என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் இயக்குநர் ப்ரெட்ரிக் மன்னிப்பு கோரியுள்ளார்.
    ஜோதிகா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் பொன்மகள் வந்தாள். ப்ரெட்ரிக் என்பவர் இயக்கிய இப்படத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குறித்த தவறான சித்தரிப்பு இடம் பெற்றிருப்பதாக புகார் எழுப்பப்பட்டது. அதை தொடர்ந்து இயக்குநர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்துக்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில் " AIDWA அமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்டது எங்கள் கவனக் குறைவால் நடந்த ஒன்று. அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அதற்காக தார்மீகமாய் மன்னிப்புக் கேட்பதோடு AIDWA இயக்கத்தின் பெயரையும் லோகோவையும் உடனடியாக நீக்க உறுதியளிக்கிறோம்.

    ப்ரெட்ரிக், ஜோதிகா


    இந்த திரைப்படத்துக்கான கள ஆய்வில் அவர்களின் போராட்டங்களில் இருந்து நிறைய செய்திகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நாங்கள் நன்றிக் கடன் பட்டுள்ளோம்" என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    பாலிவுட்டில் மிகவும் பிரபலமாக இருப்பவர் விஜய் மற்றும் தனுஷ் படத்தை பார்த்து பாராட்டி இருக்கிறார்.
    பாலிவுட்டில் முன்னணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருபவர் கரண் ஜோஹர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

    வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தை பார்த்தேன். கடவுளே, என்ன ஒரு அற்புதமான படம். தனுஷின் நடிப்பு அபாரம். படத்தின் விறுவிறுப்பான காட்சிகளால் சீட்டின் நுனிக்கே வந்துவிட்டேன். அதேபோல், அட்லி இயக்கிய பிகில் படத்தையும் பார்த்தேன். இது ஒரு மிகப்பெரிய வெற்றிப் படம். அட்லியின் அனைத்து படங்களையும் பார்த்து ரசித்திருக்கிறேன். மசாலா படங்களை எடுப்பதில் இவர் ஒரு மாயாவி என்று கூறியிருக்கிறார்.

    இதற்கு இயக்குனர் அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் கரண் ஜோஹருக்கு  நன்றி தெரிவித்துள்ளார்.

    விஷால் நடிப்பில் உருவாகி வரும் சக்ரா படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
    ஆக்‌ஷன் படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் தற்போது ‘சக்ரா’ திரைப்படம் உருவாகி வருகிறது. எம்.எஸ்.ஆனந்த் இயக்கும் இதில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். மேலும் ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோரும் நடிக்கின்றனர். பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    ராணுவ அதிகாரியாக நடிக்கும் விஷாலே இப்படத்தை தயாரிக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டது.

    படக்குழுவினர்


    கொரோனா ஊரடங்கு காரணமாக பின்னணி பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கி இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    நடிகர் அஜித்தை வைத்து பில்லா மற்றும் ஆரம்பம் படங்களை இயக்கிய இயக்குனர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்' உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் விஷ்ணு வர்தன். அதனைத் தொடர்ந்து அஜித்துடன் 'பில்லா' மற்றும் 'ஆரம்பம்' படங்களில் இணைந்தார். தற்போது இந்தியில் 'ஷேர்ஷா' (Shershaah) என்ற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.

    இந்நிலையில் அவர், எச்சரிக்கை, நான் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டிலும் இல்லை. இந்த இரண்டு பக்கங்களும் போலியானவை. யாரோ ஒருவர் என் பெயரில் அதனை தவறாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த பக்கங்களை பின்தொடராதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் படத்தில் நடித்த இளம் நடிகையை ரசிகர்கள் பலர் விமர்சித்து வருகிறார்கள்.
    நடிகைகள் கவர்ச்சி உடையில் பொது விழாக்களில் பங்கேற்பதையும் நீச்சல் உடை புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த லூசிபர், துல்கர் சல்மானுடன் கம்மட்டி பாடம் உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ள இளம் நடிகையான ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

    இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்தனர். அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். சிலர் பாராட்டியும் கருத்து பதிவிடுகின்றனர். இந்த புகைப்படம் வைரலாகி உள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் விஜய்க்கு இன்று குழந்தை பிறந்துள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் விஜய். இவர் நடிகை அமலாபாலை விவாகரத்து செய்த பின் மருத்துவர் ஐஸ்வர்யா என்பவருடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது.

    இயக்குநர் விஜய் - டாக்டர் ஐஸ்வர்யா தம்பதி

    இந்நிலையில் இயக்குநர் விஜய் - டாக்டர் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு சென்னையில் இன்று (30/05/2020) அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

    இயக்குநர் விஜய் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘தலைவி’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.
    பாடகர் சத்யன் 24 மணி நேரம் தொடர்ச்சியாக தனது முகநூல் நேரலையில் பாடி மேடை மெல்லிசை கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ முடிவெடுத்துள்ளார்.
    சத்யன் மகாலிங்கம் அவர்கள் இந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகர் மற்றும் இசை அமைப்பாளர் ஆவார். வசூல்ராஜா எம்.பி.பி எஸ் என்ற திரைப்படத்தில் கலக்கப்போவது யாரு என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகிற்கு 2004 ல் அறிமுகம் ஆனார். அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தில் சில் சில் மழையே, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பாசு பாசு போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பாடியுள்ளார்.

    விழித்திரு என்ற திரைப்படம் மூலம் இசை அமைப்பாளர் ஆனார். தற்பொழுது மேலும் சில தென்னிந்திய மொழி படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். கடந்த சில மாதங்களாக முகநூலில் நேரலையாக மக்களை மகிழ்விக்க பாடிவந்த சத்யன் மகாலிங்கம், மார்ச் 22ம் தேதி நடந்த ஒருநாள் மக்கள் ஊரடங்கு அன்று, 14 மணி நேரம் பாடி, வீட்டில் இருந்த மக்களை மகிழ்வித்தார்.

    கொரோனா பாதிப்பாலும், தொடர் ஊரடங்கினாலும், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மேடை மெல்லிசை கலைஞர்களின் நிலையைக் கண்டும், அவர்கள் எதிர்காலத்தை எண்ணியும் வருந்திய சத்யன் மகாலிங்கம், அவர்களுக்காக முகநூலில் கடந்த 55 நாட்களாக இடைவிடாது தினமும் இரவு 7 மணி முதல் பாடி வருகிறார்.

    55 நாட்களை கடந்த சத்யனின் இந்த நிதி திரட்டும் விடாமுயற்சியின் இறுதிக்கட்டமாக மே 30 ம் தேதி மாலை 7 மணி முதல், 31 ம் தேதி மாலை 7 மணி வரை, 24 மணி நேரம் தொடர்ச்சியாக தனது முகநூல் நேரலையில் பாடி மேடை மெல்லிசை கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ முடிவெடுத்துள்ளார்.
    நான் செய்யும் சேவைகள் எனது குழந்தைகளை காக்கும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
    நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரண உதவி வழங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் நடத்தும் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து லாரன்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு கடிதத்தை வெளியிட்டு உள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    “நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் நான் தெரிவித்துக்கொள்வது. ஆதரவற்ற குழந்தைகளுக்காக நான் அறக்கட்டளை நடத்துவதை நீங்கள் அறிவீர்கள். ஒரு வாரத்துக்கு முன்பு குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறி தெரிந்தது. பரிசோதனையில் 18 குழந்தைகளுக்கும் 3 ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

    தற்போது காய்ச்சல் குறைந்துள்ளது. குழந்தைகள் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    வைரஸ் நெகட்டிவ் வந்ததும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் உடனடியாக உதவி செய்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதார அமைச்சரின் உதவியாளர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு நன்றி. நான் செய்யும் சேவைகள் எனது குழந்தைகளை காக்கும் என்று நம்புகிறேன்.”

    இவ்வாறு லாரன்ஸ் கூறியுள்ளார்.
    இந்தி சினிமாவின் பழம்பெரும் பாடலாசிரியர் யோகேஷ் கவுர் திடீர் மரணம் அடைந்துள்ளார்.
    மும்பையில் வசித்து வந்த பழம்பெரும் இந்தி சினிமா பாடலாசிரியர் யோகேஷ் கவுர் நேற்று திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. இந்தி சினிமாவில் 1970-களில் பிரபல பாடலாசிரியராக இருந்தார். அவர் ஹிருஷிகேஷ் முகர்ஜி மற்றும் பாசு சட்டர்ஜி ஆகியோரின் படங்களுக்கு தலைசிறந்த பாடல்களை வழங்கினார்.

    யோகேஷ் கவுர் உத்தபிரதேச மாநிலம் லக்னோவில் பிறந்தவர். தனது 16-வது வயதில் உறவினர் ஒருவரின் உதவியால் வேலை தேடி மும்பைக்கு வந்தார். மும்பையில் தான் அவரது வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டு பாடலாசிரியர் ஆனார்.

    யோகேஷ் கவுர் மரணத்துக்கு பிரபல இந்தி சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
    சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்ற அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பை துவங்குவதற்கு 21.05.2020 அன்று அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது.

    அனுமதி அளிக்கப்பட்ட அதிகபட்ச 20 நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு படப்பிடிப்பை நடத்த இயலாத சூழ்நிலை உள்ளதாகவும், இதனை உயர்த்தி அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் செய்தித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கை குறித்து செய்தித்துறை அமைச்சர் என்னுடன் கலந்தாலோசித்தார்.

    மேற்படி சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை 31.05.2020 முதல் நடத்த அனுமதித்து உத்தரவிடப்படுகிறது.

    சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவரிடமும் ஒவ்வொரு சின்னத்திரை தொடரின் முழுப்படப்பிடிப்பிற்கும் ஒரு முறை மட்டும் முன் அனுமதி பெறுதல் வேண்டும்.

    சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். சின்னத்திரை தயாரிப்பாளர்கள் அதனை உறுதி செய்து கொண்டு படப்பிடிப்புகள் நடத்திட வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 
    தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் சாயிஷா, பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
    ஊரடங்கு நேரத்தில் தமிழ் திரைப்பட நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வித்தியாசமான வேடிக்கையான நகைச்சுவையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். 

    அந்த வகையில் ஏற்கனவே நடிகை சாயிஷா ஒரு சில வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். 

    மேலும் இந்த புகைப்படத்துடன் தண்ணீரை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்றும் கூறியிருக்கிறார். 
    சமூக வலைத்தளத்தில் நடிகைகள் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டேவின் ரசிகர்கள் மோதிக் கொண்டுள்ளனர்.
    சமூக வலைத்தளத்தில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் அடிக்கடி சண்டை போட்டு வருவார்கள். அந்த வரிசையில் தற்போது சமந்தா ரசிகர்களும், பூஜா ஹெக்டே ரசிகர்களும் மோதி கொண்டனர்.

    நேற்று பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் சமந்தா புகைப்படத்தை பதிவிட்டு அவர் அழகாக இல்லை என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை பார்த்து சமந்தாவின் ரசிகர்கள் கோபம் அடைந்தனர்.

    அது பற்றி விளக்கம் அளித்த பூஜா, தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் ஆகிவிட்டது என்று கூறி இருந்தார். அதன் பிறகு சற்று நேரம் கழித்து டெக்னிக்கள் டீம் உதவியுடன் அதை மீட்டதாக தெரிவித்தார். போடப்பட்ட பதிவுகளையும் கணக்கில் இருந்து நீக்கிவிட்டார் பூஜா. ஆனாலும் பூஜா ஹெக்டே மன்னிப்பு கேட்கவேண்டும் என சமந்தா ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டனர்.

    இந்நிலையில் சமந்தா நடித்த ஓ பேபி படத்தின் இயக்குனர் நந்தினி ரெட்டி இன்ஸ்டாகிராமில் சமந்தாவை பாராட்டி ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில் கமெண்டில் சமந்தா, சின்மயி மற்றும் நந்தினி ரெட்டி மூவரும் பூஜா ஹெக்டேவை விமர்சிக்கும் வகையில் பேசிக்கொண்டனர். அந்த கமெண்டுகளை பின்னர் நீக்கிவிட்டனர்.

    அதன் ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வைரலானது. பூஜா ஹெக்டே தவறு செய்தாரா என உறுதியாக தெரியாத நிலையில் இப்படி சமந்தா-சின்மயி மற்றும் நந்தினி ரெட்டி மோசமாக பேசியிருப்பது ரசிகர்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

    இதனால் இருவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மிகவும் மோசமாக சண்டை போட்டுக் கொண்டனர்.
    ×