என் மலர்
சினிமா செய்திகள்
ராஜமவுலி இயக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது, இன்னும் 2 பாடல் காட்சிகள் மட்டுமே எஞ்சியுள்ளது.
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் 2 பாடல் காட்சிகள் மட்டுமே எஞ்சியுள்ளது.

ஜூனியர் என்.டி.ஆர், ராஜமவுலி, ராம்சரண்
அதில் ஒரு பாடல் காட்சியை வெளிநாட்டில் படமாக்க முடிவு செய்து, அதற்கான இடத்தை தேடி வந்த ராஜமவுலி, இறுதியாக உக்ரைனில் படமாக்க முடிவு செய்துள்ளாராம். இதற்காக ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்ட படக்குழுவினர் விரைவில் உக்ரைன் செல்ல உள்ளார்கள்.
பிரபாஸ் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலுக்கு, நடிகை காஜல் அகர்வால் நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது.
கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்க உள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக சுருதிஹாசன், பாலிவுட் நடிகை வாணி கபூர் ஆகியோர் நடிக்கின்றனர். பிரபல கன்னட நடிகர் மது குருசாமி, இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

காஜல் அகர்வால், பிரபாஸ்
இந்நிலையில், சலார் படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலுக்கு, நடிகை காஜல் அகர்வால் நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அவருக்கு பெருந்தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகை காஜல் அகர்வால், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான ‘ஜனதா கேரேஜ்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ, விரைவில் தெலுங்கு படம் ஒன்றை இயக்க உள்ளாராம்.
ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அவர், அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து, முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் அட்லீ. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

ஜூனியர் என்.டி.ஆர், அட்லீ
இந்நிலையில், ஷாருக்கான் படத்தை முடித்த பின், பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைய உள்ளாராம் அட்லீ. ராஜா ராணி பட பாணியில் இப்படத்திற்கு அட்லீ கதை அமைத்துள்ளதாகவும், இந்தக் கதை ஜூனியர் என்.டி.ஆருக்கு மிகவும் பிடித்துப்போனதால், அவர் அதில் நடிக்க சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் இயக்குனர் அட்லீ, விரைவில் டோலிவுட்டில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள நயன்தாரா, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அவ்வப்போது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ள தெலுங்கு படத்தில் நயன்தாராவை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகேஷ் பாபு, நயன்தாரா
இந்தக் கூட்டணி உறுதியானால் மகேஷ் பாபுவுடன் நயன்தாரா நடிக்கும் முதல் படமாக இது அமையும். இந்தப் படத்தில் மொத்தம் இரண்டு ஹீரோயின்களாம், அவற்றில் ஒன்றில் நயன்தாராவையும், மற்றொரு ஹீரோயினாக பிரபல பாலிவுட் நடிகையையும் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரத்குமார் அறிமுகமாகும் வெப் தொடரை நடிகை ராதிகா, தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
வெப் தொடர்களுக்கு சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதனால் முன்னணி நடிகர், நடிகைகள் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள். ஏற்கனவே ரம்யாகிருஷ்ணன், சோனியா அகர்வால், பாபி சிம்ஹா, மீனா, நித்யா மேனன், சீதா ஆகியோர் வெப் தொடர்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் சரத்குமாரும் வெப் தொடரில் நடிக்கிறார். இதனை நடிகை ராதிகா சரத்குமார் சமூக வலைதளத்தில் தெரிவித்து உள்ளார். சரத்குமார் அறிமுகமாகும் வெப் தொடருக்கு ‘இரை’ என பெயரிடப்பட்டு உள்ளது. கமலின் தூங்காவனம், விக்ரமின் கடாரம் கொண்டான் போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா, இந்த வெப் தொடரை இயக்க உள்ளார்.

இரை வெப் தொடர் குழுவினர்
கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த வெப் தொடரை ராதிகா சரத்குமார், தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த வெப் தொடருக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திரைப்பட நடிகர் பொன்வண்ணன் - நடிகை சரண்யா ஆகியோரது மகள் பிரியதர்சினியின் திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர்கள் பொன்வண்ணன் மற்றும் சரண்யா. இவர்களின் மகளான பிரியதர்ஷினிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் திரை நட்சத்திரங்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.
நடிகர் கார்த்தி, நடிகை மற்றும் இயக்குநர் ரோஹினி, தயாரிப்பாளர் தேண்டாண்டாள் முரளி உள்ளிட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இருக்கிறார்கள்.
திரைப்படங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஒளிப்பதிவு சட்டம் அமலில் உள்ளது. இதில் திருத்தப்பட்ட வரைவு சட்ட மசோதாவை மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த சட்ட திருத்தத்தின்படி சென்சார் சான்றிதழ் பெற்ற பிறகு படம் திரைக்கு வந்தாலும் அதில் ஆட்சேபணைக்குரிய காட்சிகள் இருந்தால் மத்திய அரசு பார்த்து சென்சாருக்கு மறு தணிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும்.
இந்த திருத்தப்பட்ட சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கமல்ஹாசன், அனுராக் காஷ்யப், வெற்றிமாறன், பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோர் குரல் எழுப்பி இருந்தனர்.
இந்நிலையில் நடிகர் கார்த்தி, நடிகை மற்றும் இயக்குநர் ரோஹினி, தயாரிப்பாளர் தேண்டாண்டாள் முரளி, தயாரிப்பாளர் 2D ராஜசேகர் உள்ளிட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலக்த்தில் சந்தித்து, ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021க்கு எதிராக முறையிட்டனர்.
திரைத்துறையின் கருத்துச் சுதந்திரத்தை மட்டுமல்ல, அதை நம்பியிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க, மாநில அரசு இதில் தலையிட்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
பிரபல நடிகையாக இருக்கும் ஸ்ரேயா, தனது கணவருடன் இருக்கும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழில் ஜெயம் ரவியுடன் மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரௌத்ரம் உட்பட பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஸ்ரேயா. திருமணத்துக்கு பிறகு கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வருகிறார்.
ஸ்ரேயா அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில், கணவருடன் போட்டில் இருக்கும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள், முரட்டு ஆளா இருப்பாரோ...., இரண்டாவது வீடியோவில் என் இதயம் நொறுங்கி விட்டது... என்று பல்வேறு கமெண்ட்டுகளை பதிவு செய்திருக்கிறார்கள்.
போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் தீவிரமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. வினோத் இயக்கி வரும் இப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்தப் படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். சமீபத்தில், கடினமாக உழைக்கும் அஜித் குமாரும், தயாரிப்பாளர் போனி கபூரும் நிச்சயமாக படத்தின் அப்டேட்டைக் கொடுப்பார்கள். அதுவரை, ரசிகர்கள் தயவுசெய்து பொறுமையாக இருக்கும்படி அஜித் தரப்பில் அறிவிப்பு வந்தது.
இந்த நிலையில் சாமி வந்த ஒருவரிடம் அஜித் ரசிகர் ஒருவர் ‘வலிமை’ அப்டேட் சொல்லுங்க, அதுதான் எங்களுக்கு வேண்டும் என்று கேட்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் சுப்ரமணியபுரம், கனிமொழி, போராளி, வடகறி படங்களில் நடித்து பிரபலமான நடிகை சுவாதி, திருமணத்திற்குப் பிறகு மீண்டும் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.
தமிழில் சசிகுமார் இயக்கத்தில் 2008-ல் வெளியான சுப்ரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவாதி. அந்த படத்தில் இடம்பெற்ற ‘கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய்’ பாடலில் சுவாதியின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. தொடர்ந்து கனிமொழி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, போராளி, வடகறி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
2018-ல் கேரளாவைச் சேர்ந்த விமானி விகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். கணவருடன் இந்தோனேசியாவில் குடியேறினார். சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத் திரும்பிய சுவாதி மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்து இருப்பதாகவும், இதற்காக கதைகள் கேட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

படப்பிடிப்பில் சுவாதி
இந்தநிலையில் புதிய தெலுங்கு படத்தில் நடிக்க சுவாதி ஒப்பந்தமாகி உள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது தொடங்கி உள்ளது. படப்பிடிப்பில் சுவாதி பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகின்றன.
பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே, இதுவரை எந்த நடிகையும் நடித்திராத கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்.
2 வருடங்களுக்கு முன்பே மகாபாரதம் கதையை படமாக்கும் அறிவிப்பு வந்தது. ஆனால் அதன்பிறகு எந்த முன்னேற்றமும் இல்லாததால் படத்தை கைவிட்டுவிட்டதாக பேச்சு கிளம்பியது. இதற்கிடையே இந்த படத்தை தயாரிக்கும் மது மந்தனா தற்போது அளித்துள்ள பேட்டியில், “மகாபாரதம் கதையை படமாக்கும் நேரம் வந்து விட்டது. இந்த படத்தின் கதை தீபிகா படுகோனேவுக்கு பிடித்துபோனதால் திரவுபதியாக நடிக்க முன்வந்துள்ளார்.
புராணங்களை படமாக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதனால் கடும் முயற்சிகள் எடுத்து எல்லா தகவல்களையும் சேகரித்தோம். இப்போது மகாபாரதம் கதையை படமாக்கும் அனைத்து தகவல்களும் எங்களிடம் இருக்கிறது. இந்த படத்தை எடுக்க கொஞ்சகாலம் ஆகும். அதற்குள் ராமாயணத்தை படமாக்கும் வேலையை தொடங்க இருக்கிறோம்’’ என்றார்.

ராமாயணம் படத்திலும் சீதையாக நடிக்க தீபிகா படுகோனேவை தேர்வு செய்துள்ளனர். சீதையாகவும், திரவுபதியாகவும் நடிக்கும் பெருமை தீபிகா படுகோனேவுக்கு கிடைத்துள்ளது. இதுவரை எந்த நடிகையும் 2 கதாபாத்திரங்களிலும் நடிக்கவில்லை.
பத்து தல, ஆனந்தம் விளையாடும் வீடு ஆகிய படங்களில் பிசியாக நடித்து வரும் கௌதம் கார்த்திக், தனது தாத்தா பிறந்தநாளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் கௌதம் கார்த்திக். இவர் மணிரத்னம் இயக்கிய ’கடல்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’வை ராஜா வை’, ’இவன் தந்திரன்’, ’ஹர ஹர மகாதேவி’, ’இருட்டு அறையில் முரட்டு குத்து’, ’தேவராட்டம்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் பத்து தல, ஆனந்தம் விளையாடும் வீடு போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
கௌதம் கார்த்திக் பழம்பெரும் நடிகர் முத்து ராமனின் பேரன். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் காலங்களில் ஹீரோவாக வலம் வந்தவர் முத்துராமன். இவரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் கௌதம் கார்த்திக் தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவு செய்துள்ளார்.
அதில் ’நான் உங்களை நேரில் பார்க்கவில்லை என்றாலும் உங்களை பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன். நான் கேள்விப்பட்ட அனைத்தும் என்னை மகிழ்ச்சி அடைய செய்ததோடு, அதன் மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். உங்கள் பேரனாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். உங்களைப் போலவே நானும் அன்பான, கடின உழைப்பாளியாக, திறமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி செய்வேன் என்று நம்புகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாத்தா’ என்று கூறியுள்ளார்.






