என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பல ஆண்டுகளாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த டிடி, தற்போது இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்.
    மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான டிடி என்ற திவ்யதர்ஷினி, தமிழில் ஜூலி கணபதி, விசில், நளதமயந்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

    திரைத்துறையைச் சார்ந்த பல பிரபலங்களை நேர்காணல் செய்த இவர் தமிழ்ப் படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார். பவர் பாண்டி, சர்வம் தாளமயம் ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இவர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

    மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான என்னு நின்டே மொய்தீன் படத்தில் இடம்பெறும் முக்கத்து பெண்ணே பாடலை தமிழில் ஆல்பம் பாடலாக உருவாக்கி உள்ளனர். இதை டிடி தயாரித்து, இயக்கிதோடு மட்டுமல்லாமல் அவரே நடிக்கவும் செய்துள்ளார். நிகில் மேத்யூ பாடியுள்ள இந்தப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். 

    சித்ரா தற்கொலை வழக்கில் ஹேம்நாத் கைது செய்யப்பட்டது குறித்து அவரது தந்தை ரவிச்சந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
    சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை அதிரடியாக கைது செய்த போலீசார், அவரை பொன்னேரி கிளை சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே சித்ரா தற்கொலை தொடர்பாக கடந்த சில தினங்களாக ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரனிடம் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தினார்.

    சித்ரா தற்கொலை வழக்கில் யாரையோ காப்பாற்ற முயற்சி நடப்பதாக ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு: சித்ரா சம்பாதிக்கும் பணத்தை நாங்கள் ஒரு போதும் கேட்டது இல்லை. வரதட்சனையும் கேட்கவில்லை. உங்கள் பெண்ணுக்கு நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதனை செய்தால் போதும் என்றுதான் சித்ராவின் பெற்றோரிடம் கூறி இருந்தோம்.

    சித்ரா

    எனது மகனை போலீசார் அவசர அவசரமாக கைது செய்துள்ளனர். என்ன நடக்கிறது? என்பதே தெரியவில்லை. சித்ரா தற்கொலை வழக்கில் போலீசார் யாரையோ காப்பாற்ற பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
    நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் சின்னத்திரை நடிகர்-நடிகைகளிடமும் விசாரணை நடத்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. முடிவு செய்துள்ளார்.
    சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். சித்ரா தற்கொலைக்கு கணவர் ஹேம்நாத்தே காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஜனவரி மாதம் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் சித்ராவும், நானும் கடந்த அக்டோபர் மாதமே பதிவு திருமணம் செய்து கொண்டதாக ஹேம்நாத் கூறியிருந்தார்.

    இதையடுத்து சித்ராவுக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆகி இருப்பதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ விசாரணை நடத்தி வருகிறார்.

    சித்ராவின் தாய்-தந்தையிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நேற்று ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன், தாய் வசந்தா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    வரதட்சணை கொடுமையால் சித்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. இது தொடர்பாகவே ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது. ஹேம்நாத்தின் தாய்-தந்தை இருவரிடமும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள், சித்ராவிடம் நாங்கள் வரதட்சணை எதையும் கேட்கவில்லை என்று கூறியுள்ளனர்.

    இதனை தொடர்ந்து சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேம்நாத் பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து விசாரணைக்காக ஹேம்நாத்தை நேரில் ஆஜர்படுத்துமாறு சிறைத்துறை அதிகாரிக்கு பொன்னேரி ஆர்.டி.ஓ. கடிதம் அனுப்பியுள்ளார். இதனை ஏற்று சிறைத்துறை அதிகாரிகள் நாளை ஹேம்நாத்தை, ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. முன்பு ஆஜர்படுத்த உள்ளனர்.

    இந்த விசாரணையின் போது சித்ரா வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தப்பட்டது தெரிய வந்தால் அது தொடர்பான வழக்கிலும் ஹேம்நாத் கைது செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.

    இதற்கிடையே சித்ரா தற்கொலை வழக்கில் சின்னத்திரை நடிகர்-நடிகைகளிடமும் விசாரணை நடத்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. முடிவு செய்துள்ளார்.

    ஹேம்நாத்திடம் நாளை காலை விசாரணை நடத்தப்பட்ட பிறகு சித்ராவின் நெருங்கிய தோழிகளாக இருந்த நடிகைகளிடமும் அவருடன் நடித்த சக நடிகர்களிடமும் விசாரணை நடைபெற உள்ளது.

    இந்த விசாரணை முடிவடைந்த பிறகு இது தொடர்பான அறிக்கையை ஆர்.டி.ஓ. தாக்கல் செய்ய உள்ளார். அப்போது சித்ரா தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்பது தெரிய வரும்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டீசர் யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது.
    விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் டீசர் தீபாவளியன்று வெளியானது. நீண்ட நாட்களாக 'மாஸ்டர்' அப்டேட் கேட்டு வந்த விஜய் ரசிகர்களுக்கு, இந்த டீசர் கொண்டாட்டமாக இருந்தது. வழக்கமாக விஜய் பட டீசர் என்றால் அதில் நிச்சயம் ஒரு பஞ்ச் வசனமாவது இடம்பெறும், ஆனால் மாஸ்டர் டீசரில் விஜய் ஒரு வசனம் கூட பேசியிருக்க மாட்டார். இது முற்றிலும் புதுமையாக இருந்தது.

    விஜய்

    யூடியூப் தளத்தில் 'மாஸ்டர்' டீசர் வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது, இந்திய அளவில் வெளியான டீசர்களில் அதிக கமெண்ட் செய்யப்பட்ட டீசர் என்ற சாதனையை மாஸ்டர் டீசர் படைத்துள்ளது. மாஸ்டர் டீசரை இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கமெண்ட் செய்துள்ளனர்.
    வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து அவரது உதவியாளர் விளக்கம் அளித்துள்ளார்.
    தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து இன்று காலை திடீரேன சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய நோய் பிரச்சனைக்காக உள்நோயாளியாக வைரமுத்து அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் பரவி வந்தன. 

    இந்நிலையில், வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது உண்மையா என்பது குறித்து அவரது உதவியாளர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், வைரமுத்து வழக்கமான பரிசோதனைக்காக தான் மருத்துவமனை சென்றதாக அவர் கூறினார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம்வரும் பா.இரஞ்சித்தின் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் நடிக்க உள்ளாராம்.
    விக்ரம் மகன் துருவ், கடந்த ஆண்டு வெளியான ‘ஆதித்ய வர்மா’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர் அடுத்ததாக ‘சீயான் 60’ படத்தில் தந்தை விக்ரமுடன் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார். இதுகுறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதேபோல் துருவ் விக்ரம் நடிக்கவிருக்கும் மூன்றாவது படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளார்.  

    இவர் ஏற்கனவே ‘பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். தற்போது தனுஷை வைத்து ‘கர்ணன்’ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பிறகு துருவ்விக்ரம் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துருவ் நடிக்கும் படத்தின் கதை விளையாட்டை மையப்படுத்தி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.  

    துருவ், மாரி செல்வராஜ்

    இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான பா.இரஞ்சித் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு போன்ற படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், நடிகை திரிஷாவின் ராங்கி படத்துக்கு உதவி உள்ளார்.
    எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் சரவணன், அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘ராங்கி’. இப்படத்திற்கான கதை மற்றும் வசனத்தை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியிருக்கிறார். ‘ராங்கி’ என்றால் அடங்காத, துணிச்சல் மிகுந்த பெண் என்று பொருள். 

    படத்தில் நிறைய சண்டை காட்சிகள் உள்ளன. இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 

    இந்நிலையில், இந்த படத்தின் சிங்கிள் டிராக்காக ‘பனித்துளி’ எனும் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. சத்யா இசையில் சின்மயி பாடியிருக்கும் இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். மேலும் அவர் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். பாடலை வெளியிட உதவிய நடிகர் சிவகார்த்திகேயனுக்கு டுவிட்டரில் திரிஷா நன்றி தெரிவித்தார்.

    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, புதிதாக நடித்துள்ள வெப் தொடரில் வில்லி வேடம் ஏற்றுள்ளாராம்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா நடிப்பில் கடந்த வருடம் 4 படங்கள் வந்தன. இந்த வருடம் பிப்ரவரியில் ஜானு என்ற ஒரு தெலுங்கு படம் மட்டுமே வெளியானது. கொரோனாவால் புதிய படங்களில் நடிக்க முடியாமல் போனது. நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

    இந்த நிலையில் மனோஜ்பாய், பிரியாமணி, ஷரிப் ஹஸ்மி, நீரஜ் மாதவ் ஆகியோர் நடித்து வெளியான தி பேமிலி மேன் வெப் தொடரின் இண்டாவது சீசனில் சமந்தா நடித்துள்ளார். இந்த தொடர் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது. 

    சமந்தா

    இதில் தனது நடிப்பு குறித்து சமந்தா கூறும்போது, “என்னை குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு இது வேறுமாதிரி இருக்கும். பல விதிமுறைகளை உடைத்து இருக்கிறேன்” என்றார். இந்த தொடரில் அவர் வில்லி வேடத்தில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சண்டை காட்சிகளிலும் நடித்து இருக்கிறார்.
    விஜயகுமார் திரை உலகில் நுழைவதற்கு முன்பே திருமணமாகி விட்டது. மனைவி பெயர் முத்துக்கண்ணு. இந்த தம்பதிகளுக்கு கவிதா, அனிதா என்ற 2 மகள்கள். அருண் விஜய் என்று ஒரே மகன்.
    விஜயகுமார் திரை உலகில் நுழைவதற்கு முன்பே திருமணமாகி விட்டது. மனைவி பெயர் முத்துக்கண்ணு. இந்த தம்பதிகளுக்கு கவிதா, அனிதா என்ற 2 மகள்கள். அருண் விஜய் என்று ஒரே மகன்.

    விஜயகுமார் நடிகராகப் புகழ் பெற்ற பிறகு, அவர் காதலித்து மணந்தவர் நடிகை மஞ்சுளா.

    விஜயகுமார் -மஞ்சுளா தம்பதிகளுக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி என்று 3 மகள்கள்.

    ஸ்ரீதேவி தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். மற்ற 5 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    தனது குடும்பம் பற்றி விஜயகுமார் கூறியதாவது:-

    "அப்பா வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். `கள்ளர் மறவர் கனத்ததோர் அகம்படியர் மெள்ள மெள்ள வந்து வெள்ளாளரானார்' என்றொரு பாடல் உண்டு. இந்த வழியில் வந்த சமூகம் எங்களுடையது. பட்டுக்கோட்டையை சுற்றிலும் உள்ள 32 கிராமங்களில் எங்கள் சமூகத்தவர்தான் இருக்கிறார்கள். இந்த தொகுதியில் போட்டியிடும் எம்.எல்.ஏ.யின் வெற்றி இந்த 32 கிராமங்களில் உள்ளவர்களை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.

    இந்த சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தில் இருந்தே திருமணம் நடந்தது. மனைவி முத்துக்கண்ணு நான் நடிக்க வரும் முன்னரே எனக்கு மனைவி ஆனவர். என் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருந்தவர்.

    கலையுலகுக்கு வந்த பிறகு எனக்கு மனைவியான மஞ்சுளா, பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். மனைவியர் இருவருமே சொந்த சகோதரிகள் போல் அன்பு செலுத்துகிறார்கள்.

    மஞ்சுளா பற்றி சொல்ல வேண்டும். திரையுலகில் எம்.ஜி.ஆர் -சிவாஜி என முன்னணி கலைஞர்களுக்கு ஜோடியாக நடித்தவர். ஆந்திராவில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ் போன்ற சூப்பர் ஸ்டார்களுடனும் கதாநாயகியாக நடித்தவர். இவர் கலை மூலம் வெளிப்பட்டாலும் இவரது பூர்வீகம் மற்ற துறைகளில் பிரபலமானவர்களைக் கொண்டிருக்கிறது.

    மஞ்சுளாவின் கொள்ளுத்தாத்தா சர் டி.பி.முத்துசாமி அய்யர் சென்னை ஐகோர்ட்டின் முதல் நீதிபதியாக பணியாற்றியவர். அதை நினைவுபடுத்தும் வகையில் சென்னை ஐகோர்ட்டில் அவருக்கு மார்பளவு சிலை வைத்து மரியாதை செய்திருக்கிறார்கள்.

    மஞ்சுளாவின் தாத்தா சர்.டி.ஏகாம்பரம் அய்யர், தமிழ்நாட்டின் முதல் வருமான வரி ஆணையராக இருந்தவர். அப்பா பானிராவ் ரெயில்வேயில் ஐ.ஜி.யாக இருந்தவர். இவர் ஆற்றிய பணி குறித்து இப்போதும் தென்னக ரெயில்வேயில் பெருமையாக பேசிக்கொள்கிறார்கள்.

    மூத்த மகள் கவிதா திருமணமாகி கணவர் ரவிசங்கருடன் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் இருக்கிறாள்.

    அடுத்த மகள் டாக்டர் அனிதாவின் கணவர் கோகுலகிருஷ்ணா. இவர்கள் துபாயில் இருக்கிறார்கள்.

    அடுத்தடுத்த மகள்கள் வனிதாவும், பிரீதாவும் கலைத்துறையைச் சேர்ந்தவர்களை மணந்து கொண்டிருக்கிறார்கள்.

    வனிதா மணந்து கொண்ட ஆகாஷ், நடிகர். பிரீதாவின் கணவர் ஹரி, சினிமா டைரக்டர்.

    மகன் அருண் விஜய்க்கு கடந்த ஆண்டு திருமணமானது. மனைவி பெயர் ஆர்த்தி.

    பிள்ளைகள் திருமண விஷயத்தில் நான் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்'' என்ற கண்ணோட்டத்தில் நடந்து கொண்டேன். ஜாதி மத பேதமின்றி ஒரு இந்தியனாக இருந்து காட்டவேண்டும் என்பது என் முடிவான எண்ணம். கலைத்துறைக்குள் வந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பன்மொழிகளிலும் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது, `என்னை ரசிக்கிற நேசிக்கிற இத்தனை மக்களும் என்னை சொந்தம் கொண்டாடியபோதே, `ஒன்றே குலம் ஒருவனே தேவன்' சிந்தனைக்குள் வந்துவிட்டேன்.

    கோடிக்கணக்கில் நான் சம்பாதிக்காவிட்டாலும், கோடிக்கணக்கான ரசிகர் இதயங்களில் இருக்கிறேன். ஒரு கலைஞனான எனக்கு இதைவிட வேறென்ன சந்தோஷம் வேண்டும்? இந்த வகையில் என்னை கலை மூலம் அடையாளம் காட்டிய கலைத்தாய்க்கும் என் நன்றி.

    என்னை இந்த பூமிக்குத் தந்த என் பெற்றோரையும் நான் கொண்டாடி மகிழ்கிறேன். அப்பா எம்.என்.ரெங்கசாமி என் தன்னம்பிக்கைக்கு ஆணிவேராக இருந்தார். அவர் மட்டும் எனது சினிமா கனவுக்கு உயிர் கொடுக்காதிருந்தால், `நிச்சயம் நீ ஜெயிப்பாய்' என்று வாழ்த்தி சென்னைக்கு அனுப்பாதிருந்தால், பஞ்சாட்சரம் என்ற பெயருடன் கிராமத்தில் சாதாரண பிரஜையாகத்தானே இருந்திருப்பேன்.

    இந்த வகையில் கலை மூலம் என்னை உலகறியச் செய்த அப்பாவுக்கு எங்கள் ஊரில் 1995-ம் ஆண்டு ஒரு சிலை எழுப்பியிருக்கிறேன். அப்பா ரைஸ் மில் நடத்திய இடத்தில் தம்பி சக்திவேல் `எம்.என்.ஆர்' என்ற பெயரில் ஒரு திருமண மண்டபம் கட்டியிருக்கிறார். ரைஸ் மில் இருந்த இடத்தில் என் பங்குக்கான பகுதியில் அப்பாவுக்கு சிலை வைத்திருக்கிறேன்.

    என் தாயாருக்கும் சிலை வைக்கும் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறேன். அப்பா  95 வயதிலும், அம்மா 90 வயதிலும் இறைவனடி சேர்ந்தார்கள். அது உலகப்பிரகாரம். என் இதயப் பிரகாரம் எப்போதும் என்னுடன் சிலையாக மட்டுமின்றி நிலையாகவும் இருந்து கொண்டிருப்பார்கள்.''

    இவ்வாறு நடிகர் விஜயகுமார் கூறினார்.

    விஜயகுமார் இப்போது நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பொறுப்பிலும் இருந்து வருகிறார்.
    சமீபத்தில் கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வாலுக்கு பிரபல நடிகர் படப்பிடிப்பு தளத்தில் சிறப்பான வரவேற்பு கொடுத்துள்ளார்.
    நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் தேனிலவு கொண்டாட கணவருடன் மாலத்தீவுக்கு சென்றார். தற்போது தேனிலவை முடித்து விட்டு நாடு திரும்பி இருக்கும் அவர், ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

    திருமணத்துக்கு முன்னர் இந்தியன் 2, ஆச்சார்யா ஆகிய படங்களில் நடித்து வந்தார் காஜல் அகர்வால். இந்நிலையில் தேனிலவை முடித்த காஜல் அகர்வால் சிரஞ்சீவியின் ஆச்சர்யா படப்பிடிப்பில் இன்று இணைந்தார்.

    காஜல்

    காஜல் அகர்வால் உடன் அவரது கணவர் கவுதம் கிச்சலும் வந்திருந்தார். இருவரையும் சிரஞ்சீவி உள்ளிட்ட படக்குழுவினர் மாலை அணிவித்து வரவேற்றனர்.
    தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை தற்போது புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ரெஜினா. அதனை தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இதைத் தொடர்ந்து நாளடைவில் கவர்ச்சியில் களமிறங்கிய ரெஜினா தொடர்ந்து ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

     இந்நிலையில் டிசம்பர் 13-ம் தேதி ரெஜினா தனது 30-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு ரெஜினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய புகைப்படத்தை வெளியிட்டு உங்களது வாழ்த்துகளுக்கும், ஆசிர்வாதங்களுக்கும் நன்றி. என தெரிவித்திருந்தார்.

    ரெஜினா

    மேலும் புகைப்படத்தின் கீழ் அடுத்த பக்கத்தில் எனது ஆடையில்லா புகைப்படம் உள்ளது எனவும் பதிவிட்டிருந்தார். இதனை கண்ட நெட்டிசன்கள் பக்கத்துக்கு நகர்த்த, அதில் ஆடையில்லாமல் ரெஜினா குழந்தையாக இருந்த புகைப்படம் இருந்தது. அதைக்கண்டு ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் சார்பட்டா பரம்பரை படத்தின் படக்குழுவினர் அடுத்த கட்டத்திற்கு செல்ல இருக்கிறார்கள்.
    இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த திரைப்படம் “சார்பட்டா பரம்பரை”. வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.

    இப்படத்தில் ஆர்யாவுடன் ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர் ஆகியோரும் இப்படத்திற்காக கட்டுமஸ்த்தான உடற்கட்டோடு நடித்திருக்கிறார்கள். கதாநாயகியாக துஷாரா அறிமுகமாகிறார். நடிகர் பசுபதி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    படக்குழுவினர்

    சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முமுவதும் முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். இதையடுத்து அடுத்த கட்டமாக பின்னணி வேலைகளை படக்குழுவினர் தொடங்க இருக்கிறார்கள்.
    ×