என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள புதிய படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
    காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் செல்வராகவன். இதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் ஆகிய படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறார் செல்வராகவன்.

    கடைசியாக சூர்யாவை வைத்து என்ஜிகே படத்தை இயக்கிய செல்வராகவன், அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இதனை அவரே சமீபத்தில் டுவிட்டர் பதிவு மூலம் உறுதிப்படுத்தினார்.

    செல்வராகவனின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில், அப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி கேமரா அருகில் நிற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ள செல்வராகவன், ஆரம்பகட்ட பணிகளை தொடங்கிவிட்டதாக கூறி உள்ளார். மேலும் இதன் படப்பிடிப்பு அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
    சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் போலீசாரின் அதிரடி விசாரணையின்போது பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.
    சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி பூந்தமல்லி அருகே உள்ள நட்சத்திர ஓட்டல் அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து நசரத் பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சித்ராவுடன் அவரது கணவரான ஹேம்நாத் தங்கி இருந்தார்.

    இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்து இருந்தது. அடுத்த மாதம் அவர்கள் திருமணம் செய்ய இருந்தார்கள். இதற்கிடையே சித்ராவும் ஹேம்நாத்தும் அக்டோபர் மாதமே பதிவு திருமணம் செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. சித்ராவின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன என்று தெரியாமல் இருந்தது.

    இதைத்தொடர்ந்து கணவர் ஹேம்நாத், சித்ராவின் பெற்றோர், ஓட்டல் ஊழியர்கள், கடைசியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் என பல தரப்பிலும் பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    ஆனால் ஹேம்நாத்திடம் மட்டும் தொடர்ந்து 6 நாட்களாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. தொடர்ந்து அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.

    இதையடுத்து சித்ராவுக்கு சொந்தமான மற்றும் ஹேம்நாத்திடம் கைப்பற்றப்பட்ட செல்போனில் பதிவான தகவல்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்கள் வெளியானது.

    இதன் அடிப்படையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத்தை நேற்று இரவு 11 மணியளவில் போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி சிறையில் அடைத்தனர்.

    போலீசாரின் அதிரடி விசாரணையின்போது ஹேம்நாத் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

    சித்ரா-ஹேம்நாத் இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    அதன் பின்னர் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். ஹேம்நாத் தனது சந்தேகப் பார்வையை மனைவி சித்ரா மீது திருப்பினார்.

    அனைவரிடமும் சகஜமாக பேசும் சித்ராவிடம் அடிக்கடி எந்த நடிகருடன் நெருக்கமாக இருந்தாய், எந்த நடிகருடன் ஆட்டம் போட்டாய் என எனக்கு தெரியும். எனக்கு தெரியாத விசயங்களை மறைக்காமல் என்னிடம் சொல் என பல கேள்விகள் கேட்டு சித்ராவை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளார்.

    அதுமட்டுமின்றி படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்கு திடீரென சென்று தகராறு செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். சித்ரா இறப்பதற்கு முன்பு அவர் நடித்த நாடகத்தில் சக நடிகருடன் நெருக்கமான காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தது. இதனை வைத்தும் சித்ராவிடம் ஹேம்நாத் தகராறில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் சித்ரா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.

    சம்பவம் நடந்த அன்று கடைசியாக நடந்த படப்பிடிப்பிற்கு சென்ற ஹேம்நாத், சித்ராவை ஓட்டலுக்கு காரில் அழைத்து வரும்போதே வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஓட்டல் அறைக்கு சென்றவுடன் கடுமையான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் பேசி உள்ளனர்.

    ஒரு கட்டத்தில் சித்ராவிடம், ‘நீ இருப்பதை காட்டிலும் இறப்பதே மேல், செத்துப்போ’ என்று கூறிவிட்டு ஹேம்நாத் ஓட்டல் அறையில் இருந்து வெளியேறி உள்ளார்.

    இதன்பின்னரே சித்ரா தற்கொலை முடிவை எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. கடைசியாக சித்ரா தனது தாய் விஜயாவிடம் பேசி இருக்கிறார்.

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் நடிகை சித்ரா கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாததால் பண நெருக்கடியிலும் சிக்கி இருந்ததாக தெரிகிறது. அவர் திருவான்மியூரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். புதிய சொகுசு கார் ஒன்றும் வாங்கி இருந்தார்.

    மேலும் திருமணத்தையும் ஆடம்பரமாக நடத்த திருவேற்காட்டில் உள்ள பிரபல மண்டபத்தை பதிவு செய்து இருக்கிறார்.

    இந்த நிலையில் கணவர் ஹேம்நாத்தும் நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகினார். ஒரு கட்டத்தில் நடிப்பை நிறுத்த வேண்டும் என்றும் சித்ராவிடம் ஹேம்நாத் கூறியதாக தெரிகிறது.

    இதனால் மன வேதனையில் இருந்த சித்ரா கடைசியாக ஓட்டலுக்கு வந்தபோது ஹேம்நாத்திடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். அப்போது அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

    நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ தனது விசாரணையை நேற்று தொடங்கினார். முதலில் சித்ராவின் தாய் விஜயா, தந்தை காமராஜ், சகோதரி சரஸ்வதி, சகோதரர் சரவணன் ஆகியோர் ஆஜராகி விவரங்களை தெரிவித்தனர்.

    நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 3 மணி வரை நடைபெற்றது. விசாரணை முடிந்து வெளியே வந்த சித்ராவின் தாய் விஜயா நிருபர்களிடம் கூறும்போது, ‘மகள் சித்ராவின் தற்கொலைக்கு முழுக்க முழுக்க ஹேம்நாத் தான் காரணம். அதற்கான விவரங்களை விசாரணையின்போது தெரிவித்துள்ளோம்.

    இதற்கிடையே ஹேம்நாத் மற்றும் அவரது பெற்றோரிடம் இன்று ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தற்போது ஹேம்நாத் கைது செய்யப்பட்டு இருப்பதால் அவரது பெற்றோரிடம் மட்டும் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ இன்று விசாரணை நடத்துகிறார்.

    நடிகை தற்கொலையில் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படத்தில் ஜோடியாக நடித்து பிரபலமான பரத், சந்தியா 13 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துள்ளனர்.
    ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் ஷங்கர்.

    படங்களை தயாரிப்பதிலும் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவகையில் அவர் முதல்முதலாக தயாரித்த படம் காதல். கடந்த 2004-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

    பரத், சந்தியா

    பாலாஜி சக்திவேல் இயக்கி இருந்த இப்படத்தில் பரத், சந்தியா இருவரும் காதல் ஜோடிகளாக நடித்திருந்தனர். இப்படத்தில் இவர்களது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான கூடல்நகர் படத்தில் ஜோடியாக நடித்தனர். 

    இந்நிலையில், பரத்தும் சந்தியாவும் 13 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துள்ளனர். அப்போது இருவரும் ஒன்றாக எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் பாலா அடுத்ததாக இயக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    விக்ரம் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான சேது படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. முதல் படத்திலேயே முத்திரை பதித்த இவர், அடுத்தடுத்து இயக்கிய நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி போன்ற படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. விருதுகளையும் வாரிக்குவித்தன. குறிப்பாக நான் கடவுள் படத்திற்காக பாலாவுக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் கிடைத்தது. 

    கடைசியாக இவர் இயக்கத்தில் நாச்சியார் படம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது. இதையடுத்து இவர் இயக்கிய வர்மா படம் ரிலீஸ் செய்யப்படவில்லை. இதனால் பாலாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.

    அதர்வா, ஜிவி பிரகாஷ்

    அதன்படி, பாலா இயக்கும் புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலாவின் அடுத்த படத்தில் அதர்வா, ஜிவி பிரகாஷ் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சில முன்னணி நடிகர், நடிகைகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    பிரபல டி.வி. நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் தற்கொலை அவரது குடும்பத்தினர் மட்டும் அல்லாமல் சின்ன திரையை சேர்ந்தவர்கள் மற்றும் பொது மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். நடிகை சித்ரா, ஹேம்நாத் என்பவரை காதலித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கும், ஹேம்நாத்க்கும் பதிவு திருமணம் நடந்தது.

    இந்த திருமணத்தில் சித்ராவுக்கும், அவரது தாய் விஜயாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. சித்ரா தற்கொலை செய்து கொண்ட நேரத்தில் கணவர் ஹேம்நாத் விடுதிக்கு வெளியில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் உடலில் ரத்த காயங்கள் இருந்துள்ளது. கணவர் ஹேம்நாத் சித்ராவிடம் சண்டை போட்டு விடுதி அறையை விட்டு வெளியே போன பிறகு சித்ரா தற்கொலை செய்துகொண்டாரா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    சித்ரா

    இந்த நிலையில் சித்ராவின் மரணம் குறித்து இரு தரப்பினரையும் விசாரிக்க ஆர்.டி.ஓ. வுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து விசாரணைக்காக நேற்று காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு சித்ராவின் பெற்றோர் மற்றும் கணவர் ஹேம்நாத் ஆகியோர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

    நேற்று பகல் 12 மணிக்கு சித்ராவின் தந்தை காமராஜ், தாய் விஜயா, சித்ராவின் சகோதரி சரஸ்வதி, சகோதரர் சரவணன் ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்தனர். ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ அவர்களிடம் தனித்தனியாக விசாரணை செய்தார். 12 மணிக்கு விசாரணை தொடங்கி 3 மணி நேரம் நடைபெற்றது.

    நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் அவரது பெற்றோரிடம் ஆர்.டி.ஓ. இன்று விசாரணை மேற்கொள்ள இருந்த நிலையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக நசரத்பேட்டை போலீசார் ஹேம்நாத் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர் படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், பிரபல விளையாட்டு வீரரின் பயோபிக்கில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
    விளையாட்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை குறித்து சினிமா எடுப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி மில்கா சிங், மேரி கோம், தோனி குறித்து வெளியான படங்கள் வசூலில் சாதனை படைத்தன. சச்சின் படமும் வெளியானது. தற்போது கபில் தேவ் (கிரிக்கெட்), பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நேவல், பிவி சிந்து, கிரிக்கெட் வீராங்கனைகள் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி ஆகியோரது வாழ்க்கை கதைகளும் படமாக தயாராகி வருகின்றன.

    அந்தவகையில், இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கைக் கதையை படமாக எடுக்க உள்ளனர். இந்த பயோபிக்கை பிரபல பாலிவுட் இயக்குனரான ஆனந்த் எல் ராய் இயக்க உள்ளார். இவர், தனுஷ் இந்தியில் அறிமுகமான ராஞ்சனா படத்தை இயக்கிவர். தற்போது தனுஷ், அக்‌ஷய் குமார் நடிக்கும் அத்ரங்கி ரே படத்தை இயக்கி வருகிறார். 

    விஸ்வநாதன் ஆனந்த்

    இப்படத்தை தொடர்ந்து அவர் விஸ்வநாதன் ஆனந்தின் பயோபிக்கை இயக்குவார் எனத் தெரிகிறது. இந்நிலையில், இதில் விஸ்வநாதன் ஆனந்த் கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
    நடிகர் விஜயகுமார் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே, தயாரிப்பாளராகவும் ஆனார். அவர் தயாரித்த "நெஞ்சங்கள்'' படத்தில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார்.
    படத்தயாரிப்பாளராக மாறிய பின்னணி குறித்து, விஜயகுமார் கூறியதாவது:-

    "1980-ம் வருடம் எனக்கு படங்கள் கொஞ்சம் குறைவாக இருந்த நேரம். ஒருநாள் சிவாஜி சாருடன் பேசிக்கொண்டிருந்தபோது, "விஜயா! நீ எப்போது படம் தயாரிக்கப்போறே?'' என்று கேட்டார்.

    நான் திடுக்கிட்டேன். "என்னண்ணே! தயாரிப்பாளர் ஆவது சாதாரண விஷயமா? தவிரவும் எனக்கு அதில் அனுபவம் எதுவும் இல்லையே'' 

    என்றேன்.அண்ணன் சிவாஜியோ என் உணர்வுகள் எதையும் கண்டு கொள்ளாமல்,

    "நீ நாளைக்கு சிவாஜி பிலிம்சுக்கு போய், தம்பி சண்முகத்தை பாரு'' என்றார்.

    அண்ணன் இப்படிச் சொல்லி விட்டாரே தவிர, எனக்குள் உள்ளுக்குள் உதறல்தான். என்றாலும், அவர் சொல்லி விட்டாரே என்பதற்காக சண்முகம் சாரை பார்க்கப் போனேன். அவர் சிவாஜி பிலிம்சில் இல்லை. சிவாஜி தோட்டத்துக்கு போயிருப்பதாகச் சொன்னார்கள்.

    அங்கே போய் பார்த்தேன். என்னைப் பார்த்தவர், "அண்ணன் (சிவாஜி) சொன்னாரு! கையில் எவ்வளவு பணம் வெச்சிருக்கீங்க?'' என்று கேட்டார்.

    பதிலுக்கு நான், "பணம் எல்லாம் கிடையாது. அண்ணன் உங்களை பார்க்கச் சொன்னாரு! அதன்படி வந்திருக்கிறேன்'' என்றேன்.

    "சரி! என்ன கதை?'' என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

    "அதுவும் அண்ணன்தான் சொல்லணும். படம் எடுக்கச் சொல்லி என்னிடம் அண்ணன் (சிவாஜி) தானே சொன்னார்'' என்றேன்.

    உடனே அவர், "அண்ணனும் மேஜர் சுந்தர்ராஜனும் சமீபத்தில் பார்த்த ஒரு இந்திப்படம் பற்றி பெரிசா பேசிக்கிட்டிருந்தாங்க! அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு அந்தக் கதையோட தமிழ் உரிமை வாங்கிடுங்க'' என்றார்.

    மேஜர் சுந்தர்ராஜன், சிவாஜி சாரின் நெருங்கிய நண்பர். அப்போது அவர் டைரக்டராகவும் மாறி, சிவாஜி சாரை "கல்தூண்'', "லாரி டிரைவர் ராஜாக்கண்ணு'' என்று 2 படங்கள் இயக்கினார். இந்திப்படத்தின் தமிழ் உரிமை வாங்கியதும், அதை மேஜரே இயக்குவதாக  இருந்தது.

    நான் இந்தித் தயாரிப்பாளரை சந்தித்து, தமிழுக்கு உரிமை வாங்கினேன். ஒப்பந்தம் கையெழுத்தானதும் படத்தின் ஒரிஜினல் பிரிண்ட்டை ஒரு வாரத்தில் அனுப்பி வைப்பதாக சொன்னார்கள்.

    சொன்னபடி ஒரு வாரத்தில் பிரிண்ட் வந்தது. இராம.அரங்கண்ணலின் ஆண்டாள் தியேட்டரில் படத்தை திரையிட்டுப் பார்த்தோம். இந்தி நடிகர் அமல் பலேகர் நடித்திருந்த படம் அது. அவர் `காமெடி டைப்'பில் நடிக்கக்கூடிய நடிகர். படம் முழுக்க அவர் பாணியிலேயே நடித்திருந்தார். முழுப்படமும் பார்த்து முடித்ததும் `இந்த கேரக்டர் சிவாஜி சாருக்கு எப்படி செட்டாகும்?' என்று யோசனை வந்துவிட்டது.

    மறுநாள் காலையில் சிவாஜி சார் வீட்டுக்குப் போனேன். அவரை பார்த்ததும், "அண்ணே! நேற்று இந்திப்படம் பார்த்தேன். அது நீங்க பண்ணவேண்டிய படம் இல்லையே'' என்றேன்.

    அப்போது அங்கிருந்த மேஜர் சுந்தரராஜன், "இந்த இந்திப்படத்தின் மூலக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு சிவாஜி சாருக்கு பொருத்தமான விதத்தில் படத்தை நான் முற்றிலுமாக மாற்றி விடுவேன்'' என்றார்.

    அவர் இப்படிச் சொன்னபோது சிவாஜி சார் என்னைப் பார்த்தார். "அப்புறம் என்னடா?'' என்பது போலிருந்தது அந்தப் பார்வை. நான் அமைதியானேன். பட வேலைகள் தொடங்கின.

    சிவாஜி சார் ஹீரோ. லட்சுமி ஹீரோயின் என்பது முடிவாயிற்று.

    சண்முகம் சார் பைனான்சுக்கு ஏற்பாடு செய்தார். ஒரு பைனான்சியர் என்னிடம் வீட்டு டாக்குமெண்டை வாங்கிக்கொண்டு 2ஷி லட்சம் ரூபாய் கொடுத்தார்.

    பட வேலைகள் தொடர்ந்தன. சத்யா ஸ்டூடியோவில் பெரிய அளவில் செட் போட்டு படத்தை தொடங்கினோம். 10 நாள் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது. அதற்குள் கையிருப்பு முழுவதும் காலி.

    மறுபடி பைனான்ஸ் பெற வேண்டிய கட்டாயம். சண்முகம் சாரும், "பொறு! ஏற்பாடு பண்றேன்'' என்றார். ஆனால் அவர் ஏற்பாடு செய்த பைனான்சியர், "மேற்கொண்டு பணம் தர முடியாது'' என்று கைவிரித்து விட்டார்.

    படம் 10 நாள் படப்பிடிப்போடு நின்று, மேற்கொண்டு பணமும் இல்லாத நிலையில் தான் ஒரு விழாவில் அண்ணன் எம்.ஜி.ஆரை சந்தித்தேன்.

    அது 1980-ம் வருஷம். அண்ணன் அப்போது தேர்தலில் ஜெயித்து மீண்டும் முதல்-அமைச்சர் ஆகியிருந்தார். அவரது மேக்கப் மேனாக இருந்த ராமதாசின் மகன் திருமணம் சென்னை அசோக் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தத் திருமணத்துக்கு அண்ணன் சிவாஜி உள்ளிட்ட கலையுலகமே திரண்டு வந்திருந்தது.

    என் படம் முதல் ஷெட்ïலோடு நின்று 15 நாள் ஆகியிருந்த நிலையில் இந்த விழாவுக்கு போயிருந்தேன். முதல்-அமைச்சர் கலந்து கொண்ட விழா என்பதால் எல்லா அமைச்சர்களும் தவறாமல் வந்திருந்தார்கள். எம்.ஜி.ஆர். முதல் வரிசையில் அமர்ந்திருக்க, திருமண ஏற்பாடுகள் மேடையில் நடந்து கொண்டிருந்தன. நான் 10-வது வரிசையில் உட்கார்ந்திருந்தேன். திடீரென அண்ணன் எம்.ஜி.ஆர். எதற்கோ திரும்ப, அவர் பார்வை என் மீது பட்டது. உடனே விரலை சொடுக்கி, என்னை அழைத்தார். நான், எனக்கு பக்கத்தில் உள்ள யாரையோ அவர் அழைக்கிறார் என்று நினைத்து, அமைதியாக இருந்தேன். அண்ணன் விடவில்லை. இருக்கையில் இருந்து எழுந்து என்னைப் பார்த்து விரல் நீட்டி அழைத்தார்.

    அழைத்தது என்னைத்தான் என்று தெரிந்ததும் எழுந்து, அவரை நோக்கிச் சென்றேன். நான் அவர் அருகில் போனதும், பக்கத்தில் இருந்த ஒரு அமைச்சர் எழுந்து, தனது இருக்கையை எனக்கு கொடுக்க முன்வந்தார். ஆனால், அந்த அமைச்சரை அமரச்சொன்ன அண்ணன், என்னைத் தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டார்.

    எனக்கு தர்ம சங்கடமான நிலை. எப்பேர்ப்பட்ட அன்பு இருந்தால் இப்படிச் செய்வார்? திருமணம் நடந்த அந்த அரை மணி நேர வைபவத்திலும் அவரது மடியிலேயே உட்கார வைத்துக் கொண்டார்.

    திருமணம் முடிந்ததும், அவரது காரில் என்னை தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். "என்ன நீ! ரொம்ப நாளா என்னை ஏன் பார்க்கவில்லை?'' என்று கேட்டார்.

    நான் படத்தயாரிப்பு விஷயத்தை விவரித்தேன். `சிவாஜி சார் நடிக்கிறார். மேஜர் டைரக்ட் செய்கிறார்' என்பதில் தொடங்கி 2ஷி லட்சம் பைனான்சில் படம் ஒரு ஷெட்யூலுடன் நிற்பது வரை கூறிவிட்டேன்.

    நான் சொல்லி முடித்ததும், "வீட்டு டாக்குமெண்டை வைத்தா பணம் வாங்கினாய்?'' என்று கேட்டார்.

    "ஆமாண்ணே! படம் எடுத்து முடித்ததும் திருப்பிடலாம்'' என்றேன்.

    அப்புறமாய் என்னை சாப்பிட வைத்து அனுப்பினார். இடையில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

    வீட்டுக்கு நான் திரும்பியபோது, என்னை பார்க்க ஒருவர் வந்து காத்திருந்தார். "சின்னவர் (எம்.ஜி.ஆர்) அனுப்பினாருங்க. உங்க படத்துக்கு 10 லட்சம் பைனான்ஸ் கொடுக்கச்சொன்னார். அதுல 2ஷி லட்சம் எடுத்துட்டுப்போய், உடனடியாக உங்கள் வீட்டு டாக்குமெண்டை மீட்கச் சொன்னாருங்க'' என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தார், அவர்.

    எனக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. அதாவது - ஆனந்த அதிர்ச்சி! இப்படி ஒரு அன்பா என் மீது!

    இப்போது அடுத்த "ஷெட்ïல்'' படப்பிடிப்பை ஆரம்பிக்க வேண்டும். பணம் வந்துவிட்டதே, கதாநாயகி லட்சுமியிடம் தேதி கேட்டபோது, அவரோ "நான் அமெரிக்கா போக வேண்டியிருக்கிறதே'' என்றார்.

    சொன்னபடி லட்சுமி அமெரிக்கா போய்விட்டதால் மறுபடியும் படப்பிடிப்பு தொடங்க முடியாத நிலை. இப்படி 20 நாள் போயிருந்த நிலையில் அண்ணன் எம்.ஜி.ஆரிடம் இருந்து எனக்கு போன். "என்ன தம்பி! படம் வளர்ந்து வருகிறதா?'' என்று கேட்டார்.

    நான் உண்மையைச் சொன்னேன். "லட்சுமி அமெரிக்காவில். அண்ணன் சிவாஜியோ இன்னொரு படத்தில். மறுபடி கால்ஷீட் கிடைத்தால்தான் படப்பிடிப்பு'' என்றேன்.

    "சரி'' என்று கேட்டுக்கொண்டவர், தனது படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த குஞ்சப்பனை அண்ணன் சிவாஜி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். அவர் சண்முகத்தை சந்தித்து, "விஜயகுமார் எடுக்கும் படத்தை சின்னவர் சீக்கிரம் முடித்து கொடுக்கச் சொன்னார்'' என்று 

    சொன்னார்.வந்ததே கோபம் சண்முகத்துக்கு. உடனே அவர் தனது அண்ணனிடம், "இவர் (விஜயகுமார்) எதற்காகப்போய் சின்னவரிடம் சொல்ல வேண்டும்?'' என்று கோபித்துக்கொண்டு விட்டார்.

    நான் சிவாஜி சாரிடம், "அண்ணே! நானாகப்போய் அண்ணனிடம் (எம்.ஜி.ஆர்) சொல்லவில்லை. நீங்களும் தான் மேக்கப் மேன் பையன் திருமணத்துக்கு வந்திருந்தீர்கள். அல்லவா. அப்போது என்னை அழைத்து பேசி, மடிமீதே உட்கார வைத்துக்கொண்டது வரை பார்த்தீர்கள். பிறகு வீட்டுக்கு அழைத்துச்சென்றபோது என் விஷயத்தைக் கேட்டார். அப்போது தயாரிப்பு பற்றி சொல்ல வேண்டியதாகி விட்டது. இரண்டாவது பைனான்சுக்கு ஏற்பாடு செய்தார். அதன் பிறகு 20 நாள் ஆகியும் படப்பிடிப்பு வேலைகள் நடக்காததால், அதுபற்றி என்னிடம் போனில் கேட்டார். நானும் சொல்ல வேண்டியதாகி விட்டது.இதில் என் தவறு எதுவும் இல்லை'' என்றேன்.

    சிவாஜி சார் என்னைப் பார்த்தார். `இவ்வளவு நடந்து இருக்கிறதா?' என்ற கேள்வி அந்தப் பார்வையில் இருந்தது. "சரிடா! தம்பி சண்முகம் கிட்ட போய் தேதி வாங்கிக்கோ'' என்றார்.

    பிறகு, "நெஞ்சங்கள்'' மளமளவென தடங்கலின்றி வளர்ந்து ரிலீசானது. எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.

    இந்தப் படத்தில்தான் நடிகை மீனா அறிமுகமானார். அப்போது அவர் ஏழெட்டு வயது சிறுமி. படத்துக்கு 2,500 ரூபாய் பேசி, 500 ரூபாய் அட்வான்சாக கொடுத்தேன். பின்னாளில் பெரிய கதாநாயகி ஆகிவிட்ட மீனா, "சினிமாவில் நடிக்க எனக்கு முதல் அட்வான்ஸ் கொடுத்தவர் விஜயகுமார் சார்தான்'' என்று என்னை பல தடவை பல பேரிடம் சொல்லி பெருமைப்படுத்தியிருக்கிறார்.

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
    சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை :

    பிரபல டி.வி. நடிகை சித்ரா கடந்த 9-ம் தேதி பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
     
    அவரது சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டி வந்தனர். சித்ராவை அவரது கணவரான ஹேம்நாத் அடித்து கொலை செய்ததாக தொடர்ந்து கூறி வந்தனர்.

    இதற்கிடையே பிரேத பரிசோதனையில் நடிகை சித்ரா தற்கொலை செய்து தான் இறந்துள்ளார் என்பது உறுதியானது.

    இதைத்தொடர்ந்து சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் நசரத்பேட்டை போலீசார் கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவர் தொடர்ந்து மாறுபட்ட தகவல்களை கூறி வருவதாக தெரிகிறது.

    சித்ரா பயன்படுத்திய செல்போனை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். அதில் ஏதாவது முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார் எதிர்பார்த்துள்ளனர்.
    இதனால் இந்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

    சித்ரா தற்கொலை விவகாரம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணையும் தொடங்கியுள்ளது.  

    இந்நிலையில், சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர் படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.
    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் மிஷ்கின் தன்னுடைய பிசாசு படத்திற்கு பூஜை போட்டிருக்கிறார்.
    தயாரிப்பாளர் டி.முருகானந்தம் அவர்களின் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் பிரம்மாண்ட தயாரிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ படம் தொடங்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக செய்தி வெளியானது.

    ‘சைக்கோ’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் மிஷ்கின் இயக்கவுள்ள ‘பிசாசு 2’ படத்தின் அறிவிப்பு வெளியான முதலே பலரின் எதிர்பார்ப்பை கூட்டியது.

    நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘பிசாசு 2’ பட வேலைகள் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    பிசாசு 2

    பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மீண்டும் களமிறங்க, லண்டனை சேர்ந்த சிவா சாந்தகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றார். மேலும் சவரக்கத்தி பட புகழ் நடிகை பூர்ணா இந்த படத்தில் இணைந்துள்ளார்.
    கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 வது சீசனில் இருந்து வெளியேறியவர்கள் சந்தித்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி 16 போட்டியாளர்கள் கொண்டு ஆரம்பமானது. பின்னர் அர்ச்சனா, சுசித்ரா ஆகியோர் வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். இரண்டாவது வாரத்தில் முதல் நபராக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் நடிகை ரேகா.

    அவரைத் தொடர்ந்து வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி உள்ளிட்டோர் வெளியேற்றப்பட கடந்த வார இறுதியில் ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா ஆகிய இரண்டு பேர் வெளியேற்றப்பட்டனர். இதுவரை 8 பேர் வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் வீட்டுக்குள் 10 பேர் போட்டியாளர்களாக இருக்கின்றனர்.

    இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ரேகா, வேல்முருகன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரேகா, வேல்முருகன் ஆகியோர் தங்களது சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

    பிக்பாஸ்

    மேலும் வீடியோ பதிவிட்டிருக்கும் நடிகை ரேகா, ரமேஷூம், நிஷாவும் இப்போதுதான் வெளியே வந்திருக்கிறார்கள். சுசித்ரா, சனம் ஆகியோர் பிஸியாக இருக்கிறார்கள். அதனால் தான் அவர்களால் வர முடியவில்லை. பிக்பாஸ் வீட்டுக்குள் தான் அது போட்டி. வெளியே வந்தால் நாங்கள் எல்லோரும் ஒன்றுதான்.” என்று கூறியுள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கி அதிரடி உத்தரவிடப்பட்டுள்ளது.
    இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி நடித்த 'மாமனிதன்' திரைப்படம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளனர். விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வர உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அபிராமி மெகா மால் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

    அந்த வழக்கில் மாமனிதன் திரைப்பட சென்னை விநியோக உரிமையை கிளாப் என்ற நிறுவனத்திடம் தாங்கள் வாங்கியதாகவும் எனவே விநியோக உரிமை தங்களுக்குத் தராமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, மாமனிதன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தார்.

    விஜய் சேதுபதி

    இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தயாரிப்பாளர் யுவன்சங்கர்ராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அபிராமி மெகா மால் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் யுவன்சங்கர்ராஜா விநியோக உரிமை தொடர்பாக எந்த உரிமையும் கோரவில்லை என்றும் அந்த ஒப்பந்தத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் எனவே படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி மாமனிதன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
    தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் ஹரியுடன் பிரபல நடிகர் ஒருவர் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
    ஆறு, வேல், சிங்கம் படத்தின் 3 பாகங்கள் என சூர்யா - ஹரி கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் எதிர்பார்ப்பும் உள்ளது. சாமி ஸ்கொயர் படத்துக்குப் பிறகு ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சூர்யாவின் 39-வது படத்தை ஹரி இயக்க உள்ளதாக இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    ‘அருவா’ என்ற டைட்டிலில் உருவாகும் அந்தப் படத்துக்கு இமான் இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், சில காரணங்களால் இப்படம் தொடங்கப்படவில்லை. இயக்குனர் ஹரிக்கும் நடிகர் சூர்யாவிற்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து அருவா திரைப்படம் கைவிடப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

    ஹரி - அருண் விஜய்

    இந்நிலையில் தற்போது இயக்குனர் ஹரி - அருண் விஜய்யை வைத்து படம் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சக்திவேல் தயாரிக்கும் இந்தப் படம் அருண் விஜய் படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×