என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கொரோனாவுக்கு பின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு எப்படி நடக்கும் என்பது குறித்து இயக்குனர் மணிரத்னம் சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
    கொரோனா ஊரங்கினால் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தடைபட்டு உள்ளது. படத்தில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள் பங்கேற்கும் போர்க்கள காட்சிகளை ஊரடங்கு முடிந்த பிறகு எப்படி படமாக்க போகிறாரோ என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. 

    இந்த நிலையில் இணைய தள கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசும்போது மணிரத்னம் கூறியதாவது: “டிஜிட்டல் தளம் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனாலும் தியேட்டர்களில் படம் பார்க்கும் அனுபவம் அலாதியானது. தியேட்டர்களில் படம் பார்க்க வரும் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது. 

    மணிரத்னம்

    கொரோனா அச்சுறுத்தல் முடிந்து திரையுலகம் மீண்டும் செயல்பட தொடங்கியதும் தயாரிப்பு செலவுகளை குறைக்க வேண்டும். திரைப்பட துறை தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்யும் விதமாக நடிகர் நடிகைகளும் தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும். அரசு உதவியும் சினிமா துறைக்கு தேவைப்படுகிறது.

    நான் இயக்கிய பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கினால் நிறுத்தப்பட்டு உள்ளது. படத்துக்காக பிரமாண்ட போர்க்கள காட்சிகள் மற்றும் அதிகமான கூட்டத்தினர் பங்கேற்கும் காட்சிகளை படமாக்க வேண்டி உள்ளது. இந்த காட்சிகளை எப்படி படம்பிடிக்க போகிறேன் என்று புரியவில்லை. ஆனாலும் அந்த பணிகளை செய்து படத்தை முடிப்பேன்”

    இவ்வாறு மணிரத்னம் கூறினார்.
    பாலிவுட்டில் பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகருமான வாஜித் கான் சிறுநீரக தொற்று காரணமாக இன்று உயிரிழந்தார்.
    1998 ஆம் ஆண்டு சல்மான்கான் நடிப்பில் வெளியான "பியார் கியா தோ தர்ணா க்யா" திரைப்படத்தின் மூலம் சஜித்-வாஜித் இருவரும் இசையமைப்பாளராக பாலிவுட்டில் அறிமுகமாகினர். சல்மான் கானின் படங்களான "வாண்டட்", "தபாங்" மற்றும் "ஏக் தா டைகர்" ஆகிய படங்களில் பணிபுரிந்து உள்ளனர்.

    "மேரா ஹீ ஜல்வா", "ஃபெவிகால் சே" போன்ற பாடல்களை சல்மானுக்காகவும், "ரவுடி ரத்தோர்" படத்திலிருந்து "சிந்தா தா சிட்டா சிட்டா" பாடலில் அக்‌ஷய் குமாருக்காகவும் வாஜித் பின்னணி பாடி உள்ளார். அவர் சமீபத்தில் சல்மானின் "பியார் கரோனா" மற்றும் "பாய் பாய்" போன்ற பாடல்களை பாடி இருந்தார்.

    வாஜித் கான்

    42 வயதாகும் வாஜித் கான் சிறுநீரக தொற்று காரணமாக சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் நிலை மோசமானது. இதை தொடர்ந்து அவர் இன்று காலை உயிரிழந்தார். வாஜித் இறந்த செய்தியை இசையமைப்பாளர் சலீம் மெர்ச்சண்ட் உறுதிப்படுத்தி உள்ளார். வாஜித் கான் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். 

    அண்மையில் பாலிவுட் பிரபலங்களான இர்பான் கான், ரிஷி கபூர் ஆகியோர் இறந்த நிலையில், தற்போது வாஜித் கான் மரணமடைந்திருப்பது பாலிவுட் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சினிமா படப்பிடிப்புகளை தொடங்கவும், தியேட்டர்களை திறக்கவும் அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம் எழுதி உள்ளார்.
    முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டைரக்டர் பாரதிராஜா அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “விதிகள் தளர்த்தி சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 60 பேர் கொண்ட குழு கலந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது. அதேசமயம் சினிமாவும் முடங்கிப்போய் கிடக்கிறது. திரையரங்குகள், விநியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் அடுத்த நிலை என்ன எனத் திணறி வருகிறோம். 

    பலர் உணவுக்கே வழியின்றி சிரமப்படுகிறார்கள். முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட முடியாது திகைக்கின்றனர். பணம் கொடுத்தவர்களும் போட்ட பணத்திற்கான வரவு வழி தெரியாததால் நஷ்டப்பட்டுப் போய் உள்ளனர். சினிமாவை நசிந்துவிடாமல் காக்க வேண்டிய நிலையில் உள்ளோம். முதல்வர், தயவு கூர்ந்து சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி கொடுத்துள்ளதைப் போன்ற ஒரு அனுமதியை சினிமாவுக்கும் படப்பிடிப்பைத் தொடங்க கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    பாரதிராஜா

    அரசு வரையறுக்கும் கட்டுப்பாடு, பாதுகாப்பு முறைகளுடன் இயங்குவோம் என உறுதியளிக்கிறோம். இதன்மூலம் சிறுபடங்கள் படப்பிடிப்பிற்குச் செல்ல ஏதுவாக அமையும். திரையரங்குகளும் தங்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி திறந்து செயல்பட திரையுலகினர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்“

    இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    ராம்குமார் சுப்பாராமன் இயக்கத்தில் நந்திதா ஸ்வேதா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐபிசி 376 படத்தின் முன்னோட்டம்.
    நந்திதா ஸ்வேதா நடிப்பில் ஐபிசி 376 என்ற ஆக்‌ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பெரும்பாலும் டூப் இல்லாமலே துணிச்சலாக நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா. இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்கி வருகிறார் ராம்குமார் சுப்பாராமன். இப்படம் பெண்களைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

    நந்திதா ஸ்வேதா

    படத்தின் தலைப்பில் உள்ள ஐபிசி 376 என்பது பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறிக்கிறது. விறுவிறுப்பாக தயாராகி வரும் இப்படத்தில் அண்ணாதுரை, தகாராறு படங்களில் பணியாற்றிய கே.தில்ராஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். கோலமாவு கோகிலா படத்தின் எடிட்டர் நிர்மல் எடிட்டிங் பணியை கவனிக்கிறார். பவர்கிங் ஸ்டூடியோ சார்பாக எஸ்.பிரபாகர் படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
    தமிழ் திரையுலகில் வளர்ந்துவரும் நடிகையான பிந்துமாதவி, 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
    கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் நடித்த பிந்து மாதவி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். அடுத்ததாக மாயன், யாருக்கும் அஞ்சேல் போன்ற படங்களில் நடித்துவந்த அவர், கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி உள்ளார்.

    இந்நிலையில் நடிகை பிந்துமாதவி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அதனால் மாநகராட்சி ஊழியர்கள் அந்தக் குடியிருப்புக்கு சீல் வைப்பதையும் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். மேலும் அங்கு வசிக்கும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் நடிகை பிந்து மாதவி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


    மிஷ்கின் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில், சிம்பு என்ன கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்தார் சிம்பு. ஐதராபாத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு கொரோனாவினால் ஏற்பட்ட ஊரடங்கை தொடர்ந்து நிறுத்தப்பட்டது. இதனிடையில் மிஷ்கின் சொன்ன கதை பிடித்துப் போக, சிம்பு உடனடியாக நடிக்க சம்மதித்துள்ளார். பல வருடங்களாகவே மிஷ்கின் சிம்பு கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இம்முறை அது நிகழ்ந்துள்ளது. 

    சிம்பு, மிஷ்கின்

    இந்நிலையில், இந்த கூட்டணியில் மற்றும் ஒரு ஆச்சரியமாக இணைந்துள்ளார் வடிவேலு. இப்படத்தில் சிம்பு ஒரு போலீஸ்காரராகவும், வடிவேலு ஒரு சந்தேகத்திற்குரிய மனிதனாக நடிப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிம்பு வடிவேலு காம்பினே‌ஷன் காட்சிகள் மிகவும் உற்சாகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    நானும் சிங்கிள் தான் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை தீப்தி ஸதி, தான் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    ‘நானும் சிங்கிள்தான்’ என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கும் தீப்தி ஸதியின் நீச்சல் உடை கவர்ச்சி போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பரபரப்பிற்காக அவர் அதுபோன்ற படத்தை வேண்டும் என்றே எடுத்து வெளியிட்டுக் கொண்டிருப்பதாக பலரும் கூறிக்கொண்டிருக்க, அதன் உண்மையான காரணத்தை தீப்தியே கூறியுள்ளார்.

    நான் நீச்சல் உடையில் தோன்றிய போட்டோ ஒன்று வைரலாக பரவிவருகிறது. நான் தனியாக போட்டோ ஷூட் நடத்தி அந்த படத்தை எடுத்திருப்பதாக பலரும் கருதிவிட்டார்கள். ஆனால் அந்த காட்சி நான் முதன் முதலில் நடித்த மராத்தி படமான ‘லக்கி’யில் இடம்பெற்றது. அந்த கவர்ச்சி காட்சியில் நடிக்க நான் ரொம்பவும் கூச்சப்பட்டேன். மிகுந்த மனநெருக்கடிக்கும் உள்ளானேன். ஆனால் அந்த காட்சி படத்திற்கு மிகவும் தேவை என்பதை உணர்ந்ததால் நடிக்க சம்மதித்தேன். 

    தீப்தி ஸதி

    நான் இன்ஸ்டாகிராமில் அந்த போட்டோவை வெளியிட்டதும், வைரலாகிவிட்டது. நிறைய பேர் அதை பார்த்துவிட்டு நேர்மறையான கருத்துக்களைதான் பதிவிட்டிருக்கிறார்கள். தேவையில்லாமல் நான் கவர்ச்சியாக தோன்றமாட்டேன். கதாபாத்திரத்திற்கு தேவை என்றால் மட்டுமே அதுபோன்ற காட்சிகளில் நடிப்பேன் எனக்கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
    நடிகையும், அரசியல் ஆர்வலருமான குஷ்புவின் நெருங்கிய உறவினர் ஒருவர் கொரோனா பாதிப்பால் பலியாகி உள்ளார்.
    கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் கோரமுகத்தை காட்டி வருகிறது. இதன் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கொரோனா அதிகம் பதித்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இங்கு 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் 2 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் மும்பையில் உள்ள தனது நெருங்கிய உறவினர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து குஷ்புவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் டுவிட்டரில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.  
    பிரேமம் படத்தை இயக்கி பிரபலமான அல்போன்ஸ் புத்திரனின் அடுத்த படத்தில் அருண்விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    தமிழில் நிவின் பாலி - நஸ்ரியா நஷீம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த ‘நேரம்’ படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்த அல்போன்ஸ் புத்திரன், அடுத்ததாக மலையாளத்தில் இயக்கிய ‘பிரேமம்’ படத்தின் மூலம் அனைவர் மத்தியிலும் பேசப்படும் ஒரு இயக்குனரானார். ‘பிரேமம்’ படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது.

    அல்போன்ஸ் புத்திரன், மம்முட்டி, அருண்விஜய்

    பிரேமம் படத்திற்கு பின் காளிதாஸ் ஜெயராமை வைத்து படம் இயக்கிய அல்போன்ஸ் புத்திரன், அப்படத்தை பாதியிலேயே கிடப்பில் போட்டுள்ளார். இந்நிலையில், தனது அடுத்த படத்தை தமிழில் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் இப்படத்தில் மம்முட்டி மற்றும் அருண்விஜய்யை நடிக்க வைக்க அவர் திட்டமிட்டுள்ளாராம். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ள இப்படம் குறித்த அறிவிப்பு லாக்டவுனுக்கு பின் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள 'டிக்கிலோனா' படத்திற்காக நடிகர் சந்தானம் ஒரே நாளில் 48 முறை கெட்-அப் மாற்றினாராம்.
    சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கி உள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

    இந்நிலையில், இப்படம் குறித்து இயக்குனர் கார்த்திக் யோகி சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: சந்தானம் இப்படத்தில் மிடில்கிளாஸ் பையனாகவும், விளையாட்டு வீரராகவும் நடித்துள்ளார். மற்றொரு கதாபாத்திரத்தை சஸ்பென்சாக வைத்துள்ளோம். மூன்று வேடங்கள் என்பதால் படமாக்க சற்று கடினமாக இருந்தது. 

    சந்தானம், கார்த்திக் யோகி

    ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மாற 30 முதல் 40 நிமிடங்கள் ஆகும். அந்த வகையில் சந்தானம் ஒரு நாளில் 48 முறை கெட்-அப் மாற்றினார். கஷ்டம் தான் என்றாலும், சந்தானம் இதனை முகம்சுளிக்காமல் செய்தார். தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் டப்பிங் பணிகளும் தொடங்கி உள்ளன. விரைவில் இது நிறைவடையும் என அவர் கூறியுள்ளார்.
    கொரோனா தடுப்பு பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக இளையராஜா 'பாரத பூமி' என்ற பாடலை வெளியிட்டுள்ளார்.
    கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை பரவாமல் தடுக்க நாடு முழுவதும் டாக்டர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், போலீசார் ஆகியோர் இரவு பகல் பாராமல் அயராது பணியாற்றி வருகின்றனர்.

    அவர்களை கவுரவிக்கும் விதமாக இளையராஜா 'பாரத பூமி' என்ற பாடலை வெளியிட்டுள்ளார். இளையராஜா எழுதி, இசையமைத்துள்ள இப்பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். இளம்வயதில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள லிடியன் பியானோ, கீ போர்டு உள்ளிட்ட வாத்தியங்களை இளையராஜாவின் மேற்பார்வையில் இசைத்துள்ளார். இப்பாடல் இந்தியில் சாந்தனு முகர்ஜி பாடியுள்ளார். 

    SPB, இளையராஜா

    இதற்கு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது: "இந்த இனிமையான இசைத் தொகுப்பை வழங்கியதற்காக மேஸ்ட்ரோ இளையராஜா மற்றும் அவரது குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள். சந்த  இசையோடு இணைந்த இந்த காணொலியில் காட்சிப்படுத்தப் பட்டிருப்பது போல தொற்றை எதிர்க்கும் அதே நேரம் நாம் ஒன்று சேர்ந்து நமது வளமான பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் கட்டிக்காப்போம்.

    இதுவரையில் கண்டிராத வகையிலான  கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக முன் கள வீரர்களாக நின்று  போராடுபவர்களுக்கும் ஒன்றின்றிணைந்து நிற்கும் இந்திய மக்களுக்கும் இந்திய திருநாட்டிற்கும் இசையால் பெருமை சேர்த்த பாரத பூமி என்ற தொகுப்பை கண்டு மகிழ்ந்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.

    பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான் போலீசுக்கு 1 லட்சம் கிருமி நாசினி பாட்டில்களை வழங்கியுள்ளார்.
    நாட்டின் மற்ற நகரங்களை காட்டிலும் மும்பை தான் ஆட்கொல்லி வைரசால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் களத்தில் நின்று போராடும் போலீசாரும் இங்கு அதிகளவில் தொற்று நோயால் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் வருகின்றனர்.

    இந்த நிலையில், இந்தி நடிகர் சல்மான்கான் தான் சமீபத்தில் தொடங்கிய பிரஷ் எனும் பராமரிப்பு மற்றும் சீர்படுத்துதல் பிராண்டு தயாரிப்பான கிருமிநாசினியை மும்பை போலீசுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார். போலீசார் அடிக்கடி கைகளை சுத்தப்படுத்தி கொள்வதற்காக மொத்தம் 1 லட்சம் கிருமிநாசினி பாட்டில்கள் சல்மான்கான் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. 

    சல்மான்கான்

    இதற்காக முதல்-மந்திரி அலுவலக டுவிட்டர் பக்கத்தில் நடிகர் சல்மான்கானுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு உள்ளது. மும்பையில் கொரோனா பாதிப்பை தொடர்ந்து திரையுலகை சேர்ந்த கூலித்தொழிலாளர்களுக்கு நிதியுதவி செய்த முதல் நடிகர் சல்மான்கான் தான். பன்வெலில் தனது பண்ணை வீட்டுக்கு அருகில் உள்ள கிராம மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார். மேலும் தேவைப்படுவோருக்கு உதவுமாறு தனது ரசிகர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
    ×