என் மலர்
சினிமா செய்திகள்
எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன் என புதுச்சேரியில் நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை அரசு சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான இந்தியத் திரைப்பட விழா இன்று அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் நடைபெற்றது.
கடந்த 2019 ஆண்டில் சிறந்த திரைப்படமாக இயக்குனர் பார்த்திபனின் “ஒத்த செருப்பு” படம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான புதுவை அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருதினை இயக்குனர் பார்த்திபனுக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி வழங்கினார். விருதுக்கான பாராட்டு பத்திரத்துடன் ரூ.1 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.
விழாவில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் பேசுகையில், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன். தற்போது அரசியலுக்கு வரும் நடிகர்களும் சிறப்பான ஆட்சியை வழங்குவார்கள். நடிகர்கள் என்பதால் அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டிய அவசியமில்லை என பேசினார்.
புதுவை அரசு சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான இந்தியத் திரைப்பட விழா இன்று அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் நடைபெற்றது.
கடந்த 2019 ஆண்டில் சிறந்த திரைப்படமாக இயக்குனர் பார்த்திபனின் “ஒத்த செருப்பு” படம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான புதுவை அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருதினை இயக்குனர் பார்த்திபனுக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி வழங்கினார். விருதுக்கான பாராட்டு பத்திரத்துடன் ரூ.1 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.
விழாவில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் பேசுகையில், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன். தற்போது அரசியலுக்கு வரும் நடிகர்களும் சிறப்பான ஆட்சியை வழங்குவார்கள். நடிகர்கள் என்பதால் அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டிய அவசியமில்லை என பேசினார்.
பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு இந்திய திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளது.
புதுவை அரசு சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான இந்தியத் திரைப்பட விழா இன்று (செவ்வாய்கிழமை) அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் நடைபெற்றது.

கடந்த 2019 ஆண்டில் சிறந்த திரைப்படமாக இயக்குனர் பார்த்திபனின் “ஒத்த செருப்பு” படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான புதுவை அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருதினை இயக்குனர் பார்த்திபனுக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி வழங்கினார். விருதுக்கான பாராட்டு பத்திரத்துடன் ரூ.1 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

அதையடுத்து அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கில் ஒத்த செருப்பு திரைப்படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து வருகிற 19-ந் தேதி வரை இதே அரங்கில் நாள்தோறும் மாலை 6 மணிக்கு இதர மொழித் திரைப்படங்களை இலவசமாக பார்க்கலாம்.
16-ந் தேதி வங்கமொழி திரைப்படம் ஜேஸ்தோபுத்ரா, 17-ந் தேதி மலையாளத் திரைப்படம் ஜல்லிக்கட்டு, 18-ந் தேதி தெலுங்கு திரைப்படம் எப்.2 பன் அண்டு ப்ரஸ்ட்ரேசன், 19-ந் தேதி இந்தி திரைப்படம் உரி த ஸர்ஜிகல் ஸ்ட்ரைக் ஆகிய படங்கள் திரையிடப்படுகிறது.
அனிஸ் இயக்கத்தில் சசிகுமார், பிந்துமாதவி, வாணி போஜன் நடிப்பில் உருவாகும் பகைவனுக்கு அருள்வாய் படத்தின் முன்னோட்டம்.
கூர்கா படத்தை தயாரித்த 4 Monkeys Studio தயாரிப்பு நிறுவனம் தற்போது எதார்த்த நடிகர் M.சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. “பகைவனுக்கு அருள்வாய்” எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனிஸ் இயக்குகிறார்.
கதையின் நாயகனாக சசிகுமார் நடிக்க, நாயகிகளாக வாணி போஜன், பிந்து மாதவி நடிக்கின்றனர். மேலும் நடிகர்கள் நாசர், சதிஷ் நிஷ்நஷம், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இசை – ஜிப்ரான், ஒளிப்பதிவு – கார்த்திக் கே தில்லை, படத்தொகுப்பு – மு.காசி விஸ்வநாதன், கலை – விஜய் தென்னரசு, நடனம் – தீனா, சண்டைப்பயற்சி – ஆக்ஷன் நூர் ஆகியோர் இப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமான மாதவன் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ’சார்லி’. துல்கர் சல்மான் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பார்வதியும் நடித்திருந்தனர். இந்த படத்தை மார்ட்டின் பர்கத் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் பல்வேறு விருதுகளையும் வாங்கியது. இந்த படம் தமிழில் 'மாறா' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் திலீப் குமார் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் துல்கர் சல்மான் வேடத்தில் மாதவனும், பார்வதி வேடத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே விக்ரம்-வேதா படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். நெடுஞ்சாலை படத்தில் நடித்த ஷிவதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் டிசம்பர் 17ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 8 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
நடிகர் மற்றும் நடன இயக்குனர் பிரபுதேவா நடிப்பில் உருவாகவுள்ள ஒரு படத்தில் பிரபல நடிகரின் மகன் அறிமுகமாக இருக்கிறார்.
நடிகர்கள் விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, கருணாஸ் ஆகியோரின் வாரிசுகள் திரைப்படங்களில் அறிமுகப்படுத்தபட்டனர். அவர்களைத் தொடர்ந்து நடிகர் சந்தானத்தின் மகனும் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

சந்தானம் தற்போது கார்த்திக் இயக்கத்தில் ”டிக்கிலோனா” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சந்தானத்தின் மகன் நிபுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் பரவி பின்னர் மறுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது நிபுன் இயக்குனர் ராகவன் இயக்கத்தில், நடிகர் மற்றும் நடன இயக்குனர் பிரபுதேவா நடிப்பில் உருவாகவுள்ள ஒரு படத்தில் நடிக்கிறார். இதில் நிபுன் முழுப்படத்திலும் இடம்பெறும் அளவிற்கு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வரும் ஜெய், எனக்குள் இருந்த கலைஞனை கொண்டுவந்த ஊரடங்குக்கு நன்றி என்று கூறி இருக்கிறார்.
சிம்பு நடித்துள்ள 'ஈஸ்வரன்' படத்துக்கு முன்பாக, ஜெய் நடித்துள்ள படத்தை இயக்கி முடித்துள்ளார் சுசீந்திரன். ஷிவ ஷிவா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் மீனாட்சி நாயகியாக நடித்துள்ளார். சத்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார், அர்ஜெய் ப்ரின்ஸ், அருள்தாஸ், இயக்குநர் முக்தார் கான் உள்ளிட்ட பலர் ஜெய்யுடன் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார் ஜெய். மேலும், இந்தப் படத்துக்காகத் தனது உடலமைப்பையும் மாற்றி நடித்துள்ளார். இது தொடர்பாக ஜெய் கூறியிருப்பதாவது:
"கமல் சார் 'மருதநாயகம்' படத்துக்காக உடலை மாற்றியதுபோல நான் என் உடலமைப்பை மாற்றவில்லை. நான் செய்ததெல்லாம் ஒல்லியாகத் தெரிய, கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றினேன். முதல் முறையாக திரையில் வேட்டி கட்டியதும் இந்தப் படத்துக்காகத்தான். நன்றாக இருந்தது. எனது சிறு வயதில் பல நாட்களை நான் ஒலிப்பதிவுக் கூடத்தில் செலவிட்டிருக்கிறேன்.

'அண்ணாமலை', 'பாட்ஷா' ஒலிப்பதிவின்போது நான் அங்கு இருந்திருக்கிறேன். நடிக்க வரவில்லையென்றால் இசையமைப்பாளராக வேண்டும் என்பதுதான் என் கனவு. ஊரடங்குக்கு நன்றி. எனக்குள் இருந்த இசைக் கலைஞனை அது வெளிக்கொண்டுவிட்டது". இவ்வாறு ஜெய் தெரிவித்துள்ளார்.
சைக்கோ படத்தை அடுத்து மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பாடகி ஒருவர் பாடி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மிஷ்கின். இவர் சைக்கோ படத்திற்குப் பிறகு பிசாசு 2 படத்தை இயக்க இருப்பதாக அறிவித்தார்.

இப்படத்திற்கான பூஜை நேற்று போடப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான பிரியங்கா ஒரு அற்புதமான பாடலைப் பாடி இருப்பதாக மிஸ்கின் கூறியிருக்கிறார்.

பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ராஜ் கோகுல் தாஸ் இயக்கத்தில் ஜுபிலி ராஜன், சவந்திகா நடிப்பில் வெளியாகி இருக்கும் பியா படத்தின் விமர்சனம்.
கல்லூரி நண்பர்கள் 5 பேர் காட்டுக்குள் சென்று டாக்குமெண்டரி எடுக்க திட்டமிடுகின்றனர். அவர்களில் ஒரு பெண்ணின் ஊர் கேரளா, தமிழ்நாடு எல்லையில் உள்ள வனப்பகுதி அருகே அமைந்துள்ளது. அங்கு சென்று டாக்குமெண்டரி எடுக்க திட்டமிட்டு, அங்குள்ள மர்மக்காட்டுக்கு செல்கின்றனர்.
காட்டுக்குள் சென்றவர்கள் ஐந்து நாட்கள் ஆகியும் வெளியே வராததால், அவர்களை தேடி கண்டுபிடிக்க போலீசை அணுகுகின்றனர். அந்த மர்மக் காட்டில் பேய் இருப்பதாகவும், காட்டுக்குள் செல்பவர்கள் உயிரோடு வெளியே வரமாட்டார்கள் என்றும் சொல்லப்படுவதால், போலீசும் அங்கு செல்ல பயப்படுகின்றனர்.

இதனால் இந்த காட்டுக்குள் ஏற்கனவே சென்றுவந்த ஒருவனிடம் உதவி கேட்கின்றனர். அவனும் காட்டுக்குள் செல்ல சம்மதிக்கிறான். காட்டுக்குள் செல்லும் அவன் அவர்கள் ஐந்து பேரையும் கண்டுபிடித்தானா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் இயக்குனர் ராஜ் கோகுல் தாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். நாயகியாக சவந்திகா, மற்றொரு ஹீரோவான ஜுபிலி ராஜன் ஆகியோர் புதுமுகமாக இருந்தாலும், திறம்பட நடித்திருக்கிறார்கள். நண்பர்களாக வருபவர்கள் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.

படத்தின் இயக்குனர் ராஜ் கோகுல் தாஸ், படத்தின் திரைக்கதையை விறுவிறுப்பாக அமைத்துள்ளார். வில்லனை சஸ்பென்சாக வைத்திருந்து கிளைமாஸில் காட்டியுள்ள விதம் சிறப்பு. பேய் படம் என சொல்கிறார்கள், ஆனால் அவ்வளவாக பயம் வராதது படத்தின் மைனஸ். படத்தில் நிறைய இடங்களில் மலையாளத்தில் பேசியுள்ளதால் டப்பிங் படம் பார்ப்பதை போன்ற உணர்வு ஏற்படுகின்றது.
சஜித் சங்கர் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். திருப்பதி ஆர். சுவாமியின் ஒளிப்பதிவை பாராட்டலாம். இரவு நேர காட்சிகள் அதிகம் உள்ள போதிலும் திறம்பட கையாண்டுள்ளார்.
மொத்தத்தில் ‘பியா’ பயமில்லை.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறாராம்.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வருபவர் நயன்தாரா, இவர் கைவசம் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் போன்ற படங்கள் உள்ளன. இதில் மிலிந்த் ராவ் இயக்கும் நெற்றிக்கண் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. இதன் படப்பிடிப்பை ஒரு மாதத்தில் முடிக்க வேண்டும் என ரஜினி திட்டமிட்டுள்ளதால், படக்குழுவினர் அனைவரும் ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளனர். நயன்தாராவும் இதற்காக ஐதராபாத் சென்றுள்ளார்.

அதேபோல் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பும் ஐதராபாத்தில் நடந்து வருவதால், அந்த படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறாராம். இந்த இரண்டு படங்களுக்கு ஒரே சமயத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளதால், நயன்தாரா இங்கும் அங்குமாக சென்று நடித்து வருகிறாராம்.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 65’ படத்தின் ஷூட்டிங் மற்றும் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற புத்தாண்டன்று இப்படத்தின் தலைப்பை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

அதேபோல் ‘தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்க முடிவு செய்துள்ளார்களாம். படப்பிடிப்பை மூன்று கட்டமாக நடத்தி முடித்து, அடுத்தாண்டு தீபாவளிக்கு படத்தை வெளியிட வேண்டும் என்ற பக்கா பிளானுடன் படக்குழு செயல்பட்டு வருகிறதாம். விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. ஒரே வருடத்தில் விஜய்யின் இரண்டு படங்கள் ரிலீசாவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்
சித்ரா லட்சுமணன் எழுதிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ முதல் பாகம் என்ற புத்தகத்தை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
தமிழ் சினிமா உலகில் நடந்த சுவையான தகவல்களையும் திரைக் கலைஞர்கள் வாழ்க்கையிலே நடந்த பல அரிய சம்பவங்களையும் தொகுத்து "80 ஆண்டுகால தமிழ் சினிமா முதல் பாகம்" என்ற பெயரிலே ஒரு புத்தகத்தை எழுதிய கதாசிரியரும், இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணன், அதைத்தொடர்ந்து திரையுலகில் தனக்கேற்பட்ட அனுபவங்களை "என்னவென்று சொல்வேன் "என்ற பெயரில் எழுதினார்.
இப்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ முதல் பாகம் என்ற பெயரிலே தன்னுடைய மூன்றாவது புத்தகத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார். சினிமா உலகில் நடந்த பல சுவையான சம்பவங்களைப் பற்றி மூன்றாண்டு காலம் தொடர்ந்து மாலைமலர் நாளிதழில் ஒவ்வொரு வாரமும் சித்ரா லட்சுமணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த புத்தகம்.

ஜீரோ டிகிரி பப்ளிகேஷன் சார்பில் ராம்ஜி - காயத்ரி ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. நடிகர் கமல்ஹாசன் நெஞ்சம் மறப்பதில்லை புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட்டார்
அப்போது “உங்களுடைய அனுபவங்கள் எல்லாவற்றையும் புத்தகமாக எழுதுங்கள் என்று எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் உங்களுக்கு நான் சொன்னேன். இப்பொழுது தான் எழுத ஆரம்பித்து இருக்கிறீர்கள்” என்று சித்ரா லட்சுமணனிடம் சிரித்தபடியே குறிப்பிட்டார் கமல்ஹாசன்.
அஜித்தின் விவேகம், விஸ்வாசம் படங்களை தயாரித்த தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் ஹிப்ஹாப் ஆதி நாயகனாக நடிக்க உள்ளார்.
இசை அமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. ஹிப்ஹாப் தமிழா எனும் சுயாதீன ஆல்பம் மூலம் பிரபலமான இவர், ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதையடுத்து மீசைய முறுக்கு படத்தை இயக்கி நடித்தார். இப்படம் ஹிட்டானதை தொடர்ந்து இவர் நடித்த நட்பே துணை, நான் சிரித்தால் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதி அடுத்ததாக நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அஜித்தின் விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஹிப்ஹாப் ஆதி நாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு அன்பறிவு என பெயரிடப்பட்டுள்ளது. அஸ்வின் ராம் இயக்கும் இப்படத்தில் காஷ்மிரா நாயகியாக நடிக்கிறார். மேலும் விதார்த், நெப்போலியன், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.






