search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    இளையராஜா
    X
    இளையராஜா

    பாடல் வெளியிட்டு கொரோனா வாரியர்ஸை கவுரவித்த இளையராஜா

    கொரோனா தடுப்பு பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக இளையராஜா 'பாரத பூமி' என்ற பாடலை வெளியிட்டுள்ளார்.
    கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை பரவாமல் தடுக்க நாடு முழுவதும் டாக்டர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், போலீசார் ஆகியோர் இரவு பகல் பாராமல் அயராது பணியாற்றி வருகின்றனர்.

    அவர்களை கவுரவிக்கும் விதமாக இளையராஜா 'பாரத பூமி' என்ற பாடலை வெளியிட்டுள்ளார். இளையராஜா எழுதி, இசையமைத்துள்ள இப்பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். இளம்வயதில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள லிடியன் பியானோ, கீ போர்டு உள்ளிட்ட வாத்தியங்களை இளையராஜாவின் மேற்பார்வையில் இசைத்துள்ளார். இப்பாடல் இந்தியில் சாந்தனு முகர்ஜி பாடியுள்ளார். 

    SPB, இளையராஜா

    இதற்கு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது: "இந்த இனிமையான இசைத் தொகுப்பை வழங்கியதற்காக மேஸ்ட்ரோ இளையராஜா மற்றும் அவரது குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள். சந்த  இசையோடு இணைந்த இந்த காணொலியில் காட்சிப்படுத்தப் பட்டிருப்பது போல தொற்றை எதிர்க்கும் அதே நேரம் நாம் ஒன்று சேர்ந்து நமது வளமான பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் கட்டிக்காப்போம்.

    இதுவரையில் கண்டிராத வகையிலான  கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக முன் கள வீரர்களாக நின்று  போராடுபவர்களுக்கும் ஒன்றின்றிணைந்து நிற்கும் இந்திய மக்களுக்கும் இந்திய திருநாட்டிற்கும் இசையால் பெருமை சேர்த்த பாரத பூமி என்ற தொகுப்பை கண்டு மகிழ்ந்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×