரியா பவானி சங்கர்

    பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் அடங்கமறு பட இயக்குனர் கார்த்திக் தங்கவேலு இப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லாக்டவுன் முடிந்தவுடன் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×