என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஜெமினி, வின்னர், வில்லன் படங்களில் நடித்து பிரபலமான கிரணின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
    ஜெமினி' படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண். தொடர்ந்து அஜித்துடன் 'வில்லன்', பிரஷாந்துடன் 'வின்னர்', கமல்ஹாசனுடன் 'அன்பே சிவம்', எஸ்ஜே சூர்யாவின் 'நியூ' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். 

    குறிப்பாக சுந்தர்.சி இயக்கத்தில் பிரசாந்த், வடிவேலுவுடன் அவர் நடித்த 'வின்னர்' படம் சூப்பர் ஹிட்டானது. இதில் அதிக கவர்ச்சியில் கிரண் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கிரண் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

    கிரண்

    இந்நிலையில் தற்போது வெறும் சட்டை மட்டும் அணிந்துகொண்டு பட்டன் போடாமல் இருக்கும் புகைப் படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, பிரபல இயக்குனர் ஒருவரை படப்பிடிப்பு தளத்தில் கலாய்த்திருக்கிறார்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது.

    மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு வருகை தந்த விஜய்சேதுபதிக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் பொக்கே கொடுத்து வரவேற்ற காட்சியும், விக்கியை கட்டிப்பிடித்து விஜய்சேதுபதி அன்பை பரிமாறிய வீடியோ காட்சியும் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலானது.  

    சமந்தா

    தற்போது சமந்தாவும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ’சமந்தா முதல் நாள் படப்பிடிப்புக்கு தயாராக மேக்கப் போடும் காட்சிகள் உள்ளது. அப்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் பொக்கே கொடுத்து சமந்தாவை வரவேற்கும் போது ’ஒழுங்கா படம் எடுப்பீர்களா’ என்று விக்னேஷ் சிவனை கலாய்த்தார். அதற்கு சிரித்துக்கொண்டே விக்னேஷ் சிவன், 'தெரியலை பார்ப்போம்’ என்று கூறிவிட்டு, ‘இன்னும் பத்து நிமிடத்தில் ரெடி ஆகிவிடும் ஆனா நீங்க பொறுமையா வாங்க’ என்று பதிலுக்கு கலாய்க்கும் காட்சிகள் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
    தெலுங்கு படவுலகில் மெகா ஸ்டாராக வலம் வரும் சிரஞ்சீவி வைத்து வெற்றி பெற்ற படத்தின் ரீமேக்கை இயக்கயிருக்கிறார் மோகன் ராஜா.
    மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'லூசிஃபர்'. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இந்தப் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டது.

    இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை ராம் சரண் கைப்பற்றினார். மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிப்பது உறுதியானது. யார் இந்த படத்தை இயக்குவார் என்று கேள்விக்குறியாக இருந்தது.

    மோகன் ராஜா - சிரஞ்சீவி

    இந்நிலையில், 'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்கை மோகன் ராஜா இயக்கவுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நடிகர் சரவணன் தற்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்திருக்கிறார்.
    ‘பொண்டாட்டி ராஜ்யம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து 90களில் கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் சரவணன். பருத்திவீரன் திரைப்படம் அவருக்கு சித்தப்பு என்ற பெயரை வழங்கியதோடு தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்யவும் முக்கிய காரணமாக அமைந்தது.

     சரவணன் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்டார். சில காரணங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

     அண்மையில் நடைபெற்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற சரவணன், தற்போது மரியாதை நிமிர்த்தமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
    தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்த நடிகர் பெஞ்சமின் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
    தமிழில் வெற்றிகொடிக்கட்டு, தமிழ், பகவதி, திருப்பாச்சி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் பெஞ்சமின். இவர் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.  

    பெஞ்சமின்

    இந்நிலையில் நடிகர் பெஞ்சமின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நெஞ்சு வலி காரணமாக சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். ஆபரேஷன் செய்கிற அளவிற்கு பணம் இல்லை. இதனால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு செல்கிறேன். எவ்வளவு செலவாகும் என்று தெரியவில்லை அதனால் நண்பர்கள் மருத்துவ உதவி செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார். 
    விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகிறார்கள்.
    விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் டீசர் தீபாவளியன்று வெளியானது. யூடியூப் தளத்தில் 'மாஸ்டர்' டீசர் வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.  

    மாஸ்டர்

    தற்போது மாஸ்டர் படத்தின் தெலுங்கு டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்கு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாட தயாராகி வருகிறார்கள்.
    வருகிற சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய மகளுக்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சத்யராஜ். நடிகராக மட்டுமில்லாமல் சமூக செயற்பாட்டாளராகவும் குறிப்பாக திராவிட இயக்க சிந்தனைகளை பிரசாரம் செய்யும் பெரியாரின் தொண்டராகவும் இருக்கக் கூடியவர். இவர் அரசியலில் இறங்க இருப்பதாகவும் வரும் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இதுகுறித்து நாம் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவரும் அவர் மகள் திவ்யா சத்யராஜும் அளித்துள்ள விளக்கம் பின்வருமாறு, 

    என் குழந்தைகள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ள தகப்பன் நான். என் மகளை தைரியமான பெண்ணாக வளர்த்து இருக்கிறேன். ஒரு ஊட்டச்சத்து நிபுணராக திவ்யாவின் வெற்றியை நினைத்து பெருமைப்படுகிறேன். திவ்யாவின் அரசியல் பாதையிலும் ஒரு தகப்பனாகவும் நண்பனாகவும் என் மகளுக்கு பக்கபலமாக இருப்பேன். நிச்சயமாக என் மகளுக்காக பிரச்சாரம் செய்வேன்." இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

    திவ்யா சத்யராஜ்

    திவ்யா சத்யராஜ் கூறும்போது, அப்பா என் உயிர் தோழன் என் அரசியல் பாதையில் என்னுடன் கைகோர்த்து நிற்பார். ஆனால் ஒரு முக்கியமான விஷயம், I am a selfmade independent person, சொந்த வளர்ச்சிக்காக ஒரு போதும் அப்பாவின் புகழை உபயோகிக்க மாட்டேன்' என்று திவ்யா சத்யராஜ் கூறினார். 

    சத்யராஜ் மகள் திவ்யா ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர். இவர் கொரோனா நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க மகிழ்மதி" என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன் மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும் நீட் தேர்வை எதிர்த்தும் திவ்யா சத்யராஜ் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. கொரோனா நேரத்தில் பெரும் இழப்புகளை சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று திவ்யா விவசாயத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விரைவில் திவ்யா சத்யராஜ் எந்த கட்சி சார்பாக போட்டியிட போகிறார் என்ற விவரத்தை வெளியிட இருக்கிறார்.

    தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் அரவிந்த்சாமி எம்ஜிஆர் ஆக கடைசி நாள் என்று கூறி நன்றி தெரிவித்துள்ளார்.
    தனி ஒருவன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த அரவிந்த்சாமி தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். தற்போது ஏ எல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிக்கும் தலைவி படத்தில் அரவிந்த் சாமி, எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

     ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கும் கங்கனா ரனாவத் தன்னுடைய தலைவி படத்தின் கடைசி நாள் புகைப்படத்தை வெளியிட்டார்.

    அதேபோல் அரவிந்த் சாமி எம்ஜிஆர் ஆக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இறுதி நாள் படப்பிடிப்பில் புகைப்படத்தை வெளியிட்டு மேக்கப் மேனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

    அரவிந்த் சாமி

    "புரட்சித் தலைவரின் அழகுக்கும், வசீகரத்துக்கும் எவ்வளவு பக்கத்தில் என்னைக் கொண்டுபோக முடியுமோ அவ்வளவு பக்கத்தில் கொண்டுபோக, இந்த மனிதர் தனது மாயாஜாலத்தை, இந்தப் படப்பிடிப்பில் கடைசி முறையாக என் முகத்தில் காட்டுகிறார். நன்றி ரஷீத் சார், கடைசி நாள் படப்பிடிப்பு #தலைவி'. என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
    ஜெ.சபரிஸ் இயக்கத்தில் விஜே சித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கால்ஸ்’ படத்தின் முன்னோட்டம்.
    இன்பைனைட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் "கால்ஸ்". ஜெ.சபரிஸ் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகை விஜே சித்ரா கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். மேலும் டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன் , தேவதர்ஷினி , வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி , ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமீம் அன்சாரி இசையமைத்துள்ளார்.

    படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது: ‘கால்ஸ்’ படத்தில் பி.பி.ஓ.வில் பணிபுரியும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த 23 வயது பெண்ணின் கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளது. இந்த கதாபாத்திரத்தில் முதலில் ரித்விகாவை நடிக்க வைக்க முயன்றேன். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகு மகிமா நம்பியாரை நடிக்க வைக்க முயற்சி செய்தேன். அப்போது அவர் ‘சாட்டை’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தார்.

    சித்ரா

    அதன் பிறகு ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்த அர்த்தனா பினுவை நடிக்க வைக்கலாம் என்று நினைத்தேன். அப்போது தான் நடிகை சித்ரா பற்றி கேள்விப்பட்டேன். அவர் பணியில் கொண்டிருந்த அர்ப்பணிப்பு மற்றும் வாழ்க்கை போராட்டங்களை அறிந்தேன். அவர் ஒரு தமிழ்ப்பெண் என்பதால் பி.பி.ஓ.வில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்துக்கு பொருந்துவார் என்று எதிர்ப்பார்த்தேன்.

    இந்த படத்தின் கதையை நான் சித்ராவிடம் சொன்ன போது நடுவில் நிறுத்தி, இது போன்ற கதைக்காக காத்திருந்தேன். செமையா இருக்கு” என்று கூறினார். இந்த படத்தில் நான் நடிக்கிறேன். மீதமுள்ள கதையை சொல்ல வேண்டாம். முழு படத்தையும் பெரிய திரையில் பார்ப்பேன் என்றார். ஆனால் இப்போது அவர் இல்லை” என கூறினார்.
    மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் பிசாசு 2 படத்தில் பிரபல நடிகை பேயாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    ரஜினிகாந்தின் எந்திரன், கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, விக்ரமின் சாமி. விஷாலின் சண்டக்கோழி மற்றும் அரண்மனை உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்தன. சூர்யாவின் சிங்கம் படம் 3 பாகங்கள் வெளியானது. இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. 

    இந்த வரிசையில் 2014-ல் வெளியான பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. முருகானந்தம் தயாரிக்க மிஷ்கின் இயக்குகிறார். படப்பிடிப்பு வேலைகளை தொடங்கி உள்ளனர். பேய் கதையம்சத்தில் தயாராகிறது. இதில் ஆண்ட்ரியா, பூர்ணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

    பூர்ணா

    பூர்ணா பேயாக நடிப்பதாக தெரிகிறது. முதல் பாகத்தை விட அதிக திகில் காட்சிகள் இதில் இடம்பெறும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மிஷ்கின் இயக்கிய சவரக்கத்தி படத்தில் பூர்ணா நடித்துள்ளார். திண்டுக்கல்லில் அரங்குகள் அமைத்து பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்துகிறார்கள். நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ஏற்கனவே பேயாக நடித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
    அஜித்குமாரின் வலிமை படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஹூமா குரேசி அஜித்துக்கு ஜோடியாக நடிக்க, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் கொரோனாவுக்கு முன்பே தொடங்கியது. ஊரடங்கு தளர்வில் மீண்டும் படப்பிடிப்பை நடத்தினர். 

    அஜித்

    அஜித்தின் பைக் சாகச காட்சியை படமாக்கியபோது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. தற்போது படக்குழுவினர் சென்னை திரும்பி உள்ளனர். 20 சதவீத படப்பிடிப்பு மட்டுமே பாக்கி உள்ளது. விரைவில் ஐதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பு நடக்க உள்ளது. வலிமை படத்தை அஜித்குமாரின் பிறந்த நாளான மே 1-ந்தேதி ரிலீஸ் செய்ய ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
    ஓடிடியில் வெளியாகி, அதிகம் பேர் பார்த்த படங்களின் டாப் 10 பட்டியல் வெளியாகி உள்ளது, இதில் மூன்று தமிழ் படங்கள் இடம்பெற்றுள்ளன.
    கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் லாக்டவுன் போடப்பட்டது. இதன் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், புதிய படங்களை ஓடிடி-யில் நேரடியாக வெளியிட ஆரம்பித்தனர். அந்த வகையில் முதலில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படம் வெளியிடப்பட்டது.

    இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து தொடர்ந்து பல்வேறு மொழி படங்களும் ஓடிடியில் வெளியிடப்பட்டன. அந்த வகையில் இந்தாண்டு ஓடிடியில் வெளியாகி, அதிகம் பேர் பார்த்த படங்களின் டாப் 10 பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் மூன்று தமிழ் படங்கள் இடம்பெற்றுள்ளன.

    சூர்யா, நயன்தாரா, ஜோதிகா

    அதன்படி சூரரைப்போற்று 2-வது இடத்திலும், மூக்குத்தி அம்மன் 8-வது இடத்திலும், பொன்மகள் வந்தாள் 10வது இடத்திலும் உள்ளன. தற்கொலை செய்து கொண்டு ரசிகர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நடித்த கடைசி படமான தில் பேச்சரா படம் முதலிடத்தை பிடித்துள்ளது.

    இதேபோல் 3வது இடத்தில் லுடோ, 4வது இடத்தில் ராகவா லாரன்ஸ் இயக்கிய லட்சுமி, 5வது இடத்தில் குஞ்சன் சக்சேனா, 6வது இடத்தில் குதா ஹாபிஸ், 7வது இடத்தில் குலாபோ சித்தாபோ ஆகிய இந்திப் படங்களும், 9வது இடத்தில் நானி நடித்த தெலுங்குப் படமான வி இடம் பிடித்துள்ளது.
    ×