என் மலர்
சினிமா

சரத்குமார்
ராதிகா மூலம் வெப் தொடரில் அறிமுகமாகும் சரத்குமார்
சரத்குமார் அறிமுகமாகும் வெப் தொடரை நடிகை ராதிகா, தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
வெப் தொடர்களுக்கு சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதனால் முன்னணி நடிகர், நடிகைகள் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள். ஏற்கனவே ரம்யாகிருஷ்ணன், சோனியா அகர்வால், பாபி சிம்ஹா, மீனா, நித்யா மேனன், சீதா ஆகியோர் வெப் தொடர்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் சரத்குமாரும் வெப் தொடரில் நடிக்கிறார். இதனை நடிகை ராதிகா சரத்குமார் சமூக வலைதளத்தில் தெரிவித்து உள்ளார். சரத்குமார் அறிமுகமாகும் வெப் தொடருக்கு ‘இரை’ என பெயரிடப்பட்டு உள்ளது. கமலின் தூங்காவனம், விக்ரமின் கடாரம் கொண்டான் போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா, இந்த வெப் தொடரை இயக்க உள்ளார்.

இரை வெப் தொடர் குழுவினர்
கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த வெப் தொடரை ராதிகா சரத்குமார், தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த வெப் தொடருக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Next Story






